Aug 18, 2010

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)



நான் முதன் முதலாக முழுமையாக பார்த்த கொரியன் படம் இது தான். இதற்கு முன் My wife is a Gangster படத்த HBO வில் கொஞ்சம் பார்த்த அனுபவம். ஆனால் My Little Bride பார்த்த பிறகு எனக்கு கொரியன் படங்களின் மேல் கன்னாபின்னா காதல் வந்துவிட்டது.

தினமும் ஒரு கொரியன் படம் டவுன்லோட் பண்ணி பைத்தியம் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க வீட்டுக்கு யாராவது பிரெண்ட்ஸ் வந்தால்  கூட, சாப்பாடு சாப்பிடறாங்களோ இல்லையோ ஒரு கொரியன் படம் பார்க்காமல் வெளிய போக முடியாது (என்னோட பதிவுக்கு ஓட்டு போடாமலும் வெளிய போக முடியாது).

கூட இருக்கின்ற பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் என்னுடன் சேர்ந்து கொரியன் மொழி பேச ஆரம்பிச்சுட்டாங்க. கம்பெனியில் என்னை ஆன் சைட்டுக்கு அனுப்புவதாக சொல்லியபோது கூட தென் கொரியாவாக இருந்தால் தான் போவேன் என்று அடம் பிடிச்சிருக்கேன்.

கடந்த புட்பால் உலக கோப்பை மேட்சில் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அர்ஜென்டினா, பிரேசில் அப்படின்னு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்க, நான் தென் கொரியா டீமுக்கு தான் சப்போர்ட் செய்தேன்.


ரொமாண்டிக் காமெடி சினிமாவில் கொரியன்ஸ் படத்தை அடிச்சுக்க முடியாது. கொரியன் படங்கள பார்க்கும் போது கொஞ்சம் தமிழ் படம் பார்க்கிற உணர்வு வரும் (கேவலமாக இருக்கும் என்று தப்பாக நினைத்து விட வேண்டாம்).

  • குடும்ப உறவுகளுக்கு உள்ள பாசம்,
  • காதல்ல உருகி செத்து சுண்ணாம்பு ஆகறது,
  • உப்பு மூட்டை தூக்கிட்டு போறது.
  • காதலியோ காதலோனோ இறந்து விட்டால் பீல் பண்ணி சாகறது
என்று தமிழ் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும்.

இந்த படம் பார்த்தால் உங்களுக்கு புரியும். கொரியன் மொழில 500 தமிழ் வார்த்தைகள் இருக்கிறதாம். செம்மொழி மாநாட்டில் யாரோ சொன்னதாக தகவல். அம்மா அப்பாவை அவர்களும் "அம்மா" "அப்பா" என்று தான் சொல்கிறார்கள். தாத்தாவை, அப்புச்சி என்றே சொல்கிறார்கள்.

இதனால் நம் தமிழ் இயக்குனர்கள் கொரியன் படத்தை டவுன்லோட் பண்ணி கதை உருவாக்குறாங்க. அப்படி நம்ம மோதி விளையாடு இயக்குனர் சரண், 100 days with Mr Arrogant என்ற படத்துல இருந்து தான் ரொமாண்டிக் சீன்களை சுட்டு தன்னோட மூளைய யூஸ் பண்ணி "மோதி விளையாடு" என்ற ஒரு மாபெரும் காவியத்தை படைத்துள்ளார்.

அட என்னமா யோசிச்சிருக்கு பய புள்ள!! அந்த படத்தை நம்ம ரீமேக் புகழ் ராஜா மாதிரி அப்படியே எடுத்து இருந்தால் கூட ஓரளவு ஓடி இருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது தான் நாம ஏன் டைரக்டர் ஆக கூடாது? என்று ஆபிஸ்ல Blog படிச்சுகிட்டே யோசிக்கிறேன். (ஆபிஸ்ல வேலையே செய்யறதே இல்லையா? என்றெல்லாம் இடையில் கேட்க கூடாது. அப்புறம் கதையில் Flow விட்டு போய்டும்). சரி சரண் சாரோட இன்னொரு நாளைக்கு மோதி விளையாடலாம்.

அப்படி இன்னொரு சொதப்பல் தான் "சிக்கு புக்கு".




படம் பார்க்கணும்ன்னு நினைக்கறவங்க, இதை படிக்கறதை நிறுத்திட்டு அப்படியே பேக்அப் பண்ணிகோங்க.

இனி, இந்த படத்தோட கதைக்கு போவோம். நாயகி Boeun ஸ்கூல் படிக்கிற பொண்ணு. இவங்களோட உண்மையான பேரு Moon Geun Young. உண்மையாகவே அந்த நிலா மாதிரி அவ்வளவு அழகு. (என்னை பொறுத்த வரைக்கும் அழகான பொண்ணுங்க எது பண்ணினாலும் அழகாதான் இருக்கும். கொட்டாவி விடும் போது கூட).

