Feb 17, 2012

"பவர் கட்" நல்லது - ஆபாயில்


சுஜாதா சுகமில்லை

சுஜாதா இறந்து போனது கலையுலகிற்கு பேரிழப்பு என்றாலும் வளரும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.

என்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தை போல் உள்ளதாக என் Die Hard வாசகர்கள் கூறுகின்றனர். சுஜாதாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை. அவரும் என் எழுத்தை படிக்கவில்லை.

சுஜாதா பரலோகத்தில் "நிம்மதியாய்" இருக்கட்டும்.

என் எழுத்து சுஜாதாவை போல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சுஜாதா சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் தன் கைப்பட எழுதிய கோடு போட்ட அறிவியல் நோட்டு கால ஓட்டத்தில் என்னிடம் சேர்ந்தது. அதை பார்த்து அவரை போலவே தொடர்ந்து எழுதி விடாமுயற்சி செய்து விஸ்வரூப வெற்றி கண்டுள்ளேன்.

இந்தியாவில் கல்யாணம் செய்து புள்ளைகளை பெற்று போடுவது போல், யார் பார்த்தாலும் எதோ ஒன்றை கிறுக்கி புத்தகம் போட்டு, புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்கள்.

அது போல உங்களில் யாருக்காவது உங்களுடைய எழுத்தை புத்தகமாய் பார்க்க வேண்டும் என்ற அல்ப ஆசை இருந்தால்,  இந்த சைட்டுக்கு போய் உங்கள் பிளாக் அட்ரஸ்ஸை கொடுத்து, உங்க புத்தகத்தின் Soft Copy யை பார்த்து பரவசம் அடைந்து, அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். அதிக பணம் செலவழித்தால் உங்க வீட்டுக்கே Hard Copy அனுப்பி வைப்பார்கள்.


தமிழ் நாடு ஒளிர்கிறது!




சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சார தட்டுபாடு எக்கச்சக்கமாய் அதிகரித்து விட்டது. சொந்தகாரங்க வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ போகும் முன் கரண்ட் இருக்கா? என்று கால் செய்து கேட்டு விட்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நம் முன்னோர்கள் குடும்ப கட்டுப்பாடு பண்ணாமல் விளையாடிய வினையால், ஜனத்தொகை அதிகரித்து இப்போது மின்சார தட்டுபாடு உருவாகிவிட்டது.

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். பெண்கள் சீரியல் பார்க்க முடிவதில்லை. அதனால் சும்மாவே இருக்கும் மாமியாரும் மருமகளும் சீரியலின் அடுத்த எபிசோட்டை வீட்டில் தொடரலாம். கரண்ட் கட், கணவர்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்கலாம். டைவர்ஸ், கொலை போன்றவை சாதாரணமாய் நடக்கலாம். அதனால் கரண்ட் போய் விட்டால் கணவர்கள் வெளியே சென்று விடுதல் நலம்.

கரண்ட் இல்லாமல் மாணவர்கள் எக்ஸாமுக்கு முன்தினம் கூட படிக்க முடிவதில்லை. அதனால் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவார்கள். மாணவிகள் தினமும் படிக்க முடியாததால், அவர்களும் பெயிலாகி விடுவார்கள்.




இந்த பிரச்சினை அதிகரித்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகும். குறிப்பாக, வருகின்ற கோடை மாதங்களில் கல்யாண சீசன் அதிகம் இருப்பதால், திருமணம் செய்யும் ஒவ்வொரு ஜோடியும் முதலிரவு கொண்டாட வேண்டும் என்றால் ஜெனரேட்டர் வாங்கி தான் ஓட்ட வேண்டும். எப்போது கரண்ட் கட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. பூவெல்லாம் தூவி, புது பொண்டாட்டியை அருகில் உட்கார வைத்து, தட்டு தடுமாறி ஆரம்பித்த பின், பாதியில் திடீரென்று கரண்ட் போனால் எத்தனை கஷ்டமாய் இருக்கும்? எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் மறுபடியும் கஷ்டப் பட்டு,....யப்பா!! நினைத்து பார்க்கவே முடியவில்லை. மாமனாரிடம் இருந்து வாங்குகின்ற வரதட்சணையில் ஒரு பெரிய பவர் ஜெனரேட்டரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணம் செய்யப் போகும் மாப்பிள்ளைகள் கவனம் தேவை.

ஒரு விதத்தில் இந்த பவர் கட் தற்போது ஜனத்தொகை உருவாவதை கட்டுப்படுத்தும் என்பதால், இந்த பவர் கட், பல கஷ்டத்தில் ஒரு நல்லது.

"அம்மாவுக்கு ஒட்டு போட்டால் இப்படிதான்" என்று வலையுலக திமுக கண்மணிகள் வேகமாக ரன்னிங் ரேஸில் ஓடி வர வேண்டாம்.

இந்த வருடம் தாத்தாவே வென்றிருந்தால், இதே நிலைமை தான் இருந்திருக்கும். கூடவே, ஒவ்வொரு மாதமும் என் வீட்டு வாடகையை தாத்தாவிடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். இந்நேரம் தமிழ்நாட்டில் எல்லோருடைய நிலம், பெரிய வீடு, "சின்ன வீடு" எல்லாத்தையும் அடித்து பிடுங்கியிருப்பார்கள். மீண்டும் மன்னர் ஆட்சி மலர்ந்திருக்கும். தாத்தா தமிழ் நாட்டை மூன்றாய் பிரித்து சோழநாட்டை ஸ்டாலினுக்கும், பாண்டிய நாட்டை அழகிரிக்கும், சேர நாட்டை கனிமொழிக்கும் கொடுத்து விட்டு, நண்பன் விஜய் போல All izz Well என்று சொல்லியிருப்பார்.


பவர் கட் special தத்துவம்:

விளக்கேற்ற ஒரு பெண்ணை
தேடி அலைவதை விட,
கிடைத்த பெண்ணை வைத்து
விளக்கை அணைப்பதே
சிறந்தது.

- ஜல புல ஜங் சுவாமிகள்.




3 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல நகைச்சுவைப் பதிவு. ஜல புல ஜங் சுவாமிகளின் தத்துவம் மிக அற்புதம். அவருக்கு நானும் சிஷ்யன். இன்னும் உபதேசங்களை எதிர்ப்பார்க்கிறேன்.

Vinoth S said...

ஜல புல ஜங் சுவாமிகள் THATHUVAM MIGHA ARUMAI

Kumaran said...

தங்களது பதிவு படித்ததன் ஊடே மூக்குல வாசனை பொடி தூவுன மாதிரி இருக்குங்க...உண்மையான தகவல்களோடு அந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறதே,,யெப்பா...என்ன அருமையான எழுத்து நடை, பாணி..அப்புறம் யாருங்க அந்த சுவாமி..காலம் போகுற போக்கிலே வாழ நெனைக்கிறாரு...மொத்தத்தில் அத்தனையும் சூப்பர்..அருமை..

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..