Sep 5, 2010

பலே பாண்டியா - நமீதா திரை விமர்சனம்



சரி இந்த படத்தோட விமர்சனம் பார்த்துட்டு போலாம்ன்னு பார்த்தா, நிறைய பேர் சிந்து சமவெளி படத்துக்கு தான் அதிகமா விமர்சனம் போட்டு இருந்தாங்க. நீங்க பள்ளிகூடத்துல சிந்து சமவெளி நாகரிகத்த பத்தி படிச்சு இருக்கலாம் (படிக்காதவங்க இங்க படிச்சு மனப்பாடம் பண்ணுங்க). ஆனா இந்த சினிமா சமவெளி ஒரு அநாகரிகம் என்று பரவலாக சொல்றாங்க (இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்து, சின்ன புள்ளைங்க மனசுல சாரி, பெரியவங்க மனசுல நஞ்சை விதைக்காதிங்க). அதனால நானும் அநாகரிகம் கருதி பலே பாண்டியா படத்துக்கு வண்டிய கிளப்பினேன்.

சரி படத்தோட ரிசல்ட் என்ன? இவரு பலே பாண்டியனா? இல்ல, பல்பு கொடுக்குற பாண்டியனா?

ஹீரோ பாண்டியன் (விஸ்ணு) எது செஞ்சாலும், துரதிஷ்டம் Vodafone dog மாதிரியே கூட பாலோவ் பண்ணிகிட்டே வருது. ஒரு கட்டத்துல வெறுத்து போய் நிறைய தடவ சாக முயற்சி பண்ணி, அதுவும் துரதிஷ்ட வசமாக முடியாம போகிறது. இதனால இவர் ஒரு பெரிய தாதாகிட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுத்து தன்னை கொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். அவரும் அதுக்கு சம்மதிச்சு பாண்டிய கொல்ல ஜாதகம் பார்த்து ஒரு நல்ல நாள் குறிச்சிடறார். இதுக்கு நடுவுல இவர் ஹீரோயின் பியாவ சந்திச்சு இவரது வாழ்க்கை மாற, இவர் செத்தாரா? இல்லையா? கடைசியா என்ன நடக்குது அப்படிங்கறத ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் காமெடியா  சொல்லி இருக்காங்க. கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.
 

ஹீரோ விஸ்ணு இந்த கதைக்கு சரியான தேர்வு. இவ்வொரு முறையும் லக் இல்லாம இவருக்கு நடக்கிற விஷயம் எல்லாமே சிரிப்பு சர வெடிகள்.




பியா, அழகான சுருட்டை முடி குட்டி பிசாசு. குட்டி பொண்ணுக்கு குட்டை பாவாடை தான் அப்படின்னு இயக்குனர் சொல்லி இருப்பார் போல. கலைவாணர் விவேக் ஆங்கிலோ தமிழர் கேரக்டர்ல வந்து, அவர் பங்குக்கு அதகள படுத்தறார். அதுவும் அந்த ஒரு ரூபா அரிசி காமெடிக்கு தியேட்டரே அதிர்ந்தது.

ரவுடிகளாக வர்ற எல்லோருமே நல்லா பண்ணி இருந்தாங்க. படத்தில் வர்ற  அரசியல்வாதி ஒரு தடவ ஜாலியா குட்டிங்களோடு இருக்கும் போது அதை வீடியோ எடுத்து ஹீரோயினோட அப்பா வெளியிடபோறேன்னு சொல்லி மிரட்டுவாரு. அதுக்கு அந்த அரசியல்வாதி சொல்லுவாரு "பிரிண்ட் நல்லா இருந்துச்சுன்னா பார்த்துட்டு திருப்பி அனுப்பிச்சிடு. மிரட்டாத".

இசை பாடகர் தேவன் ஏகாம்பரம். மிகவும் சுமார் ரகம். என் பக்கத்துல உட்காந்திருந்த பெரியவர் ஒவ்வொரு தடவ பாட்டு போடும் போதும் என்னை பார்த்து "தம்பி பாட்டு முடிச்சவுடனே என்னை எழுப்பி விடு" அப்படின்னு சொல்லிட்டு தூங்கிகிட்டே இருந்தாரு. உண்மையாலும் பாட்டு மட்டும் இல்லைனா படம் நல்லா இருந்திருக்கும். இவர் பாடகர் அப்படிங்கறதனாலயோ என்னவோ இசையை விட பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.

இன்னும் இந்த தமிழ் சினிமால எத்தனை நாளைக்கு தான் இந்த பாட்டு வைக்கற கலாச்சாரம் இருக்குமோ தெரியல. என் பையன் பொறக்கறதுக்குள்ள பண்ணலைனாலும் பரவாயில்லை எனக்கு பேரன் பேத்தி பொறக்கறதுக்குள்ளவாவது இத நிப்பாட்டிகோங்க.

இயக்குனர் சித்தார்த் முதல் படத்துலையே நல்லா பண்ணி இருக்கார். வசனமும்
அருமை. வாழ்த்துக்கள் சித்தார்த்.

மதராசப்பட்டினம் படத்திற்கு அடுத்து, கல்பாத்தி அகோரம் சகோதரர்களின் இன்னுமொரு சிறந்த படைப்பு "பலே பாண்டியா".

நமீதா டச் : பலே பாண்டியா, கலக்கிட்ட.





4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்படீன்னா நம்பி படத்துக்கு போகலாம்... படத்த பாத்திட்டு வரேன் தல...

விமர்சனம் நல்லாயிருக்கு ..

Anonymous said...

ரைட்டு பாத்துடலாம்..

Ramesh said...

இந்தப் படம் கல்பாத்தி தயாரிப்புங்கறதாலயே பாக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்...நீங்களும் நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க...கண்டிப்பா பாத்திடறேன்...

அன்பரசன் said...

விமர்சனம் நல்லாயிருக்கு ..