Aug 31, 2012

பெண் பொம்மையின் கற்பை காப்பாற்றிய நாயகன் - Non Sense Talking

99.99 மில்லியன் ஹிட்சுகளை என் மேல் வாரி இறைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அடாசு பதிவுலக பெருமக்களுக்கும், மண்வெட்டி வாசகர்களுக்கும் கோடானு கோடி தாங்க்ஸ்!

This Post is strictly for Matured. தயவு செய்து படித்து விட்டு என்னுடன் யாரும் சண்டைக்கு வராதீர்கள்.


நேற்று இரவு, ஷாங்காய் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், தற்செயலாய் கே.டிவி. யின் இரவு கொண்டாட்டத்தில் ஒரு தமிழ் சினிமா காட்சியை பார்க்க நேர்ந்தது. அது "கோ"மகன் ஜீவா அவர்கள் "ஆசை ஆசையாய்" நடித்த முதல் படம் (தேங்க்ஸ் டு விக்கிபீடியா).

நாயகி, ஒரு லேடிஸ் துணிக்கடையில் வேலை செய்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு ஆள், ஒரு பெண் பொம்மைக்கு அணிவித்திருக்கும் ஆடையை பார்த்து, அது பிடித்து போய் அதை எடுத்து கொடுக்க வேண்டி, நாயகியிடம் கேட்கிறார்.

அதற்கு, இந்திய கலாச்சாரத்தை கட்டி காக்கும் நம் நாயகி, பொம்மையின் ஆடையை அங்கேயே வைத்து கழட்டினால் பொம்மையின் கற்பும், அந்த ஆணின் மனமும் கெட்டு போய் விடும் என்ற காரணத்தால், "ஓகே. சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பொம்மையை மேல் மாடிக்கு எடுத்து கொண்டு போய், அதன் ஆடையை கழட்டி உங்களுக்கு பேக் செய்து தருகிறேன்" என சொல்ல,

வில்லனாக காட்டப்படும் அந்த ஆள், "இல்லை இங்கேயே வைத்து கழட்டி கொடுங்கள்" என வம்பிழுத்து அந்த பொம்மையின் ஆடையை பற்றி கிழிக்க முயற்சிக்க,

இதையெல்லாம் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த நம் ஆதர்ச நாயகன் ஜீவா, பொம்மைக்கு ஏற்பட போகும் அவமானத்தை தடுக்க பொங்கி எழ, அங்கே ஒரு பைட் சீன் ஆரம்பமாகிறது.

அதற்கு பிறகு கதையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் ஷாக் ஆகி, அடுத்த சேனலுக்கு பயந்து ஓடி விட்டேன்.

அந்த சீனை தவிர, நான் படத்தை பார்த்தது இல்லை. நான் சொல்வது கொஞ்சம் மாறி இருக்கலாம். அதற்கு வருந்துகிறேன்.

அந்த பைட் சீனுக்கு பிறகு, நாயகனுக்கு நாயகியுடன் ஒரு டூயட் பாட்டு வந்திருந்திருக்கலாம். அதில் நாயகன் நாயகியின் இடுப்பில் ஊர்ந்து வாசம் பிடித்து, மேலேறி மார்பின் மேல் மையம் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் பொது ஜனத்துக்கு, ஒரு பொம்மையின் நிர்வாணத்தை பார்க்க கூட கட்டுப்பாடு உள்ளது.

இயல்பை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல், அத்துமீறி காட்டப் படும் சினிமாக்கள் எல்லாமே நம்மை ஏமாற்றவே எடுக்கப் படுகின்றன. சினிமா எடுப்பவர்களுக்கு, "கவர்ச்சி", "மார்பு", "தொப்புள்" என்பவைகள் தான் பிரதானமாய் சோறு போட உதவும் விஷயங்கள்.

