Jun 24, 2011

உயிர் தின்னும் தேவதை




உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு.
கிளைகளை விரிக்கும்  
ஒற்றையடி பாதைகள் 

எனக்கு பின்னே அவள் வந்து கொண்டிருக்கிறாள்.

உருண்டு திரண்ட அனகோண்டா விழிகள்.
உயிருடன் விழுங்கப்பட்டு
விடும் அச்சத்தில்
மூச்சிரைக்க வேகமாய் நடக்கிறேன்.

இருளின் பயத்தை கொடுக்கிறது
அவள் கண் மையின் கருமை.

காற்றை கிழிக்கும் அவள் பேய் சிரிப்பில்
கரைபுரண்டோடும் நீரோடையின் 
சப்த நாடியும் அடங்கி போகிறது.

நடுநிசி இரவை விட, நடுபகலே 
அடுத்த அடி நகர விடாமல் 
பயமுறுத்துகிறது.

எந்தவொரு இடத்தை பார்த்தாலும் 
அவள் அங்கு நின்று கொண்டிருப்பதாய் 
ஒரு மாயை.

நீரில் விரல் எரியும் குளிரில்  
இழுத்து போர்த்திய போர்வைக்குள்
அனல் அலையாய் பரவுகிறது.

ஒரு நேரத்தில் 
மரணமும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு
என நம்ப தொடங்குகிறேன்.
ஆபத்தை நோக்கி என் கால்கள்
மெதுவாய் முன்னேறுகின்றன

என்னுடன் வந்த நிறைய பேர் இறந்திருக்க கூடும்.
நான் இறந்துவிட்டேனா?
இன்னும் தெரியவில்லை.



No comments: