Dec 17, 2010

மந்திர புன்னகை - நமீதா விமர்சனம்



இயக்குனர்கள், நடிகர்களாக மாறுவது தமிழ்நாட்டுல வெரி ஓல்ட் பேஷன். அதை பின்பற்றி திருபழனியப்பன், மன்னிக்கவும். 'கரு'பழனியப்பன் அவர்கள் நடித்த மந்திர புன்னகை படத்தின் போஸ்டர் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்க்கும் எண்ணம் என்னை விட்டு ரொம்ப தூரம் போய் கொண்டு இருந்துச்சு. சரி விடுங்க. சாதாரண மக்கள் நம்மளுக்கே நாம ஒரு ஹீரோ அப்படிங்கற நினைப்பு அடிமனசுல ஆழமா இருக்கும். அப்படிங்கும்போது திரைத் துறைல இருக்கிற ஒரு இயக்குனர் அப்படி நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா மத்தவங்கள நினைக்க வைக்கருது தான் தப்பு. என்ன சொல்லவர்றேன்னு புரியலையா? (எனக்கும்தான்)

படம் ரிலீஸ் ஆகி நிறைய நாள் ஆனதுனால் படத்தோட கதை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். கதை தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

படத்தோட ஒரிஜினல் ஹீரோ வசனம் தான். ஒவ்வொன்னும் ரசிக்க கூடியது. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆக போயிடுச்சு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே "நான்  நீன்னு" போட்டி போட்டுக்கிட்டு வசனத்தை பங்கு போட்டு பேசி இருக்காங்க. தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார்.

படத்தோட ஹீரோ, நம்ம  கருபழனியப்பன் அவருக்கு தண்ணி அடித்து கொண்டு  குட்டியோட ஜாலியாக பொழுதுபோக்கற மாதிரி ஒரு கேரக்டர் என்பதிற்காக, படம் முழுவதும் தாடி வச்சுக்கிட்டு மூஞ்சு கழுவாம நம்ம விஜய டி. ராஜேந்தரின் தவ புதல்வன் மாதிரியே வந்து நமக்கு சரக்கு அடிக்காமலேயே வாந்தி வர்ற மாதிரி பீலிங் உண்டாக்குகிறார். டூயட் கூட தாடியோட தான் பாடுறார். இவருக்கும் ஹீரோயினுக்கும் வர்ற ரெண்டு பாட்டுக்கு பதில் கம்முன்னு ஹீரோயினுக்கு மட்டும் ரெண்டு சோலோ சாங் கொடுத்து இருக்கலாம். இவர் சொல்ற கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கிடைக்கறவங்களை எல்லாம் புடிச்சு கருத்து சொல்லி மிகவும் கஷ்டப் படுத்தறார். கருத்துபழனியப்பன்.

மனசில் பட்ட எதையுமே கூச்சபடாம சத்தம் போட்டு பேசுற கேரக்டர் என்பதாலும் படம் முழுவதும் கருவண்டு மாதிரி பயங்கரமா நம்ம காதுக்குள்ள வந்து கத்தி கத்தியே பேசி வலிக்க வைக்கிறார். இவருக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் என்பதற்காக, பேச்சு போட்டியில் சொல்கிற மாதிரி எல்லோரையும் சுத்தி உட்கார வச்சு மூச்சு விடாம கவிதைகளை ஒப்பிக்கிறார்.

இவர் நிறைய "ரேட்டு"களோடு என்ஜாய் பண்ணி இருக்கிற மாதிரி சொன்னாலும், படத்துல ஒரே ஒரு ரேட்டத்தான் (சன் மியூசிக் பிகரு) காமிக்கறாங்க. இன்னும் ரெண்டு மூணு ரேட்ட காமிச்சு இருக்கலாம். ஒருவேளை நடிக்க வைக்க ரேட்டு(சம்பளம்) பத்தலையோ என்னவோ?

விஜய் டீ.வி "நீயா? நானா?"வில் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுற மாதிரி இவரு குவார்ட்டர் அடிக்கறத அடிக்கடி காமிக்கிறாங்க. விஜய் டீ.வில போடுற சைனீஸ் டப்பிங் படத்தில் தண்ணி அடிக்கிற சீன் வரும் போது "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" அப்படின்னு கீழே ஓட விடுவாங்க. அதுமாதிரி இந்த படத்துக்கும்  போட்டங்கன்னா, படத்துக்கு வர்ற சப்டைட்டில் விட இது மிஞ்சிடும். குவார்ட்டர் பாட்டில் அல்லது பிஸ்லேரி பாட்டில் இப்படி படம் முழுவது ஏதோ ஒரு பாட்டில கைல வைச்சுகிட்டே சுத்துறாரு. முடியல!

இப்போ இவர் ஹீரோவாகவும் இனி தொடர்ந்து நடிப்பேன்னு ஊர் முழுதும் உரக்க மைக் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கார். நல்லதோ? கெட்டதோ? நடக்கட்டும்.


"பூனை ஒரு தடவை பாலை ருசி பார்த்துடுசுன்னா, அது மறுபடியும் மறுபடியும் பால் கலசங்களை உருட்ட ஆரம்பிச்சிடும்"



ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது. இந்த படத்தின் மூலமாக இவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சீக்கிரம் முன்னுக்கு  வரவேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல.

தனக்கு ஒரு ஓரளவு ஹிட் படத்தை கொடுத்த இயக்குநருக்காக, கெஸ்ட் ரோல்ல கொஞ்ச நேரமே வந்தாலும், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் 'அனுபவிச்சு' நடிச்சு இருக்கார். இந்த மாதிரி கெஸ்ட் ரோலுக்கு சம்பளம் வாங்காமலே நடிக்கலாம். அதே மாதிரி சிநேகாவ கூட அந்த "ரேட்டு" ரோல்ல நடிக்க வச்சு இருக்கலாம். டைரக்டர் மிஸ் பண்ணிட்டார்.

சும்மா காமெடிக்காக படத்தை ஒட்டி எழுதி இருக்கேன். ஆனா படத்தை ஒரு தடவை பார்க்கலாம். கருபழனியப்பனோட கருந்தாடி பார்க்க பயமாக இருந்துச்சுன்னா நைட்ல பார்க்காமல், பகல்ல பாருங்க.

நமீதா டச்: மந்திர புன்னகை, மர்ம புன்னகை.


7 comments:

Philosophy Prabhakaran said...

// தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார் //

உண்மை... உதாரணத்திற்கு இமையமலை உருகினால் முதலில் இந்தியா அழியுமா சீனா அழியுமா...?

Philosophy Prabhakaran said...

// ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது //

முன்னுக்கு வந்திடுவாங்க...

Philosophy Prabhakaran said...

// இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல //

சட்டச் சட பாடல் கேளுங்க...

Madurai pandi said...

late but latest!!!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி
என் கருத்து படம் ஓகே

சிவகுமாரன் said...

நல்ல விமர்சனம். படம் பார்க்கலாம்னு இருந்தேன். கெடுத்திட்டீங்க.A

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நான் இன்னும் பாக்கலை... நல்ல விமர்சனம்...