Aug 22, 2010

நடிகர்கள் வலைப்பூ - Wiki Pedia விவரங்கள் பகுதி 1

இந்த பதிவு முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே. இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை. (அப்பாடி, இனி என்ன வேணா எழுதலாம்.)




வலைப்பூ பெயர்: போக்கிரி.
கேப்சன் : ஒரு தடவ நான் பதிவு போட்டா, அப்புறம் என் பதிவ நானே படிக்க மாட்டேன். (அப்புறம் மக்கள் எப்படி படிக்கறது?)

ஆரம்பத்துல தன் அப்பாவோடு சேர்ந்து அஜால் குஜால் படங்களை பதிவா போட்டு வலைப்பூவ ஓட்டிகிட்டு இருந்தார். அப்புறம் கொஞ்ச நாள் நடுவுல கொஞ்சம் சுமாரான பதிவா போட்டு தனக்கென்று ஒரு அடிப்பொடிகள் வட்டத்த உருவாக்கிக்கொண்டார். வாழ்க்கை ஒரு வட்டம்னு அவரு அடிக்கடி சொல்லுவாரு. இப்ப அவராலேயே அந்த வட்டத்தை விட்டு வெளிய வரமுடியல.

அவரு போடுற மொக்க பதிவுக்கு, எந்த வோட்டும் பின்னூட்டமும் வரலீனா, அவரும் அவங்க அப்பாவும் சேர்ந்து வெவ்வேற ஐ.டி கிரியேட் பண்ணி வேணுங்கற அளவுக்கு நூறோ இல்ல இருநூறோ பின்னூட்டம் போட்டுக்குவாங்க. அதுக்கு "நூறு பின்னூட்டம் அள்ளி தந்த ரசிகர்களுக்கு நன்றி" அப்படின்னு ப்ளாக்ல பேனரும் ஓட விடுவாங்க.
தொடர்ந்து எந்த மொக்க பதிவுமே ஹிட் ஆகலைனா, தெலுங்கு வலைப்பூ படிச்சு அதுல இருக்கிற நல்ல பதிவு எடுத்து மொழி மாற்றம் செஞ்சு அப்படியே தன் பதிவா போட்டு பொழப்ப ஓட்டுறதையெ ஒரு பொழப்பா வச்சு இருக்கார்.





வலைப்பூ பெயர்: தல.
கேப்சன் : தல மட்டும் தான் ஆடனும் இடுப்பு ஆட கூடாது. (அது!)

காதல் கதைகள், கவிதைகள்ன்னு எழுதி எல்லோருடைய பின்னூட்டத்தையும் கவர்ந்தவர். பின்னாளில் ரவுடி ஆக முயற்சி பண்ணி இருக்கிற பாலோவர்சையும் கொஞ்சம் கொஞ்சமா இழந்தார். சில சமயம் சின்ன பதிவா போடுறதும் சில சமயம் ரொம்ப பெருசா பதிவ போட்டும் படிக்கும் மக்களை நிலை குலைய வைப்பார்.
அப்புறம் பதிவு எழுதறதுக்கு நடுவுல அடிக்கடி கம்ப்யூட்டர்ல NFS கார் கேம் விளையாடறது இவருக்கு பொழுது போக்கான விஷயம்.

இவர் "சூப்பர் பதிவரோட" பதிவ எடுத்து அதுல இருக்கற கதா பாத்திரம் பேர மட்டும் மாத்தி தன்னோட பதிவா போட்டு ஹிட் பண்ணுவாரு. இவரு எதை எழுதினாலும் "கலக்கிட்டிங்க தல, அசத்திட்டிங்க தல" அப்படின்னு பின்னூட்டம் போடுறதுக்குன்னே ஒரு பெரிய கூட்டம் இருக்கு.  வீட்டுல இருந்தா கூட கோட் போட்டு டை கட்டிக்கிட்டு தான் பதிவு எழுதவே உட்காருவாரு. (கோட்டு போட்டா தான் பதிவு எல்லாம் ஹிட் ஆவுதுன்னு இவருக்கு ஒரு நம்பிக்கை).




வலைப்பூ பெயர்: கஜா என்கிற கஜேந்திரன்.
கேப்சன் : கரண்ட்டு அடிச்சு கூட தப்பிச்சவன் இருக்கான். ஆனா இந்த கஜேந்திரன் பதிவ படிச்சு உயிர் பொழைச்சவன் எவனும் இல்ல. (படிப்பீங்க?)

