Aug 21, 2012

நான் - ஒரு "ரொட்டி" காவியம்


வெள்ளைக்காரன் நமக்கு விடுதலை தருவதற்கு முன், நம் செல்வங்களை மட்டும் கொள்ளையடித்து கொண்டு செல்லவில்லை. நம்முடைய மூளையையும் கொண்டு சென்று விட்டான். அதனால் தான் சொந்தமாய் யோசிக்க முடியாமல் நம்முடைய இயக்குனர்கள் படம் எடுக்க கஷ்டப்பட்டு அதுவும் முடியாமல், பின் அவர்களது படத்தை காப்பி அடித்து இழந்த மூளையை மீட்டு எடுக்கின்றனர். அவர்களது சேவைக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அந்த படங்களை பார்த்து நாமும் மூளையை வளர்த்து கொள்ள வேண்டும்.

இங்கிலீஸ்காரன் எடுக்கும் படமெல்லாம் நம் மூளை உபயோகித்து தான்! 

"என் தங்கம்! என் உரிமை" போல, "என் படம்! என் மூளை!"

ஈமூ பண்ணை போல இது இவர்களது மூளை பண்ணை. தற்போது மிக பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்த தொழிலில், முதலீடு செய்தால் நிறைய வருமானம் பெற முடியும்.

காப்பி அடிப்போம்! போராடுவோம்!
மூளை வளர்ப்போம்! லாபம் பெறுவோம்!



 ஞாயிற்று கிழமை மதியம் சாப்பிட்ட பிரியாணியை செரிக்க வேண்டியாவது ஏதோ ஒரு தமிழ் படத்தை பார்க்க வண்டிய கட்டாயத்திற்கு வாரா வாரம் தள்ளப் படுகிறேன். அந்த வகையில் "நான்" பிரியாணியை செரிக்க வைத்தது எனலாம்.

படத்தின் ஆரம்பத்தில் டல்லான கலர் டோனில் காட்சிகள் வருகிறது. அது ஹீரோவின் சிறுவயது கதை காட்சிகள் என்பதை புரிந்து கொள்ளாதவன் தமிழ் சினிமா அதிகம் பார்க்காதவன் எனலாம்.

தன்னுடைய அழகான அம்மா இன்னொரு அங்கிளுடன் ஆனந்தமாய் இருப்பதை பார்த்த சிறுவயது ஹீரோ, மற்ற தமிழ் படங்களில் வரும் பையன்களை போல் அதை மறைக்காமல், தன் வயதான தந்தையிடம் அன்றைக்கு இரவே போட்டு கொடுத்து விடுகிறான். அதனால் இருவருக்கும் பிரச்சினை ஆகி, அவனது தந்தை தற்கொலை செய்து இறந்து, இந்த படத்தில் இருந்து விடுதலை பெற்று கொள்கிறார்.

ஆனால் கணவன் இறந்த பின்னும், அவன் அம்மா கள்ள காதலை கண்டினியு பண்ணுகிறார். ஒரு நடு இரவில் இருவரும் சல்லாபித்து முடித்த களைப்பில் தூங்கி கொண்டிருக்க, நாயகன் அந்த இருவரையும் வீட்டுக்குள் வைத்து கொளுத்தீ விடுகிறார். பிறகு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வளர்கிறார்.

இது தான் நாயகன் கேரக்டருக்கான பின்புலம்.

படத்தை பார்த்து பையன்கள் கேட்டு போகின்ற இந்த சூழ்நிலையில், உயிருடன் இருக்கும் கள்ளகாதல் ஜோடிகள் அதிக கவனமாய் இருக்க வேண்டிய நேரமிது. இல்லையெனில் "படத்தை பார்த்து தாயையும் கள்ளகாதலனையும் கொன்ற பிள்ளை" என்று தமிழ் தினசரியில் கடைசிக்கு முன் பக்க செய்தியில் வந்து விடுவீர்கள்.

சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வரும் நம் ஹீரோ விஜய் ஆண்டனி சென்னைக்கு பஸ் ஏறுகிறார். அப்போது ஒரு முஸ்லிம் பையனை அவனது பெற்றோர்கள் கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு வழியனுப்ப வருகிறார்கள். பஸ்ஸில் அவன் நாயகனின் அருகில் உட்கார்ந்து பயணிக்கிறார். அந்த காட்சியின் போது நானும் என் ப்ரெண்டும் அதிக தமிழ் சினிமா பார்த்த அனுபவத்தில், ஆளுக்கொரு Guessing செய்தோம்.

1. ஹீரோ அந்த முஸ்லீம் பையனின் பெட்டியை திருடி கொண்டு போய் விடுவார்.
2. அவர்கள் போகும் பஸ் ஆக்சிடென்ட் ஆகி விடும்.

