Jul 6, 2012

Banana Phone - ஆபாயில்



தற்காலத்து மாடர்ன் டெக்னாலஜி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பணம் மற்றும் அறிவு திறனோடு, நம்முடைய சொம்பேறிதனத்தையே அதிக மூலதனமாக கொண்டு, நமக்கான advanced பொருட்களை தயாரிப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. இப்போது மார்க்கெட்டில் புதிது புதிதாய் வெளிவரும் இந்த Smart Phone-கள் உங்களை ஸ்மார்ட் ஆக மாற்றுகிறது என நம்பினால்...கஷ்டம்.

பஸ் ஸ்டாண்ட், ட்ரெயின் ஸ்டேசன் என பார்க்கும் இடங்களில் எல்லாம் பொடி பையன்கள் பெரிது பெரிதாய் ஆளுக்கொரு ஸ்மார்ட் Phone வாங்கி கொண்டு Facebook-ல் Stalking செய்வது, YouTube-ல் வீடியோ பார்ப்பது என 70mm படம் காட்டுகிறார்கள். அந்த போனை காதில் வைத்துக் கொண்டு அவர்கள் பேசினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பேசுபவரின் முகமே தெரியாது. போனை விலக்கி தான் பார்க்க வேண்டும். வீட்டிற்கு தெரியாமல் காதலனுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கும் பெண்கள், தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் இருக்க, இந்த போனை பயன்படுத்தி முகத்தை மறைத்து கொண்டு தப்பித்து கொள்கிறார்கள்.

இந்த போனில், கேர்ள் பிரெண்டுக்கு மெசேஜ் அனுப்புவது, வெள்ளிகிழமை மட்டும் ஆபிசுக்கு நேரமாய் செல்ல அலாரம் செட் பண்ணுவது, அம்மாவிடம் பேச கால் போட்டு தருவது, அருகில் இருக்கும் பியூட்டி பார்லரின் அட்ரஸ்ஸை தேடி தருவது என அனைத்திற்கும் Voice command தான். மொத்தத்தில் நீங்கள் வாயை திறந்தால் போதும், வாழை பழத்தை உரித்து உள்ளே சொருகி விடும். இதற்கு Banana Phone என்றே பெயரிட்டிருக்கிலாம்.

ஒருமுறை என் நண்பனின் ஸ்மார்ட் போனை வாங்கி பார்த்து கொண்டிருந்தேன். போனை டச் செய்தவுடன், அதன் "முன் கேமரா" ஆன் ஆகி, என் முகத்தை படம் பிடித்து ஸ்கேன் செய்து, நான் அதனின் owner இல்லை என்று "கரெக்ட்டாய்" கண்டுபிடித்தவுடன், passcode-யை டைப் பண்ண சொல்லி கேட்டது. வாவ்! என்ன ஒரு வசதி!

இந்த face unlock வசதியுள்ள ஸ்மார்ட் போன், வழக்கு எண் படத்தில் வரும் அந்த பணக்கார டீன் ஏஜ் பையனிடம் இருந்திருந்தால் அவன் அந்த ஸ்கூல் பெண்ணிடம் மாட்டியிருக்க மாட்டான். ஸ்மார்ட்டாக "வேலை" செய்திருப்பான்.

இதில் பெண்களுக்கு 'தான்' இந்த banana -வின் மீது, அதிக இஷ்டம்.

இதில் எதற்க்கெடுத்தாலும் App தான். App இல்லாமல் நீங்கள் உயிர் வாழவே முடியாது. இனி A for App தான். Apple இல்லை. டெக்னாலஜி வாழ்க்கையை மட்டுமல்ல வார்த்தையையும் சுருக்குகிறது.

இன்னும் சில வருடங்களில் ஐபோனின் Siri-யும், சாம்சங்கின் s2 voice-யும், உங்களுக்கு கடினமாக தோன்றும் வேலைகளை சுலபமாக செய்து கொடுத்து விடும்.





ஜப்பானில் வசிக்கும் பனானா சோம்பேறியை பற்றிய ஒரு பழைய 'எ' ஜோக் உள்ளது. (ஜப்பான் மக்கள் எல்லோரும் சுறுசுறுப்புடன் தானே இருப்பார்கள்? என்று கேள்வி கேட்டால் "சகுனி" படத்தை பார்த்து ரசிக்க அதன் DVD Rip-யை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்)

அவனும் அவன் காதலியும் செக்ஸ் செய்வதற்காக உடைகளை கழட்டி விட்டு கட்டிலில் படுத்து விடுவார்கள். அவன் தன் உறுப்பை, அவள் உறுப்புக்குள் உள்ளே நுழைத்து விட்டு காத்திருப்பான். சிறிது நேரத்தில் கடுப்பான காதலி "ஏன் காத்திருக்கிறீர்கள் அன்பே?" என்று கேட்பாள்.

அதற்கு அவன் "வெயிட் டார்லிங், இன்னும் கொஞ்ச நேரத்தில் பூகம்பம் வந்து விடும்" என்பான்.

அது போல இந்த டெக்னாலஜிகள், செயற்கை புவி அதிர்ச்சியை உண்டாக்கும் அளவிற்கு செல்லாமல் இருந்தால் சரி.

Wise people creates smart phone for stupid people.




ட்ராபிக் ரூல்ஸை சட்டை செய்யாமல் மீறுபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனென்றால் அது நம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் DNA-விலும் ஊறிய பழக்கம்.

ஆனால் சில பேர் ரோட்டில் சட்டையே போடாமல் காற்றில் அக்குள் முடி பறக்க, பல்சர் மற்றும் அப்பாச்சி வண்டிகளில் பறக்கின்றனர். சட்டத்தை மதிக்கவில்லை என்ற போதிலும், "சட்டையை"யாவது மதிக்கலாம் இல்லையா?

இன்னும் சிலர் ஏழாம் அறிவு "போதிதர்மாவை" போல ஒரு சிறிய துண்டை மட்டும் மேலே அணிந்து கொண்டு செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டம் போட்டவுடன், ஊர்ப்புறங்களில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுபவர்களை பிடித்த ட்ராபிக் போலீசுகள், பைனை காட்டுகிறாயா? இல்லை இப்பவே காசு கொடுத்து புதிய ஹெல்மெட் வாங்கி கொள்கிறாயா? என கேட்டு மக்களிடம் ஹெல்மெட்டை விற்று போட வைத்தார்கள்.

அதுபோல, ரோட்டில் சட்டையே போடாமல் செல்லும் "அவாளை" பிடித்து Public Distraction செய்ததற்காக பைன் போட வேண்டும் அல்லது அப்போதே அவர்களிடம் காசை பிடுங்கி கொண்டு புதுசாய் ஒரு சொக்காய் மாட்டி விட வேண்டும் என்பதுதான் என் "அவா".



யாரும் பின் வரும் லிங்கை கிளிக் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். இந்த Topic -க்கு சம்பந்தமாய் ஒரு இமேஜ் போட்டு இந்த பதிவை நிரப்பலாம் என "half naked bike riding" என்று கூகுளில் தேடினால் கலை நயத்துடன் கூடிய படங்கள் தான் வருகிறது. அதை போட்டால் தமிழ் நாட்டு பசுக்கள் மற்றும் காளையர்களின் "கற்ற்ற்ப்பு" கெட்டு விடும் என்ற காரணத்தினால் அதை போடவில்லை.

வெளிநாட்டுக்காரர்கள் போராட்டம் செய்யத்தான் half naked ஆகவும் full naked ஆகவும் bike riding செய்கிறார்கள். 

ஆனால் நம்மாள் எதற்கு போராடுகிறான்?



மொக்கை கார்னர்:

I had my hands on my pockets. She asked,

"What do you have in your pockets?"

"God Particle" I answered and smiled at her.

"Oh! then, what did physicists find last week?" she asked with a surprised look.

quickly I said,

"They found a wrong one."





Jun 25, 2012

என்னுயிர் Torrent டே!


இன்டர்நெட்டில் வழக்கமாய் Torrent டவுன்லோட் செய்து படம் பார்க்கும் வாலிப வயோதிக உள்ளங்களுக்கு ThePirateBay போன்ற Torrent தளங்களையும், Megaupload போன்ற file sharing தளங்களையும், இந்திய அரசு அவ்வப்போது முடக்குவது வருத்தத்தையும் கோபத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது. 

கவர்மெண்டின் இந்த செயலால் எரிச்சல் அடையும் சில குழுக்கள் hackers-களாக மாறி, தங்கள் எதிர்ப்பை காண்பிக்க இந்திய கவர்மெண்டின் வெப்சைட்டுகளை தாக்கி செயலிழக்க வைப்பதும் அவ்வப்போது நடக்கிறது.

இதற்கு பின்னால் அமெரிக்காவின் அரசியல் இருக்கிறது என மொக்கை படங்களாய் டவுன்லோட் செய்து பார்க்கும் சங்கம் சந்தேகிக்கிறது. 

"டோர்ரன்ட் யுகம் அழியுமா? அழியாதா?" என்ற கேள்வி "2012 இல் உலகம் அழியுமா? அழியாதா?" என்பது போன்ற சம அளவு விவாதத்தை கிளப்பி விட்டு உள்ளன. 

டோர்ரன்ட் வருவதுக்கு முன்பு direct download மூலமாக படங்களை டவுன்லோட் செய்வது சிரமமான விசயமாக இருந்தது. ஒரு டவுன்லோட் வெப் சைட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அண்டார்டிகா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல இடங்களில் மொத்தமாய் (1-50) server-கள் இருக்கலாம். அவைகளை mirrors என்றும் சொல்(லு)வார்கள். 

நாம் இதில் ஏதாவது ஒரு Mirror உடன் கனெக்ட் செய்து படங்களையோ, பைல்களையோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். நடுவில் கரண்ட் கட்டாகி விட்டாலோ, தவறுதலாக டவுன்லோட் விண்டோவை மூடி விட்டாலோ திரும்பவும் முதல் byte-இல் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். ஆயிர கணக்கான மக்கள் ஒரு படத்தை டவுன்லோட் செய்யும் போது, அந்த mirror-க்கான இன்டர்நெட் டிராபிக் அதிகரித்து டவுன்லோட் வேகம் குறையும். 

ஆனால் டோர்ரண்டின் விஜயம் இன்டர்நெட் உலகில் பயங்கரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. டோர்ரன்ட் வந்த புதிதில் அதை பற்றி தெரியாததால், அதை பெரிய அப்பாடக்கர் என்று நினைத்து அதை நிறைய பேர் வெகு நாள் பயன்படுத்தாமலே இருந்தனர். ஒரு பெரிய Size பைலை டவுன்லோட் செய்ய டோர்ரன்ட் முறையே சிறந்தது. இதற்கென ஒரு server (mirror) தேவை இல்லை.
 
