Jul 23, 2010

I love Amy Jackson - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 23 Jul 2010

ஆபாயிலுக்கு ஆதரவளித்த அனைத்து குடி மக்களுக்கும், இனி ஆதரவு தர போகும் நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் தமிழ் நாட்டுல இருக்கிற 234 தொகுதியில மட்டும் தான் ஆதரவு கேட்டேன். ஆனா ஹாலிவுட் பாலா அமெரிக்கால இருக்கிற டூவால் கவுண்டி தொகுதியோட ஆதரவும் எனக்குதான்னு சொல்லி அசர வச்சுட்டாரு. உங்கள் பேராதரவுடன் இதோ என் முதல் ஆபாயில்.

ஆபாயில்ன்னு அழகா பேரு எல்லாம் வச்சு ஆதரவெல்லாம் திரட்டியாச்சு. ஆனா என்னத்த எழுதி நிரப்பறது?
நாம ரசித்த எதாவது ஒரு You Tube வீடியோ. அப்புறம் ஒரு ஏ ஜோக். ம்..ம்..ம்.. என்ன பண்ணலாம்?
சரி, தோணுறத எழுதி பார்ப்போம் வொர்க் அவுட் ஆகுதான்னு. இப்பல்லாம் பதிவு எழுதறதுக்கு யோசிக்கவே தனியா சாப்பிடனும் போல.

மதராசபட்டணம் படம் பார்த்ததுக்கு அப்புறம் எமி பத்தி பயங்கரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விக்கி பீடியால போய், எமிய பத்தின முழு விவரத்தை படிச்சு மனப்பாடம் பண்ணிட்டேன் . எமி ஒரு lingerie மாடல்ன்னு தெரிஞ்சவுடனே எமியோட Official site -ல இருக்கிற gallery-ய ஓபன் பண்ணி ஒன்னு விடாம பார்த்துட்டேன் (ஹி! ஹி!). எச்சரிக்கை! தெரியாத்தனமா யாரும் ஆபீஸ்ல இந்த சைட்ட திறந்து பார்த்துடாதிங்க. ஏன்னா, நம்ம எமி திறந்த வெளியில் அட்டகாசமான போஸ்ல அம்சமா படுத்து கிடப்பாங்க.
அப்புறம் உங்க பக்கத்துல இருக்கறவங்க, நீங்க அசிங்கமான படத்த  பார்க்குறத பார்த்துட்டு உங்கள அசிங்கமா பார்ப்பாங்க. உண்மையா சொன்னா, அது ரொம்பவே அழகான படம்தான். ஹி! ஹி!



அப்படியே நான் எமியோட வலைப்பூவையும் பின்தொடர ஆரம்பிச்சாச்சு (உம்!..எமிய தான் பின்தொடர முடியல..). நீங்களும் போய் பாருங்க. பொண்ணு கலைஞர் டிவி இன்டெர்வியுவ் பத்தியும், சென்னை பத்தியும் நிறைய சிலாகித்து சொல்லியிருக்கா. அம்மணி மிஸ் இங்கிலாந்து பட்டத்துக்காக போட்டி போடறாங்க. நம்மால ஓட்டு போட முடியுமான்னு தெரியல. முடிஞ்சா முயற்சி பண்ணுங்க எமி ரசிகர்களே!.
இப்பவெல்லாம் தூக்கத்துல கூட எமி எமின்னு தான் உளறிகிட்டு இருக்கேன். பக்கத்துல படுத்து இருக்கிற தெலுங்கு பிரெண்டு எட்டி உதைச்சு ஏமி ரா? ன்னு கேட்கிறான். நான் 'எமி'ங்க, அவன் 'ஏமி'ங்க ஒரே ரவுசுதான். சீக்கிரம் மதராசபட்டணத்த தெலுங்குல டப் பண்ணுங்கப்பா!



ங்க வீட்டுல என்னைய கல்யாணம் பண்ன சொல்லி ரொம்ப தொந்தரவு பண்றாங்க. (எமி ஓகே சொன்னா உடனே சம்மதம் தான்..). எதுக்கெடுத்தாலும் எங்க அம்மா களவாணில வர்ற சரண்யா மாதிரி, "உனக்கு இப்ப கல்யாணம் பண்ணா தான் life சூப்பரா இருக்கும்ன்னு ஜாதகத்துல போட்டிருக்கு" அப்படின்னு அதையே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
சரி நான் வேற கம்பெனி மாறணும்ன்னு சொன்னா, அதுக்கும் உனக்கு கல்யாணம் ஆனா தான் வேலையும் அடுத்தது நல்லதா கிடைக்கும்ன்னு ஜாதகத்துல சொல்லி இருக்கு அப்படிங்கறாங்க. சரி, இப்ப இருக்கற வீடு சின்னதா இருக்கு, ஒரு புது வீடு கட்டிட்டு கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கும் அதே பதில் தான். ஓகே அதெல்லாம் சரி, ஒரு பொண்ணும் என்னை லவ் பண்ண மாட்டேன்கிறாங்க. இதுக்கும் கல்யாணம் ஆன அப்புறம் தான் யாரவது லவ் பண்ணுவாங்கன்னு ஜாதகத்துல போட்டு இருக்கா?