சுதந்திரமாய் செக்ஸ் செய்ய வழி இல்லாமல், எல்லைமீறி போய் கன்று குட்டியையும் கழுதையையும் புணர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், திரையில் நடிகையின் ஒரு சாதாரண கிளிவேஜ் சீனை பார்த்தாலே, பக்கெட் பக்கெட்டாய் சலவாய் விட்டு ஏங்கி கொண்டிருக்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப் படுகிறான் காமன்மேன்.

நம்மால் பண்ண முடியாததை நாயகன் பண்ணுகிறானே என்று அதை பார்த்து நாம் வியந்து கைதட்டி சந்தோசப்பட்டு கொள்கிறோம்.

மட்டன், சிக்கன் என வகை வகையாய் தின்றுவிட்டு, மிச்சமிருக்கும் எலும்பை நாய்களுக்கு போட்டு அவைகளை குதூகலப் படுத்துகிறவர்கள் தான் நம் சினிமாக்காரர்கள்.

மற்ற மீடியாக்களும் இவைகளை செய்தே, காசு பார்க்கின்றன.

தியானம் பற்றிய ஒரு செய்திக்கு, உள்ளாடையுடன் படு கவர்ச்சியாய் ஒரு பெண் உட்கார்ந்து தியானம் செய்வது போல படம் போட்டு வியாபாரம் செய்யும் "கவர்ச்சி ஆப் இந்தியா" நாளிதழ்

காசுக்காக ஒரு பெண் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்ததை, "செக்ஸ் வெறியில் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண்" என்று மாற்றி தலைப்பு போட்டு ஆர்வத்தை தூண்டும் டினமலர்.

நமக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி. என்னவென்றால்,

இன்னும் கொஞ்ச நாளில் ஸ்ரேயாவின் தொப்புளை, 3D-யில் பார்க்க போகிறோம்.

நடிகனுக்கு நிற்கவே முடியவில்லை என்றாலும்......

முப்பது வயது வரை ஒரு ஆண், பெண்ணை பற்றியும் செக்ஸ்சை பற்றியுமே கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு அவனுக்கு திருமணம் ஆனவுடன், தூக்கமே வருவதில்லை. அதனால் அப்துல்கலாம் சொன்ன கனவு அவனுக்கு வர சாத்தியமே இல்லை.

நாம் இன்னும் மது அருந்தலாமா? வேண்டாமா? என்றே அடித்துக் கொண்டிருக்கிறோம். உங்களையெல்லாம் நூறு பூனம் பாண்டே வந்தாலும் திருத்த முடியாது. இந்த பழமையான கலாச்சார இந்தியாவில், பூனம் ஒரு அதிரடியான மாடர்ன் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

நமது  கலாச்சாரம் மாறி, செக்ஸ் என்பது சாதாரணமானவனுக்கு சாதாரணம் ஆகும் போது, அரசியல்வாதிகளோ சினிமாகாரர்களோ நம்மை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது.

அப்போது, தொப்புள் காட்சியையும் கிளிவேஜ் சீனையும் தமிழன் துச்சமென மதித்து, தூக்கி எறிந்து விடுவான். அஞ்சலியையும், ஒவியாவையும் அரைகுறை ஆடையில் நிற்க வைத்து போட்டோ ஷூட் செய்து ஏமாற்றிய, கலகலப்பு போன்ற Third ரேட் காமெடி படங்களும் செல்லுபடியாகாது.

"உயிரின் உயிரே" பாட்டில் சில மைக்ரோ நொடிகள் மட்டும் மங்கலாய் தெரியும் ஜோதிகாவின் நிப்பிள் சிலிப்பை கூர்ந்து பார்த்து கண்டுபிடிக்காமல், புதிதாய் அறிவியலில் ஏதாவது கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடிப்பான் இந்தியன்.


Aug 24, 2012

குப்பை கொட்டுவது இப்படி - 1

இதை படிப்பதற்கு முன், இதை படித்து விட்டு வாருங்கள்.

