1.) எது நடந்தாலும் எதுவுமே பேசாமல் (மன்மோகன் சிங் போல) அமைதியாக இருக்கலாம். (அல்லது)
2.) எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம்.
இதில் முதல் நிலையை கடைபிடிப்பவர் ஞானி ஆகிறார். (சதா பேசி கொண்டே இருக்கும் அந்த பைஜாமா எழுத்தாளர் இல்லை.)
இரண்டாவது, சந்தேகமே இல்லாமல் "நாம்" தான்.
நம்மால் ஞானியாக ஆகவே முடியாது. நமக்கு எதை பற்றியாவது, யாரை பற்றியாவது பேசி கொண்டே இருக்க வேண்டும். Breaking News இல்லாத நாட்கள் சிறப்பாய் கழிவதில்லை.
நம்மள கடுப்பேத்தனும்னே இத்தனை மைக் வச்சிருக்கானுங்க.
என்னை தொடர்ந்து எழுத சொல்லி, நிறைய கொலை மிரட்டல்களும், தற்கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன. கொலை மிரட்டல்களை மட்டும் கருத்தில் கொண்டு, இதோ 2013 ஆம் ஆண்டின் முதல் ஆபாயில்.
கமெண்டுகளும் வருவதில்லை. Like-களும், Share-களும் படிப்படியாய் குறைந்து அலெக்ஸா ரேங் ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது தமிழின் வளர்ச்சியை பிடிக்காத கர்நாடக அரசியல்வாதிகளின் கைங்கார்யமாக இருக்கலாம். சுப்ரீம் கோர்டில் 'பொது நல' வழக்கு போட உத்தேசம்.
இந்த வருத்தத்தில் இருந்த சமயம் என் நண்பன் சதிஷின் நண்பர் (என் பிளாக்கின் நெடுநாள் வாசகர்... ஹி ஹி...) என்னை முதன் முறை சந்தித்த போது, கட்டி பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். அது எனக்கு ஆயிரம் கமெண்டுகளை அள்ளி தந்ததை போல இருந்தது. இந்த பிளாகை எழுதுவது நீங்கள் தானா!!??? என்று நம்பவே முடியாமல் கடைசிவரை கேட்டு கொண்டிருந்தார். அது ஆச்சர்ய குறியா? இல்லை கேள்வி குறியா? என்று தெரியவில்லை.
எனக்கும் அதே சந்தேகம் தான். எழுத ஆரம்பிக்கும் போது, திடீரென்று எனக்குள் ஒரு ஆவி புகுந்தது போல் ஆகி, ஒரு ஆத்ம மன நிலைக்கு சென்று விடுவேன். பிறகு என்னை அறியாமல் எனது விரல்கள் கீ-போர்டில் நடனமாட ஆரம்பித்து விடும்.
அவரல்லாமல், கட்டிபிடித்தது ஒரு பெண்ணாய் இருந்திருந்தால், அவளையே கல்யாணம் செய்து குட்டி குட்டியாய் நிறைய பப்ளிஷ் செய்ய வைத்திருப்பேன்.
இனி வண்டி வண்டியாய் எழுத போகிறேன். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அலெக்ஸாவில் ஆயிரம் ரேங்கிற்குள் எடுப்பதாய் என் என் மேனேஜரிடம் பிராமிஸ் செய்துள்ளேன். ஆதலால், என் மயிருனும் மேலான தமிழக மக்களே தயவு செய்து தங்களது பொன்னான லைக்குகளையும், டைமண்ட் கமெண்டுகளையும், பிளாட்டின ஷேர்களையும் அள்ளி தந்து இந்த தமிழனையும், தமிழையும் வாழ வையுங்கள்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், இப்போது பேஸ்புக், ட்விட்டர்கள் மூலம் தமிழ் வளர்க்க அரும்பாடு படுகின்றனர். அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் நாட்டு அரசியலை அலசுவது, இடையிடையே தமிழ் பற்றிய செய்திகளை ஷேர் செய்வது என பல வகையில் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள். இதனால் பலர் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.
"இந்த தம்பதியினர் காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் இது நீடிக்குமா?" என்று டிஸ்கவரி சேனலை போல, எந்த ஒரு தமிழ் சேனலும் அழகாய் தமிழ் பேசுவதில்லை. அவர்களின் வசன உச்சரிப்பும், குரல் வளமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றும்.
டிஸ்கவரி தமிழ், கூகிள் பிளாக்கர், கூகிள் தமிழ் Transliteration, தமிழ் Translation, தமிழ் விக்கிபீடியா என வியாபார நோக்கதிற்க்காவது வெள்ளைக்காரன் தான் தமிழை வளர்க்கிறான். நமக்கு, புள்ள குட்டிகளை பெறுவதற்கும் வளர்ப்பதற்க்குமே நேரம் பற்றவில்லை. தமிழை வளர்ப்பது அடுத்த கட்ட பிரச்சனை.