ரெகுலராய் படம் டவுன்லோட் செய்யும் 99% மக்களுக்கு, டோர்ரன்ட் எப்படி இயங்குகிறது என்று தெரியலாம் (??). தெரியாத அந்த 1% பேருக்காக, இது.

டோர்ரன்ட்டின் டெக்னாலஜி அதி அற்புதமானது. விஸ்வரூபம் படம் ஜக்குபாயை போல தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே அதன் திருட்டு DVD வந்து விட்டது என வைத்துக் கொள்வோம். X என்ற ஒருவன் அந்த வீடியோவை வைத்து ஒரு torrent File ஒன்றை Create செய்து, அதை thepiratbay, extratorrent போன்ற டோர்ரன்ட் தளங்களில் upload செய்கிறான். அந்த டோர்ரன்ட் file-ன் size, 100kb-க்குள் தான் இருக்கும். நீங்கள் அந்த டோர்ரன்ட் File-யை டவுன்லோட் செய்து, டோர்ரன்ட் சாப்ட்வேரின் மூலமாக அந்த X-யின் கம்ப்யூட்டரில் இருந்து அந்த படங்களை டவுன்லோட் செய்யலாம்.

அந்த குறிப்பிட்ட வீடியோ 700MB size எனவும், ஒரு பத்து பேர் (A-J) அந்த டோர்ரன்ட் பைலை டவுன்லோட் செய்து X-இன் கம்ப்யூட்டரில் இருந்து படத்தை டவுன்லோட் செய்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்வோம். டோர்ரன்ட் சாப்ட்வேர் அந்த 700MB data-வை 2MB, 2MB-களாக மொத்தமாய் 350 piece-களாக பிரித்து கொடுக்கும். டோர்ரன்ட் சாப்ட்வேரை பொறுத்து ஒரு piece-ன் அளவு 512kb, 1MB என மாறுபடும்.

டோர்ரன்ட் சாப்ட்வேர், இதில் 350 piece-யையும் வரிசையாக டவுன்லோட் செய்யும் என்ற அவசியம் இல்லை. Random-மாக எந்த வரிசையில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யும். 249-வது piece-யை முதன் முதலில் டவுன்லோட் செய்து விட்டு, அடுத்து 11-வது piece-யை இரண்டாவதாக கூட டவுன்லோட் செய்யும். அதே சமயம் அந்த பத்து பேரும் அனைத்து 350 piece-யையும் அந்த X-யிடமிருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

A என்ற ஆள் 11-லிருந்து 50 வரையிலான piece களை ஏற்கனவே X-யிடமிருந்து டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார் என்றால், B என்ற ஆள் 11-லிருந்து 50 வரையிலான piece-களை A-யிடமிருந்தே டவுன்லோட் செய்யலாம். C என்ற ஆள், B-யிடமிருந்து piece-களை டவுன்லோட் செய்யலாம். B-யிடமிருந்து சில piece-களை A டவுன்லோட் செய்யலாம். கிட்ட தட்ட ஒரு orgy பார்ட்டியை போல, சீடரையும் (seeders), லீச்சரையும்(leecher) ரேண்டமாக பிக் செய்து கொள்ளும். இப்படியே அந்த பத்து பேரும் தங்களுக்குள் மாற்றி மாற்றி டவுன்லோட் செய்து கொள்வார்கள். இதனால் ஒரே மெசினுக்கு வரும் இன்டர்நெட் டிராபிக் ஏற்படாமல் தடுக்கப்படும். 

350 piece-களையும் டவுன்லோட் செய்த பின் உங்களது டவுன்லோட் முழுமையடையும். இதை அடிக்கடி pause செய்தும் டவுன்லோட் செய்யலாம் என்பதும் இதன் சிறப்பு.



ஒவ்வொரு டோர்ரன்ட்டுக்கும் Seeds, Peers என்று உண்டு. 350 piece-களையும் டவுன்லோட் செய்து முடித்து விட்டால் நீங்கள் seeder எனப் படுவீர்கள். 348 piece-களை டவுன்லோட் செய்து விட்டு, இன்னும் இரண்டை டவுன்லோட் செய்யாமல் இருந்தாலும், You are still a Peer (or Leecher)

உங்களின் டோர்ரன்ட் சாப்ட்வேர் ஐ.ஐ.டி மாணவனின் seeds தான் வேண்டுமென அடம் பிடிக்காமல், குப்பன் சுப்பன் என யாரிடம் இருந்து வேண்டுமானாலும் seeds-களை பாரபட்சம் இல்லாமல் பெற்று கொள்ளும். ஒரு டோர்ரன்ட்டை டவுன்லோட் செய்யும் போது கண்டிப்பாய் seeds-களின் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். அது குறைந்தபட்சம் ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்டதாய் இருந்தால் அதை நீங்கள் தாராளமாய் டவுன்லோட் செய்யலாம். 

ஒன்று அல்லது இரண்டு seeds-கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அந்த இருவருமே எப்போது வேண்டுமானாலும் seeding option-யை நிறுத்தி விடவோ, தங்கள் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு மாமியார் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்று விடவோ நேரிடலாம். அதனால் உங்கள் டவுன்லோடும் அரைகுறையாய் பாதியிலேயே, கட்டி முடிக்கப் படாமல் விடப்பட்ட பில்டிங்கை போல நின்று விடும். 

