Jul 25, 2012

குப்பை Planet - Nonsense Talking 3


முன் எச்சரிக்கை: Blog வட்டத்திற்குள் உள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம். மீறி படித்தால் அதற்கு உங்கள் இன்டர்நெட் கனெக்சன் மற்றும் நீங்களுமே பொறுப்பு.



"நான் தொடர்ந்து எழுதுவது ஏன்?" என்று நிறைய பேர் நினைக்கலாம். கோபமும் படலாம். அதற்கு எனக்கே விடை தெரியவில்லை.

ஆனால், "ஏன் நான் தொடர்ந்து எழுத வேண்டும்?" என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நான் எப்படி எழுதினாலும் "the good stranger blogspot" என்று கூகுளில் தேடி, எதிர்பார்த்து எனது பிளாகிற்கு வருகை தந்து ஏமாறும் உள்ளங்களுக்குக்காகவே, எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்.

இரண்டு மூன்று மாதங்கள் எழுதாமல் இடைவெளி விட்டாலே, என் சுவாசம் நின்று ரத்தம் உறைந்து இறக்கும் நிலைக்கு சென்று விடுகிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தவுடன், நான் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையும் தேவையில்லாத ஆணியாகவே தோன்றுகிறது. நான் இந்த உலகத்தில் பிறந்ததே, ப்ளாகர் அவதாரம் எடுத்து படிக்கும் அனைவரையும் துன்ப கடலில் மூழ்கடித்து நரகத்திற்கு அனுப்புவதற்க்காவோ என்னவோ!

Blog என்பது பொது ஜனத்துக்கு பரிட்சயம் ஆகாத ஒரு தனி உலகம். அவனுக்கு .com, .in என முடியும் எல்லாமே வெப் சைட் தான். பிளாகிற்கும் வெப் சைட்டிற்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவியாகவே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பதிவு, வலைப்பூ, பின்னூட்டம் என்ற சொற்கள், ஜப்பான் கொரிய மொழிகளில் எதோ ஒன்றாக இருக்கும் என இவர்களால் நம்ப படுகிறது. 0.000000000001 % மக்களுக்கே பிரபல பதிவர்கள் என இங்கு சொல்லி கொள்ளப் படும் நபர்களை தெரியலாம்.

அப்போ, என்னை!!...அதற்கு % கணக்கிட, ஜீரோக்களை உலக வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். 

பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டிருக்கும் போது, "சார்!, நீங்கள் தான் அந்த பிளாகரா?" என்று முகம் தெரியாத யாராவது  நம்மிடம் கேட்டு மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்து, ஒரு டீயையும் வாங்கி கொடுப்பார்கள் என நினைத்தால், அது கழகங்கள் எல்லாமே மக்களின் முன்னேற்றதிற்க்காகவே இருக்கின்றன என்று திடமாக நம்புவதற்கு நிகரானது.

98% மக்கள் பிளாக் பற்றி தெரியாமல் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் பிளாக் தொடங்கி புது மாப்பிளையாய் வலம் வந்து கொண்டிருந்த போது பார்க்கும் நண்பர்கள், பிகர்களிடம் எல்லாம் "நான் ஒரு பிளாக் எழுதிகிட்டு இருக்கேன். டைம் இருந்தா படிச்சு பாருங்க" என்று சொல்லி URL கொடுத்து மார்க்கெட்டிங் பண்ணும் போதெல்லாம் "பிளாகா? அப்படின்னா?" என்று இரண்டே கேள்விகளில் உலக பிரபலமாக முயற்சிக்கும் நம் நம்பிக்கையை பஞ்சராக்கி விடுவார்கள். நாமலே வேண்டுமானால் கமலை போன்று "உலக" என்ற அடைமொழியை நமக்கென்று ஒரு பட்டம் வைத்து அதற்கு முன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் அதிக கமெண்ட்டும் வராமல், விசிட்டும் வராமல் நாமே எழுதி நாமே ரசித்து பரவசம் அடையும் நிலையே பிளாக் உலகின் "ஞான நிலை". லட்ச கணக்கில் பிளாக் எழுதுபவர்களின் எண்ணிக்கை இருந்தாலும், இந்த நிலையை நிறைய பேர் அடைவதில்லை. அதை அடைந்த "ஆயிரத்தில் நான் ஒருவன்".

ப்ளாக்லோகம் என்பது பிளாக்கில் நுழைந்து அதிலேயே லயித்து கிடப்போர்கள் இருக்குமிடம். கமென்ட்டிற்கும், ஹிட்டிற்க்கும் குழாயடி சண்டையை விட மோசமான சண்டைகள் நடை பெறும். இங்கு குப்பைகளை உற்பத்தி செய்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது தான் பிரதான தொழில். அன்றைய காலை தினசரி காலண்டரில் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் என போட்டிருந்தால், அந்த குப்பைகளை கிளரும் போது நல்லது ஏதாவது கிடைக்கலாம். 

