Aug 3, 2010

அன்பான பேய் வீடு - ஆபாயில்

ஆபாயிலுக்கு ஆதரவு தொடர்ந்து அளித்து, எனது முதல் ஆபாயிலையும் இன்ட்லியில் வெற்றி பெறச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.


பூம் பூம் ஷகலக்க:

கடந்த மாதம் ஊர்ல இருந்து வரும் போது டிரைன்ல டிக்கெட் கிடைக்காததால், சேலத்துல இருந்து சென்னைக்கு அரசு SETC பஸ்ல வரவேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு. சரி ஏழு மணி நேரம் கொஞ்சம் கஷ்டப்பட்டு உட்காந்துகிட்டு வந்திடலாம்ன்னு நினைச்சேன். ஆனா போன வுடனே BOOM TV போட்டு அந்த ஏழு மணி நேரத்தையும் எனக்கு ஏழரையா மாத்திட்டாங்க. தீவிரவாதிக்கு கொஞ்சம் கொஞ்சமா ஷாக் கொடுத்து சித்ரவதை பண்ற மாதிரி, நம்ம மாஞ்ச வேலு வந்து காமெடி, டான்சு பைட்டுன்னு தனி தனியா பண்ணி காமித்து என்னை டர்ராகிட்டார். நிஜமேலும் நான் ஷாக் ஆயிட்டேன். உங்களுக்கு சத்தியமா நெஞ்சுல மாஞ்சா இருந்தா முழு படத்தையும் பாருங்க. இதுக்கு நடுவுல நம்ம நாசர் சார் அடிக்கடி ஒரு கம்பிய தூக்கிட்டு வந்து, இது தான் அசத்தலான முறுக்கு கம்பின்னு சொல்லி என்னோட கழுத்துல மாட்டி முறுக்கி என்னையும் அது உறுதியான கம்பின்னு ஒத்துக்க வச்சுட்டார் (உறுதியான கம்பிய எப்படி கையில முறுக்கிநார்ன்னு கேட்க கூடாது). இதுல போட்ட விளம்பரத்தையே திருப்பி திருப்பி போட்டு சாக அடிக்கறாங்க. இனி டிரையின் கிடைக்கலைனா பிளைட்டு தான்னு பஸ்ஸ விட்டு இறங்குனதுமே முடிவு பண்ணிட்டேன்.





போன வாரம் சனி கிழமை நேரம் போகலைன்னுட்டு, ராயபேட்டைல புதுசா ஓபன் பண்ணி இருக்க "எக்ஸ்பிரஸ் அவென்யு" மாலுக்கு என் நண்பனோடு போயிருந்தேன். ஸ்பென்சர்க்கு எதிர்ல சிட்டி பேங்க்க்கு பின்புறமா அமைந்திருக்கு. சவுத் இந்தியாவிலே மிக பெரிய மால் இதுதான்னு சொல்றாங்க. இந்த "அவென்யு" மால் கண்டிப்பா ஸ்பென்சரோட  கூட்டத்தையெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி அசால்ட்டா அடிச்சு சுருட்ட போகுது. உள்ள போனா அதி பிரமாண்டமாகவே இருக்கு. இப்பதான் 60 சதவிகிதம் கடைகள் வந்திருக்கு. இன்னும் நிறைய வர போகுது. சத்யம் தியேட்டர் இங்கே தன்னோட கிளைய, 8 ஸ்க்ரீன் உடன் ஓபன் பண்ண போகுதாம். Life Style மூணு floor -லயும் இருக்கு. Life Style -ல  கலேக்சனும்  அதிகம் கூடவே காசும். நானும் ஏதாவது டீ ஷர்ட் எடுக்கலாம்னு பார்த்தா பொம்மைக்கு போட்டு இருக்கிற ஷர்ட், பேன்ட் எல்லாம் படு சூப்பரா இருக்கு.  இதை வைத்து ஒரு கவிதை "என் பொம்முக்குட்டி காதலிக்கு".


மூணாவது floor -ல Food Court. பூந்தமல்லி Sky Walk மால் மாதிரியே, இங்கேயும் எங்க போய் சாப்பிடறதா இருந்தாலும், ஒரு கார்டு கொடுப்பாங்க. அதுல சாப்பிட எவ்வளவு செலவு ஆகுமோ அந்த அளவுக்கு பணத்த கொடுத்து (No Credit/Debit Card) அந்த கார்ட்ல top -up பண்ணிக்கணும். அப்புறம் இந்த கார்ட காமிச்சு எதெது வேணுமோ அந்தந்த கடைல போய் வாங்கி சாப்பிடலாம். போகும் போது கார்ட திருப்பி கொடுத்து கார்ட்ல மிச்சம் இருக்கிற பணத்த வாங்கிக்கலாம். Window Shopping  போறதுன்னு முடிவு எடுத்துட்டிங்கன்னா பஸ்ல போயிடுங்க. பைக்ல போயிட்டு நாலு மணி நேரம் சுத்திட்டு வந்திங்கன்னா பார்கிங் சார்ஜ் ரெண்டு வீலுக்கும் சேர்த்து பஞ்சர் போடுறத விட அதிகமாயிடும். முதல் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபா. அப்புறம் ஆகுற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 ரூபா. அந்த பார்கிங் டிக்கெட்ட தொலைச்சுட்டிங்கன்னா, 250 ரூபா பைன். Four வீலர்ன்னா Just 500.




மிழ்ல பேய் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு அப்படின்னு ஆனந்தபுரத்து வீடு படம் பார்க்க போனேன். ஆஹா! இந்த மாதிரி ஜாலியா, சந்தோசமா ஒரு பேய் படத்த ரசித்து ரசித்து இதுவரை பார்த்ததே இல்ல. ஏன்னா, இது ரொம்ப நல்ல பேய். அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு சமைக்கறது, துணி துவைக்கிறதுன்னு எல்லா வேலையும் பேயே செய்யுதுங்க. இந்த மாதிரி ஒரு பேய் எங்க ரூம்ல இருந்தா பரவால்லைன்னு தோணுது. ஏன்னா, ரூம்ல பசங்க எந்திரிச்சவுடனே ஒழுங்கா பெட் சீட் மடிச்சு வைக்கறதில்ல. சமைச்சா அந்த பாத்திரத்த கழுவறதில்லை. படம் முடிஞ்சு "Film by நாகா" ன்னு இயக்குனர் பெயரை போடும் போது தான் எனக்கு கொஞ்சம் பயமாவே இருந்துச்சு.

நமீதா டச்: ஆனந்தபுரத்து வீடு, அன்பான பேய் வீடு.




Jul 30, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் ? அட்டு தகவல்கள்.



இந்த தொடர் பதிவ என்னை எழுத அழைத்த திரு வழிப்போக்கன் அவர்களுக்கு நன்றி. இது யாருடா இன்னொரு வழிபோக்கன்னான்னு யோசிக்காதிங்க. நானே என்னைய கூப்பிட்டு கிட்டேன். ஹி! ஹி!, இதெல்லாம் அசிங்கம்ன்னு நினைச்சா blog நடத்த முடியுமா?

ரெண்டு மூணு நாலா உடம்பு வேற ரொம்ப சரி இல்லாம போச்சு. அதனால பதிவு எதுமே போட முடியல. பிரெண்டு கூட கேட்டான் ஏன்டா ப்ளாக்ல போஸ்ட்டு போடலைன்னு. ஆமா இன்னும் ரெண்டு நாலு இப்படியே இருந்தா என்னை போஸ்ட்மார்டம் பண்ணிடுவாங்க. இதுல எங்க போஸ்ட் போடுறது.

சரி, கொஸ்டினுக்கு போலாமா?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதுக்கு மேலயும் அத உங்களுக்கு சொல்லித்தான் தெரியனுமா என்ன? (யாருப்பா இந்த மாதிரி ஒன்னாம் கிளாஸ் கேள்வி எல்லாம் கேட்கறது?) ஓகே நெக்ஸ்ட்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மை பெயர், கதிர்வேல்.  என்னடா பழைய பேரு மாதிரி இருக்குன்னு பாக்காதிங்க. இந்த பேருல அஜ்மல் நடிச்ச ஒரு புது படமே வெளி வரபோகுது.

