Nov 26, 2010

லிவிங் டுகெதர் - Revisited & பதிவர் விசாவுக்கு விசாரணை கமிஷன்

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவோ அல்லது மொக்கைக்காகவோ எழுதப்பட்டது.



எந்திரன் படத்துக்கு அடுத்து அதிக வலையுலக வாசிகளால் விமர்சிக்கப் பட்ட படம்  Living Together. சினிமா வியாபாரம் செய்து வரும் பிரபல பதிவரும் இதற்கு கொஞ்சம் லேட்டாக விமர்சனம் எழுதி உள்ளார். போன ஆபாயிலில் லிவிங் டுகெதர் பத்தி நிறைய பிரபலங்களிடம் கருத்து கேட்டோம். கடைசி வரைக்கும் பதில் கிடைக்கவே இல்ல.  முக்கால்வாசி பதிவர்கள் இதை பற்றி எழுதி கருத்து கந்தசாமிகளாக வலையுலகில் வலம்வருகின்ற சூழ்நிலையில், இன்னும் இதை பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் தப்பித்து வரும் பதிவர்கள் முறையாக கண்காணிக்க பட்டு பதிவுகள் போட சொல்லி கட்டாயப் படுத்தப்படுவார்கள். இது கீழ்க்கண்ட அனைவருக்கும் பொருந்தும்.

  • மூளையை கசக்கி கதை எழுதுகிறவர்கள்.
  • அமராவதி ஆற்றங்கரைகளிலோ இல்லை காவிரி ஆற்றங்கரைகளிலோ உட்கார்ந்து, இதயத்தை பிழிந்து  கவிதை எழுதுகிறவர்கள்.
  • கவலை படாமல் Right கிளிக் செய்து காப்பி பேஸ்ட் செய்பவர்கள்.
  • மொக்கையில் ஊறி திளைத்து படிப்பவர்களை பதற வைப்பவர்கள்.
  • சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகத்தின் மீது ஆர்வம் இல்லாதவர்கள்.
  • இட்லிவடை சாப்பிட்டு விட்டு அரசியல் பேசுபவர்கள்.

ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களுக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு. மன்னிக்கவும், விதிவிலக்கு உண்டு.

அப்படி பதிவு போடாத பதிவர்களின் வலைப்பூ முகவரியை நீங்கள் சீட்டில் எழுதி பின்னூட்டத்தில் கட்டி விட்டு அப்படியே இந்த பதிவுக்கு ஓட்டு போட்டு விட்டு போய் விட்டால், கருத்து கந்தசாமியான நான் சேவல் கெட்டப்பில் வந்து மற்ற கந்தசாமிகளுக்கும் அறை'கூவல்' கொடுத்து, பொதுக்குழு கூட்டி விதிமுறையை மீறியவர்களின் வலைபதிவர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்து, அவர்களது வலைப்பூவும் ஹேக் (Hack) செய்யப் படும்.

நீங்கள் எழுதும் பதிவுகள் ISI தர சான்றிதழ் பெறக்கூடிய தரத்தில் இருக்க தேவை இல்லை. அரைவேக்காடு தனமாக "ஆபாயில்" மாதிரி இருந்தாலே போதுமானது.



இட்லிய சாப்பிட்டுட்டு நாக்கு வறண்டு அடிக்கடி தண்ணிய குடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி, நாம கஷ்டப்பட்டு ஏதோ ஒரு கருத்தை சொல்லி பதிவை இன்ட்லில இணைச்சிட்டு நாக்கு வறண்டு போக ஓட்டு வருமா? கமெண்ட்டு வருமா? ன்னு கண் மூடாம பார்த்துகிட்டு இருக்கோம். ஆனா இப்படி எழுதுற நம்மள மாதிரியான ஆபாயில் பதிவர்களை எல்லாம் சாதாரணமா கிண்டல் பண்ணி, நம்ம பதிவை எல்லாம் கிழிச்சு கிளி ஜோசியம் சீட்டு மாதிரி போட்டுட்டார் விசா என்கிற பதிவர் அவரது டையிங் டுகெதர் என்ற பதிவின் மூலம். "நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது." அப்படின்னு இவரு சொல்லறாரு. அதாவது வடையும், சுடுசோறும் தான் முக்கியம் அப்படிங்கறாரு. ம.தி.சுதா கவனிக்கவும் (இவருக்கு மட்டும் எப்படிதான் எங்க போனாலும் சுடுசோறு கிடைக்குதோ தெரியல?).


