எனக்கு வாழ்க்கைல பிடிக்காதது இரண்டு. பணமும், புகழும். நூறு பாலோவர்ஸ் கடந்து விட்டேன் என்று சொல்வது எனக்கு பெருமையாய் இல்லை.
ஏனென்றால் வெட்டியாய் எழுதி பொழுதை கழிக்கிறேன் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதுதான். சச்சினை எனக்கு பிடிக்காது என்றாலும் சச்சினைப் போல, தொண்ணூறில் இருந்து நூறு பாலோவர்ஸ் வருவதற்குள் நிறைய காலம் ஆகி விட்டன.
ஏனென்றால் வெட்டியாய் எழுதி பொழுதை கழிக்கிறேன் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதுதான். சச்சினை எனக்கு பிடிக்காது என்றாலும் சச்சினைப் போல, தொண்ணூறில் இருந்து நூறு பாலோவர்ஸ் வருவதற்குள் நிறைய காலம் ஆகி விட்டன.
பிளாக் எழுதுவது மதுவை போல அதிக போதை தரக்கூடியது. அதிலும் பின்னூட்ட ஊறுகாய் தொடர்ந்து கிடைத்தால் நீங்கள் காலி. இட்லிவடை மாதிரி, பிரேக் நியூஸ்சை கூட தனி போஸ்டாய் போடா வேண்டி வரும்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்களும் ஒரு பிளாக் எழுதுங்கள். ஆனால் பிளாக் எழுதி பெண்களை மடக்கி விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதிர்கள். இன்டர்நெட் கபேக்கு போறவங்கல்லாம் உங்க ப்ளாக் தான் படிப்பாங்க என்று தயவு செய்து தப்பு கணக்கு போட வேண்டாம்.
பொண்ணுங்க கிடைக்கிறாங்களோ இல்லையோ, போஸ்ட்ல மேட்டர் எழுதறதுக்கு நம்ம பசங்க தான் மாட்றாங்க. இப்படி தான் நான் ஒவ்வொருத்தனையும் மிரட்டி கொண்டு உள்ளேன்.
அதிகாலை சரியாக மூன்று மணி இரண்டு நிமிடம் இருக்கலாம். என் அலைபேசி "அய்யய்யோ என் நெஞ்சு அலையுதடி" என்று அலறியது. இன்டர்நேஷனல் நம்பர். கனடாவில் இருந்து ஒரு பெண் வாசகர். தேர்தல் முடிந்து ரொம்ப நாள் ஆகுது. ஆனால் இன்னும் தேர்தலைப் பற்றி என்னோட கருத்தை ஏதும் ஏன் சொல்லவில்லை என்றும் மிகவும் வருத்தப்பட்டார். என் கருத்தை அறியாமல் அவர் உறங்க முடியவில்லை எனவும் கூறினார். காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு என் கருத்தை பதிவு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன்.
மே 13-ம் தேதி அதிமுக கொளுத்திய வெடிச் சத்தம் என்னைப் போலவே பொது மக்கள் பலரையும், தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை முழுதும் புத்தாண்டிற்கு வெடித்திருக்காமல் மே 13-ம் தேதி வரை வைத்திருந்திருக்கலாம் என எண்ண வைத்தது. ஜெயலலிதாவையே ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்ல வைத்தவர் தன்னலமற்ற பெருந்தலைவர் கலைஞர்.
கனிமொழி ஜெயிலுக்கு போய் ரொட்டி சாப்பிடறது மகிழ்ச்சியா இருந்தாலும், ரஜினி வீட்டுக்கு போய் சூப் குடிக்காதது தமிழ் குடிமக்களுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு அதுவே தலைகீழாய் இருக்கலாம்.
விஜயகாந்த் மட்டும் இப்போது "தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்ற பஞ்ச டயலாக்கை தள்ளி வைத்துவிட்டு, வடிவேலுவை மன்னித்து அவர் கூட ஒரு படம் நடித்தால் அடுத்த தேர்தலில் அவர் கட்சி இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். கொஞ்ச நஞ்சம் இருக்கிற திமுக ஓட்டும் விஜயகாந்துக்கு தான்.
தேர்தல் முடிவுக்கு பிறகு நம்ம டாக்டர் விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.
"நான் சொன்னதுக்காக ஒட்டு போட்டு அதிமுகவை வெற்றி பெற வாய்த்த அத்தனை பொதுமக்களுக்கும் நன்றி"
இதனால யாருக்கு கேவலம்? மக்களுக்கா? இல்லை ஜெயலலிதாவுக்கா? இல்லை டமில் கலைஞருக்கா?
