Aug 23, 2010

எறிங்க, நீங்களும் ஹீரோ ஆகலாம்... (நாட்டுக்கு தேவையான செய்திகள் )

இது நகைச்சுவைக்காக மட்டுமே. இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை.


 



முதல்வர் மீது ஷு வீசியவர் காஸ்மீரின் திடீர் 'ஹீரோ'.
 
ஏதாவது ஒரு கட்சி கூட்டத்துக்கு போய், கால்ல போட்டு இருக்கிற ஷுவ கழட்டி யாராவது பெரிய அரசியல்வாதி மேல, மலிங்கா மாதிரி எறியுங்க. மேல படனும்னு அவசியம் இல்ல. ஆனா கண்டிப்பா உங்க மேல ஏகப்பட்ட அடிகள் எக்கச்சக்கமா படும்.



மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் - பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது.

ஏம்பா? கவர்மென்ட் இன்னும் approve பண்ணலைனா கூட, அவரே முன்வந்து பீஸ் வாங்காம  இலவச செக்ஸ் கல்வி சொல்லிதர முன் வந்து இருக்காரு. அத தப்பா சொல்றிங்களே?................ நல்ல உடற் 'கலவி' ஆசிரியர்.


  
காதலி சுனந்தாவை கேரள முறையில் மணந்தார் சசிதரூர்.

என்ன ஒரு மாநில பற்று....ஒரு விஷயம், இவங்க மனசு ஒத்து போய் கல்யாணம் பண்ணினாங்களோ இல்லையோ, ஆனா இது ரெண்டு பேருக்கும் மூணாவது கல்யாணம் அப்படிங்கறது நல்லாவே ஒத்து போகுது.



"சின்ன வீடு" பிள்ளைகளுக்கும் பரம்பரை சொத்தில் பங்கு : சுப்ரீம் கோர்ட் நெத்தியடி.

இனி சின்ன வீடு வச்சு இருக்க ஆம்பளைங்க எல்லாம் பாதுகாப்பா பண்ணுங்க. சின்ன வீடா இருக்கவங்க எல்லாம் "பாதுகாப்ப"  தூக்கி பக்கத்துல போட்டுட்டு பண்ணுங்க.




"கலைஞர் பேரன்" என நடித்து மோசடி சிக்கியவரை காவலில் எடுக்க முடிவு

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க. போலீஸ், டாக்டர், வருமான வரி துறை அதிகாரி, இப்ப முதல்வர் பேரன். இதுவும் ஒரு துறை போலவே ஆகிடுச்சு. யாருக்கும் கணக்கு தெரியாதுன்னு கரெக்டா தான் யோசிச்சிருக்கு பயபுள்ள. அதுவும் புத்திசாலிதனமா சினிமா தயாரிக்கிறேன்னு வேற சொல்லி ஏமாத்தியிருக்கு. ஆனா பாவம்!!! எப்படியோ மாட்டிகிச்சு.




மதுரை வந்தது காமன்வெல்த் கண்காட்சி ரயில்

எண்ணி பாத்திங்களா? எல்லா பெட்டியும் கரெக்டா வந்துச்சா?......








4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாடு போற போக்கு... உங்க எதிர் செய்தியும் நல்லா இருக்கு...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கமெண்ட்ஸ் ஸுப்பரூஊஉ

Anonymous said...

//யாருக்கும் கணக்கு தெரியாதுன்னு கரெக்டா தான் யோசிச்சிருக்கு பயபுள்ள //
ஹா ஹா! கரீட்டா சொன்ன மாமு!
பாத்து மாமு வூட்டாண்ட ஆடோ வர போவுது!

சிங்கக்குட்டி said...

ஊடகங்கள் நாட்டுக்கு தேவையானதை மட்டும் எழுதும் சூழ்நிலை இன்னும் வரவில்லை, எனவே பரபரப்பு வியாபாரம் மட்டும்தான் குறியாக இருக்கிறது இப்போது என்பதுதான் உண்மை.