சில பழைய படங்களின் டோர்ரண்டுகள் 5 peers-களுடன் இருந்தாலும் 0 seeds-களுடன் இருக்கும். அதை முழுதாய் டவுன்லோட் செய்ய முடியாது. இது தான் இதன் மிக பெரிய மைனஸ். இல்லையெனில், அந்த டோர்ரண்டை அப்லோட் செய்தவருக்கு Request செய்து அவரை மீண்டும் seed செய்ய சொல்ல வேண்டும். அவருக்கு மனம் இருந்தால் உங்களுக்கு மார்க்கம் உண்டு.

மிக குறைந்த seeds-கள் இருந்து, அதிக எண்ணிக்கையிலான peers-கள் (50-100) இருந்தால் கூட, நீங்கள் முழு படத்தையும் டவுன்லோட் செய்ய வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அந்த 350 piece-களும் அந்த (50-100) பேர்களிடம் தனி தனியாய் இருந்தால், மற்ற peers-கள் தங்களுக்குள் மாறி மாறி டவுன்லோட் செய்து முழு படத்தையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

எனவே நீங்கள் எந்த ஒரு படத்தை டவுன்லோட் செய்தாலும், அந்த டோர்ரன்ட்டை உடனடியாக Delete செய்யாமல், கொஞ்ச நாளாவது seed செய்ய வேண்டும். அது தான் டோர்ரன்ட் "தர்மம்". ஆனால் நீங்கள் இந்தியாவில் இருக்கும் பட்சத்தில், இந்த "கூட்டணி தர்மத்தை" எல்லாம் கடை பிடிப்பது சாத்தியம் ஆகாமல் போகலாம். ஏனென்றால் இந்தியாவில் Unlimited இன்டர்நெட் கனெக்சன் வைத்திருந்தாலும், ஒரு மாதத்திற்கு அப்லோட் மற்றும் டவுன்லோட் இரண்டும் சேர்த்து maximum (40-60) GB மட்டுமே பயன் படுத்த முடியும். அதனால் பல சமயங்களில் சுயநலத்துடனே நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே உங்களது upload மற்றும் download வேகத்தை நீங்கள் மாற்றி கொள்ளலாம். சில சமயம் download-யை விட upload அதி வேகத்தில் நடக்கும். அதனால் உங்களது monthly quota சீக்கிரம் தீர்ந்து விடும். அது உங்களுக்கு பிரச்சினை தான். அதனால் நீங்கள் உங்களது upload வேகத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் 5kbps/s அளவுக்கு upload வேகத்தை மிகவும் குறைத்து விட்டால், உங்களது download rate குறைய வாய்ப்புண்டு. average upload/download ratio என்று ஒன்று உள்ளது. அதை maintain செய்தால் நலம். 

Asia Torrents (AvistaZ ) என்ற சைட்டில் கொரியன், ஜப்பானீஸ் உட்பட அனைத்து ஆசியன் படங்கள் மற்றும் டிராமாக்களை டவுன்லோட் செய்யலாம். ஆனால் இரண்டு பிரச்சினைகள் இருக்கிறது. நீங்கள் இந்த தளத்தில் register செய்ய வேண்டும். அடுத்து 1:1 என்ற டவுன்லோட் மற்றும் அப்லோட் Ratio-வை maintain செய்ய வேண்டும். அதாவது 100 MB-யை டவுன்லோட் செய்தால், 100 MB-யை அப்லோட் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் அக்கௌன்ட்டை block செய்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரிடம் (seeders) கொடுப்பதற்கு நிறைய seed-கள் இருக்கும். ஆனால் அதை வாங்க தான் ஆட்கள் (Peers) இருக்க மாட்டார்கள். கிட்டதட்ட இந்திய இளைஞர்களை போல.

பொதுவாக டோர்ரன்ட் தளங்கள் pirated சாப்ட்வேர்கள் மற்றும் pirated படங்களின் சொர்க்கபுரியாக விளங்குகின்றன. ThePirateBay என்ற தளத்தின் முகவரி இதன் நேரடி அர்த்தம் படும் படியாகவே வைக்கப் பட்டுள்ளது. இதனால் மொக்கையாய் படமெடுத்து வெளியிடும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் வசூல் பாதிப்பதாய் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த மொக்கை படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நான் கடைசியாய் பார்த்த பத்து படங்களில் பெருமளவு மொக்கையே!

அதனால் டாலர் கணக்கில் செலவழித்து மொக்கை படங்களை பார்ப்பதற்கு மக்கள் எப்போதும் விரும்ப மாட்டார்கள். டோர்ரன்ட்டை அழிப்பது கொஞ்சம் கடினம்.

ஒரு வேளை டோர்ரன்ட் யுகம் இறந்து விட்டால், இந்த பதிவு டோர்ரன்ட்டின் சிறப்பை பற்றி பேசும் எனது அஞ்சலியாக இருக்கும். டோர்ரன்ட்டை அழித்தாலும், வேறு ஒரு மாற்று வழி உருவாக்கப்படும் என்பதில் மாற்றமில்லை.


பின் குறிப்பு: Megaupload, Rapidshare போன்ற file sharing தளங்களை பற்றி இங்கு குறிப்பிட வில்லை.


May 15, 2012

நேர்மை ஜாமீனில் வந்தது.


                             பட உதவி: Faking News

நேர்மைக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால்,


"இனி தர்மம் வெல்லும்."


என எதிர்பார்க்கப் படுகிறது.

இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என நாணயம் நாளை அறிக்கை வெளியிடும். 

ன்னியத்திற்கு(கனி) விரைவாக கிடைத்த ஜாமீன், நேர்மைக்கு லேட்டாக கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைத்துள்ளது என்பது திருவிழாவை போல இனிப்பு வெட்டி சந்தோசமாக கொண்டாட வேண்டிய விஷயம்.

இந்த திருவிழாவையொட்டி கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் நடந்து கொண்டிருக்கும் சகோதர யுத்தம், சிறிது நாளைக்கு நிறுத்தி வைக்கப்படும்.


கோர்ட் நேர்மைக்கு விதித்த நிபந்தனைகள்:

நேர்மை தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
நேர்மை எங்கும் ஓடி விடக் கூடாது என்பதால் 20 லட்ச ரூபாயை பிணைய தொகையாக ஒப்படைக்க வேண்டும். (நேர்மையிடம் அவ்வளவு பணம் இருக்குமா?)
நேர்மை டில்லியில் தங்கியிருக்க வேண்டும்.
நேர்மை சென்னைக்கு செல்ல கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்.

இனி நேர்மையை டில்லியில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஆகவே, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சென்னையில் ஆட்டோகாரர்களிடம் நேர்மையை எதிர்பார்க்காதிர்கள்!





May 10, 2012

கமெண்ட் எட்டிகுட்


"What is எட்டிகுட்?" என்று Confuse ஆகாதீர்கள். 

"Etiquette" என்பதை தமிழில் எழுதியுள்ளேன். Etiquette என்றால் தமிழில் "பண்பாடு", "நாகரிகம்", "வரைமுறை" என்றெல்லாம் சொல்லலாம்.

நம்மாட்கள் கூகுளின் Tamil Transliteration -யை ஓவராக பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் உள்ள Internet, Bus என்பவற்றை இன்டர்நெட், பஸ் என்று எழுதுவதில் தப்பில்லை. ஏனென்றால் இன்டர்நெட் என்றால் என்னவென்று, காமன்மேனுக்கு தெரியும். அட "காமன்மேன்"ன்னா கமல் இல்லப்பா! 
ஆனால் அவர்களிடம் இன்டர்நெட் என்பதற்கு தமிழில் என்ன என்று கேட்டால், "பேந்த பேந்த" முழிப்பார்கள்.

அதிகமாய் வழக்கத்தில் இல்லாத, உதாரணத்திற்கு "Flirt" என்பதை அப்படியே transliterate செய்து "ப்ளிர்ட்" என்று எழுதுவார்கள். படிக்கும் போது, டர்ச்சு ஆகி விடும். நமக்கு தெரிந்த அரைகுறை இங்கிலீசுக்கும் ஆப்பு. அவர்களுக்கு தமிழின் மீது உண்மையான பற்றா? இல்லை அவர்கள் தி.மு.க பீரங்கியா? அதை அப்படியே "Flirt" என்று எழுதினாலாவது, ஆன்லைன் டிக்ஸ்னரியை பார்த்து அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் முழுவதையும் தமிழில் translate செய்து எழுதுங்கள்.

போன ஆட்சியில் தி.மு.க தலைவர் கடைகளின் பெயரை எல்லாம் தமிழில் எழுத வேண்டும் என்று அசிங்கமான சட்டம் போட்டவுடன் எல்லோரும் அதை கஷ்டப்பட்டு மாற்றினார்கள். சிலது படிக்கவே பயங்கர காமெடியாய் இருந்தது. சிலது பச்சை தமிழனுக்கே புரியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவை என்னவென்று எனக்கும் மறந்து விட்டது. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம்.

நீங்கள் ஒரு பிளாகர். நீங்கள் இன்னொரு பிளாக்கில் சென்று கமென்ட் எழுதும் போது, எப்படி எழுத வேண்டும்?, எப்படி எழுதக்கூடாது கூடாது? என்பதற்கு சில etiquette இருக்கிறது. அதை எல்லோரும் பின்பற்றினால் blogosphere சுபிட்சமாய் இருக்கும்.

உங்களது ஒரு பதிவுக்கு இரண்டு புதிய கமெண்ட்கள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். 

"அருமையான பதிவு. என்னுடைய வலைப்பூவுக்கும் வந்து பாருங்கள்"

"நீங்கள் சொல்வது முட்டாள்தனமாய் உள்ளது. ஒன்றுமே தெரியாமல் பிதற்றாதிர்கள்"

இரண்டில் எதை மதிப்பீர்கள்?

சந்தேகமே இல்லாமல் அது இரண்டாவது தான். ஏனென்றால் அந்த முதல் ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்தாரா? என்பது சந்தேகம். ஆனால் இரண்டாவது ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்துள்ளான். மேலும் தன்னுடைய ப்ளாகை விளம்பர படுத்த வரவில்லை.

