ஆடி மாசம் காத்தா வந்து
அடி மனச சாச்சு புட்டலே.
கத்தரிகோல் கண்ணால
என் நெஞ்ச
பிட்டு துணியா கிழிச்சு புட்டலே.
ராத்திரி நீ கனவுல வந்தாலே
கொசுக்கடி கூட
சுகமாத்தான் இருக்குதுலே.
ஒவ்வொரு சேலையையும்
நீ வச்சு காமிக்கையில
பக்கத்துலையே நின்னு
பார்த்து ரசித்திடவே
துணிக்கடை பொம்மையா
மனசு மாற துடிக்குதுலே.
தை, ஐப்பசி மாசம் கணக்கு இல்ல
உன்ன பாக்க வர்றதனால
வாரா வாரம்
எனக்கு பொங்கல் தீபாவளிதான்லே.
இந்த கனிய, கனிய வைக்க
கால் கடுக்க காத்திருப்பேன்லே
எம்புட்டு வருஷம் ஆனாலும்.
டிஸ்கி : "எமிய பத்தி மட்டும் எழுதி புட்டலே, என்ன பத்தியும் எழுதுலே" ன்னு நம்ம கனி நேத்து ராத்திரி கனவுல வந்து கேட்டதால இந்த கவிதை.
6 comments:
//இந்த கனிய, கனிய வைக்க
கால் கடுக்க காத்திருப்பேன்லே
எம்புட்டு வருஷம் கூட.//
கவிதை நல்லாருக்குலே
இந்த கனி மேல இம்புட்டு பிரியாமலே உனக்கு
கனி கமெண்ட் போட்டுருக்கா-னு உருகிடாதீங்க
திருநெல்வேலி பேச்சு எல்லாம்
எப்போ கத்துகிட்டீங்க?
ஏலே
கனி கனவுல வரதா
ரைட்டு நீ நடத்து லே
இன்னும் எத்தன பொன்னுவோ வரப் போவுதோ(கனவுல சொன்னன்)பாப்போம்
அருமை :)
நல்லதொரு வழக்குமொழியில் காதல் கவிதை.கனிசீமானுக்கு நன்றி.
எழுதிய வழிப்போக்கனுக்கும் !
ரைட்டு ))))-
en dreamla kuda mahesh vantha, athanala na oru kavithay sollalama vali pokkan avarkala
athenna name gill thanninu cool wathernu vachukoye
Post a Comment