Sep 2, 2008

காதலி சொல் மிக்க மந்திரம் இல்லை



அம்மா அப்பா
அக்கா தங்கை
என யார் திட்டியும்,
என் நகக்கண் சிவந்தும்,
நகம் கடித்தலை விடாத என் பற்கள்
நீ சொல்ல நிறுத்தி விட்டது
தன்னை தானே கடித்(ந்)துக் கொண்டு.





Aug 19, 2008

என்று வெல்வேன்??



அழகிய புருவம்
ஆனது வில்லாய்.
அசைகின்ற விழிகள்
அம்புகள் கிடங்கு.

நீ அடிக்கடி தொடுக்கும்
பார்வை அம்புகளின்
ஈர்ப்பு விசைகள்
என் இதயத்தை நோக்கி.

பதினெட்டு முறைக்கு மேல் தோற்றுவிட்டேன்
இருந்தும் தென்படவில்லை
கஜினி முகம்மது கண்ட சிலந்திப் பூச்சி.




Aug 18, 2008

மழை


 வெயில் சுடுகின்றதாம்!
அழுகின்றன மேகங்கள்.





பெயர் சூட்டு விழா


 

இது தான் கடைசி வார்த்தை
நான் உன்னுடன் பேசுவது,
என்று சொல்லும் நான்
என்னை அறியாமல் நடத்துகிறேன்
என்னோடு பேசும் எவருக்கும்
உன் பெயரை சூட்டும் விழா.