வழிபோக்கன்னு பேரு வச்ச காரணம்? எல்லோரும் திரும்பி பார்ப்பாங்க அப்படிங்கறதுகாகத்தான்.  (முக்கியமா பொண்ணுங்க)


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வலை உலகத்துல இன்னும் கால் அடி கூட எடுத்து வைக்கல. ஆனா என் காதலி கவிதாவுக்கு தான் நன்றி சொல்லோனும். கவிதாகுள்ள இருந்து தான் என்னோட கரு எல்லாம் உண்டாகுது. நீங்க நினைக்கிற கரு இல்ல. இது கவிதைக்கான பொருள்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

இன்னும்  பிரபலம் ஆகலைங்க. பிரபலமாகத்தான் ஆபாயில் போட ஆரம்பிச்சுருக்கேன்.  நீங்களும் படிச்சு உங்க ஆதரவ கொடுங்க. திரட்டியின் தயவால் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ரவுடி (பிரபலம்) ஆக ட்ரை பண்ணறேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லைங்க. நம்ம இமேஜ நாமலே டேமேஜ் பண்ண கூடாதுங்கற முன் எச்சரிக்கைதான். ஆனால் கூட இருக்கிற நண்பர்கள் பத்தி கொஞ்சம் எழுதி இருக்கேன் (புட்பால் கிரேசி இருபத்தி நான்காம் புலிகேசி , கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்).  அதனால இப்பல்லாம் பசங்க எங்க அவங்கள பத்தி எழுதிடுவேனோன்னுட்டு பயந்துகிட்டே எனக்கு வோட்டு  போட்டுடறாங்க. எப்படி? என் ஐடியா.
என்ன பொறுத்த வர, விளைவுங்கறது நல்லதாத்தான் இருக்கனும். ஹி ஹி.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க ஆபீஸ்ல வேலையே இல்லாம எப்படி பொழுத போக்கறதுன்னு தெரியாம முழிச்சு கிட்டு இருக்கும் போது தான் வலைப்பூவோட அறிமுகம் கிடைச்சுது (இதை எங்க மேனேஜர் படிக்காம இருந்தா சரி). காசு பணம் யாருக்கு வேணும். உங்க அன்பும், பின்னூட்டமும் இருந்தா அதுவே மனசுக்கு தெம்பா இருக்கும்ங்க.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்.  என்னோட இடுப்புல மூணு தாங்க இருக்கு. அதுல ஒன்னு இங்கிலிபீசு.  அப்புறம் நான் அழகா போட்டோ எடுப்பேன் (மத்தவங்க சொன்னாங்க). குறிப்பா வயசு பொண்ணுங்கள (டிரஸ் இல்லாம). அதுக்கொரு வலைப்பூ வச்சிருக்கேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாம படர மாதிரி எனக்கு தெரிஞ்சு யாருமே இங்க எழுதறதில்ல. இப்படி சொன்னாலாவது நம்ம மேல யாராவது கோபப் படுவாங்கலான்னு பார்க்கலாம். (கேள்விய கவர் பண்ணியாச்சு)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
  
LK  அப்படிங்கறவரு என்னை அவரோட வலைப்பூல அறிமுக படுத்தினார்.  எனக்கு நானே எதிர்கவிதை எழுதனத பாராட்டி அறிமுக படுத்தி இருந்தார். அவருக்கு என் நன்றி. மக்கா நீங்களும் அவர பார்த்து புத்திசாலிதனமா நடந்துகோங்க.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சாக போற தூக்கு தண்டனை கைதிகிட்ட கேட்கற மாதிரியே இருக்கு. இன்னும் இந்த பதிவுலகத்துல எத்தனையோ சாதிக்க வேண்டி இருக்கு. 
சரி, எனக்கு வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. அதனால உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பொண்ணா பார்த்து சொல்லுங்க. கல்யாணம் ஆச்சுன்னா சொல்றேன் வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்க. மொய் மறக்காம வைக்கோணும் ஆமா.







Jul 26, 2010

காதல் அரக்கி



காதல் அரக்கி
உன் கனவுகள் பொறுக்கி
கவிதைகள் கோர்க்கிறேன்...
காலையில் எழுந்து  

நிலவை தின்னும்
சூரியன் வெறுக்கிறேன்...


சூரியன் எண்ணம்
வெயிலாய் கருக
பகலில் நிலவாய்
பவனி வந்தாய்...


