Sep 3, 2010

ஹாய் கலைஞர் - கேள்வி பதில் பகுதி - 1

இது நகைச்சுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை. (அப்பாடி தப்பிக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.)




தமிழ்ல பிடித்த சில வார்த்தைகள்?

பாராட்டுகள், பத்திரங்கள். ( எல்லாமே பன்மைகளில் (more than one) இருந்தால் தான் விரும்புவீர்கள் போல.)

மிகவும் எளிதாக செய்ய முடியற காரியம்?

கடிதம் எழுதறது. (உங்க ஊரு தபால்காரருக்கு ஏகப்பட்ட வேலை. தண்ணியில்லா காடு மாதிரி, உங்க ஊரு போஸ்ட் மேன் ஆக வரவே எல்லோரும் பயந்து கிடப்பாங்க.)

அடுத்த தேர்தல்ல எல்லோருக்கும் இலவச டி.வி.டி பிளேயர் கொடுப்பிங்களா?

இல்லை. அத கொடுத்துட்டா நம்ம பேர புள்ளைக எடுக்கிற, நடிக்கற படத்தையெல்லாம் மக்கள் திருட்டு வி.சி.டி வாங்கி பார்த்துடுவாங்களே!. (நீங்க அறிவாலயத்துல இருக்கிறது கரெக்ட்டு தான்.)

திரைத் துறைக்கு இலவசமாக அரசு நிலங்கள் ஒதுக்கிய திட்டம் பற்றி?

எல்லாம் ஒரு முன்னோக்கிய பார்வை தான். (அது சரி. திரைத்துறையே இப்ப நம்மளோடதுதான.)

தொடர்ந்து திரைப்படங்களுக்கு வசனம் எழுத காரணம்?

என் வசனம் சிறப்பா இருக்கறதால தான். ( அதனால்தான்  சீக்கிரமாகவே சிறப்பு திரைப்  படமா கலைஞர் டிவில போட்டுடறாங்களா?)

அடுத்த டெல்லி பயணம்?

கூடிய சீக்கிரம். மக்களுக்காக. (யார் பெற்ற மக்களுக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.)

வரும் தேர்தலில் தி.மு.க வுக்கு ஓட்டு வாய்ப்புகள் எப்படி இருக்கு?

முதல்ல உன்னோட இந்த பதிவுக்கு எத்தனை ஓட்டு விழுதுன்னு பாரு. (மக்களே பார்த்து குத்துங்க. உங்களோட ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு "இன்க் ரப்பர்" இலவசமாக வழங்க படும். இன்க் ரப்பர் எங்களுக்கு எதுக்குன்னு கேட்கறிங்களா? ஏதோ என்னால முடிஞ்சது. உங்க வீட்டு குழந்தைங்களுக்கு இல்ல பக்கத்துக்கு வீட்டு குழந்தைங்களுக்கு கொடுங்க.)


11 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை........

:-)

Jey said...

மூனு இடத்துல ஓட்டு குத்தியாச்சு...பணம் அக்கவுண்ட்ல போட்ருங்க தல...

கேள்வி பதில்கள் அருமை...:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் மக்கா இப்படியெல்லாமா கலாயிக்கிறது...

செல்வா said...

///இல்லை. அத கொடுத்துட்டா நம்ம பேர புள்ளைக எடுக்கிற, நடிக்கற படத்தையெல்லாம் மக்கள்திருட்டு வி.சி.டி வாங்கி பார்த்துடுவாங்களே!///
இது செம காமெடி ..

செல்வா said...

//இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு ஒழுங்கு மரியாதையாக உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ் 10, தமிழ்மணம்///

ஐயோ சாமி , போட்டுட்டேன்டா எப்பா ..!?

ஜில்தண்ணி said...

யோவ் பாவம் யா அவரு

கைய தூக்குன படியே ரொம்ப நேரமா ஒக்காந்துருக்காரு பாரு,சரி சரி ஓட்டு போட்டாச்சுன்னு சொல்லி எறக்க சொல்லு :)

Anonymous said...

நல்ல கேள்வி பதில்..
இன்னும் கொஞ்சம் கருணாநிதிய கிண்டியிருக்கலாம் நண்பா :)

Thava, Seoul said...

Very good friend. Keep it up

Katz said...

நன்றி உளவு.காம்

//Jey said...

மூனு இடத்துல ஓட்டு குத்தியாச்சு...பணம் அக்கவுண்ட்ல போட்ருங்க தல...

கேள்வி பதில்கள் அருமை...:)//

நன்றி. உங்களுக்கு மட்டும் தனியா பணம் கொடுக்க முடியாது. எல்லோருக்கும் இங்க ரப்பர் தான்.

//வெறும்பய said...

எலேய் மக்கா இப்படியெல்லாமா கலாயிக்கிறது...//
நன்றி. இது ரொம்ப கம்மி. கீழ இருக்கிற பாலாஜி சரவணன் என்னடான்னா இன்னூம் கொஞ்சம் கிண்டி இருகிலாம்ன்னு சொல்றாரு. நீங்க இப்படி சொல்றிங்க.


// ப.செல்வக்குமார் said...

//இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு ஒழுங்கு மரியாதையாக உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ் 10, தமிழ்மணம்///

ஐயோ சாமி , போட்டுட்டேன்டா எப்பா ..!?//

நன்றி
அந்த பயம் இருக்கட்டும் மனசுல.

// ஜில்தண்ணி - யோகேஷ் said...

யோவ் பாவம் யா அவரு

கைய தூக்குன படியே ரொம்ப நேரமா ஒக்காந்துருக்காரு பாரு,சரி சரி ஓட்டு போட்டாச்சுன்னு சொல்லி எறக்க சொல்லு :)//

நன்றி
இவரு காங்கிரசோட கூட்டணி வச்சு இருக்கிறத காமிக்கராறு.


//Balaji saravana said...

நல்ல கேள்வி பதில்..
இன்னும் கொஞ்சம் கருணாநிதிய கிண்டியிருக்கலாம் நண்பா :)//

நன்றி
கவலை படாதிங்க. மறுபடியும் கேள்வி பதில் பகுதி 2 எழுதலாம்.

//Thava, Seoul said...

Very good friend. Keep it up//

நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா...செம நையாண்டி... கலக்கல்... நல்லா சிரிக்க வெச்சீங்க... தேங்க்ஸ்

vasan said...

/தமிழ்ல பிடித்த சில வார்த்தைகள்?

பாராட்டுகள், பத்திரங்கள். ( எல்லாமே பன்மைகளில் (more than one) தான் விரும்புவீர்கள் போல.)/
சூப்ப‌ர் யாரும் த‌ப்பா ப‌ராட்டுப் ப‌த்திர‌ங்க‌ள்ன்னு த‌வ‌றா படிச்சிராதிங்க‌!!
"ப‌த்திர‌ங்க‌ள்" என்ன‌ ப‌த்திர‌ங்க‌ள்ன்னு விலாவாரிய‌ விள‌க்க‌ வேண்டிய‌தில்லை. ப‌திவர்க‌ள் அனைவ‌ரும் அறிவ‌ர்.
பாராட்டுகள்,வழிப்போக்கன். உங்க‌ளுக்கு ப‌த்திர‌ங்க‌ள் புடிக்காதுன்னு தெரியும்.