Nonsense Talking 3 - குப்பை Planet


நீங்கள் புதிதாய் பிளாக் எழுத வந்துள்ள அப்பிராணியா? நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? அப்படியெனில்,

நீங்கள் என்னென்ன செய்தால் இங்கு குப்பை கொட்ட முடியும்?
அதை எப்படி செய்வது?

வாருங்கள் கற்று கொள்வோம்!!

குப்பை தான் நம்முடைய வாழ்வாதாரம். குப்பையை நீங்கள் அருவருப்பாக பார்த்தால் இங்கு பிழைத்திருப்பது கடினம்.

சாலையில் நடந்து செல்லும் போது குப்பை அள்ளும் வண்டியை கடந்து செல்ல நேரிட்டாலோ, ட்ராபிக்கில் குப்பை வண்டிக்கு அருகில் நிற்க நேரிட்டாலோ, மூக்கை பொத்திக் கொண்டு அல்லது மூச்சை கட்டுபடுத்தி கொண்டு அவஸ்தை படுகிறீர்களா?

உங்களுக்கெல்லாம் ஒரு உன்னத அட்வைஸ்.

7 ஜி ரவி கிருஷ்ணா நடித்த "பொன்னியின் செல்வன்" என்ற படத்தில் ஒரு காட்சி வரும். குப்பை அள்ளும் வேலைக்கு புதிதாய் சேர்ந்த ரவி கிருஷ்ணாவிற்கு, குப்பையின் நாற்றத்தில் குமட்டி கொண்டு வரும். அப்போது கூட வேலை செய்யும் ஒரு சீனியர் சொல்வார் "அந்த குப்பையை ஒரு முறை நன்கு மூச்சு இழுத்து முகர்ந்து விடு. அப்புறம் அதன் நாற்றம் உனக்கு தெரியாது. ப்ரீயா வேலை செய்யலாம்" 

அதனால் ஏற்கனவே இணையத்தில் ஏராளமாய் கொட்டி கிடக்கும் குப்பைகளை வாசித்து, நுகர்ந்து குப்பையோடு குப்பையாய் கலந்து மக்கி விடுங்கள். உங்களுக்கு அதன் நாற்றம் பழகி விட்டால் அதன் பின் எந்த அருவருப்பும் உண்டாகாது.


OK. Lesson Starts... 

சினிமா செய்திகள், விமர்சனங்கள் தான் மிக சரியான மனித கழிவு. வருபவர்கள் ஈ மாதிரி மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

உங்களுக்கு கதைக்கும் திரைகதைக்கும் வித்தியாசம் தெரியாது இருக்கலாம். ஆனாலும் கேமரா வொர்க், CG, லைட்டிங், மேக்கிங் போன்ற டெக்னிகல் விசயங்களை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். செய்த தவறை அடுத்த படத்தில் திருத்தி கொள்ள இயக்குனருக்கு அட்வைஸ் மற்றும் பாராட்டுகள், முக்கியமாய்  நீங்கள் எந்த தியேட்டரில் படம் பார்த்தீர்கள் என்று குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த செய்தி நாளைய வரலாற்றில் இடம் பெறும். IMDb-யில் கூட இல்லாத அளவுக்கு, படத்தின் Casting, Writers போன்ற இதர விசயங்களை குறிப்பிட வேண்டும்.

தமிழை தவிர இந்தி, தெலுகு, மலையாளம், ஒரிசா, மராட்டி என பிராந்திய மொழிகளில் வரும் அனைத்து படங்களையும் பார்த்து, டயலாக் புரியவில்லை என்றால் கூட பக்கத்தில் இருப்பவரையாவது கெஞ்சி கேட்டு நோட் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் அதிகம் வரலாம். ஆனாலும் எழுதும்போது  Lifco டிக்சனரியை பயன்படுத்தி நடுநடுவே "அமேசிங்", "மாடுலேஷன்", "இன்ஸ்பயர்", "டெம்ப்ளட்" "ட்விஸ்ட் அண்ட் ட்ர்ன்" போன்ற ஆங்கில வார்த்தைகளை அப்படியே டமிலில் மாற்றி அங்கங்கே நுழைத்து படிப்போருக்கு வயிற்றுபோக்கை வர வழைக்க வேண்டும். அது பிற்காலத்தில் தனி ஸ்டைலாக உருவெடுக்கும். அதை உருவாக்கிய உங்களுக்கு உத்திர பிரதேசத்தின் சாலையோரத்தில் நூற்றுகணக்கில் சிலை வைக்கப் படும்.

