வலையுலகில் ஏகப்பட்ட பேரு கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. என்கவுண்டர், லிவிங் டுகெதர் போன்ற சீரியஸ் ஆன செய்திகளை பற்றி சூடான வார்த்தைகளை உபயோகித்து அவங்கவங்க கருத்துகளை சொல்றாங்க. ஆனா, அப்படி எழுதும் போது 15 மார்க் கொஸ்டினுக்கு 2 மார்க் மட்டுமே போடுற அளவுக்கு சின்னதா, கடனுக்கு அதை பத்தி கொஞ்சம் எழுதிட்டு, அந்த பதிவ போஸ்ட் பண்ணி அதுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல, நன்றாக நான்வெஜ் சாப்டுட்டு ரெடி ஆகிடறாங்க. எனக்கு ஏன் இது மாதிரி எல்லாம் தோண மாட்டேங்குது?
சரி, நம்ம பிரபலங்களை கேட்போம்.
கமல் சார், இந்த Living Together நல்லதா? கெட்டதா?
நல்லவேளை நாயகன் கமல்ங்கிறதனால, தெரியலன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டரு. ஆனா விருமாண்டி கமல்கிட்ட கேட்டிருந்தால், புரியாதமாதிரி பதில் சொல்லி நாம கேட்ட கேள்வியவே குழப்பி இருப்பாரு.
வடிவேலு சார், இந்த Living Together நல்லதா? கெட்டதா?
சார், இது கரெக்டா? தப்பா?
ரைட்டு...
நாட்டாமை சார், நீங்க பதில் சொல்லுங்க.
சுகாசினி மேடம், நீங்களாவது சொல்லுங்க.
காய்கறி கடை வச்சுக்கிட்டு இருக்கிறவ கிட்டே எல்லாம் கருத்து கேட்டா இப்படிதான்.
என்னுடன் கூட வேலை செய்த தோழி ஒருத்தர், ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தாங்க.
We know Taj Mahal as a symbol of love.
But do you know ..
1. Mumtaz was Shahjahan's 4th Wife, out of his 7 wives.
2. Shahjahan killed Mumtaz's husband to marry her.
3. Mumtaz died in her 14th Delivery.
4. He then married Mumtaz's sister.
Now my question is, What is LOVE?
I replied her, " LOVE is PLURAL".
நான் போன மாசம் நிறைய அயிட்டங்கள் (பொருள்கள்) பிராண்டேடு அயிட்டம் ஆக வாங்கினேன். "Peter England" சர்ட், "Lee" ஜீன்ஸ், "Jocky" ஜட்டி, "Nike" செருப்பு. உடனே கூட இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் "பிராட் மேன்" மாதிரி, என்னை "பிராண்ட் மேன்" ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த பசங்க, எங்க பார்த்தாலும் அந்த சங்கம் இந்த சங்கம் ன்னு ஒவ்வொருத்தரும் ஒரு சங்கம் வளர்க்கரானுங்க.
கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கருத்தாய் படிப்போர் சங்கம்.
குப்புற படுத்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்.
உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்.
இப்படி ஏகப்பட்ட சங்கங்கள். நாமளும் சும்மா இருந்தா சரிபடாது. அதனால நானும் ஒரு சங்க வளர்க்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இப்ப யார் யாரு என்னோட சங்கத்துக்கு ஆதரவு தரப் போறிங்கன்னு கைதூக்குங்க பார்க்கலாம். ஆனா ஒன்னு என்னோட சங்கத்துல சேர்றதுக்கு, இப்ப கை தூக்கின எல்லோரும் உங்க ரெண்டு காலையும் கொஞ்சம் தூக்கணும். புரியல? நம்ம சங்கம் "ஜாக்கி ஜட்டி போடுவோர்கள் சங்கம்".
நான் ரசித்த ஒரு ஜோக்:
Height of Addiction:
Just before Hanging,
Judge asked the prisoner "Any last Wish?"
Prisoner: Yes, I want to update my FACEBOOK status as "DEAD"
இப்படிதான் சில பேரு கண் முழிக்கிறதும் சரி, மூடறதும் சரி பேஸ்புக்ல தான்.
புதுசா ரிலீஸ் ஆகி உள்ள மந்திர புன்னகை படத்துல இப்படி ஒரு டயலாக் வருதாம். உடம்ப கெடுக்கிற குவார்ட்டர நல்லா சத்தம் போட்டு வாங்கறோம். ஆனா பாதுகாப்பா இருக்கிற காண்டத்த கூச்சபட்டுகிட்டு வாங்குறோம். இவரு என்ன சொல்ல வர்றாருன்னா? காண்டம் வாங்கும் போது கம்பீரமா, கம்பீரம் சரத்குமார் மாதிரி நெஞ்ச வெடைச்சுகிட்டு தைரியமா சத்தம் போட்டு கேட்கணும். புரிஞ்சுதா?... ( மச்சி, ஒரு காண்டம் சொல்லேன்! )
இந்தியன் கிரிக்கெட் டீம் நியூஸ்லாந்து கூட விளையாண்ட ரெண்டு டெஸ்ட் மேட்ச்சையும் பஜ்ஜியின் புண்ணியத்தில் டிரா பண்ணிடுச்சு. இதுக்கு என்ன காரணம்ன்னு பார்த்தால், 'வ குவார்ட்டர் கட்டிங்' படத்துல வர்ற காமெடி மாதிரி "நம்மகிட்ட இருக்கிறது மொக்க பௌலேர்ஸ், அவங்ககிட்ட இருக்கிறது நம்மளவிட மொக்க பௌலேர்ஸ்"
எனது இந்த வார ட்வீட்ஸ்:
1. Newly joined colleague asked me " Can I open Face-book in Office? ". I Replied her " Open FaceBook, FaceProblem "
2. இந்திய வல்லரசு ஆகுறதுக்குள்ளேயாவது நம்ம வல்லரசு (விஜயகாந்த்) தமிழ் நாட்டுல ஆட்சிய பிடிப்பாரா?
3. நம்ம வல்லரசு ஆட்சிய பிடித்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வல்லரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் மாறுமா?
9 comments:
மக்கா, நானும் சங்கத்துல சேர்ந்துடறேன். ஆட்சுவலி சேர்ந்துட்டேன்..
" LOVE is PLURAL". //
பாஸ் கலக்குறீங்க.. :)
ஆபாயில் சூப்பர்
Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….
http://www.ellameytamil.com
இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்…
http://www.ellameytamil.com
பாஸ்மன்னிச்சுக்குங்க. நாங்க பட்டாப்பட்டி முன்னேற்ற கழக உறுப்பினர்கள். உங்க சங்கத்துல சேர முடியாது.
tasty!!!
நன்றி ILA(@)இளா
நன்றி Balaji
நன்றி மதுரை பாண்டி
@ நாகராஜசோழன் MA, பட்டா பட்டிகுள்ளே ஜாக்கிய போடலாம்ல?
என்ன ராசா இன்னும் இந்த கலாச்சார பிரச்சனை தீரல...
வித்யாசமா நல்லாருக்கு வலைப்பூ
machi sooooperu :)
Post a Comment