Be Specific:

            ஒரு பதிவை படித்தால் அது உங்களுக்கு பிடித்திருக்கா? இல்லையா? காதலை சொல்வது போல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லுங்கள். அவர் கருத்துக்கு மாறுபடும் பட்சத்தில் எதிர் கருத்துகளை சொல்லுங்கள். அல்லது சிம்பிளாக facebook லைக் செய்து விட்டு போய்விடுங்கள். அதை விடுத்து "அருமை! பகிர்வுக்கு நன்றி!" என்று கமென்ட் போட வேண்டாம். சில பேர் படிக்காமலே வந்து கமென்ட் போடுவார்கள். Indiblogger தளத்தில் கூட இதே கதைதான். இதில் கடுப்பாகிற விஷயம் என்னவென்றால், அவன் ஹிந்தி பிளாக் வைத்துக் கொண்டு தமிழே தெரியாமல், நம்முடையதை "லைக்" செய்வான்.

Don't leave a link to your Blog:

         கமெண்டில் உங்கள் பிளாக்கின் லிங்கை விட்டு செல்வது உங்கள் மீதான மதிப்பை குறைக்கிறது. உங்கள் கமென்ட் நன்றாக இருக்கும் பட்சத்தில், வாசகர்கள் Profile வழியாக உங்கள் பிளாகிற்கு வந்து படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நன்றாக எழுதும் பட்சத்தில் (அ) நீங்கள் சூப்பர் பிகராக இருக்கும் பட்சத்தில், பசங்க எப்படியேனும் அட்ரஸ் கண்டுபிடித்து வந்தே தீருவார்கள். உங்ககிட்ட மேட்டர் கும்மென்று இருந்தால் போதும், வழக்கு எண்  18/9 படத்தில் வருவது போல கெமிஸ்ட்ரியில் எதோ ஒரு டவுட் என்று சொல்லியாவது உள்ளே நுழைந்து விடுவார்கள்.

அதனால், வடிவேலு பாஷையில் சொல்வதென்றால், "போ போ போகும் போது பொருள (content) விட்டுட்டு போ. உசுர (link) விட்டுட்டு போகாத".


Stay on Topic:

        பதிவில் என்ன உள்ளதோ, அதற்கு சம்பந்தமாய் கமென்ட் எழுத வேண்டும். ஒபாமாவின் அக்கா வீட்டு திருமண சம்பந்தமான பதிவில், ஒசாமா செத்து போனதை பற்றி ஒப்பேரி வைக்கக் கூடாது. ஹிமாச்சல் ட்ரெக்கிங் பற்றி எழுதிய பதிவில் நான் எழுதிய ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஒருத்தர் கமென்ட்டில் சண்டைக்கு வந்து விட்டார்.

Be Nice:

       கமென்ட் எழுதும் போது மோசமான வார்த்தைகள் பயன் படுத்தக் கூடாது. அனானிமஸ் option என்பது அசிங்கமாக எழுதுவதற்கு தான் இருக்கிறது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் படிப்பவர்களில் நிறைய பேர் Rough ஆன சாப்ட்வேர் எஞ்சினியர்களாக இருக்கிறார்கள். சாப்ட்வேர் எஞ்சினியர் என்றால் படு டீசண்டாக இருப்பான் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவனுக்குள்ளும் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும்.


Keep it Brief: 

     நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சுருக்கமாய் சொல்ல வேண்டும். பதிவு எருமையை போல இருந்தால், கமெண்டு கன்று குட்டியை போல தான் இருக்க வேண்டும். எருமையை விட பெரிதாய் இருக்க கூடாது.

சில பேர் ஒரு paragraph-யை, சிக்கன் பீஸ் போல துண்டு துண்டாக கட் பண்ணி, நாற்பது கமெண்டுகளாக போட்டிருப்பார்கள். இது என்ன ரேசன் கார்டா? எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சர்க்கரை அதிகமாக போடுவார்கள் என்பதற்கு.



ந்த பிரச்சினை தமிழனுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை, இங்கிலீஸ்காரிக்கும் இருக்கிறது. "எரிக்கா" என்ற வெள்ளரிக்கா, சாரி வெள்ளைக்காரி அக்கா புலம்புவதை கொஞ்சம் படித்து பாருங்கள். இதை தான் தமிழில் கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்.


Apr 25, 2012

ஆன்டி வைரஸ் - ஆபாயில் (18+)


னி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் சீரியஸாக எழுதலாம் என்று இருக்கிறேன்.

ப்ளீஸ்!! சிரிக்காதிங்க.



சரி, நான் சீரியஸாக இதுவரை எழுதியதில்லை என்றாலும், அந்த அளவுக்கு அசிங்கமாகவும், அசைவமாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவ்வபோது சில அதிரடி மச்சான்கள் "ஆன்டியை மடக்குவது எப்படி?" என்பது மாதிரியான ஏடாகூட தலைப்புகளில் கூகுளில் தேடி, நம்ம சைட்டுக்கு விசிட் அடிக்கிறார்கள். நம் போஸ்டில் எங்கேயாவது "ஆன்டி" என்று ஒரு வார்த்தை மேட்ச் ஆனால் கூட, கூகிள் நம்ம சைட்டை தேடல் வரிசையில் காண்பித்து விடுகிறது. நம்ம சைட்டோ, முட்டையை(ஆபாயில்) மட்டுமே சேர்த்து சாப்பிடும் சைவம். 

