Feb 9, 2012

உங்களில் யார் அடுத்த நயன்டாரா? - ஆபாயில்

நான் தற்போது அதிகமாக எழுதாதை கண்டித்து என் வீட்டு முன்னால் மா.மு கட்சி ஆர்பாட்டம் நடத்தியது. அதனால் நான் மாதம் ஒரு போஸ்ட் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினம் ஒரு போஸ்ட் போடலைன்னா உன்னால் அரசியல் செய்ய முடியாது என்று என் அப்பா சொல்கிறார். என்ன எழவோ! எனக்கு அரசியல் வரவே மாட்டேங்குது. தினம் ஒரு அறிக்கை, அரசுக்கு ஒரு கண்டனம், ஒரு புரட்சி என்று எப்படித்தான் பண்றாங்களோ?



சென்னை, திருப்பூர் கண்காட்சியை மிஸ் செய்து விட்டேன். தினமும் புத்தக கண்காட்சிக்கு சென்று போண்டா சாப்பிட்டு விட்டு மகாபாரதம் போர் போல ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று பதிவு போடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. சாரு சாபம் விட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

சரி, "லவாசாவில் பல ராத்திரிகள்" என்று நான் ஒரு புத்தகம் எழுதினேன். யாராவது என்னுடைய புத்தகத்தை வாங்கினீர்களா? மொத்தம் 116 பாலோவர்ஸ் இருக்கிறீர்கள். ஒருத்தர் ஒரு புத்தகம் வாங்கியிருந்தால் கூட 116 புத்தகம் வியாபாரம் ஆகியிருக்கும். 116 பேரில் எத்தனை பேர் முழிச்சிருக்காங்கன்னு தெரியல. சைடில் ஒரு vote box வச்சு எல்லோரையும் ஒரு attendance போட சொல்லணும்.

நேற்றைக்கு புத்தக பதிப்பகத்தில் இருந்து போன் செய்து அச்சடித்த ஐநூறு புத்தகத்தில் இதுவரை ஐந்து புத்தகம் மட்டும் தான் சேல்ஸ் ஆனது என்று சொன்னார்கள். அதில் இரண்டு புத்தகத்தை என்னை Encourage பண்ண என் நண்பர்கள் வாங்கியது. மிச்சம் மூன்றை கிளுகிளுப்பான தலைப்பை பார்த்து வாங்கியிருப்பார்கள். இன்றைக்கு இன்னொரு பதிப்பகம் போன் செய்து இன்னும் விக்காமல் 200 புத்தகங்கள் இருக்கிறதென்று சொன்னது கூடுதல் செய்தி.

ரஜினி இல்லையென்றாலும் அட்லீஸ்ட் கொலைவெறி நாயகனை வைத்தாவது புத்தகத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். கொஞ்சமாவது விற்றிருக்கும். யாருக்காவது புத்தகம் வேண்டும் என்றால், no1writter@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில் என் புத்தகம் பற்றிய, முந்தைய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.


நான் எவ்வளவு தண்ணி அடிச்சாலும் ரொம்ப ஸ்டெடியாகவே இருப்பேன். வடிவேலு மாதிரி பஸ்ஸில் கூட கம்பியை பிடிக்காமல் தான் நின்று கொண்டு போவேன். தண்ணி அடித்து விட்டு இதுவரை ஆம்லேட் போட்டதே இல்லை என்பதை என் வரலாற்றை புரட்டி பார்த்தால் அறிய முடியும்.

ஆனால் ஒரு வெப்சைட் இருக்கிறது. அதை ஓபன் பண்ணி பார்த்தாலே போதும் அந்த நாற்றத்தில் எனக்கு வாந்தி குபீரென வந்து விடும். நல்லவேளை நான் ஆணாக இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால், "யாருக்கிட்ட போய்டி ஏமாந்த?" என்று கேட்டு அம்மா அடித்து துவைத்திருப்பாள்.

அது என்ன சைட்? அந்த "மணம்" என்ன?
அது Blog படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியலாம். தெரியாதவங்களுக்கு, Sorry... 


சுமார் மசாலா படமான ஒரிஜினல் 3 Idiots -யை நெட்டில் டவுன்லோட் பண்ணி பார்த்தது தப்பு தான். பகிரங்கமாய் ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதையே சிலவருடம் கழித்து தமிழில் பார்க்க வைத்து தண்டனை கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் எம்பெருமானே?

ஆனால் இதை விட ஒரு பெரிய தண்டனை இருக்கிறது தெரியுமா? அது நரகத்தில் கூட கிடைக்காது. 

"இந்த படத்தை திருட்டு டி.வி.டி வாங்கி பார்ப்பதுதான்"

தெய்வம் நின்று சாகடிக்கும். ஆனால் விஜய் நடித்து சாகடிக்கறார். முகத்தில் Expression, Syntax என்பது துளியும் இல்லை. இன்னும் நடிப்பில் சங்கவியின் முதுகில் சோப் போடும் லெவலில் தான் இருக்கிறார்.

இதில் சங்கர் படம் என்றால் பிரமாண்டமாய் இருக்குமாம். அடுத்த படத்தில் பெரிய அண்டாவுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டமாய் எடுக்க இருக்கிறார்களாம்.

