Sep 29, 2010

காமன் வெல்த் காமெடி ஷோ - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ஆபாயில் போட்டு ரொம்ப நாள் ஆச்சு. என்ன காரணம்ன்னு கேட்டிங்கன்னா? அவனவனுக்கு பிகர் கிடைக்காம வாழ்க்கைல ரொம்ப குஷ்டமா இருக்கு. இதுல ஆபாயிலாம், ஆம்லேட்டாம்.





This month going to be ENTHIRAN month not Octobar. எந்திரன் 1ம்  தேதி, எந்திரன் படம் ரிலீஸ்.
 தமிழர்களே! பெருமை கொள்ளுங்கள். நம் பெருமைகளை எத்திக்கும்  பரப்புவான் எந்திரன். தீபாவளி ரயில் டிக்கெட்ட விட எந்திரன் பட டிக்கெட் மிகவும் வேகமா விற்று தீர்ந்திருச்சாம். படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே சன் பிக்சர்ஸ் போட்ட பணத்துக்கு அதிகமாகவே எடுத்து விட்டார்கள் என்று statistics சொல்லுது. மக்களே, சீக்கிரமே எந்திரன் படத்த போய் பார்த்தறாதிங்க! அப்புறம் இன்னும் ரெண்டு மாசத்துக்கு வேற எந்த படமும் பார்க்க முடியாது. முதல் வாரத்தில் போய் படம் பார்த்தால், ரசிக கண்மணிகளின் காட்டு கத்தலில் ஒளியும் ஒளியும் மட்டும் தான் பார்க்க முடியும். அதே மாதிரி, சன் நெட்வொர்க் சேனல்களில் எல்லாமே எந்திரன் விளம்பரகளுக்கு நடுவில் மத்த நிகழ்ச்சி போடுவாங்க. ஆனால் எந்திரன் பாட்டோ, இல்ல படத்தின் வேற எந்த சீனோ அவ்வளவு சீக்கிரம் போட மாட்டாங்க. அப்புறம் தியேட்டர் எல்லாம் என்ன $%?&!# கட்டி வச்சிருக்காங்க?

சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போது ஜுராசிக் பார்க், அனகோண்டா மாதிரி படங்களை எல்லாம் அஞ்சு ரூபாவோ இல்ல ரெண்டு ரூபாவோ தர சொல்லி எல்லோரையும் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போய் படம் காமிப்பாங்க. அதுபோல எந்திரன் படத்துக்கும் குறைஞ்சது 50 ரூபாயில் பள்ளி மாணவர்களுக்கு காமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?




காமன் வெல்த் காமெடி ஷோ, சாரி!!! விளையாட்டு போட்டி ஒரே இடி முழக்கத்தோடு களை கட்டத் தொடங்கிடுச்சு. ஹி! ஹி! கூரைல இருந்து பாலம் வரைக்கும் எல்லாமே வரிசையா இடிஞ்சு விழுகுது. இதனால பளு தூக்கும் வீரர்களுக்கு எல்லாம் நிறைய வேலை இருக்கு. இடியறத எல்லாம் அப்புறப் படுத்தனும் இல்லையா?. இந்தியன் நியூஸ் மீடியாக்கள் எல்லாம் அடுத்து என்ன இடிஞ்சு விழும்ன்னு கேமரா வச்சுக்கிட்டு பரபரப்பா கண்காணிச்சு கிட்டு இருக்காங்க. கல்மாடி பற்றிய ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகுளை விட மிகவும் பிரபலம் ஆகிடுச்சு.

காமன் வெல்த் போட்டி நடத்தவே இவ்வளவு கஷ்டபடுற இந்தியாவுக்கு, இனி ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு கூட கண்டிப்பா கிடைக்காது. ஒருவேளை அதிகமாக காசு கொடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பை இந்தியா பெற்றாலும், அப்போதும் காமன்வெல்த் போட்டியை போன்றே ஊழல்கள் நடைபெற்று, பங்கு பேரும் வீரர்கள் மீது கட்டிடம் எல்லாம் இடிந்து விழுந்து அதுவே ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியாக மாற வாய்ப்பும் அதிகமாக உள்ளது. விளையாடரதுலையும், விளையாட்டு நடத்துவதிலும், சீனாவோடு நாம போட்டி போட முடியாது. சரி, சீனாவுல கம்யுனிசம் ஆட்சி நடக்குது, அதை இந்தியாவுலயும் கொண்டு வாங்க. பார்க்கலாம்.



தமிழ்நாட்டுல விலைவாசி எக்கசக்கமா எகிறி போச்சு. நான் ரெகுலரா சாப்பிடற ஆந்திரா மெஸ்ல தான், தின கூலி வாங்கற ஆட்களும் சாப்பிடறாங்க. எப்படி இவங்க வாழ்க்கைய நடத்துறாங்க?. கலைஞர் ஆட்சியில மிடில் கிளாஸ் மக்களும் ரேசன் அரிசி வாங்கி சாப்பிடற கொடுமையான நிலைமைக்கு வந்துட்டதா எல்லோரும் புலம்பறாங்க. கருப்பு எம்ஜியார் ஆட்சிக்கு வந்தால் விலைவாசிய கட்டு படுத்துவாரான்னு தெரியாது. ஆனா, யாருக்கும் தெரியாம ஒவ்வொரு வீட்டுலயும் வந்து காதும் காதும் வச்ச மாதிரி ரேசன் பொருட்களை எல்லாம் டெலிவரி பண்ணிட்டு போய்டுவாரு. நாமளும் "எனக்கு வலிக்கலையே! வலிக்கலையே!" அப்படிங்கற மாதிரி, சீச்சீ நாங்கலாம் ரேசன் கடை பக்கமே போறதுல்ல அப்படின்னு வெளிய சொல்லிகிட்டு ரேசன் அரிசிய பொங்க வச்சு மகிழ்ச்சி பொங்க தின்னலாம்.



இது திரைப்பட துறையில் 3-D புரட்சி காலம். சென்னை சத்யம் தியேட்டர்க்கு போனால் ஆறு ஏழு படங்கள் 3-D படங்களாகவே இருக்கு. அனிமேஷன் படம் மட்டும் அல்லாமல் Narnia, Residence Evil போன்ற படங்களும் 3-D யிலே வெளிவருகின்றன. சத்யம் தியேட்டரில் பார்த்தால் ஒவ்வொரு தடவையும் 3-டி கிளாஸ் வாங்கவே தேவை இல்லாம இருபது ரூபா செலவாகுது. போன வாரம் தான் Step Up 3 படம்  3-D யில் பார்த்தேன். முதல் இரண்டு பார்ட் பார்த்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு படம் பிடிக்கலாம்.





4 comments:

Anonymous said...

லேட்டா வந்தாலும் ஆபாயில் சுவை கொறையல நண்பா!

எஸ்.கே said...

தொகுப்பு நன்றாக உள்ளது!

Madurai pandi said...

நல்லா இருக்கு ஆப்பாயில் !!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha super