Oct 24, 2010

சுந்தர் சி in பில்லா 2 - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 24 Oct 2010

தற்போது பெரிய படம் ஏதும் ரிலீஸ் ஆகாததனால் சினிமா ரசிகர்களும், வலைபதிவர்களும் ரொம்பவே கஷ்ட படுகிறார்கள். தீபாவளிக்காவது ரிலீஸ் பண்ண விடுவீங்களா? அய்யா, கலாநிதி மாறன் அவர்களே! என்னோட பிரெண்டு ஒருத்தன் எந்திரன் படத்த நிறைய தடவ பார்த்து சலிச்சு போய், இப்ப "தொட்டு பார்" படத்தை அஞ்சு தடவையும், கொசுவர்த்தி சுருள் தலையர் சுந்தர்.சி படம் "வாடா" - வை ஆறு தடவையும் தியேட்டர்லயே போய் பார்த்து  விட்டான். கடைசி தடவை பார்க்கும் போது கூட்டம் இல்லாத காரணத்தினால், ஆபரேட்டர் படத்தை ஓட்ட மறுக்க, இவனே படத்தை ஒட்டி பார்த்துள்ளான்.

தற்போது எனக்கும் பதிவு போட எந்த மேட்டரும் கிடைக்கவில்லை என்றாலும் இந்த மாதிரியான படங்களை பார்த்து நமீதா விமர்சனமாக போட்டால், அது நமீதாவின் பெயருக்கு களங்கமாக அமைந்து விடும் என்கிற காரணத்தால், அது அப்படியே நிராகரிக்க பட்டது.



மேலே உள்ள இந்த ஸ்டில்லை தற்செயலாக ஒருமுறை பார்த்த விஷ்ணுவர்த்தன், சுந்தர்.சி யின் Gun பிடித்திருக்கும் ஸ்டைலையும், கோட் போட்டிருக்கும் அழகையும் பார்த்து பில்லாவின் அடுத்த பார்ட்டில் இவரை போடலாம் என்று முடிவு எடுத்திருப்பதாக நம்ப தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தல அவர்களுக்கு புதிய தலவலியாக சுந்தர்.சி அவர்கள் உருவெடுத்துள்ளார்.



ஜினிய நிறைய பேரு கடவுள் என்கிற ரேஞ்சுக்கும் அவரு படம் ஓடுற தியேட்டர கோவில் ஆகவும் பாவித்து பாலபிசேகம் செய்து வணங்கி வருகிறார்கள். இந்தியா முழுதும் ஊர்வலத்த முடிச்சுட்டு, சாமி இப்போ மலை ஏறிடுச்சு, இமய மலை. அதனால பக்த கோடிகள் எல்லோரும் உங்கள் பால் கலசங்களை எல்லாம் எடுத்து கொண்டு, தியேட்டரை விட்டுவிட்டு இமயமலைக்கு நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள். வைகோவை வேண்டுமானால் கேட்டுபாருங்கள். நடை பயணம் என்றால், அவர் துணைக்கு வந்தாலும் வருவார்.
                                              

ன்னோட ஆபிசுல புதுசா சேர்ந்து இருக்கிற ஒரு ஹிந்தி பிகரு என்னை பார்த்து அடிக்கடி லுக்கு விட்டு லேசா சிரிக்குது. நாமளும் எத்தனை நாளைக்கு அச்சா அச்சான்னு சொல்லியே சமாளிக்கறது. அதனால நானும் அந்த பிகர கணக்கு பண்ணலாம்ன்னு கணக்கு டியூசன் சாரி, ஹிந்தி டியூசன்க்கு வேளச்சேரில இருக்கிற ஒரு டீச்சர் வீட்டுக்கு போய் கத்துக்கிட்டு இருக்கேன். இப்பதான் உயிர் எழுத்து மெய் எழுத்துன்னு கொஞ்சம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சிருக்கேன். ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போய் காலிங் பெல் அடிச்சிட்டு உள்ள போனேன். அப்போது மேடம் "கிளாஸ் ரூம்ல போய் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்னு" சொல்வதற்கு பதிலாக "பெட் ரூம்ல போய் உட்காருங்க வந்துடறேன்" ன்னு வாய் தவறி சொல்லிட்டாங்க. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!. இருந்தாலும் என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாததால் நான் நேராக போய் கிளாஸ் ரூமில் உட்காந்துட்டேன். ஆனா இந்த கவனிக்க பட கூடாத விஷயத்தை, அந்த டீச்சரோட புருஷன் கவனிச்சுட்டார்.





10 comments:

NaSo said...

நான் தான் first.

NaSo said...

அந்த டீச்சரோட அட்ரஸ் தரமுடியுமா?

NaSo said...

இன்னைக்கு சன் டிவில வாடா படத்தோட விமர்சனத்தை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

Katz said...

// நாகராஜசோழன் MA said...

அந்த டீச்சரோட அட்ரஸ் தரமுடியுமா?//

எதுக்கு அல்வா கொடுக்கவா?
அவங்களுக்கு குலோப் ஜாமுன் தான் புடிக்குமாம்

Yuva said...

கொசுறு செய்தி சூப்பர் ....

a said...

//
கூட்டம் இல்லாத காரணத்தினால், ஆபரேட்டர் படத்தை ஓட்ட மறுக்க, இவனே படத்தை ஒட்டி பார்த்துள்ளான்.
//
ஹா ஹா.......

ப்ரியமுடன் வசந்த் said...

கு பதிலா "பெட் ரூம்ல போய் உட்காருங்க வந்துடறேன்" அப்படின்னு வாய் தவறி சொல்லிட்டாங்க (நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்). இருந்தாலும் என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாததனால நான் நேரா போய் கிளாஸ் ரூம்ல உட்காந்துட்டேன். ஆனா இந்த கவனிக்க பட கூடாத விஷயத்தை, அந்த டீச்சரோட புருஷன் கவனிச்சுட்டார். //


ha ha haa

லட்சணமான எழுத்துநடை உங்களுக்கு வசப்படுது !

Philosophy Prabhakaran said...

இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன்.... சிறப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Anonymous said...

வாங்க பாஸ்!
// "வாடா" - வை ஆறு தடவையும் தியேட்டர்லயே போய்//
அவரு உயிரோட இருக்காரா இப்போ? ;)

Katz said...

// Balaji saravana said...

வாங்க பாஸ்!
// "வாடா" - வை ஆறு தடவையும் தியேட்டர்லயே போய்//
அவரு உயிரோட இருக்காரா இப்போ? ;)//

ஆறாவது தடவை போகும் போது என்னை படத்துக்கு வாடா என்று கூப்பிட்டார். நான் போடா என்றதும், போனவர் இன்னும் வரவில்லை. பேப்பர்ல காணாமல் போனவர் செய்தி கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.