வடக்கிலிருந்து தெற்கு வரை வாய் விரிய பேசும் "நீயா நானா" கப்பிநாத் கூட, "வெல்கம் பேக் டு ஆச்சி மசாலா நீயா நானா தீபாவளி ஸ்பெஷல், பிராட் யு பை எஸ்விஎஸ் சன் பிளவர் ஆயில், பவர்டு பை பட்டர்பிளை நான்-ஸ்டிக் குக்வேர்" என்று பந்தாவாய் கோட் போட்டு கொண்டு தமிழ் வளர்க்கிறார்.
ஒருமுறை "தமிழ் பேசுவது" பற்றிய தலைப்பில் ஒரு பையன் "டமில்" என்று உச்சரிததற்க்காக அவமானப் படுத்தி தன்னை தமிழ் ஆர்வலராய் உலகிற்கு அடையாளப் படுத்திக் கொண்டவர். அந்த நிகழ்ச்சிக்கு போகின்ற கெஸ்ட்களுக்கே சொம்பை கிப்ட் பேப்பரில் சுற்றி பரிசாய் கொடுப்பார்கள். சாரு தன் வீட்டில் நிறைய சொம்புகள் அடுக்கி வைத்து உள்ளதாக அவரது சொம்பு வட்டம் தெரிவிக்கிறது. அப்படியிருக்க நடு இரவுக்கு மேல் காத்திருந்து அபத்தமாய் பேசி அவமானப் படுத்தப் படும் அதீத புத்திசாலி பொது மக்களே! உங்களுக்கு ஒரு கேள்வி,
"டேய், எங்கிருந்துடா வறீங்க நீங்கெல்லாம்?"
(கடைசியில் சிறப்பாய் பேசிய அதீத முட்டாளுக்கு எல்.சி.டி. டிவியை கொடுக்கிறார்கள் என்றாலும், அது மற்ற எல்லா முட்டாள்களுக்கும் கிடைப்பதில்லை என்பது கவனிக்கப் பட வேண்டியது. அதை பார்க்கின்ற நீங்களும் முட்டாள்கள் என்பதை சொன்னால் கோபப் படுவீர்கள்!)
கப்பிநாத் அவர்களால் அவமானப் படுத்தப் பட்டு நிறைய பேர் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய், சூர்யா போன்ற சினி செலிபரெட்டிகளிடம் கப்பிநாத் குழைவதை பார்த்திருக்கிறீர்களா?
உங்கூட்டு நாய் பொறாமைப் படும்.
தமிழில் உள்ள மிக பெரிய குறையே "ர்", "ற்", "ன்" தான். நமக்கு பிடிக்காதவனை(ரை) பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நாகரிகமாக எழுத வேண்டிய கட்டாயமாகிறது.
புத்தகம் படிப்பது என்பதே என்னவென்று மறந்து போனதால், இப்போது வெயிலுக்கு கூட புத்தக கண்காட்சி பக்கம் ஒதுங்குவதில்லை.
கடந்த வாரம் என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்த போது "புதிரா, புனிதமா?" கண்ணில் பட்டது. பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதனால நிறைய சந்தேகங்கள் அவனுக்கு. (காலேஜ் படிக்கும் போது, டீச்சரிடம் அவன் ஒரு டவுட்டு கூட கேட்டதில்லை). பிராக்டிகல் எக்ஸாம் முடித்து VIVA-க்காக காத்திருக்கும் மாணவன் போல படபடப்புடன் இருந்த இவனிற்கு பேருதவியாய் இருக்கிறது இந்த புத்தகம்.
ஊருக்கு செல்லும் போது, நாமும் ட்ரெயினில் படிக்கலாமே என்ற எண்ணத்தில்,
"மச்சி நான் படிச்சிட்டு தரட்டுமா?" என்று கேட்டதற்கு, முடியாது என்று கண்டிப்பாய் மறுத்து விட்டான். ஏற்கனவே முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டாலும், பைபிளை போல தினமும் இரண்டு பக்கமாவது திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறான்.
அப்படி இருந்தும் அவனுக்கு சில சந்தேகங்கள் தீரவில்லை. என்ன செய்வது என்று தீவிரமாய் யோசித்து விட்டு, கடைசியாய் இந்த புத்தகத்தை எழுதிய மாத்ரு பூதம் அவர்களின் ஆவியை, ஆவியிடம் பேசும் நபரை (மீடியத்தை) வைத்து கூப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
மிகவும் கஷ்டப்பட்டு ஆவியிடம் பேசும் நபரை கண்டு பிடித்து அவரிடம் சென்றோம். உள்ளே சென்றவுடன் கொஞ்சம் படபடப்பாகவும், பயமாகவும் இருந்தது. விளக்கை உரசிய கொஞ்ச நேரத்தில் பூதம் வந்தார். அந்த மீடியத்தின் மூலமாக பேச ஆரம்பித்தார்.
