வறட்சி காலத்தில்
வற்றிப்போன ஆற்றின் உள்ளே
படகு போல ஒவ்வொன்றாய்
ஆக்கிரமித்து குடியேறிய
வீடுகளில் வசிக்கும் குழந்தைகள்
ஒவ்வொரு மழை காலத்திலும்
காகித கப்பல் செய்து விளையாட அவசியமில்லை.
அவர்கள் வீடுகளே கப்பலாய் மிதக்கும்
ஆற்றின் பதில் ஆக்கிரமிப்பில்.
------------------------------------------------------------------
காளான் டிஷ்
மழைவிட்ட பின்
அபார்ட்மென்ட் மொட்டை மாடியில்
சென்று பார்த்தால்
எண்ணற்ற டிஷ் காளான்கள்.
------------------------------------------------------------------
ஒவ்வொரு மழைக்கு பின்னும்
போடப்படும் தார் ரோடுகள்
தார் ஏடுகளாய்
அடுத்த மழையில்.
------------------------------------------------------------------
போகும் வழியெல்லாம்
சாலையெங்கும்
நிரம்பி வழிகிறது
மாநகராட்சியின்
மழைநீர் சேகரிப்பு திட்ட குழிகள்.
1 comment:
இரண்டு படங்களும் மிக அழகு!
கவிதைகளும் சூப்பர் பாஸ்!
Post a Comment