இதனால் இவரது வன்மையான போக்கை கண்டித்து, விசா அவர்களை எந்த நாட்டின் மூலையில் இருந்தாலும் உடனே விசா எடுத்து சென்னை கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக்கு வரவைத்து, மொட்டை வெயிலில் நிறுத்தி விசாரணை கமிஷன் வைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூடான காரமான மிளகாய் பஜ்ஜியோடு அங்கேயே நமது அடுத்த வலை பதிவர்கள் சந்திப்பையும் வைத்து கொள்ளலாம்.  விசாவுக்கு மட்டும் தொட்டு கொள்ள சட்னி கிடையாது. கூடுதலாக, கரு பழனியப்பனின் "மந்திரப் புன்னகை" படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க முடியாமல் வருத்தப் பட்டு கொண்டிருப்பவர்களுக்காகவும், மீண்டும் அண்ணன் உண்மை தமிழனின் உதவியால் மந்திரப் புன்னகை மறுஒளிபரப்பு செய்யப்படும்.


இது வரைக்கும் லிவிங் டுகெதர்க்கு ஆதரவாகவும் எதிர்த்தும் நாம எல்லோரும் எழுதுன பதிவை எல்லாம் தொகுத்து "லிவிங் டுகெதர் ஆச்சாரமா? அ(வி)பச்சாரமா?" அப்படின்னு தனி புத்தகமாக கிழக்கு  பதிப்பகத்தில் வெளியிட்டால், அதை வாங்கி படித்து விட்டு, லிவிங் டுகெதரில் வாழ்பவர்கள் எல்லாம் திருந்தி கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வார்கள். கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் டைவர்ஸ் செய்துவிட்டு லிவிங் டுகெதராக மனதிற்கு பிடித்த மற்றவர்களோடு சந்தோசமாக வாழ்வார்கள். அப்படியே இதே தலைப்பில் விஜய் டி.வியில் கோபிநாத்துடன் நீயா? நானா? நிகழ்ச்சியை நடத்த சொல்லி, அதில் நாமெல்லாம் கலந்து கொண்டு கூதுகலமாய் பேசி கும்மி எடுக்கலாம் (யாரை?).

கீழே உள்ள காமெடியில் வருகின்ற வடிவேலுக்கும், லிவிங் டுகெதர்க்கும் எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லை.




 
கடைசியாக ஒரு பன்ச்.


ஒரு சீரியசான மேட்டர் அப்படிங்கறது அழுக்கு துணி மாதிரி. அதை அலசி ஆராயலாம். ஆனா, துவைக்காம அலசி ஆராய கூடாது.

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்...




6 comments:

NaSo said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?

NaSo said...

அடிக்கடி ஆபாயில் சாப்பிடற பதிவரை பற்றி ஒன்னும் எழுதலையே, ஏன்?

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி சகா

VISA said...

ம்...லிவிங் டுகெதரின் அருமை பெருமைகளை உணர்ந்து இப்போது நானும் சின்சியராக என் பார்ட்னரை தேடி வருகிறேன்.

சிவகுமாரன் said...

உங்கள் கவிதைகளும், photography ம் அருமை.
உங்கள் தளத்தை பின்தொடர்கிறேன் .அப்புறம் தாஜ்மகாலை பற்றிய செய்திகள் புதுசு.

Cable சங்கர் said...

:))