விஜய் சார், சங்கர் சார் எங்கேயாவது ஓடிருங்க சார்.

இவ்வளவு நாளாக நடித்து டான்ஸ் மட்டுமே ஆட வரும் என்றால், அதற்கு "உங்களில் யார் அடுத்த பெரபுதேவா?" நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளலாம். நயன்டாராவால் கழட்டி விடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நடன பொயல் பெரபுதேவாவிற்கு எந்த சேனலாவது நல்லது செய்ய விரும்பினால் "உங்களில் யார் அடுத்த நயன்டாரா?" என்ற நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெறும் மங்கையை அவருடன் வாழ வைக்கலாம். நயனமும் நடனமும் சேராதது கலையுலகின் மிகப் பெரிய இழப்பு.


காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் சாலை ஓரங்களில் நடந்து செல்வது அசாதாரண காரியம். அதிலும் பெண்கள் தங்கள் மேனி கறுக்காமல் இருக்க ஒரு கையில் குடையையும், இன்னொரு கையில் உயிரையும் பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.

வாகனங்கள் செல்லும் திசையில் கையை வீசிக் கொண்டு ஹாயாக நடந்து சென்றால் உங்கள் வலது தோள்பட்டையை ஆபரேசன் செய்யாமல் அகற்றிவிடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று, வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் நடப்பதுதான். இரண்டாவது, சைடு mirror தலையில் செட் பண்ணி கொள்வது.

பிளாட்பாரத்தில் ஏறி நடந்து சென்றாலும் பைக்கில் பின்னாலே வந்து பின்புறத்தில் இடித்து படுக்க வைத்து, உங்கள் பின்புறத்தை வேகத்தடையாக மாற்றி விடுவார்கள் (படம் கீழே).



அதேபோல் சென்னையில் பைக் ஓட்டுவதும் சவாலான விஷயம். 70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ரோட்டின் குறுக்கே ஸ்டைலாக Cat Walk போவார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் நின்று பொறுமையாய் அந்த Cat Walk ஷோவை ரசித்து விட்டு செல்லலாம். இன்னும் சில பேர் Planet of the Aps படத்தில் பாலத்தில் இருந்து குதிக்கும் மனித குரங்குகள் போல திடீர் திடீரென ரோட்டின் நடுவே இருக்கும் டிவைடரில் ஏறி குதித்து நம்மை பயமுறுத்துவார்கள். நாமும் மனித குரங்குகள் தானே!

உங்களுக்கு முன்னாள் ஆட்டோ சென்று கொண்டிருந்தால் கவனம் தேவை. அவைகள் சாக்கடையில் இருந்து எழுந்து செல்லும் பன்றிகள் போல. பக்கவாட்டில் ஐந்து அடி distance விட்டு செல்ல வேண்டும். எந்த பக்கம் வேண்டுமானாலும் திடீரென திரும்பி நம்மை மண் சோறு சாப்பிட வைத்து விடுவார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ஆட்டோவுக்கு side indicator இருக்கா?




3 comments:

Kumaran said...

@@ விஜய் சார், சங்கர் சார் எங்கேயாவது ஓடிருங்க சார்.@@
ஏன் சார்..உங்களுக்கு இந்த படத்து மேல இவ்வளவு வெறி..

எங்க இரண்டு வாரம் ஆகுது இன்னும் பதிவு எதுவும் வரலனு, நெனைச்சேன்..வந்தீங்க பாரு..ஒரு செம்ம கலக்கலான பதிவோடு..சுவாரஸ்யங்கள் நிறைந்த எழுத்துக்கள்..நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.

சைக்கோ திரை விமர்சனம்

ராஜ் said...

பாஸ்,
புக் பேர இன்னும் கிளர்சியான தலைப்பு வச்சு இருக்கலாம்....... நான் வாங்கி இருப்பேன்.....

நீங்க தான் அந்த no1 ரைட்டரா.....ரொம்ப நாளா உங்கள தான் தேடுறேன்.....

நடிப்பு உலகத்தில் மூடி சூடா சக்ரவர்த்தி டாக்டர் விஜய் சங்கவிக்கு சோப்பு போட்டு வளர்த்த நடிப்பை நீங்க குறை கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்......
அந்த கட்சியில் அவரின் கண்களை நீங்கள் பார்க்க வேண்டும்... அந்த ரெண்டு கண்கள்...யப்பா என்ன ஏக்கம்...என்ன தவிப்பு....என்ன கிளர்ச்சி...வெறும் முதுகு மட்டும் தானா என்ற அவரின் பரிதவிப்பு.....அந்த ஒஸ்கார் நடிப்பை நீங்கள் குறை கூறுவதை நான் ஏற்க மாட்டேன்.......

சங்கர்.... இல்லை இல்லை, ஷங்கர் இன்னும் ஆலமரத்து குயில் என்ற கதையை வைத்து கொண்டு தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லாடும் ஒரு அப்பாவி இயக்குனர்....... அவரையும் நீங்கள் குறை கூறுவதை நான் ஏற்க மாட்டேன்.....

Samee said...

Nice dude.....