போன வாரம் எங்க ரூமுக்கு என்னோட காலேஜ் பிரெண்டு ஒருத்தன் வந்தான். எவ்வளவு நேரம் தான் மொக்க போடுறது?. சரி, கேரம் போர்டு விளையாடலாமேன்னு எடுத்து வச்சு ஆரம்பிச்சோம். எனக்கு கருப்பு காயின். அவனுக்கு வெள்ளை. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே கேரம் போர்டு ஆப்பிரிக்கா நாடு மாதிரி ஆயிடுச்சு. கருப்பு காயின் மட்டும் தான் உள்ள இருக்கு. எப்படிடா இவ்வளவு சூப்பரா விளையாடரன்னு கேட்டா? சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது, படிக்கறது, தூங்கறது எல்லாமே கேரம் போர்டுல தானாம். பள்ளி கூடத்துக்கு போறப்ப கூட கேரம் போர்டுல இருக்கற பவுடர்தான் பூசிகிட்டு போவானாம். அந்த அளவு கேரம் போர்டுல பைத்தியமாம். ரைட்டு.

இதை வைத்து ஒரு கவிதை.

வெள்ளையர்கள்
வெளியேறி விட்டார்கள்
ஆனாலும்
கறுப்பர்களுக்கு தோல்விதான்



இந்த வார பதிவுலக தத்துவம்.

"பதிவை போடு பின்னூட்டம் எதிர்பார்க்காதே"

(ஆண்டவா! இந்த பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் குறைஞ்சது நூறு வரணும். ஹி! ஹி!)





8 comments:

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

ஆபாயில் அருமை. எல்லாமே நன்றாக இருந்தது.
//எனக்கு கருப்பு காயின். அவனுக்கு வெள்ளை. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே கேரம் போர்டு ஆப்பிரிக்கா நாடு மாதிரி ஆயிடுச்சு. //

மனம் விட்டு சிரித்தேன்.

காரம் போர்ட்ல காயின்களை கலைக்கிலனாலும்
இறுதியாக கவிதைல கலக்கிவிட்டீர்கள்.

Riyas said...

//வெள்ளையர்கள்
வெளியேறி விட்டார்கள்
ஆனாலும்
கறுப்பர்களுக்கு தோல்விதான்
காரம் போர்டில்.//

ஆஹா..

Riyas said...

//வெள்ளையர்கள்
வெளியேறி விட்டார்கள்
ஆனாலும்
கறுப்பர்களுக்கு தோல்விதான்
காரம் போர்டில்.//

ஆஹா..

தேவன் மாயம் said...

(ஆண்டவா! இந்த பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் குறைஞ்சது நூறு வரணும்.)
//

நான் ஒன்னு போட்டா 100 க்கு சமம்!!!இஃகி! இஃகி!!!

Anonymous said...

ஆபாயில் சூப்பர்..
// நாம ரசித்த எதாவது ஒரு You Tube வீடியோ. அப்புறம் ஒரு ஏ ஜோக். ம்..ம்..ம்.. //
அடுத்த ஆபாயில உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துருங்க.. ஹி ஹி ஹி

ப்ரியமுடன் வசந்த் said...

//இப்பல்லாம் பதிவு எழுதறதுக்கு யோசிக்கவே தனியா சாப்பிடனும் போல.//

அடப்பாவிகளா இது வேறயா?

//போன வாரம் எங்க ரூமுக்கு என்னோட காலேஜ் பிரெண்டு ஒருத்தன் வந்தான். எவ்வளவு நேரம் தான் மொக்க போடுறது?. சரி, கேரம் போர்டு விளையாடலாமேன்னு எடுத்து வச்சு ஆரம்பிச்சோம். எனக்கு கருப்பு காயின். அவனுக்கு வெள்ளை. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே கேரம் போர்டு ஆப்பிரிக்கா நாடு மாதிரி ஆயிடுச்சு. கருப்பு காயின் மட்டும் தான் உள்ள இருக்கு. எப்படிடா இவ்வளவு சூப்பரா விளையாடரன்னு கேட்டா? சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது, படிக்கறது, தூங்கறது எல்லாமே கேரம் போர்டுல தானாம். பள்ளி கூடத்துக்கு போறப்ப கூட கேரம் போர்டுல இருக்கற பவுடர்தான் பூசிகிட்டு போவானாம். அந்த அளவு கேரம் போர்டுல பைத்தியமாம். ரைட்டு.//

ரைட்டு வாழ்த்துக்கள் ...

Manikanda kumar said...

கேரம் போர்டு கதை, கவிதை ரெண்டும் அருமை...

Ramesh said...

முதல் ஆஃப் பாயில் யாருக்கும் பொதுவா சரியா வராது (நிஜ ஆஃப் பாயில் போடறதைச் சொல்றேங்க).. ஆனா நீங்க முதல் ஆஃப் பாயிலயே கலக்கலா (நல்லா கலக்கி) போட்டுட்டீங்க....சூப்பர்