Sep 6, 2010

கடவுளின் ஆசை - தண்டர் கவிதைகள் 1.



சிட்டியெங்கும் அடுக்கடுக்காய்
ஆடம்பர மால்கள்.
கலர்கலராய் ஆடைகள், ஆபரணங்கள்.
வெள்ளையில் போதாது 
வாங்குவதற்கு தேவை
கறுப்பில் பணங்கள்.

எந்திரன் பட ரிலீஸ் ஆனா
டிக்கெட் கிடைக்குமா? 
எதிர்பார்ப்பில் தமிழ் குடிமக்கள்.
தியேட்டர் கிடைக்குமா?
கலக்கத்தில் மற்ற பட தயாரிப்பாளர்களும்,
பிட்டு பட தயாரிப்பாளர்களும்.
இனியாவது கற்று கொள்ளுங்கள்
மடையர்களே 
கழக தயாரிப்பில் இணைந்து வெளியிட.

பார்கிங் கொறைஞ்சது
பத்து ரூபா.
டிக்கெட்டு வித்த விலையில
பாப்கார்ன் பாக்கெட்டு.
குடும்பத்தோடு தியேட்டர்
போன போஸ்டர் பாத்துட்டு
திரும்பி வந்துடலாம்.


இருட்டாய் கிடந்த
ஏழைகளின் குடிசைகளை
வண்ண தொலைகாட்சிகளால்
மிளிர வைத்த
தமிழக அரசு,
இன்னும் ஒளி சேர்க்க
டி.வி.டி பிளேயர்
இலவசமாய் தர முன் வருமா?

ஆட்சியை பிடிக்க கவலையில்லை
கொடுத்த காசுக்கு
வஞ்சகமில்லாமல் 
ஓட்டு போட
நாட்டில் உண்டு
பல கோடி சத்திய சீலர்கள்.

அடுத்த தேர்தல்ல
ஐம்பது காசுக்கு
அரை கிலோ பருப்பு
வழங்கும் திட்டம் வந்தால் போதும்
ஒரு ரூபா அரிசி வாங்கி
சாதம் வடிச்சு
சாப்பிட
சாம்பாரும் ரெடி.

ஏழை எளியவர்கள் உட்பட
எல்லோருடைய வாழ்க்கையும்
செம்மையாக இருக்க,
தமிழ் மட்டும் தான் மிச்சமாய் இருந்தது.
அதற்கும்
மாநாடு நடத்தி
மகிழ்வித்தாயிற்று.

மானாட மயிலாட
பார்க்க முடியல
கரண்டு  அடிக்கடி கட்டாகி போகுது.
விலைவாசி எகிறி போச்சு.
மாசமாசம் குடும்பம் நடத்த
கடன் வாங்க
எது கட்டுபடியாகும்?
அதுக்கு 
ஆக்டோபசதான் கேட்கணும் 
கந்து வட்டியா? மீட்டர் வட்டியா?
இப்போ 
நமக்கு மட்டுமில்ல
தமிழ்நாட்டுக்கே ஏழரைதான்.

சகல விதமான
ஆசைகளும் நிறைவேறி
சுக போகமாய் வாழ்ந்திட
இறைவனை தேடி போய்
கும்பிட்டால்,
கடவுளுக்கே
கலைஞரின் பேரனாகதான்
ஆசையாம்!!!







3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாமே கலக்கல்... அனைத்தும் நாட்டின் நிலையை சொல்கிறது...

கடைசிக் கவிதை ...ம்ம்ம் செம.. செம...

Srividhya R said...

//இறைவனை தேடி போய்
கும்பிட்டால்,
கடவுளுக்கே
கலைஞரின் பேரனாகதான்
ஆசையாம்!!//

this may be true... !

ஹேமா said...

ஆக்டோபஸ்க்கு வந்த அதிஸ்டமே அதிஸ்டம்.கவிதைலயும் வந்திடுச்சு.கவிதை வாழ்வியல்.