Oct 29, 2010

புறாவை புறக்கணிப்போம்

"புறாவை புறக்கணிப்போம்" என்பதை யாரும் தூக்கத்துலயோ, மப்புலையோ "பிராவை புறக்கணிப்போம்" ன்னு தப்பா படிச்சுறாதிங்க. அதுவும் பெண்கள்.



அபார்ட்மென்ட்ல வசித்து கொண்டிருக்கும் எல்லோரும் எதிர்கொள்ளும்  ஒரு சாதாரண பிரச்சனை தான் இது.  வேலைக்கு போயிட்டு வந்து வண்டிய வெளிய விட்டுட்டு காலையில் வந்து பார்த்தால் நமது பைக், கார்களின் மீது தங்களது காலைக்கடனை கச்சிதமாய் முடித்துவிட்டு போயிருக்கும் அபார்ட்மென்ட் புறாக்கள். இந்த பிரச்சனை எனக்கும், என்னோட பைக்குக்கும் ரொம்பவே பழகி போச்சு.


ஆனா, போன வாரம் என்னோட தங்கி இருக்கிற பிரெண்டு புதுசா ஒரு "ஹோண்டா சைன்" பைக் வாங்கி சீட் கவர், டேங்க்  கவர் எல்லாம் போட்டு அழகா நிறுத்தி வச்சிருந்தான். முதல் நாள் மதியம் ஆபிஸ் போறதுக்காக வண்டிய எடுக்க போனாவன், கொளுத்துற வெயில்ல அப்படியே ப்ரீஜ் (Freeze) ஆகி நின்னுட்டான். அப்பொழுது தான் ஒரு புறா தன் காலைக்கடனை ரொம்ப லேட்டா முடிச்சிட்டு போயிருக்கு. சாதாரணமா அவன் சீட்டுல, தான் உட்காரும் இடத்தை மட்டும் தான் துடைப்பான். அன்னிக்கு முழு சீட்டையும் தண்ணி போட்டு மெதுவா ரொம்ப பொறுமையா துடைச்சுக்கிட்டு இருந்தான்


அடுத்த நாள் ஒரு அரை டஜன் புறாக்கள் சீட் கவர், டேங்க்  கவர் எல்லாத்தையும் சேர்த்து முழு வண்டியையும் கவர் பண்ணிட்டு போயிருந்தது. "மச்சான் இங்க வாங்கடா, இங்க ஒரு புது பைக் நிக்குது" அப்படின்னு ஒரு புறா கால் பண்ணி மத்த எல்லா புறாவையும் கூப்பிட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்.


வண்டிய வாங்குறதுக்கு முன்னாடி "புது வண்டிய வாங்குனதுக்கு அப்புறம் உங்க எவனையுமே பின்னால வச்சு ஓட்ட மாட்டேன். ஏதாவது ஒரு அழகான பெண் புறாவ (பிகரு) வச்சு ஒட்டுனதுக்கு அப்புறம் தான் உங்களை வண்டியில த்துவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஆனா கடவுள் உண்மையான பெண் புறாவையே உட்கார வச்சு அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டார்.

என் ப்ரெண்டுக்காக நான் எழுதிய சிச்சுவேசன் கவிதை.

வண்ண வண்ணமாய் 
அழகிய  நிறங்களில்
எங்கள் அபார்ட்மென்ட்டில்
வசிக்கும் புறாக்கள் 
அதன் அத்துணை வண்ணங்களையும்(shit)
கொட்டி விட்டு சென்றிருந்தது 
என் புது பைக் சீட்டில்.


ஒவ்வொரு அபார்ட்மென்ட்லயும் மாசாமாசம் மீட்டிங் போடுற மாதிரி, சில சமயம் எல்லா புறாவும் ஒரே பைக் மேல மீட்டிங் போட்டு சமோசா சாப்பிட்டுட்டு, பீட்சா டெலிவரி பண்ற மாதிரி மேட்டர டெலிவரி பண்ணிட்டு போய்டும். அதுவும் ஏதோ ஒரு நாள் மறந்து வீட்டு ஜன்னல் கதவை சாத்தாமல் விட்டு விட்டால், உள்ளே புகுந்து கிச்சன் இருக்கிற பாத்திரங்களை எல்லாம் தள்ளி புட்பால் மேட்ச் ஆடிட்டு போய்டுது.


சென்னை சிட்டியில் காக்காக்களை விட புறாக்கள் தான் அதிகமாய் இருக்கும் போல. பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல்ல இருந்து வழி மாறி வந்திருக்கலாம். சரி இதெல்லாம்  எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்கிறது என்று பார்த்தால்,  இங்கிருக்கும் மக்கள் காக்காவுக்கு பதில் புறாவுக்கு தான் சோறு வைக்கிறார்கள். ஒருவேளை சிட்டியில் இருக்கிறவங்க தங்கள் இறந்து போன சொந்தக்காரர்கள் புறாக்களாய் தான் பிறக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ என்னவோ?


நாம இப்படி வண்டிய அசிங்கம் பண்ற புறாக்களை புறக்கணிக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்கும் போது, புறாக்கள் அடுத்த லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு. எப்படி நம்ம மேலயே ஷிட் பண்றதுன்னு புக் வாங்கி படிக்குதுங்க.


படிச்சுட்டு ஒன்னு உடனே பிராக்டிகலா செய்தும் பார்த்திடுச்சு.


இன்னொன்னு ஒரு படி மேலே போய், சாவகாசமா தலையில உட்காந்து வேலைய முடிச்சு Distinction -ல பாஸ் ஆகிடுச்சு.




இரண்டு  நாட்டுக்கு இடையில் உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சமாதான புறாவை பறக்க விடுவாங்க. ஆனா இங்க புறாவே சமாதானத்துக்கு பிரச்சனையா இருக்கு. அதுக்கு ரெண்டு வழி தான் இருக்கு. சிட்டியில சுத்துற எல்லா புறாக்களையும் புடிச்சு, சமைச்சு சாப்பிடலாம் (அல்லது) ஜட்டி போட்டு விடலாம்.






4 comments:

Anonymous said...

ஒரே அக்கப்"புறா"வா இருக்கே :)

//கடவுள் உண்மையான பெண் புறாவையே உட்கார வச்சு அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டார்.//
ஹா ஹா :))

//சமைச்சு சாப்பிடலாம் (அல்லது) ஜட்டி போட்டு விடலாம்.//

ரைட்டு..

Ramesh said...

//ஒரே அக்கப்"புறா"வா இருக்கே :)

பதிவும் செம.. கமெண்டும் செம..

NaSo said...

//ஒருவேளை சிட்டியில் இருக்கிறவங்க தங்கள் இறந்து போன சொந்தக்காரர்கள் புறாக்களாய் தான் பிறக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ என்னவோ?//

ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ?

நிலாமதி said...

பாவம் ...........நன்றாய் அனுபவபட்டுளீர்கள். பைக் ஐ மூடி கவர்( cloth ) போடா முடியாதா?