"What is எட்டிகுட்?" என்று Confuse ஆகாதீர்கள்.
"Etiquette" என்பதை தமிழில் எழுதியுள்ளேன். Etiquette என்றால் தமிழில் "பண்பாடு", "நாகரிகம்", "வரைமுறை" என்றெல்லாம் சொல்லலாம்.
நம்மாட்கள் கூகுளின் Tamil Transliteration -யை ஓவராக பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் உள்ள Internet, Bus என்பவற்றை இன்டர்நெட், பஸ் என்று எழுதுவதில் தப்பில்லை. ஏனென்றால் இன்டர்நெட் என்றால் என்னவென்று, காமன்மேனுக்கு தெரியும். அட "காமன்மேன்"ன்னா கமல் இல்லப்பா!
ஆனால் அவர்களிடம் இன்டர்நெட் என்பதற்கு தமிழில் என்ன என்று கேட்டால், "பேந்த பேந்த" முழிப்பார்கள்.
அதிகமாய் வழக்கத்தில் இல்லாத, உதாரணத்திற்கு "Flirt" என்பதை அப்படியே transliterate செய்து "ப்ளிர்ட்" என்று எழுதுவார்கள். படிக்கும் போது, டர்ச்சு ஆகி விடும். நமக்கு தெரிந்த அரைகுறை இங்கிலீசுக்கும் ஆப்பு. அவர்களுக்கு தமிழின் மீது உண்மையான பற்றா? இல்லை அவர்கள் தி.மு.க பீரங்கியா? அதை அப்படியே "Flirt" என்று எழுதினாலாவது, ஆன்லைன் டிக்ஸ்னரியை பார்த்து அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் முழுவதையும் தமிழில் translate செய்து எழுதுங்கள்.
போன ஆட்சியில் தி.மு.க தலைவர் கடைகளின் பெயரை எல்லாம் தமிழில் எழுத வேண்டும் என்று அசிங்கமான சட்டம் போட்டவுடன் எல்லோரும் அதை கஷ்டப்பட்டு மாற்றினார்கள். சிலது படிக்கவே பயங்கர காமெடியாய் இருந்தது. சிலது பச்சை தமிழனுக்கே புரியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவை என்னவென்று எனக்கும் மறந்து விட்டது. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம்.
நீங்கள் ஒரு பிளாகர். நீங்கள் இன்னொரு பிளாக்கில் சென்று கமென்ட் எழுதும் போது, எப்படி எழுத வேண்டும்?, எப்படி எழுதக்கூடாது கூடாது? என்பதற்கு சில etiquette இருக்கிறது. அதை எல்லோரும் பின்பற்றினால் blogosphere சுபிட்சமாய் இருக்கும்.
உங்களது ஒரு பதிவுக்கு இரண்டு புதிய கமெண்ட்கள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அருமையான பதிவு. என்னுடைய வலைப்பூவுக்கும் வந்து பாருங்கள்"
"நீங்கள் சொல்வது முட்டாள்தனமாய் உள்ளது. ஒன்றுமே தெரியாமல் பிதற்றாதிர்கள்"
இரண்டில் எதை மதிப்பீர்கள்?
சந்தேகமே இல்லாமல் அது இரண்டாவது தான். ஏனென்றால் அந்த முதல் ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்தாரா? என்பது சந்தேகம். ஆனால் இரண்டாவது ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்துள்ளான். மேலும் தன்னுடைய ப்ளாகை விளம்பர படுத்த வரவில்லை.
Be Specific:
ஒரு பதிவை படித்தால் அது உங்களுக்கு பிடித்திருக்கா? இல்லையா? காதலை சொல்வது போல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லுங்கள். அவர் கருத்துக்கு மாறுபடும் பட்சத்தில் எதிர் கருத்துகளை சொல்லுங்கள். அல்லது சிம்பிளாக facebook லைக் செய்து விட்டு போய்விடுங்கள். அதை விடுத்து "அருமை! பகிர்வுக்கு நன்றி!" என்று கமென்ட் போட வேண்டாம். சில பேர் படிக்காமலே வந்து கமென்ட் போடுவார்கள். Indiblogger தளத்தில் கூட இதே கதைதான். இதில் கடுப்பாகிற விஷயம் என்னவென்றால், அவன் ஹிந்தி பிளாக் வைத்துக் கொண்டு தமிழே தெரியாமல், நம்முடையதை "லைக்" செய்வான்.
