தற்போது நாட்டில் பருப்பை விட வெங்காயத்தின் விலை அதிகம் ஆகிடுச்சு.
டேய் தக்காளி! இனிமேல் எவனாவது "நீ என்ன பெரிய பருப்பா?" கேட்டிங்கின்னா டென்ஷன் ஆகிடுவேன். வேணுமுன்னா "நீ என்ன பெரிய வெங்காயமா?" அப்படின்னு திட்டிக்கோங்க.
இந்த வாரம் ஒரு கடைல சாப்பிட போயிருக்கான் என் பிரெண்டு. சப்ளையரிடம் "வெங்காயம் கொஞ்சம் அதிகமா போட்டு ஒரு அம்லேட் கொடுங்க" அப்படின்னு ஆர்டர் பண்ண, அதுக்கு அந்த சப்ளையர், "தம்பி, ஒரு முட்டை வேணும்னாலும் எக்ஸ்ட்ராவா போட சொல்றேன். ஆனா வெங்காயம் மட்டும் கேட்காதிங்க".
அதனால் இனி கடைகளில் (வலைகளில்) கொத்து பரோட்டா, (சாண்ட்விட்ச் அண்ட்) நான்வெஜ் அயிட்டம்ஸ், ஆம்லேட் இதுமாதிரி எல்லாம் சாப்பிடாமல் நம்ம ஆபாயில் மட்டும் சாப்பிடுங்க. ஒரு "வெங்காய" பிரச்சனையும் வராது. ஹி! ஹி!
ஒவ்வொரு வருசமும் ஆங்கில புத்தாண்டுக்கு எங்க அபார்ட்மென்ட்ல பங்ஷன் நடத்துவாங்க. விளையாட்டு போட்டி, பாட்டு மற்றும் டான்ஸ் இது மாதிரி நிறைய நடக்கும். "இந்த வருஷம் விளையாட்டு போட்டி எதிலாவது கலந்துகிறீன்களாப்பா?" அப்படின்னு கேட்டாங்க. உங்க லிஸ்ட்ல "அம்மா அப்பா விளையாட்டு போட்டி இருக்கா?"
அரசியல்வாதி ஆகணும்ன்னா பரபரப்பா எதாவது பண்ணிகிட்டே இருக்கணும். நம்ம டாக்டர் விஜய் அதிமுகவில் சேர போறதா நியூஸ் கெளப்பி பரபரப்ப உண்டாக்கி இருக்கார். இதற்கு பின்னால் உள்ள பிண்ணனி காரணம் என்னவென்று பார்த்தால். "எத்தனை நாளைக்கு தான் அப்பா பேச்சையே கேட்டுக்கொண்டு இருப்பது? கொஞ்சம் நாளைக்கு அம்மா பேச்சையும் கேட்கலாமேன்னு தான்".
ஆனா நம்ம தளபதியோட மாஸ் என்னன்னு என்னோட முந்திய ஆபாயிலின் (சிலையான விஜய்) ஹிட்ஸ் பார்க்கும் போது தான் தெரிஞ்சது. அதனாலதான் இந்த ஆபாயிலுக்கும் தளபதியே தலைப்புல வந்துட்டாரு. ஆனா தளபதி தேர்தல்ல நின்னா கண்டிப்பா என் ஓட்டு அவருக்கு தான். ;-)
போன வாரம் எங்க மாமா வீட்டுக்கு அவங்களோட ஆறு வயது குட்டி பையன பார்க்கலாம்ன்னு போயிருந்தேன். வீட்டுல அத்தை மட்டும் தான் இருந்தாங்க. எங்க மாமான்னு கேட்டேன். "எத்தனை நாளைக்கு தான் திரும்ப திரும்ப வடிவேலு, விவேக்கின் பழைய காமெடியவே பார்த்துக்கிட்டு இருக்கிறது" அப்படின்னு பையன் புதுசா காமெடி பார்க்கணும்ன்னு கேட்டு இருக்கான். மாமாவும் "கொஞ்சம் பொறு. அடுத்த மாசம் காவலன் ரிலீஸ் ஆகுது." அப்படின்னு சொல்லி இருக்கார். பையனும் காவலன் ரிலீஸ் ஆகும்ன்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் இப்பவே ஏதாவது காமெடி படம் பார்த்தாகனும்ன்னு அடம் புடிச்சு இருக்கான். உடனே மாமாவும் வேறு வழி இல்லாமல் "புது டாக்டர்" நடித்த விருத்தகிரி படத்துக்கு பையனை கூட்டிகிட்டு போயிருக்கார்.