நல்லவேளை நான் அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை.
அம்மா ஆட்சிக்கு பிறகு, தமிழ் நாட்டு ரவுடிகள் எல்லோரும் "திருட்டு ரயில்" பிடித்து ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்களாம். பேரரசு படங்களில் ரவுடிகளாய் நடித்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது தான் இங்கே பிரச்சினையே. தற்போது தன் படத்தில் வில்லனாய் நடிக்க ஆள் இல்லாமல் பேரரசு கோடம்பாக்கத்தில் அலைந்து வருகிறார். அதனால் வில்லன் கேரக்டரில் தானே நடிப்பதாய் தனக்கு "நெருக்கமான" நடிகைகளிடம் சொல்லி வருகிறாராம். அந்த படத்தில் அவரே ஹீரோவாய் நடிப்பதாயும் வதந்திகள் வலம் வருகின்றன.
அப்புறம் இன்னொரு ஆள் கூட தமிழ் நாட்டை விட்டு ஓடி டெல்லியில் டென்ட் அடித்து தங்கி வருகிறார். அவர்
ஒரு இளமையின் நீரூற்றை (Fountain of youth) தேடி போவதுதான் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் நான்காவது பாகத்தின் கதை. அதில் நாயகி, சாகப் போகின்ற அவருடைய அப்பாவை (வில்லன்) காப்பாற்ற அதை தேடி போவார். அவர்களுக்கு இரண்டு வெள்ளி கிண்ணங்கள் கிடைக்கும். அதில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அடுத்த கிண்ணத்தில் தண்ணீரோடு கடற்கன்னியின் கண்ணீரும் கலந்து இருக்க வேண்டும். இரண்டாவது கிண்ணத்தில் (கண்ணீர் உள்ளது) இருப்பவற்றை குடிப்பவர்க்கு, முதல் கிண்ணத்தில் இருக்கும் (தண்ணீர் உள்ளது) குடிப்பவறது மீதி ஆயுளும் கிடைக்கும். படத்தின் இறுதியில் நாயகியும் அவருடைய அப்பாவும், இருவருமே சாகும் தருவாயில் இருப்பார்கள். அப்போது அவர்களில் இருவரில் ஒருவர் தான் இரண்டாவது கிண்ணத்தில் உள்ளதை குடித்து உயிரோடு இருக்க முடியும். கடைசியில் யார் தன் உயிரை விட்டு கொடுத்தார்கள் என்பது தான் கதை.
அது போல ஒரு சமயத்தில் கனிமொழியும் கருணாநிதியும் இருந்தால் என்ன செய்வார்கள். யார் விட்டு கொடுப்பார்கள்?
ஒரு க்ளு. தற்போது உள்ள நிலைமையில் ஒருவர் மட்டுமே தன் உயிரை தியாகம் செய்ய முன் வருவார்.
அவர் யார்?
ஒரு நாள் தொலைக்காட்சியில் "மதராசப்பட்டினம்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதில் வயதான நாயகி, நாயகனின் கல்லறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அப்போது தன் பேத்தி வந்து அவரது தோளை தொட அப்படியே சரிந்து விழுவார். அவசர அவசரமாய் ஹாஸ்பிட்டல் எடுத்து செல்வார்கள். பரிசோதித்த டாக்டர் சொல்லுவார் "அவர் இறந்து 20 நிமிடம் ஆகிறது". உடனே அடுத்த காட்சியில் சொர்க்கத்தில் இருக்கும் நாயகனோடு நாயகி ஓடி சென்று கட்டி பிடிப்பார்.
இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?
இன்னுமா பதில் தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கிறீர்கள்?
சொர்க்கத்திற்கு செல்ல 20 நிமிடம் தான் ஆகும்.
இன்னுமா பதில் தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கிறீர்கள்?
சொர்க்கத்திற்கு செல்ல 20 நிமிடம் தான் ஆகும்.
நண்பர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றால் இப்போதெல்லாம் பேச்சுலர் பார்ட்டி ஒன்றை கொடுத்தாக வேண்டும். அப்படிதான் கடந்த வாரம் என் நண்பன் பிரகாஷ் ஒரு ரெஸ்டாரென்ட்டில் டின்னர் பார்ட்டி வைத்தான். நாங்கள் பனிரெண்டு பேருக்கு மேல் இருந்தோம். பொதுவாக கல்லூரி தேர்வில் தெரியாத கேள்வியை கண்டும் காணாமல் பழைய காதலியை போல விட்டுவிடும் நம் மக்கள் மெனு கார்டில் தெரியாத அயிட்டங்கள் அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட அளவிலா ஆர்வம் கொண்டுள்ளனர்.