சினம் கொண்ட சூரியனின் 
புற ஊதா கதிர்கள் 
உன் புறங்கள் ஊடுருவ 
அம்மை போட்டு 
நிலவில் களங்கம்...

இனி கவலை வேண்டாம்.
நிழல் மேகமாய் உனை
பின் தொடர்வேன் 
உன் பாதையெங்கும்.
உனக்கு வியர்க்கும் பொழுது
மழையாய் பொழிவேன்
உன் மேனி எங்கும்...



Jul 23, 2010

I love Amy Jackson - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 23 Jul 2010

ஆபாயிலுக்கு ஆதரவளித்த அனைத்து குடி மக்களுக்கும், இனி ஆதரவு தர போகும் நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் தமிழ் நாட்டுல இருக்கிற 234 தொகுதியில மட்டும் தான் ஆதரவு கேட்டேன். ஆனா ஹாலிவுட் பாலா அமெரிக்கால இருக்கிற டூவால் கவுண்டி தொகுதியோட ஆதரவும் எனக்குதான்னு சொல்லி அசர வச்சுட்டாரு. உங்கள் பேராதரவுடன் இதோ என் முதல் ஆபாயில்.

ஆபாயில்ன்னு அழகா பேரு எல்லாம் வச்சு ஆதரவெல்லாம் திரட்டியாச்சு. ஆனா என்னத்த எழுதி நிரப்பறது?
நாம ரசித்த எதாவது ஒரு You Tube வீடியோ. அப்புறம் ஒரு ஏ ஜோக். ம்..ம்..ம்.. என்ன பண்ணலாம்?
சரி, தோணுறத எழுதி பார்ப்போம் வொர்க் அவுட் ஆகுதான்னு. இப்பல்லாம் பதிவு எழுதறதுக்கு யோசிக்கவே தனியா சாப்பிடனும் போல.

மதராசபட்டணம் படம் பார்த்ததுக்கு அப்புறம் எமி பத்தி பயங்கரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விக்கி பீடியால போய், எமிய பத்தின முழு விவரத்தை படிச்சு மனப்பாடம் பண்ணிட்டேன் . எமி ஒரு lingerie மாடல்ன்னு தெரிஞ்சவுடனே எமியோட Official site -ல இருக்கிற gallery-ய ஓபன் பண்ணி ஒன்னு விடாம பார்த்துட்டேன் (ஹி! ஹி!). எச்சரிக்கை! தெரியாத்தனமா யாரும் ஆபீஸ்ல இந்த சைட்ட திறந்து பார்த்துடாதிங்க. ஏன்னா, நம்ம எமி திறந்த வெளியில் அட்டகாசமான போஸ்ல அம்சமா படுத்து கிடப்பாங்க.
அப்புறம் உங்க பக்கத்துல இருக்கறவங்க, நீங்க அசிங்கமான படத்த  பார்க்குறத பார்த்துட்டு உங்கள அசிங்கமா பார்ப்பாங்க. உண்மையா சொன்னா, அது ரொம்பவே அழகான படம்தான். ஹி! ஹி!



அப்படியே நான் எமியோட வலைப்பூவையும் பின்தொடர ஆரம்பிச்சாச்சு (உம்!..எமிய தான் பின்தொடர முடியல..). நீங்களும் போய் பாருங்க. பொண்ணு கலைஞர் டிவி இன்டெர்வியுவ் பத்தியும், சென்னை பத்தியும் நிறைய சிலாகித்து சொல்லியிருக்கா. அம்மணி மிஸ் இங்கிலாந்து பட்டத்துக்காக போட்டி போடறாங்க. நம்மால ஓட்டு போட முடியுமான்னு தெரியல. முடிஞ்சா முயற்சி பண்ணுங்க எமி ரசிகர்களே!.
இப்பவெல்லாம் தூக்கத்துல கூட எமி எமின்னு தான் உளறிகிட்டு இருக்கேன். பக்கத்துல படுத்து இருக்கிற தெலுங்கு பிரெண்டு எட்டி உதைச்சு ஏமி ரா? ன்னு கேட்கிறான். நான் 'எமி'ங்க, அவன் 'ஏமி'ங்க ஒரே ரவுசுதான். சீக்கிரம் மதராசபட்டணத்த தெலுங்குல டப் பண்ணுங்கப்பா!



