Jul 26, 2010

காதல் அரக்கி



காதல் அரக்கி
உன் கனவுகள் பொறுக்கி
கவிதைகள் கோர்க்கிறேன்...
காலையில் எழுந்து  

நிலவை தின்னும்
சூரியன் வெறுக்கிறேன்...


சூரியன் எண்ணம்
வெயிலாய் கருக
பகலில் நிலவாய்
பவனி வந்தாய்...


சினம் கொண்ட சூரியனின் 
புற ஊதா கதிர்கள் 
உன் புறங்கள் ஊடுருவ 
அம்மை போட்டு 
நிலவில் களங்கம்...

இனி கவலை வேண்டாம்.
நிழல் மேகமாய் உனை
பின் தொடர்வேன் 
உன் பாதையெங்கும்.
உனக்கு வியர்க்கும் பொழுது
மழையாய் பொழிவேன்
உன் மேனி எங்கும்...



6 comments:

மதுரை சரவணன் said...

//உனக்கு வியர்க்கும் பொழுது
மழையாய் பொழிவேன்
உன் மேனி எங்கும்...//
மிக அருமை. வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி said...

///உன் புறங்கள் ஊடுருவ
அம்மை போட்டு
நிலவில் களங்கம்... //

அருமை நிலா கவிஞரே அருமை !!

அன்புடன் நான் said...

கவிதை மிக நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்.

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

//சினம் கொண்ட சூரியனின்
புற ஊதா கதிர்கள்
உன் புறங்கள் ஊடுருவ
அம்மை போட்டு
நிலவில் களங்கம்...//

சூரியனுக்கு என்ன ஒரு பொறாமை
சூரியனை போட்ருங்க

//சூரியன் எண்ணம்
வெயிலாய் கருக
பகலில் நிலவாய்
பவனி வந்தாய்...//

இதுவும் அருமை

பனித்துளி சங்கர் said...

/நிலவை தின்னும்
சூரியன் வெறுக்கிறேன்...
//////

வார்த்தைகளில் புதுமை . உணர்வுகளை உள்வாங்கி எழுதியிருப்பது வார்த்தைகளில் தெரிகிறது . வாழ்த்துக்கள்

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)