நாயகன் Sangmin காலேஜ் பைனல் இயர். இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்தவங்க. நிலாவுட (நாயகி) தாத்தா நாயகனின் தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தின் படி அவங்க வீட்டில் இரண்டு பேரின் விருப்பம் இல்லாமலே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். நிலாவின் அம்மாவிற்கும் இதில் சுத்தமா இஷ்டம் இல்லை.

கல்யாணம் முடிந்து இரண்டு பேரும் தனி குடித்தனம் போய், நிலா பள்ளிக்கூடத்துக்கும், நாயகன் கல்லூரிக்கும் போகிறார்கள். நிலாவுக்கு அவங்க ஸ்கூலில் படிக்கிற ஒரு பேஸ்பால் பிளேயர் மேல் காதல். அந்த பேஸ்பால் பிளேயர் மீது நிறைய பொண்ணுங்களுக்கு காதல். நிலாவோட நெருங்கிய தோழிக்கும்.

இதற்கு இடையே நாயகன் தன்னோட காலேஜ் internship-க்காக நிலாவின் ஸ்கூலுக்கு ஓவிய டீச்சராக வர, அங்கே இருக்கிற ஒரு லேடி டீச்சர்க்கு நாயகன் மேல ஒரு "இது" வருது. கடைசியில் நிலாவுக்கு எப்படி நாயகன் மேல் காதல் வந்து சுபம் போடறாங்க என்பதுதான் கதை.

படத்துல ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு அருமையாக  நடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை சிரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான் உங்கள் வேலை.

படத்தில் வரும் சுவாரஸ்யங்கள் சில.
  • நாயகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க அவரோட அப்பா, தண்ணி அடிச்சிட்டு கார் கண்ணாடியை உடைக்கிறது.
  • நிலா ஹனிமூனுக்கு போகாமல் எஸ்கேப் ஆகி அவங்க வீட்டுக்கு முன்னால வந்து நின்று கொண்டிருக்கும் போது நாயகன் வந்து நிலாவோட கழுத்துல கைய வச்சு இழுத்துட்டு போறது.
  • நிலாவோட அம்மா சின்ன பெண்ணான நிலாவை நினைச்சு அடிக்கடி புலம்பிகிட்டே இருக்கறது.
  • நாயகனும் நிலாவும் வீட்டில் சமைச்சு சாப்பிட்டு விட்டு, அந்த பாத்திரத்த கழுவுவதற்கு நம்ம ஊரில் "சாட் பூட் த்ரீ" போல ஒன்றை சொல்லி நாயகன் நிலாவை மாட்ட வைப்பது.
  • நாயகன் அவர் பிரெண்ட்ஸ் கூட பாரில் இருக்கும் போது நிலாவுக்கு கால் பண்ணி அதட்டி அங்க வர சொல்லி கலாய்கிறது.
  • நிலா கண்ணாடிய பார்த்து ஒரு எக்ஸ்பிரஸ்சன் கொடுப்பாங்க பாருங்க. You would love it.(கீழ இருக்கிற வீடியோவில் வரும் பாருங்க.)
  • நிலாவுக்கு loft sided butt ன்னு அவ தம்பி ஓட்டறது. நாயகன் நிலாவை உப்பு மூட்டை தூக்கிட்டு போகும் போது butt ஒரு பக்கமாக இழுக்குதுன்னு கலாய்ப்பது. கடைசியாக நிலாவோட தம்பிக்கு loft sided ball ன்னு அவனோட காதலி கழட்டி விட்டுட்டான்னு அவன் அழறது.
  • நிலா ஒரு பாரில் கரோக்கே (karaoke) பாட்டுக்கு ஆடுவது படு சூப்பர். வரிகளை கவனித்து பார்த்தால் அருமையாக இருக்கும். இந்த பாட்டுதான் என்னோட தற்போதைய ரிங்டோன்.
  
                                



இந்த படத்தை எல்லோரும் பார்த்து விட்டு பைத்தியம் பிடித்து கொரியன் படங்களை தேடி தேடி அலைய வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் டோர்ரென்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.

நமீதா டச்: My Little Bride, Celebrate her.




4 comments:

ஜில்தண்ணி said...

ஓய் அதான பாத்தேன் என்னடா பயபுள்ள ஏதேதோ மொழியில படம்லாம் பாக்குதுன்னு,அந்த நிலாப் பொண்ணுக்காகத்தானே பாத்த :)

அப்பரம் இந்த படத்த தரவிறக்க லிங்கோ , டொரண்டோ இருந்தா அனுப்பி வைப்பா :) நானும் நிலாவ பாக்குறேன்

Katz said...

Download this torrent from here http://www.ahashare.com/torrents-details.php?id=40756

priyamudanprabu said...

படம் அருமைய இருந்துச்சுங்க
இதுபோல் படம் பற்ரி நிறைய எழுதுங்க ....

mithu said...

its a good cute film