Aug 19, 2010

சனியன் பிக்சர்ஸ் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

 
உங்களது தொடர்ந்த பேராதரவால் 50 பாலோவர்ஸ் தாண்டி இந்த வழிபோக்கனின் பயணம் தொடர்கின்றது. நன்றிகள் பல!!


என் பிரெண்டு ஒருத்தன் ரெண்டு மூணு வருசமா புல்லாங்குழல் கத்துகிட்டு வர்றான். எப்பவாவது வாசிக்க சொல்லி கேட்டா மட்டும் ஏதாவது காரணம் சொல்லி மழுப்பிடுவான். ஆனா ஒவ்வொரு தடவையும் நாங்க டிரைன்ல ஊருக்கு போகும் போது, எங்க தலையணைக்கு எல்லாம் காத்து ஊதி தர்றது அவன்தான். இத்தனை நாளா காசு கொடுத்து தனியா கிளாசுக்கு போனதுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் மெரினா பீச்சுல ஒரு பலூன் கடை போட்டு, பலூன் ஊதி வித்து இருந்தா கூட நல்லா கலெக்சன் பார்த்து இருக்கலாம்.


காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடுத்துறதா சொல்லிட்டு மக்களோட காமன் வெல்த்துல நம்ம அரசியல்வாதிங்க பூந்து விளையாண்டுட்டாங்க. மணிசங்கர் ஐயர் இதை பெட்ரோல் கிணறு மாதிரி தோண்ட வச்சு தீயை பத்த வச்சுட்டாரு. இதே போட்டியில  எப்படியெல்லாம் அதிகமா ஊழல் பண்ணலாம்ன்னு ஒரு போட்டி வச்சாங்கன்னா, இந்தியாவுக்கு தான் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் ஈயம் மெடல் எல்லாமே. இதுல இந்த விளையாட்டுக்கு ரஹ்மான் பாட்டு மட்டும்தான் குறைச்சல்.


தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமா கன்னட சினிமா லெவலுக்கு முன்னேறிகிட்டு வருது. சில வருடமா சினிமால எவன் எவன் நடிக்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு. மலையாள, தமிழ் பிட்டு படத்துல வர்ற ஹீரோ கூட கொஞ்சம் நல்லா இருப்பாங்க. காசு அதிகமா இருந்துச்சுன்னா எவளை வேணும்னாலும் கூப்பிட்டு ஒரு ரூமுக்குள்ளையே என்ன வேணா பண்ணிக்கோங்க. எங்களை ஏன்டா தொந்தரவு பண்றீங்க "மிளகா"ய்ங்களா? உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு வரைமுறையே இல்லாம போச்சு. சரி படத்துல தான் நடிக்கிறிங்க. பாட்டையாவது விட்டு வைக்கலாம்ல. அதுலயும் வந்து இம்சை பண்றீங்க. டீவில ஒரு பாட்டு நிம்மதியா பார்க்க முடியல. பக்கமா ஒரு பாட்டு பார்த்தேன். ஹீரோவுக்கு பின்னாடி ஆடுற குரூப் டான்சர்ஸ் ஒவ்வொருத்தனும் பேரரசு படத்துல வர்ற வில்லனுங்க மாதிரியே இருக்கான்னுங்க. அதுல ஒருத்தன் தலை சொட்டை (ஹீரோவ அழகா காமிக்கணும் இல்ல). ரெண்டு மூணு படத்துல நடிச்சிட்டா மக்களுக்கு பார்த்து பார்த்து பழகி போய்டும். இதுதான் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையாக இருக்கலாம்.



சன் பிச்சர்ஸ் படம் வந்தாவே பயமா இருக்கு. எந்த சேனல் மாத்துனாலும் பத்து நிமிசத்துக்கு ஒவ்வொரு தடவ ட்ரைலர் போட்டு சாக அடிப்பாங்க. எந்திரன் வந்து மந்திரம் மாதிரி காதுல ஒலிச்சு நம்மள ஒழிக்க போகுது. இதிலிருந்து காப்பாற்ற சன் மூவீஸ் நிறுவனம் மக்களுக்குக்காக ஒரு வழி கொண்டு வந்து இருக்காங்க. உங்க வீட்டுல செட்ஆப் பாக்ஸ் இல்ல சன் டிஷ் இருந்துச்சுன்னா, தியேட்டர் போய் படம் பார்த்த டிக்கெட் நம்பர வச்சு அவங்களோட வெப் சைட்ல போய் ரெஜிஸ்டர் பண்ணிடிங்கின்னா, உங்க டீவில மட்டும் அந்த ட்ரைலர் வராது. உங்க வீட்டுல ஒருத்தர் மட்டும் படம் பார்த்திருந்தா பத்தாது. எல்லோரும் பார்த்து இருக்கணும். உங்க வீட்டுல சாகுற வயசுல தாத்தா பாட்டி இருந்தா, அவங்களையும் தூக்கிட்டு போயாவது படத்த காமிச்சுட்டு வந்துடனும் (எலேக்க்ஷனுக்கு ஓட்டு போட தூக்கிட்டு போற மாதிரி). அதுக்கு உங்க ரேசன் கார்டையும் ஸ்கேன் பண்ணி அந்த சைட்ல அப்லோட் பண்ணிடனும் (சரி பார்க்கறதுக்கு).