இந்த குப்பைகளை காண்ட்ராக்ட் போடாமல் அள்ளும் வேலையைத்தான் திரட்டிகள் எனப்படும் Aggregator சைட்டுகள் செய்கின்றன. ஆனால் இவை ஏதும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுப்பதில்லை. இந்த குப்பைகள் ஏற்படுத்தும் pollution -கள், பிளாஸ்டிக் ஏற்படுத்துவதை விட பல மடங்கு மோசமானது. பிளாஸ்டிக் அந்த வகையில் சாது.

உங்கள் பிளாக் குப்பை என்று உங்களுக்கே தோன்றும் பட்சத்தில் நீங்கள் என்னிடம் சண்டைக்கு வரலாம். என்னுடையதும் குப்பை தான். யாருடைய குப்பை உசத்தி என்று போட்டி வைத்துக் கொள்ளலாம். ஜெயிப்பவருக்கு மகுடம் உண்டு. kuppai-planet என்று உண்மையிலேயே limited access உள்ள ஒரு ப்ளாக் இருக்கிறது. அதில் என்னுடைய பிளாகிற்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். என்னுடையது குப்பை என்பதை இதிலிருந்தே உறுதி செய்து கொள்ளலாம். குப்பை ப்ளாக்கின் ஓனர் அவர்களே, எனக்கும் அந்த பிளாக் படிப்பதற்கு access கொடுங்கப்பா! நானும் அதை படித்து குப்பை சங்கத்தின் உறுப்பினராகிறேன்.

நான் என்னுடைய குப்பைகளை, வலிந்து தூக்கி சென்று எங்கும் கொட்ட விரும்பவில்லை. இது தான் நான் திரட்டிகளில் இணைக்காத காரணம். ஆனால் விரும்பி நீங்கள் share பண்ணி மற்றவர்களை இம்சித்தால், நான் பொறுப்பாக மாட்டேன். நான் மெயில் அனுப்பி நீக்க சொல்லியும், அதை கண்டு கொள்ளாத திரட்டிகளை பற்றி என்னால் கவலை பட முடியாது.

"சிறப்பாக குப்பை கொட்டுவது இப்படி" என்று வார இறுதிகளில் வகுப்பு எடுக்கலாம் என இருக்கிறேன். கற்று கொள்ள விரும்பும் கத்துக்குட்டிகள் பெருங்குடி குப்பை மேட்டில் சனிக்கிழமை சாயுங்காலம் 6 மணி அளவில் கூடுங்கள். இதை நான் ஒரு சமூக சேவையாக மட்டுமே செய்கிறேன். கட்டணம் இல்லை. இடையில் சமோசாவும் டீயும் வழங்கப் படும். இரவு கேம்ப் பயர் நிகழ்ச்சியும் உண்டு. தமிழ் செய்தி சேனல்கள் இதை கவர் செய்ய போவதாய் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு முக்கிய வேண்டுகோள். கிளாஸ் முடித்து போகும் போது யாரும், அங்கிருக்கும் குப்பையை அள்ளி செல்ல கூடாது. முடிந்தால் வீட்டிற்கு சென்று உங்களின் தனி திறமையில் கிரியேடிவாக, வித்தியாச வித்தியாசமான Versatile குப்பைகளை படைக்கலாம். குப்பைகளின் தரம் மெருகேற, நெடுநாட்கள் Draft -இல் வைத்திருந்து ஒயின் போல பதப்படுத்தி பின் வெளியிட்டால் அதை நுகர்வோருக்கு இன்ப மயக்கம் தான். இதில் நன்கு கற்று தேர்ந்த பின், மெரீனா பீச்சில் போய் நீங்கள் அந்த குப்பையை கொட்டலாம். அது நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும். அவர்கள் தான் நாம் போடும் குப்பைகளை அவ்வப்போது பொறுக்குகிறார்கள்.

நீங்கள் சிறப்பாக குப்பை போடும் பட்சத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகளும் உங்கள் கதவை தட்டும். மற்ற ஊடக துறையிலும் நுழையலாம். உங்கள் பிளாகின் URL-யை டைப் செய்து Enter பட்டனை தட்டியவுடனே, சிட்டி குப்பை லாரி அருகில் வந்தது போல் நறுமணம் வரவேண்டும். அப்போது தான் உங்களுக்கு Versatile blogger அவார்ட் கொடுப்போம். அதை உங்கள் பிளாக்கின் சைடில் எச்சையை தொட்டு ஒட்டி கொள்ளலாம்.

Blogger தான், மிக மோசமாக உபயோகிக்க படும் கூகுளின் ஒரு சிறந்த இலவச Product.


4 comments:

Anonymous said...

சார்,
நீங்க உங்க மெயில் ஐடி கொடுங்க சார். அப்போதானே உங்களுக்கு ஆக்சஸ் லிங்க் அனுப்ப முடியும்?

ஓனர், குப்பை பிளானெட்.

Anonymous said...

தலைவா,
இன்விடேஷன் அனுப்பியாச்சு.

ஓனர், குப்பை பிளானெட்.

Katz said...

நன்றி. ஆனால் லிமிடெட் access இன் ரகசியம் என்ன?

Anonymous said...

சார்,

இந்த சைட் எல்லாம் ஏன் லிமிடெட் ஆக்சஸ் சைட்டா இருக்கு? என்று மத்தவங்க யோசிக்கத்தான்.

ஓனர், குப்பை பிளானெட்.