பாவம்! ஏமாற்றத்தில் கடுப்பாகி, ப்ரௌசரையே மூடி இருப்பான். எனக்கே இப்படி என்றால், கலீஜாக எழுதுபவர்களுக்கு எக்கச்சக்க ஹிட்டு வருமென்று நினைக்கிறேன். என்னுடைய இந்த போஸ்டும் சிவாஜியின் "கர்ணன்" பட அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று நினைக்கிறேன். அதற்கு காரணம் கடைசியாக வரும் ஒரு 'A' மாதிரியான ஜோக்கும் தான்.

 

.blogspot.com -லிருந்து .com -க்கு மாறி விட்டேன். இனி www.iamstranger.com தான் நம்ம சைட். நான் எழுதுவதால் ஐம்பது பைசா கூட கிடைப்பதில்லை. இந்த ஊரில் எழுத்தாளனுக்கு மதிப்பே இல்லை. எங்கு போனாலும், எது செய்தாலும் சொந்த காசையே செலவழிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் தான் என் எழுத்தை அதிகம் மதிக்கிறார்கள். என்னை கொண்டாடுகிறார்கள். கேரளா பெண்ணை ஒருத்தி திருமணம் செய்து அங்கேயே குடிபெயர போகிறேன். தன் சொந்த காசை செலவு செய்து, இந்த டொமைன் வாங்கி தந்த என் வாசக நண்பன் இ.வா. நடேஷ்குமாருக்கு நன்றிகள் பல.

.com -ற்கு மாற்றும் போது நாம் நினைத்த URL கிடைப்பதில்லை. ப்ளாக் URL, panty -யை போல சின்னதாகவும் பார்ப்பவர்களை Attract செய்வதாகவும் இருக்க வேண்டும். முக்கியமாய் தமிழில் இருக்கக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள, ல(la), ழ(zha) பிரச்சினைகள் வரும்.



ன் உயிரினும் மேலான தமிழ் பிளாகர்ஸ்களே! 
பிட்டு படம் பார்த்தாலும் அதை கண்ணியமாய் புட்டு லாஜிக் பார்த்து விமர்சிக்கும் சிங்கங்களே!
கில்மாவான தலைப்பு வைத்து சமூக விழிப்'புணர்ச்சி' உண்டாக்கும் சீர்திருத்த செம்மல்களே!

நடிகைகளின் செக்சியான இமேஜை உங்க பிளாக்கில் போடாதிங்க மக்களே. ஆபிசில் திறந்து படித்து ரொம்பவே அசிங்க பட வேண்டி இருக்கின்றது. அதிலும் ஒரு பெண் நம் மானிட்டரை பார்த்துவிட்டால், நம்மை "சிம்பு" ரேஞ்சுக்கு "கெட்டவனாக" பார்க்க ஆரம்பித்து விடுவாள். இந்த பதிவால் என்னுடைய பிளாகையே என்னால் கூட ஓபன் பண்ணி எத்தனை கமெண்ட்டு வந்திருக்கு என்று ஆபிசில் செக் பண்ண முடியாது என்பது தான் யதார்த்தம்.

இந்த பிளாக்கை படித்து விட்டு கேவலமாக திட்ட விரும்பினால், உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் மூலமாக அதை செய்தால் நலம். "லைக்" செய்ய வசதியாய் இருக்கும். ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் சொல்வதில் சோம்பேறித்தனம் தான்.



ப்போதெல்லாம் என்ன எழுதுவதே என்றே தெரியவில்லை. என்னிடம் இருக்கும் சரக்கு தீர்ந்தது போல இருக்கு. இந்த பதிவை முழுதும் படித்தாலே உங்களுக்கு புரியும். எனக்கு ஜெயமோகன், சாருவை போன்ற உலகத்தர இலக்கியவாதிகளை படிக்கவும் அறிவு இல்லை. சமூகத்தை கலாய்த்து எழுதுவதே பிழைப்பாய் மாறிவிட்டது. இந்த பிழைப்பால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

எழுத சரக்கு தீர்ந்து விட்டாலும், இப்போது சரக்கு அடிப்பது மட்டுமே எனக்கு ஆறுதல். சரக்கு அடித்த பின் நிறைய சித்தாந்தங்கள் தோன்றும். ஆனால் சரக்கு அடித்த பின் எழுத மாட்டேன். சரக்கு அடிச்சுட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்தால், 3D கண்ணாடி போடாமல் 3D படம் பார்ப்பது போல இருக்கும்.

நான் வழக்கமாய் தமிழ் புத்தாண்டில் தான் சபதம் போடுவேன். இந்த புத்தாண்டுக்கு, "இனி டாஸ்மாக்கில் சரக்கை வாங்கி குடிப்பதில்லை" என்று தெளிவாக ஒரு சபதம் போட்டுள்ளேன். தமிழ் புத்தாண்டு என்றைக்கு என்பதில் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை இருந்தாலும், சராசரி தமிழனுக்கு அது சப்ப மேட்டர். அவனுக்கு தேவை அன்னிக்கு லீவு, ஒரு எழவு புது ரிலீசு படம், ஒரு பாட்டில் சரக்கு. 


 


இந்த நிதியாண்டில் டாஸ்மாக் துறைக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று தெரியவில்லை. விலைக்கு ஏற்ற தரம் இருப்பதில்லை. தரத்திற்கு ஏற்ற விலையும் இருப்பதில்லை. ISI மாதிரி சான்றிதழ் ஒன்று கொடுத்தால் தேவலை. அங்கே கொடுக்கின்ற சரக்கு எல்லாம் மட்டமாக இருக்கிறது. கூலிங் சுத்தமாக இல்லை. பாதி பாட்டில் யூரின் நிரப்பி, "அண்ணே புல் பெப்சி"னே என்று சொல்லி விற்றாலும், அங்கே தான் வாங்க வேண்டிய நிலைமை. 