Don't leave a link to your Blog:
கமெண்டில் உங்கள் பிளாக்கின் லிங்கை விட்டு செல்வது உங்கள் மீதான மதிப்பை குறைக்கிறது. உங்கள் கமென்ட் நன்றாக இருக்கும் பட்சத்தில், வாசகர்கள் Profile வழியாக உங்கள் பிளாகிற்கு வந்து படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நன்றாக எழுதும் பட்சத்தில் (அ) நீங்கள் சூப்பர் பிகராக இருக்கும் பட்சத்தில், பசங்க எப்படியேனும் அட்ரஸ் கண்டுபிடித்து வந்தே தீருவார்கள். உங்ககிட்ட மேட்டர் கும்மென்று இருந்தால் போதும், வழக்கு எண் 18/9 படத்தில் வருவது போல கெமிஸ்ட்ரியில் எதோ ஒரு டவுட் என்று சொல்லியாவது உள்ளே நுழைந்து விடுவார்கள்.
அதனால், வடிவேலு பாஷையில் சொல்வதென்றால், "போ போ போகும் போது பொருள (content) விட்டுட்டு போ. உசுர (link) விட்டுட்டு போகாத".
Stay on Topic:
பதிவில் என்ன உள்ளதோ, அதற்கு சம்பந்தமாய் கமென்ட் எழுத வேண்டும். ஒபாமாவின் அக்கா வீட்டு திருமண சம்பந்தமான பதிவில், ஒசாமா செத்து போனதை பற்றி ஒப்பேரி வைக்கக் கூடாது. ஹிமாச்சல் ட்ரெக்கிங் பற்றி எழுதிய பதிவில் நான் எழுதிய ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஒருத்தர் கமென்ட்டில் சண்டைக்கு வந்து விட்டார்.
Be Nice:
கமென்ட் எழுதும் போது மோசமான வார்த்தைகள் பயன் படுத்தக் கூடாது. அனானிமஸ் option என்பது அசிங்கமாக எழுதுவதற்கு தான் இருக்கிறது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் படிப்பவர்களில் நிறைய பேர் Rough ஆன சாப்ட்வேர் எஞ்சினியர்களாக இருக்கிறார்கள். சாப்ட்வேர் எஞ்சினியர் என்றால் படு டீசண்டாக இருப்பான் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவனுக்குள்ளும் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும்.
Keep it Brief:
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சுருக்கமாய் சொல்ல வேண்டும். பதிவு எருமையை போல இருந்தால், கமெண்டு கன்று குட்டியை போல தான் இருக்க வேண்டும். எருமையை விட பெரிதாய் இருக்க கூடாது.
சில பேர் ஒரு paragraph-யை, சிக்கன் பீஸ் போல துண்டு துண்டாக கட் பண்ணி, நாற்பது கமெண்டுகளாக போட்டிருப்பார்கள். இது என்ன ரேசன் கார்டா? எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சர்க்கரை அதிகமாக போடுவார்கள் என்பதற்கு.
இந்த பிரச்சினை தமிழனுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை, இங்கிலீஸ்காரிக்கும் இருக்கிறது. "எரிக்கா" என்ற வெள்ளரிக்கா, சாரி வெள்ளைக்காரி அக்கா புலம்புவதை கொஞ்சம் படித்து பாருங்கள். இதை தான் தமிழில் கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்.
11 comments:
good..ஹிமாச்சல் ட்ரக்கிங் பதிவில் சண்டை போட்டவருக்கு மட்டும் அத்தனை பதில்கள். என் பின்னூட்டத்திற்கு பதிலே இல்லை.
உங்களுக்கு பதில் சொல்லியிருந்தேன். உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். தவறுதலாய் ஒருமுறை delete செய்து விட்டேன்.
என்னாயா இன்னும் பதிவுலாம் போட்டுட்டுதான் இருக்கியா :)
ரைட்டு என்ஜாய் :)
டாப்பிக்குக்கு சம்பந்தமில்லன்னு கேக்கபிடாது :)
okay okay...
சந்தேகமே இல்லாமல் அது இரண்டாவது தான். ஏனென்றால் அந்த முதல் ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்தாரா? என்பது சந்தேகம். ஆனால் இரண்டாவது ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்துள்ளான். மேலும் தன்னுடைய ப்ளாகை விளம்பர படுத்த வரவில்லை./////
நீங்கள் கூறுவது நியாயம் தான் , ஆனால் புதிதாக ஒரு வலைதளத்தை படிக்கும் போது, அது உங்களை கவர்திருக்கும் பட்சத்தில் அதனை பாராட்டி ஏதாவது கூறுவது ஒன்றும் தவறில்லையே .
நீங்கள் விரும்பினால் உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்திலும் இணைக்கலாம் .நிச்சயமாக எம் தளத்தை விளம்பரப் படுத்த இதனை கூறவில்லை .ஆனால் மாறு பட்ட பதிவுகள் எழுதும் அனைவரயும் நாம் வரவேற்கிறோம் .
நன்றி தமிழினி.
உண்மையான பாராட்டையும், template பாராட்டையும் இனம் கண்டு கொள்ளலாம்.
முன்பு தமிழ் 10 உட்பட எல்லா தமிழ் aggregator தளங்களிலும் இணைத்து கொண்டிருந்தேன். இம்மாதிரியான தளங்களில் இணைக்கும் அளவுக்கு என்னுடையது வொர்த் இல்லை. ;-)
நீங்கள் ஒரு ஆண் தானே?