பதிவுகள் மூலமாக பல புரட்சிகரமான சிந்தனைகளை மக்களுக்குள் விதைச்சு அறுவடை பண்ணியவர். பதிவ எழுதும் போது கூட பல்ல கடிச்சுகிட்டு தான் எழுதுவாரு. நாட்டுல நடக்கிற அந்நியாயங்களுக்கு எதிராக பேனால சிவப்பு இன்க்(ink) தெறிக்க தெறிக்க எழுதுவாரு. இவருக்கு சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் மனப்பாடம் செஞ்சு வச்சு இருக்கிற திருக்குறள் இது ஒன்னு தான்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இவரோட காஷ்மீர் தீவிரவாதம், நக்சலைட்டுகள் பற்றிய கட்டுரைகளை படித்து குறிப்பு எடுத்து தான் இந்திய அரசே நிறைய தீவிரவாதிகளை வளைச்சு புடிச்சிருக்கு. இவருக்கு அனானியா வந்து பின்னூட்டம் போட்டவங்களை எல்லாம் தன்னோட பதிவுல புரட்டி புரட்டி எடுப்பாரு. இவருக்கு ஆங்கிலத்துல புடிக்காத ரெண்டே வார்த்தை "மைனஸ் வோட்". மிகவும் சொற்ப ஓட்டுகளே கிடைத்து வந்தாலும் தற்போது தொடர்ந்து அரசியல் பதிவே அதிகம் எழுதி வருகிறார். இவர எல்லோரும் கேப்டன் கேப்டன்னு தான் கூப்பிடமுன்னு சொல்லுவாரு.( உபயம்: பசங்க படம்.)


டிஸ்கி : இதற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து அடுத்த பகுதி வெளி வரும்.




8 comments:

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க.... தொடருங்க.

Jey said...

go ahead...:)

ப்ரியமுடன் வசந்த் said...

அஜீத்தும் விஜயும் செம ரகளை தொடருங்க ...

ஜில்தண்ணி said...

// டிஸ்கி : இதற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து அடுத்த பகுதி வெளி வரும். //

yOv epdi irunthaalum podathaam pora
athukku intha build up vera

thala thaaru maaru

adutha post la namma heroine pathi yethavathu ezhuthuna naatuku nallatha pogum le

Riyas said...

சூப்பரு.. தொடரவும்

Ramesh said...

இந்த மாதிரி வாரி விடற வேலைக்கு எல்லாம் ஆதரவு தராம இருப்பமா...தொடருங்க...எங்க ஆதரவு நிச்சயம் உண்டு..

Jayadev Das said...

போக்கிரி: இவரோட அப்பாகிட்ட ஒருத்தர் வந்து ஒரு கதையைச் சொல்லி அதை அவங்க வலைபதிவுல போடச் சொன்னார், அதுக்கு அவர், "அடடே பே ஷா போடலாமே, உங்க பெயரிலேயே போடலாமே, அதுக்கு கொஞ்சம் பணம் கூட கொடுக்குறோமேன்னு" சொல்லி ஆயிரமோ ரெண்டாயிரமோ கொடுக்கப் பாத்தார். அதுக்கு அவர் மறுத்து என்னோட பெயர் வலைப் பதிவுல வந்தா போதும்னு சொல்லிட்டு போயிட்டார். அவ்வளதான், சீக்கிரமாவே அந்தக் கதை வலைபதிவுல வந்தது, ஆனா எழுதியவர் பெயர் மட்டும் ஷோபா சந்திரசேகர் அப்படின்னு போடப் பட்டிருந்தது. கதை எழுதியவருக்கு பட்டை நாமம். அப்பேற்பட்ட யோக்கியஸ்தன், போக்கிரியோட அப்பா. இந்த நாணயத்தோட போக்கிரி இப்ப அரசியலுக்கு வரப் பிரயத்தனம் செஞ்சுகிட்டு இருக்கார். இது வரைக்கும் அஜால் குஜால் படங்களில் நடிச்சு சேவை செஞ்சவர் இப்போ மக்களுக்காக தொண்டு செஞ்சு தேய காத்துகிட்டு இருக்கார். பதவிக்கு வந்து ஊழல் பண்ணி பணத்தை சுருட்டி, சில ஆயிரம் கோடிகளை சுவிஸ் வங்கியில போடணும்கிற எண்ணம் போக்கிரிக்கு இல்லவே இல்லை. இளிச்சவா தமிழன் இவர என்ன பண்ணுவான்னு பொறுத்திருந்து தான் பாக்கணும்.

Unknown said...

Good