Oct 27, 2010

ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி - ஒரு இனிய அனுபவம்



ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி அப்படிங்கற தலைப்ப பார்த்த உடனே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரியாம அவசர அவசரமா லிங்க்க கிளிக் பண்ணி உள்ள வந்திருந்திங்கன்னா, நீங்க

  • உலக படமான எந்திரனை இன்னும் பார்க்கவில்லை. (இது மட்டும் கலாநிதி மாறனுக்கு தெரிஞ்சுது, இதுக்கு தனியா உங்க மேல கேசு போட்டு லீகலா நடவடிக்கை எடுப்பார்)
(அல்லது)
  • ஆறாவது படிக்கும் போதே செக்ஸ் புக்கை தமிழ் புக்குக்கு நடுவுல வச்சு படிச்சு சங்க தமிழ் வளர்த்த சங்க பிரபுவாக இருக்கலாம். (எந்திரன் படத்தை பார்த்தும் உலக அழகி ஐஸ்வர்யாவை கடித்த ரங்கூஸ்கியையும் சுத்தமாய் மறந்து, குஜாலான மேட்டருன்னு நினைச்சு தெரியாம உள்ள பூந்துட்டிங்க)

இது ரெண்டுல எது உண்மைன்னு பின்னூட்டத்துல மரியாதையா சொல்லிடுங்க. இல்ல நானா கண்டு பிடிச்சேன், அப்புறம் ரங்கூஸ்கிய ஏவி விட்டு, கடிச்சு கடிச்சு விளையாட சொல்லுவேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். (ஹைய்! உண்மையாலுமே மேட்டரு தானா?)

நைட்டு ஆனா, படுத்து கண்ணா மூடினாலும் தூங்க முடியல. முழிச்சி இருந்தாலும் தூக்கம் வரல. என்னது, யாருமேலாவது லவ்வு வந்திருச்சான்னு கேட்கிறிங்களா? அதுதான் நமக்கு காலைல எந்திருச்சா வர்ற உச்சா மாதிரி அடிக்கடி வருதே. அப்புறம் வேறென்ன?

சென்னைல இந்த ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்க முடியல. உலக அழகிய கடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுட்டு நீயும் ஒரு உலக அழகன்தான் அப்படின்னு என் காதுல வந்து கொய்யுன்னு கத்திகிட்டே கடிச்சு டார்ச்சர் பண்ணுதுங்க. இதுல அடிக்கடி நீங்க ரொம்ப நல்லவர்ன்னு வேற பாராட்டு. சரி, நானும் என்னை உலக அழகன்னு சொன்னதுக்காக எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுந்து போர்த்தினாலும், "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்துல ஜெனிலியாவுக்கு போடுறமாதிரி ஒரு பெரிய ஊசியா போட்டு மறுபடியும் ஒரே பாராட்டு தான். நானும் கலைஞர் வீட்டுக்கு வழி காமிச்சு, "அவுர போய் பாராட்டுங்க. உங்க கூட்டத்துக்குன்னு தனியா ஒரு இடம் பரிசா கொடுத்து, பட்டாவும் போட்டு கொடுப்பாரு" அப்படின்னு சொன்னாலும் காதுலையே வாங்க மாட்டேன்குதுங்க. மார்கழி மாசமே இன்னும் வரல அதுக்குள்ள தினமும் காதுல ஏகப்பட்ட பஜனை. இனிமேல் கொசுக்கடிய பத்தி இந்த மாதிரி கவிதை எல்லாம் சத்தியமா எழுத மாட்டேன்.

சரி மேல மொட்டை மாடில போய் தூங்கலாமன்னு யோசிக்கும் போது, வீட்டுல படுத்தாவே ஜன்னல் வழியா தூக்கி கீழ போட்டு கொன்னுரும். மொட்டை மாடின்னா சும்மா விடுமா? அழகா தூக்கிட்டு போய் கீழ தள்ளி முட்டைய உடைச்சு ஆபாயில் போடுற மாதிரி, மண்டைய உடைச்சு இருக்கிற எல்லா ரத்தத்தையும் குடிச்சிட்டு போயிடும்.

