கல்லூரி பேருந்து
உன் நிறுத்தம்
வருவதற்கு முன்பே
ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய்
என் நினைவில்.
நீ வராத நாட்களில்
கல்லூரி பேருந்து
கரும் புகையை கக்கிக் கொண்டு
என் உடலை ஏற்றி செல்லும்
ஓர் சவ ஊர்தியாய்
உருமாற்றம் கொள்கிறது.
உனை காணும் நோக்கிலே
தினமும் கல்லூரி வருவதால்
வருடா வருடம்
தவறாமல் பெறுகிறேன்
வருகை பதிவேட்டில்
நூறு சதவிகிதம்.
நீ இருக்கும் வரை
கல்லூரி பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள்
சிறிதும்
என் கவனம் ஈர்ப்பதில்லை.
8 comments:
காதல் கலகம் செய்கிறது... உங்க கவிதை.
பாராட்டுக்கள்.
ரொமாண்டிக்...
அம்புட்டும் காதல் காதல் தானே கார்த்திக்
அழகான கவிதை..
கவிதை அருமை !
காதல் எல்லாம் செய்யும் அதோடு கவிதையும் செய்யும் இல்லையா!
அருமை..
நல்லதொரு காதல் கவிதை...
நல்லதொரு காதல் கவிதை...
Post a Comment