இன்டர்நெட்டில் வழக்கமாய் Torrent டவுன்லோட் செய்து படம் பார்க்கும் வாலிப வயோதிக உள்ளங்களுக்கு ThePirateBay போன்ற Torrent தளங்களையும், Megaupload போன்ற file sharing தளங்களையும், இந்திய அரசு அவ்வப்போது முடக்குவது வருத்தத்தையும் கோபத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது.
கவர்மெண்டின் இந்த செயலால் எரிச்சல் அடையும் சில குழுக்கள் hackers-களாக மாறி, தங்கள் எதிர்ப்பை காண்பிக்க இந்திய கவர்மெண்டின் வெப்சைட்டுகளை தாக்கி செயலிழக்க வைப்பதும் அவ்வப்போது நடக்கிறது.
இதற்கு பின்னால் அமெரிக்காவின் அரசியல் இருக்கிறது என மொக்கை படங்களாய் டவுன்லோட் செய்து பார்க்கும் சங்கம் சந்தேகிக்கிறது.
"டோர்ரன்ட் யுகம் அழியுமா? அழியாதா?" என்ற கேள்வி "2012 இல் உலகம் அழியுமா? அழியாதா?" என்பது போன்ற சம அளவு விவாதத்தை கிளப்பி விட்டு உள்ளன.
டோர்ரன்ட் வருவதுக்கு முன்பு direct download மூலமாக படங்களை டவுன்லோட் செய்வது சிரமமான விசயமாக இருந்தது. ஒரு டவுன்லோட் வெப் சைட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அண்டார்டிகா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல இடங்களில் மொத்தமாய் (1-50) server-கள் இருக்கலாம். அவைகளை mirrors என்றும் சொல்(லு)வார்கள்.
நாம் இதில் ஏதாவது ஒரு Mirror உடன் கனெக்ட் செய்து படங்களையோ, பைல்களையோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். நடுவில் கரண்ட் கட்டாகி விட்டாலோ, தவறுதலாக டவுன்லோட் விண்டோவை மூடி விட்டாலோ திரும்பவும் முதல் byte-இல் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். ஆயிர கணக்கான மக்கள் ஒரு படத்தை டவுன்லோட் செய்யும் போது, அந்த mirror-க்கான இன்டர்நெட் டிராபிக் அதிகரித்து டவுன்லோட் வேகம் குறையும்.
ஆனால் டோர்ரண்டின் விஜயம் இன்டர்நெட் உலகில் பயங்கரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. டோர்ரன்ட் வந்த புதிதில் அதை பற்றி தெரியாததால், அதை பெரிய அப்பாடக்கர் என்று நினைத்து அதை நிறைய பேர் வெகு நாள் பயன்படுத்தாமலே இருந்தனர். ஒரு பெரிய Size பைலை டவுன்லோட் செய்ய டோர்ரன்ட் முறையே சிறந்தது. இதற்கென ஒரு server (mirror) தேவை இல்லை.
ரெகுலராய் படம் டவுன்லோட் செய்யும் 99% மக்களுக்கு, டோர்ரன்ட் எப்படி இயங்குகிறது என்று தெரியலாம் (??). தெரியாத அந்த 1% பேருக்காக, இது.
டோர்ரன்ட்டின் டெக்னாலஜி அதி அற்புதமானது. விஸ்வரூபம் படம் ஜக்குபாயை போல தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே அதன் திருட்டு DVD வந்து விட்டது என வைத்துக் கொள்வோம். X என்ற ஒருவன் அந்த வீடியோவை வைத்து ஒரு torrent File ஒன்றை Create செய்து, அதை thepiratbay, extratorrent போன்ற டோர்ரன்ட் தளங்களில் upload செய்கிறான். அந்த டோர்ரன்ட் file-ன் size, 100kb-க்குள் தான் இருக்கும். நீங்கள் அந்த டோர்ரன்ட் File-யை டவுன்லோட் செய்து, டோர்ரன்ட் சாப்ட்வேரின் மூலமாக அந்த X-யின் கம்ப்யூட்டரில் இருந்து அந்த படங்களை டவுன்லோட் செய்யலாம்.
அந்த குறிப்பிட்ட வீடியோ 700MB size எனவும், ஒரு பத்து பேர் (A-J) அந்த டோர்ரன்ட் பைலை டவுன்லோட் செய்து X-இன் கம்ப்யூட்டரில் இருந்து படத்தை டவுன்லோட் செய்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்வோம். டோர்ரன்ட் சாப்ட்வேர் அந்த 700MB data-வை 2MB, 2MB-களாக மொத்தமாய் 350 piece-களாக பிரித்து கொடுக்கும். டோர்ரன்ட் சாப்ட்வேரை பொறுத்து ஒரு piece-ன் அளவு 512kb, 1MB என மாறுபடும்.