"என்னப்பா, இந்த நடு சாமத்துல என்னை கூப்பிட்டு இருக்கீங்களே! உங்களுக்கு என்ன சந்தேகம்?"
"சார்,......."
"சார்,.......ஒரு டவுட்டு"
"என்னப்பா? தயங்காம கேளுங்க"
"........."
"........."
"சார், நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்கு தாஸா?"
மீடியத்தின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தது. நாங்கள் ஓட தயாரானோம்.
(இவரது போட்டோவை கூகுளில் தேடினால் ஒரே ஒரு போட்டோ தான் வருகிறது. அவர் புத்தகத்தையாவது "பாதுகாப்பாய்" வைத்திருங்கள். இந்த புத்தகம் வரும் தலைமுறைக்காக காக்கப் பட வேண்டும். பின்னர் 'American Pie'-யில் வருவது போல தேடிக் கொண்டிருக்கும் படி ஆகி விடக் கூடாது)
என் சிறுவயதில் எனக்கும் டிவிக்கும் பயங்கர கள்ள காதல். வீட்டிற்கு தெரியாமல் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பேன். அப்பாவிற்கு தெரிந்தால் பிரம்படி விழும் என்று தெரிந்தும், சில சமயம் பொறுமையாய் படம் பார்த்து விட்டு சென்று அடி வாங்கி கொள்வேன்.
ஆனால் இப்போது அதே டிவி தான் என்னை தினமும் எல்லா பொசிஷனிலும் வைத்து ரேப் செய்கிறது.
மக்கள் 72-inch டிவி வாங்கினாலும், பெரிய ஸ்க்ரீனில் குடும்ப தொடர்கள் மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறார்கள். டெக்னாலஜி மட்டுமே முன்னேறிக் கொண்டுள்ளது. அதை பயன்படுத்துபவர்களின் மூளை, யாருக்கும் பயன்படாமல் அப்படியே பிரெஷாக உள்ளது. எங்கள் ஆபிசில் ஜீன்ஸ் டி-சர்ட்டில் தினம் வரும் ஒரு மாடர்ன் மங்கை, You-tube-இல் அந்த நெடுந் தொடர்களை buffer செய்து பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு இடுப்பில் மூன்று மடிப்பிருக்கும். அவளை மடிசார் மாமி என்று குறிப்பிடுவோம்.
டிவியில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள, எங்கே சென்றாலும் முடிந்த வரை டிவி இல்லாத பஸ் பார்த்தே ஏறுவேன். சீரியல் டைம் முடிந்த பின்பு தான் இரவு வீட்டிக்கு வருகிறேன். சனி, ஞாயிறு எங்கேயாவது வெளியே சென்று விடுகிறேன். சீக்கிரம் தனியாய் ரூம் எடுத்து போக வேண்டும்.
'நடுவுல கொஞ்சம் எதையோ காணோம்' படத்திற்கு பிறகு இனி தமிழ் படம் பார்க்க மாட்டேன் என்று எங்கள் வீட்டு பப்பி மேல் செய்த ஆணையை (நாய் மேல் ஆணை) மீறாமல் இருக்கிறேன்.
இனி "நோ" நமீதா விமர்சனம் (இப்ப சந்தோசமா?)
இதனால் என்ன பிரச்சினை என்றால் சினிமாவுக்கு கூப்பிடும் நண்பர்களிடம் 'நான் தமிழ் படம் பாக்கறதில்ல மச்சி' என்று உண்மையை சொன்னால், காண்டாமிருகம் ஆகி விடுகிறார்கள்.
தமிழ் ரசிகர்களின் ரசனை கொண்டாட பட வேண்டியது.. இங்கு துப்பாக்கி தான், ஆக்சன் கம் திரில்லர் படம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, முழு நீள நகைச்சுவை படம். விஸ்வரூபம், சிறந்த ஹாலிவுட் படம். தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் முட்டாளுக்காக முட்டாள் எடுக்கும் படமாகவே ஆகி விடுகிறது.
தமிழ் சினிமா பார்க்காமல் இருந்ததால், என் மனம் கொஞ்ச நாள் சாந்தியோடு இருந்தது. அப்புறம் நித்யாவுடன் இருந்தது.
ஆனாலும் விதி வலியது தானே!