பகல்ல கடிக்கிற கொசுவினால் தான் சிக்கன் குனியா வருது அப்படின்னுட்டு  (அப்போ, சிக்கன் அதிகமா சாப்பிடரதனால இல்லையா?) நீ என்னை நல்லா கடிச்சுக்கோ சொல்லி காலை விரிச்சு படுக்க முடியுமா என்ன?

சென்னைல இது மழை சீசன்னு சொல்லாம, ரங்கூஸ்கி சீசன்னு சொல்லலாம். பல்லி, பாம்புன்னு வச்சு அனகோண்டா மாதிரி பெரிய பெரிய ஹாலிவுட் படமெல்லாம் எடுக்கறாங்களே, இந்த கொசுவ வச்சு யாரும் படம் எடுக்க மாட்டாங்களா? ரங்கூஸ்கி மாதிரி பெரிய சைஸ் கொசுவெல்லாம் சேர்ந்து மனுசங்கள கடிச்சு நிமிசத்துல கொல்ற மாதிரியும், கடைசியா ஹீரோ வந்து காட்ஸிலா படத்துல வர்ற மாதிரி, கொசு முட்டை இடற இடத்தை கண்டு பிடிச்சு எல்லா கொசுவையும் குட்டியோடு சேர்த்து கொல்ற மாதிரி படம் எடுத்தாலாவது நமக்கெல்லாம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்.

அப்படி ஒரு படம் கொசுவ வச்சு மிகவும் பிருமாண்டமா கொஞ்சம் காமெடி கலந்து எடுக்க, நம்ம சங்கர தவிர எனக்கு யாரும் தெரியல. எந்திரன்ல வந்த அந்த சின்ன கொசு சீனை பார்த்த, பக்கத்துல இருந்த ஒரு மூணு வயசு குழந்தை சிரிச்சு சிரிச்சு அதுக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு (ஒருவேளை அது அழுதுகிட்டு இருந்ததோ?).


டிஸ்கி: 
இந்த பதிவு ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்காமல் இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதப்பட்டு, அனைத்து ரங்கூஸ்கிகளுக்காகவும் டெடிகேட் செய்யப்பட்டது.
இந்த பதிவு எழுதிகிட்டு இருக்கும் போது பக்கத்துல படுத்திருந்த என் பிரெண்டு கேட்டார் "ஏசி இருந்தா கொசு வராதுல?" ஆமாய்யா, கொசுக்கு குளிர் அடிச்சு போய் போர்வை போர்த்தி படுத்து தூங்கிடும். போய்யா யோய்!





5 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

படிக்கும் போதே தெரியுது கொசுக்கடி தாங்கம்மா எழுதியது தான்னு..


ஆனாலும் தலிவா கொசு கடிச்சதுக்கேல்லாம் ஒரு பதிவா... தாங்கல... ஐயோ தப்பா நினைக்கதேங்க நான் கொசுக்"கடி"ய சொன்னேன்...

Thanglish Payan said...

Nejama edukka vendiya padam than

nenga than atharkku karanakartha va iruppinga ninekkeren... :)

anyway its good.

VISA said...

படிக்கும் போதே தெரியுது கொசுக்கடி தாங்கம்மா எழுதியது தான்னு..

Repeat!!!

அன்பரசன் said...

கொசு கடிக்கு ஒரு பதிவா...

Katz said...

// வெறும்பய said...

படிக்கும் போதே தெரியுது கொசுக்கடி தாங்கம்மா எழுதியது தான்னு..


ஆனாலும் தலிவா கொசு கடிச்சதுக்கேல்லாம் ஒரு பதிவா... தாங்கல... ஐயோ தப்பா நினைக்கதேங்க நான் கொசுக்"கடி"ய சொன்னேன்.//

இருங்க ரங்கூஸ்கி படைய உங்க வீட்டுக்கு அனுபிச்சு விடறேன்

// Thanglish Payan said...

Nejama edukka vendiya padam than

nenga than atharkku karanakartha va iruppinga ninekkeren... :)

anyway its good.//

அட ரொம்ப நன்றி

//

நன்றி விசா

//


// அன்பரசன் said...

கொசு கடிக்கு ஒரு பதிவா...//

இருங்க ரங்கூஸ்கி படைய உங்க வீட்டுக்கு அனுபிச்சு விடறேன்
Repeat