டோர்ரன்ட் சாப்ட்வேர், இதில் 350 piece-யையும் வரிசையாக டவுன்லோட் செய்யும் என்ற அவசியம் இல்லை. Random-மாக எந்த வரிசையில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யும். 249-வது piece-யை முதன் முதலில் டவுன்லோட் செய்து விட்டு, அடுத்து 11-வது piece-யை இரண்டாவதாக கூட டவுன்லோட் செய்யும். அதே சமயம் அந்த பத்து பேரும் அனைத்து 350 piece-யையும் அந்த X-யிடமிருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
A என்ற ஆள் 11-லிருந்து 50 வரையிலான piece களை ஏற்கனவே X-யிடமிருந்து டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார் என்றால், B என்ற ஆள் 11-லிருந்து 50 வரையிலான piece-களை A-யிடமிருந்தே டவுன்லோட் செய்யலாம். C என்ற ஆள், B-யிடமிருந்து piece-களை டவுன்லோட் செய்யலாம். B-யிடமிருந்து சில piece-களை A டவுன்லோட் செய்யலாம். கிட்ட தட்ட ஒரு orgy பார்ட்டியை போல, சீடரையும் (seeders), லீச்சரையும்(leecher) ரேண்டமாக பிக் செய்து கொள்ளும். இப்படியே அந்த பத்து பேரும் தங்களுக்குள் மாற்றி மாற்றி டவுன்லோட் செய்து கொள்வார்கள். இதனால் ஒரே மெசினுக்கு வரும் இன்டர்நெட் டிராபிக் ஏற்படாமல் தடுக்கப்படும்.
350 piece-களையும் டவுன்லோட் செய்த பின் உங்களது டவுன்லோட் முழுமையடையும். இதை அடிக்கடி pause செய்தும் டவுன்லோட் செய்யலாம் என்பதும் இதன் சிறப்பு.
ஒவ்வொரு டோர்ரன்ட்டுக்கும் Seeds, Peers என்று உண்டு. 350 piece-களையும் டவுன்லோட் செய்து முடித்து விட்டால் நீங்கள் seeder எனப் படுவீர்கள். 348 piece-களை டவுன்லோட் செய்து விட்டு, இன்னும் இரண்டை டவுன்லோட் செய்யாமல் இருந்தாலும், You are still a Peer (or Leecher).
உங்களின் டோர்ரன்ட் சாப்ட்வேர் ஐ.ஐ.டி மாணவனின் seeds தான் வேண்டுமென அடம் பிடிக்காமல், குப்பன் சுப்பன் என யாரிடம் இருந்து வேண்டுமானாலும் seeds-களை பாரபட்சம் இல்லாமல் பெற்று கொள்ளும். ஒரு டோர்ரன்ட்டை டவுன்லோட் செய்யும் போது கண்டிப்பாய் seeds-களின் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். அது குறைந்தபட்சம் ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்டதாய் இருந்தால் அதை நீங்கள் தாராளமாய் டவுன்லோட் செய்யலாம்.
ஒன்று அல்லது இரண்டு seeds-கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அந்த இருவருமே எப்போது வேண்டுமானாலும் seeding option-யை நிறுத்தி விடவோ, தங்கள் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு மாமியார் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்று விடவோ நேரிடலாம். அதனால் உங்கள் டவுன்லோடும் அரைகுறையாய் பாதியிலேயே, கட்டி முடிக்கப் படாமல் விடப்பட்ட பில்டிங்கை போல நின்று விடும்.
சில பழைய படங்களின் டோர்ரண்டுகள் 5 peers-களுடன் இருந்தாலும் 0 seeds-களுடன் இருக்கும். அதை முழுதாய் டவுன்லோட் செய்ய முடியாது. இது தான் இதன் மிக பெரிய மைனஸ். இல்லையெனில், அந்த டோர்ரண்டை அப்லோட் செய்தவருக்கு Request செய்து அவரை மீண்டும் seed செய்ய சொல்ல வேண்டும். அவருக்கு மனம் இருந்தால் உங்களுக்கு மார்க்கம் உண்டு.