நீங்கள் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கி இருக்கலாம். ஆனாலும் அந்த படத்தை மறுபடியும் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதியே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. "மொக்கை படம் தானே! இதற்கு ஏன் விமர்சனம் எழுத வேண்டும்?" என்று உங்கள் மனசாட்சியிடம் கூட கேள்வி கேட்க கூடாது. 

விமர்சனம் தவிர நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் காலையில் எழுந்து பல் துலக்கியது முதல் பிரியாணி செய்து போட்டது வரை அவர்களது அன்றாட செயல்களை பதிக்க வேண்டும். அன்னா ஹசாரே பற்றிய பதிவிலும், நடிகைகளின் கவர்ச்சி வால்பேப்பர் படங்களை ஒவ்வொரு பத்திக்கும் இடையில் சொருகி, படிக்கும் வாசகனின் மூடை கன்னாபின்னா வென்று ஏற்றி விட வேண்டும். 

படத்தின் இயக்குனர் யோசித்திருக்காத கோணத்தில், நாம் யோசித்து அதை கூறு போட்டு விமர்சனம் செய்வது தனி கலை. அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். உங்கள் விமர்சனத்திற்கு உலகமே காத்துக் கொண்டிருப்பதாக பல பில்டப்களை உருவாக்க வேண்டும்.

இந்த பகுதியையும், இனி வரும் தொடர் பகுதிகளையையும் தொகுத்து "குப்பை கொட்டுவது இப்படி" என்ற தலைப்பில் இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். இதற்கு, குப்பை கொட்டும் கலைக்கு ஆசானாக விளங்கும் குட் பீல்ட் அவர்கள் ஆங்கிலத்தில் முன்னுரை எழுத சம்மதத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.


                                                                                             -இன்னும் கொட்டுவோம்.






Aug 21, 2012

நான் - ஒரு "ரொட்டி" காவியம்


வெள்ளைக்காரன் நமக்கு விடுதலை தருவதற்கு முன், நம் செல்வங்களை மட்டும் கொள்ளையடித்து கொண்டு செல்லவில்லை. நம்முடைய மூளையையும் கொண்டு சென்று விட்டான். அதனால் தான் சொந்தமாய் யோசிக்க முடியாமல் நம்முடைய இயக்குனர்கள் படம் எடுக்க கஷ்டப்பட்டு அதுவும் முடியாமல், பின் அவர்களது படத்தை காப்பி அடித்து இழந்த மூளையை மீட்டு எடுக்கின்றனர். அவர்களது சேவைக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அந்த படங்களை பார்த்து நாமும் மூளையை வளர்த்து கொள்ள வேண்டும்.

இங்கிலீஸ்காரன் எடுக்கும் படமெல்லாம் நம் மூளை உபயோகித்து தான்! 

"என் தங்கம்! என் உரிமை" போல, "என் படம்! என் மூளை!"

ஈமூ பண்ணை போல இது இவர்களது மூளை பண்ணை. தற்போது மிக பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்த தொழிலில், முதலீடு செய்தால் நிறைய வருமானம் பெற முடியும்.

காப்பி அடிப்போம்! போராடுவோம்!
மூளை வளர்ப்போம்! லாபம் பெறுவோம்!



 ஞாயிற்று கிழமை மதியம் சாப்பிட்ட பிரியாணியை செரிக்க வேண்டியாவது ஏதோ ஒரு தமிழ் படத்தை பார்க்க வண்டிய கட்டாயத்திற்கு வாரா வாரம் தள்ளப் படுகிறேன். அந்த வகையில் "நான்" பிரியாணியை செரிக்க வைத்தது எனலாம்.