எங்க வீட்டுல எனக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிச்சிடுச்சு. போன வாரம் வீட்டுக்கு போன போது, எங்க அப்பா, நாலைந்து பெண்களோட ஜாதகத்த காமிச்சு ஒவ்வொரு பொண்ணும் என்னென்ன படிச்சு இருக்கு, அவங்களோட சொத்து பத்து எல்லாத்தையும் வரிசையா சொன்னாரு. கடைசியா ஒரு ஜாதகத்த காமிச்சு "இந்த பொண்ணு டீச்சர் ஆக வொர்க் பண்ணுது. 10 ஏக்கர்ல மாந்தோட்டம் இருக்கு" அப்படின்னு சொன்னார். நானும் கொஞ்சம் காமெடியா "அவங்க வீட்டு மாங்கா நல்லா ருசியா இருக்குமா?"ன்னு கேட்டேன். உடனே பக்கத்தில இருந்த என் சொந்தகார பையன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டான். ஏன்டா, இப்படி தப்பு தாப்பா யோசிக்கிறீங்க?
நான் ஒரு மிக பெரிய பணக்காரனா ஆனா கூட, இந்த விஜய் மல்லையா மாதிரி ஆகணும். இந்த ஆள பாருங்க சமீரா குட்டிய, மன்னிக்கவும் ரெட்டிய எப்படி கட்டிப் புடிச்சு ரொட்டி மாதிரி சாப்பிடறான். இந்த அம்பானி, டாட்டா, சச்சின் எவ்வளவுதான் காசு வச்சிருந்தாலும்? பப்ளிக்ல......................... ஹும்........... பெரும் மூச்சு.
Last week tweets.
- ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனைப் போல இன்னிக்கும் ஹர்பஜன் சதம் அடித்து இந்தியாவை மீட்பார் என்று எதிர் பார்த்தேன். (First test with SA)
- I'd rather stay with a Ghost (female) than be alone... ;-)
- My colleague had a packet of chocolates in her desk.
I asked "Do you like chocolates more?" She nodded negatively.
"Or the chocolates like you more?". Now she smiled positively.
6 comments:
ஆபாயில் கொஞ்சம் பெப்பர் தூக்கலா இருக்கே...
சமீரா மல்லையாவுக்கு சொந்தகார பொண்ணுன்னு எங்கயோ கேட்ட ஞாபகம்..
செம ஆபாயில் பாஸ்!
//அம்மா அப்பா விளையாட்டு போட்டி இருக்கா?"//
லொள்ளு ஜாஸ்தி தான் உமக்கு.. :))
//அதனால் இனி கடைகளில் (வலைகளில்) கொத்து பரோட்டா, (சாண்ட்விட்ச் அண்ட்) நான்வெஜ் அயிட்டம்ஸ், ஆம்லேட் இதுமாதிரி எல்லாம் சாப்பிடாமல் நம்ம ஆபாயில் மட்டும் சாப்பிடுங்க. ஒரு "வெங்காய" பிரச்சனையும் வராது. ஹி! ஹி!///
ஏன்னா விளம்பரம். ஹிஹி
// அதனால் இனி கடைகளில் (வலைகளில்) கொத்து பரோட்டா, (சாண்ட்விட்ச் அண்ட்) நான்வெஜ் அயிட்டம்ஸ், ஆம்லேட் இதுமாதிரி எல்லாம் சாப்பிடாமல் நம்ம ஆபாயில் மட்டும் சாப்பிடுங்க. //
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...
மக்களுக்கு ஏற்ற மாதிரி நடிப்பேன் என்று சொன்னால் ஜனநாயகம். நான் நடிக்கிறதை மக்கள் ஏற்று தான் ஆகணும்னு சொன்னா அது சர்வாதிகாரம். ஜனநாயகம் தத்திபித்தி தப்பிடும். சர்வாதிகாரம் ஒரு நாள் துவண்டுடும். விஜய் புரிஞ்சுக்குவாரா?
:)
Post a Comment