மிக குறைந்த seeds-கள் இருந்து, அதிக எண்ணிக்கையிலான peers-கள் (50-100) இருந்தால் கூட, நீங்கள் முழு படத்தையும் டவுன்லோட் செய்ய வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அந்த 350 piece-களும் அந்த (50-100) பேர்களிடம் தனி தனியாய் இருந்தால், மற்ற peers-கள் தங்களுக்குள் மாறி மாறி டவுன்லோட் செய்து முழு படத்தையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
எனவே நீங்கள் எந்த ஒரு படத்தை டவுன்லோட் செய்தாலும், அந்த டோர்ரன்ட்டை உடனடியாக Delete செய்யாமல், கொஞ்ச நாளாவது seed செய்ய வேண்டும். அது தான் டோர்ரன்ட் "தர்மம்". ஆனால் நீங்கள் இந்தியாவில் இருக்கும் பட்சத்தில், இந்த "கூட்டணி தர்மத்தை" எல்லாம் கடை பிடிப்பது சாத்தியம் ஆகாமல் போகலாம். ஏனென்றால் இந்தியாவில் Unlimited இன்டர்நெட் கனெக்சன் வைத்திருந்தாலும், ஒரு மாதத்திற்கு அப்லோட் மற்றும் டவுன்லோட் இரண்டும் சேர்த்து maximum (40-60) GB மட்டுமே பயன் படுத்த முடியும். அதனால் பல சமயங்களில் சுயநலத்துடனே நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே உங்களது upload மற்றும் download வேகத்தை நீங்கள் மாற்றி கொள்ளலாம். சில சமயம் download-யை விட upload அதி வேகத்தில் நடக்கும். அதனால் உங்களது monthly quota சீக்கிரம் தீர்ந்து விடும். அது உங்களுக்கு பிரச்சினை தான். அதனால் நீங்கள் உங்களது upload வேகத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் 5kbps/s அளவுக்கு upload வேகத்தை மிகவும் குறைத்து விட்டால், உங்களது download rate குறைய வாய்ப்புண்டு. average upload/download ratio என்று ஒன்று உள்ளது. அதை maintain செய்தால் நலம்.
Asia Torrents (AvistaZ ) என்ற சைட்டில் கொரியன், ஜப்பானீஸ் உட்பட அனைத்து ஆசியன் படங்கள் மற்றும் டிராமாக்களை டவுன்லோட் செய்யலாம். ஆனால் இரண்டு பிரச்சினைகள் இருக்கிறது. நீங்கள் இந்த தளத்தில் register செய்ய வேண்டும். அடுத்து 1:1 என்ற டவுன்லோட் மற்றும் அப்லோட் Ratio-வை maintain செய்ய வேண்டும். அதாவது 100 MB-யை டவுன்லோட் செய்தால், 100 MB-யை அப்லோட் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் அக்கௌன்ட்டை block செய்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரிடம் (seeders) கொடுப்பதற்கு நிறைய seed-கள் இருக்கும். ஆனால் அதை வாங்க தான் ஆட்கள் (Peers) இருக்க மாட்டார்கள். கிட்டதட்ட இந்திய இளைஞர்களை போல.
பொதுவாக டோர்ரன்ட் தளங்கள் pirated சாப்ட்வேர்கள் மற்றும் pirated படங்களின் சொர்க்கபுரியாக விளங்குகின்றன. ThePirateBay என்ற தளத்தின் முகவரி இதன் நேரடி அர்த்தம் படும் படியாகவே வைக்கப் பட்டுள்ளது. இதனால் மொக்கையாய் படமெடுத்து வெளியிடும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் வசூல் பாதிப்பதாய் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த மொக்கை படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நான் கடைசியாய் பார்த்த பத்து படங்களில் பெருமளவு மொக்கையே!
அதனால் டாலர் கணக்கில் செலவழித்து மொக்கை படங்களை பார்ப்பதற்கு மக்கள் எப்போதும் விரும்ப மாட்டார்கள். டோர்ரன்ட்டை அழிப்பது கொஞ்சம் கடினம்.
ஒரு வேளை டோர்ரன்ட் யுகம் இறந்து விட்டால், இந்த பதிவு டோர்ரன்ட்டின் சிறப்பை பற்றி பேசும் எனது அஞ்சலியாக இருக்கும். டோர்ரன்ட்டை அழித்தாலும், வேறு ஒரு மாற்று வழி உருவாக்கப்படும் என்பதில் மாற்றமில்லை.
பின் குறிப்பு: Megaupload, Rapidshare போன்ற file sharing தளங்களை பற்றி இங்கு குறிப்பிட வில்லை.