Dec 1, 2010

டாக்டரு விஜயகாந்து - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் வெள்ளிகிழமை ஒரு மகத்தான விஷயம் நடக்க உள்ளது. மக்களே அதற்காக உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.  புரட்சி கலைஞர் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த் ஆக உருவெடுக்கிறார்.  இதன் பிறகு நம்ம வல்லரசு மக்கள் நலனில் மேலும் அக்கறை கொல்வார். "டாக்டர்" என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி பட்டமே ஒழிய பதவி அல்ல. அதனால், தலைவலி என்று தப்பி தவறி அவரிடம் செல்வோருக்கு, சாப்பிட்ட பின் பார்க்க சொல்லி தருமபுரி பட சி.டி இரண்டு வழங்கப்படும். இதனால் நீங்கள் தவறவும் வாய்ப்பு உண்டு.

ஏற்கனவே டாக்டர் விஜய்யின் SMS காமெடியின் மூலமாக கொழுத்த லாபம் சம்பாதித்து வரும் மொபைல் சர்வீஸ் கம்பனிகளுக்கு, "நம்பர் மாற்றாமலே மொபைல் போன் சர்வீஸ் கம்பனிகளை மாற்றலாம்" என்ற திட்டம் பேர் இடியாக விழுந்துள்ள நிலையில்,  டாக்டர் விஜயகாந்த் என்ற சக்தி இந்த கம்பனிகளுக்கு மிகப் பெரும் ஆறுதலாக அமையும். இனி வலையுலக வட்டாரத்திலும், "டாக்டரு விஜய்யும், டாக்டரு விஜயகாந்தும்" என்பது போன்ற தலைப்பில் ஏகப்பட்ட பதிவுகள் வெளிவரும்.










ந்திரனுக்கு அப்புறம் நிறைய படம் ரிலீஸ் ஆகிடுச்சு.

தீபாவளிக்கு வந்த மைனா, உயர உயர பறக்குதாம்.
வ குவார்ட்டர் கட்டிங், ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் மட்டை ஆகிடுச்சாம்.
உத்தமபுத்திரன், குடும்பத்தோடு பார்த்து நெகிழ வேண்டிய படமாம். 
வல்லக்கோட்டை, இந்த படத்துக்கு யாருமே விமர்சனம் போடலைன்னு நம்ம ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ரொம்பவே அமைதியான கிங் ஆக மாறிட்டாராம்.
போன வாரம் ரிலீஸ் ஆன நந்தலாலா, சூப்பரா லாலா பாடி எல்லோரையும் தூங்க வைக்குதாம்.
நகரம், இந்த படம் குஷ்பு மேடத்தின் சொந்த தயாரிப்பு என்பதால், சுந்தர்.சி பக்கத்துலையே உட்கார்ந்து வேலை வாங்கி இருக்கலாம். (சுந்தர்.சி க்கு ஹீரோயினோடு உள்ள அந்த லிப் கிஸ் சீனுக்கு, குஷ்பு பக்கத்துல இருந்து பார்த்தாங்களான்னு தெரியல.) படம்  சுமாராக உள்ளதாம்.
மகிழ்ச்சி, தமிழின தலைவர் சீமான் இந்த படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியே என்றாலும், அவர் இன்னமும் சிறையில் இருப்பது வருத்தமான விஷயம்.
கனிமொழி, படத்துக்கும் இந்த பேருக்கும் சம்பந்தமே இல்லைன்னு நிறைய பேரு சொல்றது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீரா ராடியா என்றாவது படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். கொஞ்ச நாள் ஓடியிருக்கும். கனிமொழி விமர்சனத்தை படித்து சிரிக்க இங்கே கிளிக்கவும்.

இவ்வளவு படம் ரிலீஸ் ஆகியிருக்க,
இன்னமும் இந்த சன் டீவில எந்திரன் பட டிரைலர் போட்டு கொன்னுகிட்டு இருக்கானுங்க.  நாராயணா! இந்த ரங்கூஸ்கி கொசு தொல்ல தாங்க முடியல!



ன்னோட பிரெண்டிடம் இருந்து ஒரு SMS வந்தது.


There are two great kings who are ruling the world till now. They are
---
---
Smo-King and
Drin-King

அதற்கு என்னுடைய பதில்.


" You have missed a great king who is ruling the world most from the beginning. He is 
---
---
F#%-King"



இந்த வார வீடியோ:




"எப்படி காக்கா இப்படியெல்லாம் மனுஷன் மாதிரி யோசிக்குது" அப்படின்னு நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. அது சிம்பிள். ஏன்னா, மனிதன்தான் இறந்து காக்கையாக பிறக்கிறான். எப்பூடி?

 



6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆபாயில் நல்லா தானிருக்கு...

Anonymous said...

வல்லகொட்டை, இந்த படத்துக்கு யாருமே விமர்சனம் போடலைன்னு நம்ம ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ரொம்பவே அமைதியான கிங் ஆக மாறிட்டாராம்.//
சி.பி.செந்தில்குமார் விமர்சனம் போடிருந்தார்

Anonymous said...

எல்லா பட விமர்சனமும் நச்சுன்னு இருக்கு

Anonymous said...

எஸ் எம் எஸும் வீடியோவும் அட்டகாசம் :)

அருள் said...

விஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர். விருதகிரி மேலும் விவரங்களுக்கு என் ப்ளாக் வாருங்கள்