Aug 24, 2012

குப்பை கொட்டுவது இப்படி - 1

இதை படிப்பதற்கு முன், இதை படித்து விட்டு வாருங்கள்.

Nonsense Talking 3 - குப்பை Planet


நீங்கள் புதிதாய் பிளாக் எழுத வந்துள்ள அப்பிராணியா? நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? அப்படியெனில்,

நீங்கள் என்னென்ன செய்தால் இங்கு குப்பை கொட்ட முடியும்?
அதை எப்படி செய்வது?

வாருங்கள் கற்று கொள்வோம்!!

குப்பை தான் நம்முடைய வாழ்வாதாரம். குப்பையை நீங்கள் அருவருப்பாக பார்த்தால் இங்கு பிழைத்திருப்பது கடினம்.

சாலையில் நடந்து செல்லும் போது குப்பை அள்ளும் வண்டியை கடந்து செல்ல நேரிட்டாலோ, ட்ராபிக்கில் குப்பை வண்டிக்கு அருகில் நிற்க நேரிட்டாலோ, மூக்கை பொத்திக் கொண்டு அல்லது மூச்சை கட்டுபடுத்தி கொண்டு அவஸ்தை படுகிறீர்களா?

உங்களுக்கெல்லாம் ஒரு உன்னத அட்வைஸ்.

7 ஜி ரவி கிருஷ்ணா நடித்த "பொன்னியின் செல்வன்" என்ற படத்தில் ஒரு காட்சி வரும். குப்பை அள்ளும் வேலைக்கு புதிதாய் சேர்ந்த ரவி கிருஷ்ணாவிற்கு, குப்பையின் நாற்றத்தில் குமட்டி கொண்டு வரும். அப்போது கூட வேலை செய்யும் ஒரு சீனியர் சொல்வார் "அந்த குப்பையை ஒரு முறை நன்கு மூச்சு இழுத்து முகர்ந்து விடு. அப்புறம் அதன் நாற்றம் உனக்கு தெரியாது. ப்ரீயா வேலை செய்யலாம்" 

அதனால் ஏற்கனவே இணையத்தில் ஏராளமாய் கொட்டி கிடக்கும் குப்பைகளை வாசித்து, நுகர்ந்து குப்பையோடு குப்பையாய் கலந்து மக்கி விடுங்கள். உங்களுக்கு அதன் நாற்றம் பழகி விட்டால் அதன் பின் எந்த அருவருப்பும் உண்டாகாது.


OK. Lesson Starts... 

சினிமா செய்திகள், விமர்சனங்கள் தான் மிக சரியான மனித கழிவு. வருபவர்கள் ஈ மாதிரி மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

உங்களுக்கு கதைக்கும் திரைகதைக்கும் வித்தியாசம் தெரியாது இருக்கலாம். ஆனாலும் கேமரா வொர்க், CG, லைட்டிங், மேக்கிங் போன்ற டெக்னிகல் விசயங்களை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். செய்த தவறை அடுத்த படத்தில் திருத்தி கொள்ள இயக்குனருக்கு அட்வைஸ் மற்றும் பாராட்டுகள், முக்கியமாய்  நீங்கள் எந்த தியேட்டரில் படம் பார்த்தீர்கள் என்று குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த செய்தி நாளைய வரலாற்றில் இடம் பெறும். IMDb-யில் கூட இல்லாத அளவுக்கு, படத்தின் Casting, Writers போன்ற இதர விசயங்களை குறிப்பிட வேண்டும்.

தமிழை தவிர இந்தி, தெலுகு, மலையாளம், ஒரிசா, மராட்டி என பிராந்திய மொழிகளில் வரும் அனைத்து படங்களையும் பார்த்து, டயலாக் புரியவில்லை என்றால் கூட பக்கத்தில் இருப்பவரையாவது கெஞ்சி கேட்டு நோட் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் அதிகம் வரலாம். ஆனாலும் எழுதும்போது  Lifco டிக்சனரியை பயன்படுத்தி நடுநடுவே "அமேசிங்", "மாடுலேஷன்", "இன்ஸ்பயர்", "டெம்ப்ளட்" "ட்விஸ்ட் அண்ட் ட்ர்ன்" போன்ற ஆங்கில வார்த்தைகளை அப்படியே டமிலில் மாற்றி அங்கங்கே நுழைத்து படிப்போருக்கு வயிற்றுபோக்கை வர வழைக்க வேண்டும். அது பிற்காலத்தில் தனி ஸ்டைலாக உருவெடுக்கும். அதை உருவாக்கிய உங்களுக்கு உத்திர பிரதேசத்தின் சாலையோரத்தில் நூற்றுகணக்கில் சிலை வைக்கப் படும்.

நீங்கள் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கி இருக்கலாம். ஆனாலும் அந்த படத்தை மறுபடியும் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதியே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. "மொக்கை படம் தானே! இதற்கு ஏன் விமர்சனம் எழுத வேண்டும்?" என்று உங்கள் மனசாட்சியிடம் கூட கேள்வி கேட்க கூடாது. 

விமர்சனம் தவிர நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் காலையில் எழுந்து பல் துலக்கியது முதல் பிரியாணி செய்து போட்டது வரை அவர்களது அன்றாட செயல்களை பதிக்க வேண்டும். அன்னா ஹசாரே பற்றிய பதிவிலும், நடிகைகளின் கவர்ச்சி வால்பேப்பர் படங்களை ஒவ்வொரு பத்திக்கும் இடையில் சொருகி, படிக்கும் வாசகனின் மூடை கன்னாபின்னா வென்று ஏற்றி விட வேண்டும். 

படத்தின் இயக்குனர் யோசித்திருக்காத கோணத்தில், நாம் யோசித்து அதை கூறு போட்டு விமர்சனம் செய்வது தனி கலை. அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். உங்கள் விமர்சனத்திற்கு உலகமே காத்துக் கொண்டிருப்பதாக பல பில்டப்களை உருவாக்க வேண்டும்.

இந்த பகுதியையும், இனி வரும் தொடர் பகுதிகளையையும் தொகுத்து "குப்பை கொட்டுவது இப்படி" என்ற தலைப்பில் இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். இதற்கு, குப்பை கொட்டும் கலைக்கு ஆசானாக விளங்கும் குட் பீல்ட் அவர்கள் ஆங்கிலத்தில் முன்னுரை எழுத சம்மதத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.


                                                                                             -இன்னும் கொட்டுவோம்.






1 comment:

குப்பை பிளானெட் ஓனர் said...

பாஸ்,

ஏன் இந்த கொலைவெறி?