ங்க வீட்டுல என்னைய கல்யாணம் பண்ன சொல்லி ரொம்ப தொந்தரவு பண்றாங்க. (எமி ஓகே சொன்னா உடனே சம்மதம் தான்..). எதுக்கெடுத்தாலும் எங்க அம்மா களவாணில வர்ற சரண்யா மாதிரி, "உனக்கு இப்ப கல்யாணம் பண்ணா தான் life சூப்பரா இருக்கும்ன்னு ஜாதகத்துல போட்டிருக்கு" அப்படின்னு அதையே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
சரி நான் வேற கம்பெனி மாறணும்ன்னு சொன்னா, அதுக்கும் உனக்கு கல்யாணம் ஆனா தான் வேலையும் அடுத்தது நல்லதா கிடைக்கும்ன்னு ஜாதகத்துல சொல்லி இருக்கு அப்படிங்கறாங்க. சரி, இப்ப இருக்கற வீடு சின்னதா இருக்கு, ஒரு புது வீடு கட்டிட்டு கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கும் அதே பதில் தான். ஓகே அதெல்லாம் சரி, ஒரு பொண்ணும் என்னை லவ் பண்ண மாட்டேன்கிறாங்க. இதுக்கும் கல்யாணம் ஆன அப்புறம் தான் யாரவது லவ் பண்ணுவாங்கன்னு ஜாதகத்துல போட்டு இருக்கா?


போன வாரம் எங்க ரூமுக்கு என்னோட காலேஜ் பிரெண்டு ஒருத்தன் வந்தான். எவ்வளவு நேரம் தான் மொக்க போடுறது?. சரி, கேரம் போர்டு விளையாடலாமேன்னு எடுத்து வச்சு ஆரம்பிச்சோம். எனக்கு கருப்பு காயின். அவனுக்கு வெள்ளை. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே கேரம் போர்டு ஆப்பிரிக்கா நாடு மாதிரி ஆயிடுச்சு. கருப்பு காயின் மட்டும் தான் உள்ள இருக்கு. எப்படிடா இவ்வளவு சூப்பரா விளையாடரன்னு கேட்டா? சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது, படிக்கறது, தூங்கறது எல்லாமே கேரம் போர்டுல தானாம். பள்ளி கூடத்துக்கு போறப்ப கூட கேரம் போர்டுல இருக்கற பவுடர்தான் பூசிகிட்டு போவானாம். அந்த அளவு கேரம் போர்டுல பைத்தியமாம். ரைட்டு.

இதை வைத்து ஒரு கவிதை.

வெள்ளையர்கள்
வெளியேறி விட்டார்கள்
ஆனாலும்
கறுப்பர்களுக்கு தோல்விதான்



இந்த வார பதிவுலக தத்துவம்.

"பதிவை போடு பின்னூட்டம் எதிர்பார்க்காதே"

(ஆண்டவா! இந்த பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் குறைஞ்சது நூறு வரணும். ஹி! ஹி!)





Jul 20, 2010

அங்காடிதெரு அஞ்சலிக்கு



ஆடி மாசம் காத்தா வந்து 
அடி மனச சாச்சு புட்டலே.

கத்தரிகோல் கண்ணால
என் நெஞ்ச
பிட்டு துணியா கிழிச்சு புட்டலே.

ராத்திரி நீ கனவுல வந்தாலே
கொசுக்கடி கூட
சுகமாத்தான் இருக்குதுலே.

ஒவ்வொரு சேலையையும்
நீ வச்சு காமிக்கையில
பக்கத்துலையே நின்னு 
பார்த்து ரசித்திடவே
துணிக்கடை பொம்மையா
மனசு மாற துடிக்குதுலே.

தை, ஐப்பசி மாசம் கணக்கு இல்ல
உன்ன பாக்க வர்றதனால
வாரா வாரம்
எனக்கு பொங்கல் தீபாவளிதான்லே.

இந்த கனிய, கனிய வைக்க
கால் கடுக்க காத்திருப்பேன்லே
எம்புட்டு வருஷம் ஆனாலும்.



டிஸ்கி : "எமிய பத்தி மட்டும் எழுதி புட்டலே, என்ன பத்தியும் எழுதுலே" ன்னு நம்ம கனி நேத்து ராத்திரி கனவுல வந்து கேட்டதால இந்த கவிதை.