போன வருட இறுதியில் நண்பர்களுடன் கோவா சென்றிருந்தோம். அங்கே உண்மையாக சைட் சீயிங் மட்டும் தான் போனோம். பாரின் சரக்கின் பக்கம் கூட நெருங்க வில்லை. பீச்சில் பிகினியுடன் காற்று வாங்கி கொண்டிருந்த ஒரு ரஷ்ய நாட்டு வெள்ளைக்காரியின் இடுப்பில் கை வைத்தேன். அதற்கு மேலோ கீழோ எந்த தப்பும் செய்யவில்லை.
எல்லாம் முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தோம். பஸ் பெங்களூரை தாண்டி வந்து கொண்டிருந்த போது டிவிடியில், திடீரென துப்பாக்கியை காட்டி மிரள வைத்து விட்டார்கள். தவிர்க்க முடியாத அந்த தருணங்கள், எனக்குள் கடவுள் மற்றும் சாத்தான்கள் நம்பிக்கையை உண்டாக்கின. பஸ் சென்னையை வந்தடைந்த போது, ஏறக்குறைய அனைவரும் இறந்திருந்தார்கள். சப்-டைட்டிலை படித்து படம் பார்த்த இரு ஜப்பானியர்களும் அதில் அடக்கம். அவர்கள் வாயில் இரண்டு புல்லட்கள் இருந்தது. நான் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்தேன்.
சாக்கடை நிலையம்
ஊரில் இருக்கும் சொந்தக்கார பெருசுகள், "தம்பி எங்கப்பா வேலை செய்ற?" என்று கேட்கும் போது, "சென்னையிலங்க" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு ஓடி விடுவேன். சில பேருக்கு "மெட்ராஸ்" என்று சொல்ல வேண்டும்.
சென்னையை கண்டிறாத அந்த பெரிசுக்கோ, நான் ஒரு பெரிய சிட்டியில் கன்னியர்கள் மடியில் தவழ சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைப்பு.
சென்னையின் நறுமணம் பற்றி, ஒவ்வொரு வருடமும் மூக்கை பிடித்துக் கொண்டே "ஹேப்பி மெட்ராஸ் டே!" சொல்லி கொண்டாடும் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் தெரியும். போன வருடம் இஞ்சினியரிங் கவுன்சலிங்கிற்காக வந்த என் சித்தி பெண், இங்கெல்லாம் எப்படியா இருக்கீங்க? என்பது போல பார்த்த பார்வையில், எனக்கு பன்றியாய் மாறி போன உணர்வு.
ஒவ்வொரு வருடமும் ப(ன்)னிரெண்டாவது வகுப்பு முடித்து, கூட்டமாய் சென்று என்ஜினீயரிங் சேரும் பன்றி குட்டிகள், நாலு வருடம் கழித்து தவறாமல் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னையை வந்தடைகின்றன.
வெள்ளிக்கிழமை இரவு ஊருக்கு செல்ல, கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் செல்லும் அனைவருக்கும் தெரியும், அந்த நிலையம் உலக தரம் வாய்ந்தது என்று. மழை பெய்து விட்டால் சாக்கடையும் நாமும் இரண்டற கலந்து விடுவோம். ஐ.டி யில் வேலை செய்யும் நம்மை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய சொன்னால் கூட, நமக்கெல்லாம் அது CakeWalk.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில இருக்கும் (சாக்)கடைகளில் வாங்கும் பொருளுக்கு நான்கைந்து ரூபாய் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். நம் ரயில்வே ஸ்டேசனிலும், பஸ் நிலையங்களிலும் கர்ச்சீப் வைத்து பொத்தாமல் நிற்பது அசாதாரண காரியம்.
சம்பிராதய ஜோக்:
அவருடைய நண்பனின் தந்தை தமிழக அரசை வாழ வைக்கும் பெரிய கருணை உள்ளம் கொண்ட குடிமகன். வாடகை கொடுக்காமல் டாஸ்மாக்கில் குடியிருப்பவர். நினைவு திரும்பினால் தன் சொந்த வீட்டிற்கு விசிட் செய்வார்.
ஒரு நாள் அப்படி விசிட் செய்ய வரும் போது, பாதி வழியிலேயே ரோட்டின் ஓரம் தள்ளாடி கவிழ்ந்து விட்டார். அவரது மகனுக்கு செவி வழி இந்த செய்தி வர, வண்டியை எடுத்துக் கொண்டு போய் போதையில் இருந்த தன் அப்பாவை தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டுள்ளார்.
தான் இருக்கும் இடம் மாறிவிட்டதை உணர்ந்த தந்தை, லேசாய் கண்ணை திறந்து, தன் மகனை பார்த்து,
"தம்பி, யாரு பெத்த பிள்ளையோ நீ. என்னை கொண்டு வந்து என் வீட்டுல சேர்த்துருக்க! நீ நல்லாருக்கோணும்"