எப்பூடி? (இதை எல்லாம் படிச்சிட்டு நம்பவா போறீங்க?)


இலங்கை போட்ட ஒரு சப்ப நோ பால் மேட்டருக்கு (குண்டு போட்டத எல்லாம் விட்டுருவானுங்க) ஏதோ நோபல் பரிசு குடுக்காம ஏமாத்துன மாதிரி நம்ம ஆளுங்க பண்ற பிரச்சனை ஐயோ!! தாங்க முடியல. மத்த மதத்தை விட கிரிக்கெட்ங்கற மதம் தான் நாட்டை அதிகமா சீரழிச்சுக் கிட்டு இருக்கு. இதை எல்லாம் கண்டுக்காம இருக்க நாமலே நம்மள நாடு கடத்திகிட்டா தான் ஆச்சு.





7 comments:

என் உயிரே said...

நல்லாயிருக்கு............
சிரிக்க வச்சதுக்கு ரொம்பவே நன்றிகள் வழிப்போக்கரே.............

senthil velayuthan said...

சன் பிச்சர்ஸ் படம் வந்தாவே பயமா இருக்கு. எந்த சேனல் மாத்துனாலும் பத்து நிமிசத்துக்கு ஒவ்வொரு தடவ ட்ரைலர் போட்டு சாக அடிப்பாங்க. எந்திரன் வந்து மந்திரம் மாதிரி காதுல ஒலிச்சு நம்மள ஒழிக்க போகுது. இதிலிருந்து காப்பாற்ற சன் மூவீஸ் நிறுவனம் மக்களுக்குக்காக ஒரு வழி கொண்டு வந்து இருக்காங்க. உங்க வீட்டுல செட்ஆப் பாக்ஸ் இல்ல சன் டிஷ் இருந்துச்சுன்னா, தியேட்டர் போய் படம் பார்த்த அந்த டிக்கெட் நம்பர வச்சு அவங்களோட வெப் சைட்ல போய் ரெஜிஸ்டர் பண்ணிடிங்கின்னா, உங்க டீவில மட்டும் அந்த ட்ரைலர் வராது. உங்க வீட்டுல ஒருத்தர் மட்டும் படம் பார்த்திருந்தா பத்தாது. எல்லோரும் பார்த்து இருக்கணும். உங்க வீட்டுல சாகுற வயசுல தாத்தா பாட்டி இருந்தா, அவங்களையும் தூக்கிட்டு போயாவது படத்த காமிச்சுட்டு வந்துடனும் (எலேக்க்ஷனுக்கு ஓட்டு போட தூக்கிட்டு போற மாதிரி). அதுக்கு உங்க ரேசன் கார்டையும் ஸ்கேன் பண்ணி அந்த சைட்ல அப்லோட் பண்ணிடனும் (சரி பார்க்கறதுக்கு).

arumai

ஜில்தண்ணி said...

மச்சி 50 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் :)

/// மணிசங்கர் ஐயர் இதை பெட்ரோல் கிணறு மாதிரி தோண்ட வச்சு தீயை பத்த வச்சுட்டாரு ///

ஆமாம் அவரால ஒன்னுத்தையும் லவுட்ட முடியாம போச்சுல,அவருக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக் கூடாதாம் :) ஆமாம்

///மிளகாய்ங்களா ///

யார்டா அழுதா இவன் எல்லாம் படம் நடிக்கலன்னு :)

ஜில்தண்ணி said...

/// சன் பிச்சர்ஸ் படம் வந்தாவே பயமா இருக்கு ///

சன் பிக்சர்ஸ் மட்டுமில்ல,இன்னும் கொஞ்ச நாள் போனா,தமிழில் வெளிவரும் அத்தனை படங்களும் சன் குடும்பத்தின் உபயத்தில் தான் வெளிவர முடியும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு............
சிரிக்க வச்சதுக்கு ரொம்பவே நன்றிகள் வழிப்போக்கரே.............

Anonymous said...

//எங்க தலையணைக்கு எல்லாம் காத்து ஊதி தர்றது அவன்தான் //
லொள்ளப் பாரு! என்ன எகத்தாளம் பாரு :)
//ரெண்டு மூணு படத்துல நடிச்சிட்டா மக்களுக்கு பார்த்து பார்த்து பழகி போய்டும். இதுதான் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையாக இருக்கலாம்.//
இந்த நம்பிக்கைக்கு காரணம் இளைய தறுதலை சாரி தளபதிதான்னு உமக்குத் தெரியாதா?
"சன் பிச்சர்ஸ்"// மத்த தயாரிப்பாளர்களெல்லாம் ஆணி புடுங்க போக வேண்டியதுதான்!
வாழ்த்துக்கள் நண்பா 50 க்கு!

கமலேஷ் said...

போற போக்குல ஒரே உண்மையா பேசுறீங்க...

சீக்கிரமே உங்க வெட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறாங்க..

பத்திரம்.