ஒரு அட்ராக்சனுக்காக பெண் பெயருடன் வளம் வருகிறீர்களா?
இல்லை பெண் தான் , ஆனால் இந்த profile மூலம் பதிவுகள் எழுதுவதில்லை ....lol
இம்மாதிரியான தளங்களில் இணைக்கும் அளவுக்கு என்னுடையது வொர்த் இல்லை. ;-) ///// வொர்த் இல்லாததால இத்தனை பேர் கருத்து சொல்லி இருக்காங்க
வேறு எந்த பெயரில் எழுதுகிறீர்கள்? அது ரகசியமோ!
//வொர்த் இல்லாததால இத்தனை பேர் கருத்து சொல்லி இருக்காங்க//
தற்போது இந்த தளங்களில் இருக்கும் பதிவுகளின் அளவுக்கு என்னுடையது வொர்த் இல்லையென்று சொல்கிறேன். நீங்களே என்னை பாலோவ் செய்யவில்லை. ;-)
Please dont do that mistake!!
தூய தமிழில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் நிறைய தமிழ் பற்றுடனே இருக்கிறார்களே! அது எப்படி?
"தமிழரசன்" என்ற என் நண்பன் ஒருவன் அப்படிதான் ஒரு தமிழ் பைத்தியம். எனக்கு தமிழில் ஏதாவது சந்தேகம் வந்தால் அவனிடம் தான் கேட்பேன். :-)
நீங்களும் தமிழில் ஒரு Aggregator தளம் உருவாக்கி நடத்துகிறீர்கள்.
பொதுவாக அவர்களது பெற்றோருக்கு தான் தமிழ் பற்று அதிகம் இருக்கும். தமிழை லவ் பண்ணி அதனுடன் சேர முடியாத பட்சத்தில் தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பார்கள்.
வேறு எந்த பெயரில் எழுதுகிறீர்கள்? அது ரகசியமோ!//////
ஆம் முன்பு நிறைய எழுதி வந்தேன் , இப்போ நேரம் கிடைக்கும் போது மட்டும் .மற்ற படி ரகசியம்லாம் இல்லை
தற்போது இந்த தளங்களில் இருக்கும் பதிவுகளின் அளவுக்கு என்னுடையது வொர்த் இல்லையென்று சொல்கிறேன். நீங்களே என்னை பாலோவ் செய்யவில்லை. ;-)///////////
நேற்று தான் உங்கள் தளத்தை பார்வையிட்டேன் , இதோ இப்போ follow செய்கிறேனே ???
தூய தமிழில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் நிறைய தமிழ் பற்றுடனே இருக்கிறார்களே! அது எப்படி?
"தமிழரசன்" என்ற என் நண்பன் ஒருவன் அப்படிதான் ஒரு தமிழ் பைத்தியம். எனக்கு தமிழில் ஏதாவது சந்தேகம் வந்தால் அவனிடம் தான் கேட்பேன். :-)
நீங்களும் தமிழில் ஒரு Aggregator தளம் உருவாக்கி நடத்துகிறீர்கள். /////
இதில பாதி நிஜம் , எனக்கு தமிழ் மேல பற்று இருப்பது உண்மை தான் .ஆனால் தமிழ்10 என்னுடைய தளம் அல்ல . என் கல்லூரி நண்பர்கள் ஆரம்பித்து நடத்தும் தளம் . என்னால் முடிந்த வரைக்கும் உதவி செய்து வருகிறேன் .
பொதுவாக அவர்களது பெற்றோருக்கு தான் தமிழ் பற்று அதிகம் இருக்கும். தமிழை லவ் பண்ணி அதனுடன் சேர முடியாத பட்சத்தில் தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பார்கள்.///////
பொதுவாக அவர்களது பெற்றோருக்கு தான் தமிழ் பற்று அதிகம் இருக்கும். தமிழை லவ் பண்ணி அதனுடன் சேர முடியாத பட்சத்தில் தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பார்கள்.////
எங்கள் வீட்டில் அனைவருக்குமே தூய தமிழ் பெயர் தான் . ஆனாலும் என் பெயர் மற்றவர்களை விட கொன்சம் spl lol.
//நேற்று தான் உங்கள் தளத்தை பார்வையிட்டேன் , இதோ இப்போ follow செய்கிறேனே ??? //
எதோ வேண்டா வெறுப்பாய் பாலோவ் செய்வது போல் உள்ளது :-(
//எங்கள் வீட்டில் அனைவருக்குமே தூய தமிழ் பெயர் தான் . ஆனாலும் என் பெயர் மற்றவர்களை விட கொன்சம் spl lol. //
தமிழ் பற்றில் உங்க குழந்தைக்கும் தமிழ்10 என்று பெயர் வைத்து விடாதிர்கள். Jj....
Post a Comment