பக்கத்துக்கு டேபிளில் இரு நவ யுவதிகள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை பெற ஒருவன் தட்டில் ஸ்பூன் வைத்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தான். இன்னொருவன் நாகரிகம் கருதி தந்தூரி சிக்கனை கூட சாப்டாக பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்து ஆறாயிரத்துக்கு மேல் பில் வந்தது. எங்கள் வயிறு நிறைந்தது.
பக்கத்துக்கு டேபிளில் இரு நவ யுவதிகள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை பெற ஒருவன் தட்டில் ஸ்பூன் வைத்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தான். இன்னொருவன் நாகரிகம் கருதி தந்தூரி சிக்கனை கூட சாப்டாக பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்து ஆறாயிரத்துக்கு மேல் பில் வந்தது. எங்கள் வயிறு நிறைந்தது.
"மன்மதன்" சொம்பு நடித்த வானம் படம் தவறுதலாய் பார்க்க நேர்ந்தது. ஹீரோயிச படங்களை விடுத்தது அவர் ஆஸ்கார் அவார்டுக்கு தகுதியான படங்களில் தற்போது தொடர்ந்து அவர் நடித்து வருவதாக மக்கள் ஆரவாரப் படுகிறார்கள். பன்றி சாக்கடை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்தாலும் பன்றிக்கு பெயர் மாறாது. படம், நிறைய சமுதாயப் பிரச்சினைகளை அலசுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கு நடக்கும் வெவ்வேறு பிரச்சனை, அதனால் ஏற்படும் விளைவுகளால் எப்படி பாதிக்கிறார்கள்?
மனிதனுக்கு மட்டுமே பிறந்தவுடனே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்பதை சொல்ல, அனுஷ்கா விபச்சாரி வேடத்தில் நடிப்பதை பார்க்கின்ற மனக்கஷ்டம் ஒன்றே போதுமானது. ஆனால் நம் நடிகர்கள் எப்படி மனநலம் குன்றிய வேடங்களில் நடித்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்களோ, அது போல நடிகைகளும் விபச்சாரி வேடங்களில் உண்மையாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.
என்ன வாழ்க்கைடா இது?
ரத்தச்சரித்திரம் போன்ற படங்களில் சூர்யா நடிக்கும் போது, அந்த கதையின் கேரக்டர் ஆனா தாதாவை நேரில் சந்தித்து அவரிடம் டிப்ஸ் கேட்டு அதன்படி தத்ரூபமாய் நடித்ததாகவும், படம் வெளிவந்த பிறகும் அந்த கேரக்டரில் வாழ்வதாகவும் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுப்பார்கள். அது போல இந்த படத்துக்கும் விபச்சாரிகளை சந்தித்து டிப்ஸ் வாங்கி இருப்பார்களோ? இதைப் பற்றி பேட்டியில் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை? நம் நாட்டில் தாதாவுக்கு இருக்கும் மரியாதை கூட விபச்சாரிக்கு இல்லை என்பது வருத்தமான விஷயம். தாதாவை விட விபச்சாரியாய் இருப்பது கேவலம். கொலை செய்வதை விட விபச்சாரம் செய்வது மிகப் பெரும் குற்றம்.
சாதி மதங்கள் அணிந்து ஏன் மக்கள் அவதிப் படுகிறார்கள்? சாதி, மதம் என்பது ஆடையைப் போல தான். அணிந்தால் வேறுபாடு தெரியும். அவிழ்த்து எறியும் போது தான் நிர்வாணத்தைப் போல அழகாய் இருக்கும்.
பொன்மொழி:
ரேப் செய்பவனை விட ரேப் செய்துவிட்டு கொலை செய்பவன் மிக கொடூரமானவன்.
எவ்வளவு சுயநலம்!!!
4 comments:
///சாதி மதங்கள் அணிந்து ஏன் மக்கள் அவதிப் படுகிறார்கள்? என்னை பொறுத்த வரை மதம் என்பது நாம் சாதி, மதம் என்பது ஆடையைப் போல தான். அணிந்தால் வேறுபாடு தெரியும். அவிழ்த்து எறியும் போது தான் நிர்வாணத்தைப் போல அழகாய் தெரியும்.///
கட்டுங்க..கட்டுங்க உங்க கட்டிடத்தின் அஸ்வாரம் பலமாதான் இருக்கு..
பதிவுகளில் சூடு அதிகம் இருக்கு..!
congrats :)
please let me know the gift that which you are planning to give your 100th follower.
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்
படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/1.html
Excellent ...post...reading all your posts..
Post a Comment