இரவின் பிள்ளை நான்
நிலவைத் தேடுகிறேன்
அழகின் பஞ்சத்தில் என்னை
கடவுள் படைத்தான்
கள்ளிப் பூக்களாய்
தனிமை என் இடம்தான்
நீரின் அருகாமையா?
சற்றே ஒதுங்குகிறேன்
என் உருவம் தெரிவதனால்
கண்ணாடியை வெறுக்கிறேன்
என்னை அழகாய்க் காட்டுவதில்லை
இயற்கையை வைத்துக்
கவிதைகள் எழுதுகிறேன்
செயற்கைத்தனமாய் காதல் கவிதையும்
உண்ட அவசரத்தில்
உறங்கச் செல்கிறேன்
கனவிலாவது காதல் கிட்டுமென்று
நிழற்படம் எடுக்கையில்
சரி பார்த்தே நிற்கிறேன்
அழகாய் இருந்ததாய்
இதுவரை சரித்திரம் இல்லை
காதல் கைகூடாது
ராசிபலன்களின்
வாழ்நிலை அறிக்கைகள்
தனிமை என் ராஜாங்கம்
விளையாடுகிறேன் சதுரங்கம்
ராணி இல்லாமல்.
4 comments:
எனக்காக என்ன பத்தி இவளோ
யோசிச்சு எழுதியதற்கு ரொம்ப நன்றி
ரொம்ப யோசிச்சு தமிழ் வார்த்தைகளை பிடித்து
எழுதியது அருமை
இறுதி தொடுதலும் (பினிஷிங் டச்) மிக அருமை
அழகான கவிதை!
வாழ்த்துக்கள்..
\\இயற்கையை வைத்துக்
கவிதைகள் எழுதுகிறேன்
செயற்கைத்தனமாய் காதல் கவிதையும்\\
கலக்குறேள் - வாழ்த்துக்கள்
Post a Comment