இந்த அநியாயத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் நாக்கை மடித்து கேள்வி கேட்க, கிடைத்த நமக்கான ஒரு தலைவர் தான், கருப்பு எம்.ஜி.யார். சென்னையில் அங்காங்கே தே.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை வைத்ததற்கு பதில், நன்கு கூலிங்காக பீர் பந்தல் மலிவு விலையில் வைத்தால், அடுத்த இடை தேர்தலில் குடிமகன்களின் ஓட்டுகளை பெற்று டெபாசிட் இழக்காமல் தப்பிக்கலாம்.

முப்பது ரூபாய் போட்டு மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் இந்த ஊரில், அந்த மண் பானையை ஓபன் பண்ணி யார் குடிக்க போகிறார்கள்? கற்களை நிரப்பி காக்காய்கள் குடித்தால் தான் உண்டு.

இந்த போஸ்ட்டுக்கு கமெண்டு யாரும் போட வேண்டாம். அதை வச்சு ஒரு ஊறுகாய் பாக்கெட்டு கூட வாங்க முடியாது. சென்னையில் சுமாரான விலையில் சரக்கு எந்த பாரில் வாங்கலாம் என்று சொன்னால், அந்த கர்த்தரின் அருள் உங்களுக்கு கிட்டும்.

சில பேரை பார்த்தால் அவனுடைய பேருக்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்காது. பார்க்க கொக்கி குமாரு மாதிரி இருப்பான். ஆனால் அவன் பெயர் டேனியல் துரை என்று இருக்கும். ஆபிஸ் மீட்டிங்கில் வெள்ளைக்காரன் பேசும் போது ஒன்னும் புரியாமல், நயன்தாரா போல "pardon", "pardon" என்று திரும்ப திரும்ப கேட்டு, வெள்ளைக்காரனை இம்சை செய்வான்.


னக்கு தினமும் மதியம் தான் ஆபிஸ் ஆரம்பம். அன்று நான் வழக்கத்திற்கு மாறாக படு ஸ்மார்ட்டாக டிரஸ் செய்து கொண்டு கிளம்பினேன். சென்னையில் அன்று தான் பூகம்பம் வந்தது. நான் நன்கு டிரஸ் செய்து கொண்டு போனதற்கும், பூகம்பத்திற்கும், எந்த ஒரு பட்டர் பிளை எபெக்ட்டும் காரணம் இல்லையென்று நினைக்கிறேன். 

முதல் முறை அதிரும்போது நான் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். வழியில் நிறைய பள்ளங்கள் இருந்ததால், அப்போது எனக்கு எந்த அதிர்வும் தெரியவில்லை. சென்னையில் இன்னும் பல ரோடுகள் சரிசெய்ய படாமலே இருக்கின்றன. வேளச்சேரி தண்டீஸ்வரம் வழியாக தரமணி சாலையில் இணையும் ரோடு படு மோசம். இன்னும் மழைக்காலம் முடியவில்லையா? அடிக்கிற வெயிலில் பைக் சீட் சுட்டு, சூ** பழுத்து மருதாணி வைத்தது போல சிவந்து விடுகிறது. மேயர் இந்த பதிவை மேய்ந்து விட்டு நடவடிக்கை எடுப்பாரா? பார்ப்போம்!



இரண்டாம் முறை பூமி அதிரும் போது நான் ஆபிசில் தான் இருந்தேன். அப்போது மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தேன் என்றால் நம்பியே ஆக வேண்டும். அன்றைக்கு முழுவதும் "பில்டிங் ஆடுது" "பில்டிங் ஆடுது" என்று அனைவரும் "அலர்ட்" ஆறுமுகமாய் அடிக்கடி எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள். மெதுவாய் பின்னே சென்று லேசாக அவர்கள் உட்கார்ந்திருக்கும் சீட்டை ஆட்டினாலே போதும், திரும்பி பார்க்காமல் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். நானும் வேகமாக கீழே இறங்கி ஓடினேன். உயிருக்கு பயந்து அல்ல. பில்டிங் ஆடாமல் கையால் தாங்கி பிடிக்க. 

பூகம்பத்தை தான் உணர முடியவில்லை, சுனாமியிலாவது ஸ்விம்மிங் போடலாம் என்று மெரினாவுக்கு சென்றேன். அதுவும் ஏமாற்றிவிட்டது. பீடி பாடி தனுசும் ஸ்விம்மிங் சூட்டில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

ஜாக்கெட் தத்துவம்:

ஜாக்கெட்டின் முதல் கொக்கியை
தவறாய் போட்டால்
பின் வரும் எல்லா கொக்கியும்
தவறாகவே இருக்கும்.

Great lines said by,

முக்கு கடை டெய்லர் "முருகன்" 


பாவாடை ஜோக்:

பாவாடையை தூக்கி 
அவள் அதை 
அவனுக்கு காட்டினாள்.
அவன் அதை பார்த்து மிரண்டு போனான்.

--
--
--
--
--
--
ஒரு பாவாடையின் விலை. Rs. 2599.90