இந்த ஐ.பி.எல். போட்டிகளில் பத்து அணிகள் மற்றும் குறைந்த பட்சம் தினம் ஒரு போட்டி இருப்பது சற்றே பார்ப்பவர்களை சோர்வு அடைய செய்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலன்ஜர் அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஷேன் வார்னேவும், சித்தார்த் மல்லையாவும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றவுடன் தத்தம் காதலிகளுக்கு கொடுக்கும் ஆவேச முத்தம் தான் காரணம். இது தான் உண்மையான Post Match Presentation. அதனால் Post Match Presentation இல் சிறந்த முத்தம் கொடுப்பவர்களுக்கு, Kisser of the Match அவார்ட் ஒன்று கொடுப்பது சரியானதே. என்ன ஒரு கொடுமை இந்தியாவில்? பணக்கார சித்தார்த் மல்லையாவுக்கு கூட தன் காதலிக்கு பொது இடத்தில் முத்தம் கொடுக்க ஒரு காரணம் வேண்டி உள்ளது. அப்போ, ஏழை காதலர்கள் எம்மாத்திரம்? இங்கே நான் பொது இடம் என்று குறிப்பிடுவது உதட்டை அல்ல. என்னதான் இவர்களின் அணி வீரர்கள் ஒற்றுமையாய் விளையாடி வெற்றி பெற்றாலும், இவர்கள் இதழ்கள் மட்டும் அவ்வப்போது ஆவேசமாய் சண்டை போட்டு கொள்கின்றன.
நாளை நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு நீங்கள் சென்றால், டிக்கெட் வாங்கிய காசுக்கு கண்டிப்பாக ஒரு முத்தம் பார்க்கலாம். இரு அணிகளும் Points Table இல் முறையே ஐந்து மற்றும் ஆறாவதாக இருக்கின்றன காரணத்தால் நாளை ஏதோ இரு உதடுகளுக்கு கடும் சண்டை நடை பெறும் என பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
No comments:
Post a Comment