படத்தின் ஆரம்பத்தில் டல்லான கலர் டோனில் காட்சிகள் வருகிறது. அது ஹீரோவின் சிறுவயது கதை காட்சிகள் என்பதை புரிந்து கொள்ளாதவன் தமிழ் சினிமா அதிகம் பார்க்காதவன் எனலாம்.

தன்னுடைய அழகான அம்மா இன்னொரு அங்கிளுடன் ஆனந்தமாய் இருப்பதை பார்த்த சிறுவயது ஹீரோ, மற்ற தமிழ் படங்களில் வரும் பையன்களை போல் அதை மறைக்காமல், தன் வயதான தந்தையிடம் அன்றைக்கு இரவே போட்டு கொடுத்து விடுகிறான். அதனால் இருவருக்கும் பிரச்சினை ஆகி, அவனது தந்தை தற்கொலை செய்து இறந்து, இந்த படத்தில் இருந்து விடுதலை பெற்று கொள்கிறார்.

ஆனால் கணவன் இறந்த பின்னும், அவன் அம்மா கள்ள காதலை கண்டினியு பண்ணுகிறார். ஒரு நடு இரவில் இருவரும் சல்லாபித்து முடித்த களைப்பில் தூங்கி கொண்டிருக்க, நாயகன் அந்த இருவரையும் வீட்டுக்குள் வைத்து கொளுத்தீ விடுகிறார். பிறகு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வளர்கிறார்.

இது தான் நாயகன் கேரக்டருக்கான பின்புலம்.

படத்தை பார்த்து பையன்கள் கேட்டு போகின்ற இந்த சூழ்நிலையில், உயிருடன் இருக்கும் கள்ளகாதல் ஜோடிகள் அதிக கவனமாய் இருக்க வேண்டிய நேரமிது. இல்லையெனில் "படத்தை பார்த்து தாயையும் கள்ளகாதலனையும் கொன்ற பிள்ளை" என்று தமிழ் தினசரியில் கடைசிக்கு முன் பக்க செய்தியில் வந்து விடுவீர்கள்.

சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வரும் நம் ஹீரோ விஜய் ஆண்டனி சென்னைக்கு பஸ் ஏறுகிறார். அப்போது ஒரு முஸ்லிம் பையனை அவனது பெற்றோர்கள் கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு வழியனுப்ப வருகிறார்கள். பஸ்ஸில் அவன் நாயகனின் அருகில் உட்கார்ந்து பயணிக்கிறார். அந்த காட்சியின் போது நானும் என் ப்ரெண்டும் அதிக தமிழ் சினிமா பார்த்த அனுபவத்தில், ஆளுக்கொரு Guessing செய்தோம்.

1. ஹீரோ அந்த முஸ்லீம் பையனின் பெட்டியை திருடி கொண்டு போய் விடுவார்.
2. அவர்கள் போகும் பஸ் ஆக்சிடென்ட் ஆகி விடும்.

இந்த இரண்டுமே நடந்தது.

ஆக்சிடென்ட் ஆன பின் அந்த பையன் இறந்து விடுகிறார். நம் ஹீரோ அவனது பெட்டியை பத்திரமாக எடுத்து கொண்டு வந்து சென்னையில் உள்ள ஒரு மேன்சனில் தங்குகிறார்.

பொறுமையாக குளித்து முடித்து வந்த பின், அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று சாவகாசமாக உட்கார்ந்து தேடுகிறார். சில ஆயிரங்கள் பணம் இருக்கிறது. அதிக மார்க்குடன் அவனது சர்டிபிகேட்டுகள் இருக்கிறது.