இந்த இரண்டுமே நடந்தது.

ஆக்சிடென்ட் ஆன பின் அந்த பையன் இறந்து விடுகிறார். நம் ஹீரோ அவனது பெட்டியை பத்திரமாக எடுத்து கொண்டு வந்து சென்னையில் உள்ள ஒரு மேன்சனில் தங்குகிறார்.

பொறுமையாக குளித்து முடித்து வந்த பின், அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று சாவகாசமாக உட்கார்ந்து தேடுகிறார். சில ஆயிரங்கள் பணம் இருக்கிறது. அதிக மார்க்குடன் அவனது சர்டிபிகேட்டுகள் இருக்கிறது.

நம் புத்திசாலி ஹீரோ, சலீம் என்ற அந்த முஸ்லிம் பையன் பெயரில் மெடிக்கல் காலேஜில் சேர, மெரீனா பீச்சில் இருக்கும் ஒரு ஆளை தன் அப்பாவாக செட்டப் செய்து கவுன்சிலிங் போகிறார். இருக்கும் மேன்சனையும் காலி செய்து விட்டு, தனி வீடு எடுத்து தங்கி காலேஜ் படிக்கிறார். பகுதி நேரத்தில் காபி ஷாப்பில் வேலை செய்கிறார்.

காலேஜில் அசோக் என்ற ஒரு பணக்கார வீட்டு ப்ளேபாய் ஒருவன் இவருக்கு நண்பனாக, கொஞ்ச நாளில் அவனுடனேயே வேலைக்காரனாக தங்குகிறார்.

பப், பார்டி, பெண்கள் என ஜாலியாய் சுற்றி கொண்டிருக்கும் அந்த நண்பனுக்கும் அவனது கேர்ள் பிரெண்டுக்கும் ஒரு பிரச்சினை வர............
அதில் நாயகனை போட்டு அசோக் அடிக்க............
நாயகன் போலியான பெயரில் உலாவுகிறான் என்ற சந்தேகம் அசோக்கிற்கு வர............
இருவருக்குமான சண்டையில் நாயகன் அசோக்கை தவறுதலாய் கொல்ல............
அந்த பாடியை ஈசியாய் கொண்டு போய் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு காட்டில் புதைத்து விட்டு வர.........
அசோக்கின் பெயரிலேயே அவனது வீடு, கார், டிரஸ் எல்லாம் நாயகன் பயன்படுத்த.....
அசோக்கை தேடிவரும் நண்பனையும் நாயகன் கொல்ல..........
அவனையும் அங்கேயே சென்று புதைத்து விட்டு வர..........

இப்படி கடைசி வரை அவர் ஏதாவது செய்து நமக்கு த்ரில்லிங் கொடுத்து கொண்டே இருக்கிறார். அசோக்கை கேட்டு கொரியர் பாய் வந்தால் கூட கொன்று விடுவாரோ என்று நாம் அஞ்ச ஆரம்பிக்கிறோம்.

சாரி! இதுக்கு மேல கதையை பற்றி என்னால் டைப் பண்ண முடியல.......



நடிப்பு, இசை, ஒளிபதிவு என இதர கருமங்களையும் பற்றி சொல்ல அவசியமே இல்லை. ஆனால் இந்த படத்தையே சராசரி ரசிகன் கொண்டாடுவான்.

நாயகன் இந்துவா, முஸ்லீமா என கண்டுபிடிக்க அவரது துண்டை அவிழ்த்து பார்க்கும் சீனை பார்த்தாலே, இது சுட்ட பழம் என்று நமக்கு பல்பு எரிய வேண்டும். ஆனால் நான் இன்னும் அந்த ஒரிஜினலை பார்க்க வில்லை. டவுன்லோட் பண்ணி பார்க்க வேண்டும்.

நமீதா டச்: நான், ஈயில்லை.....***.


இன்னும் கொஞ்ச நாளில் "காப்பி"ய  கலைஞன் தெய்வ திருமகன் புகழ் இயக்குனர் விஜய் அவர்களின், அதே நடிகர் நடிகையின் உப்புமா கூட்டணியில் இயக்கிய "தாண்டவம்" என்ற உப்புமா காவியம் வருகிறது.

தியேட்டரில் ட்ரைலர் கூட போட்டான் சாமியோவ். எனக்கு கதி கலங்கி விட்டது.

Get Ready to Dance

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்

தெய்வ திருமகள் - கர்ச்சீப் கொண்டு போங்க.



1 comment:

Philosophy Prabhakaran said...

இப்பல்லாம் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட சுன்னத் பண்ணிக்கிறாங்க... இவ்வளவு வேலை பார்த்த ஹீரோ அந்த கொண்டையை மறந்திருக்கக்கூடாது...