நம் புத்திசாலி ஹீரோ, சலீம் என்ற அந்த முஸ்லிம் பையன் பெயரில் மெடிக்கல் காலேஜில் சேர, மெரீனா பீச்சில் இருக்கும் ஒரு ஆளை தன் அப்பாவாக செட்டப் செய்து கவுன்சிலிங் போகிறார். இருக்கும் மேன்சனையும் காலி செய்து விட்டு, தனி வீடு எடுத்து தங்கி காலேஜ் படிக்கிறார். பகுதி நேரத்தில் காபி ஷாப்பில் வேலை செய்கிறார்.

காலேஜில் அசோக் என்ற ஒரு பணக்கார வீட்டு ப்ளேபாய் ஒருவன் இவருக்கு நண்பனாக, கொஞ்ச நாளில் அவனுடனேயே வேலைக்காரனாக தங்குகிறார்.

பப், பார்டி, பெண்கள் என ஜாலியாய் சுற்றி கொண்டிருக்கும் அந்த நண்பனுக்கும் அவனது கேர்ள் பிரெண்டுக்கும் ஒரு பிரச்சினை வர............
அதில் நாயகனை போட்டு அசோக் அடிக்க............
நாயகன் போலியான பெயரில் உலாவுகிறான் என்ற சந்தேகம் அசோக்கிற்கு வர............
இருவருக்குமான சண்டையில் நாயகன் அசோக்கை தவறுதலாய் கொல்ல............
அந்த பாடியை ஈசியாய் கொண்டு போய் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு காட்டில் புதைத்து விட்டு வர.........
அசோக்கின் பெயரிலேயே அவனது வீடு, கார், டிரஸ் எல்லாம் நாயகன் பயன்படுத்த.....
அசோக்கை தேடிவரும் நண்பனையும் நாயகன் கொல்ல..........
அவனையும் அங்கேயே சென்று புதைத்து விட்டு வர..........

இப்படி கடைசி வரை அவர் ஏதாவது செய்து நமக்கு த்ரில்லிங் கொடுத்து கொண்டே இருக்கிறார். அசோக்கை கேட்டு கொரியர் பாய் வந்தால் கூட கொன்று விடுவாரோ என்று நாம் அஞ்ச ஆரம்பிக்கிறோம்.

சாரி! இதுக்கு மேல கதையை பற்றி என்னால் டைப் பண்ண முடியல.......



நடிப்பு, இசை, ஒளிபதிவு என இதர கருமங்களையும் பற்றி சொல்ல அவசியமே இல்லை. ஆனால் இந்த படத்தையே சராசரி ரசிகன் கொண்டாடுவான்.

நாயகன் இந்துவா, முஸ்லீமா என கண்டுபிடிக்க அவரது துண்டை அவிழ்த்து பார்க்கும் சீனை பார்த்தாலே, இது சுட்ட பழம் என்று நமக்கு பல்பு எரிய வேண்டும். ஆனால் நான் இன்னும் அந்த ஒரிஜினலை பார்க்க வில்லை. டவுன்லோட் பண்ணி பார்க்க வேண்டும்.

நமீதா டச்: நான், ஈயில்லை.....***.


இன்னும் கொஞ்ச நாளில் "காப்பி"ய  கலைஞன் தெய்வ திருமகன் புகழ் இயக்குனர் விஜய் அவர்களின், அதே நடிகர் நடிகையின் உப்புமா கூட்டணியில் இயக்கிய "தாண்டவம்" என்ற உப்புமா காவியம் வருகிறது.

தியேட்டரில் ட்ரைலர் கூட போட்டான் சாமியோவ். எனக்கு கதி கலங்கி விட்டது.

Get Ready to Dance

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்

தெய்வ திருமகள் - கர்ச்சீப் கொண்டு போங்க.



Aug 7, 2012

அனுகிரகம்

மித வெப்பம்
இதமான காற்று
ஈரப் பதம்
சுரக்கும் நீரூற்று
பழாச்சுளைகள்

நான் உயிர் வாழ
தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது
உன் செவ்வாயில்.

என் உ'தட்டை' தரையிறக்க 
உன் அனுமதிக்காக
மட்டுமே
காத்துக் கொண்டிருக்கிறேன்.


--dedicated to curiosity rover