தமிழ்நாட்டில் அவசரத்திற்கு ஜிப்பை கழட்டி ஒதுங்க, ஒரு பொது கழிப்பிடம் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் தெருவுக்கு நான்கு டாஸ்மாக்குகள் உங்களை கை கூப்பி வரவேற்கும். அதன் வாசலில் என்கவுண்டரில் சுட்டு போட்டது போல், எப்போதும் நான்கைந்து பேர் மப்பில் சுயநினைவு இழந்து, உடல்கள் மட்டும் அங்கே கிடக்க, வேறு கிரகத்திற்குள் நுழைந்திருப்பார்கள். அதை கண்டு கொள்ளாமல், பெரிய கூட்டம் ஒன்று கண்ணும் கருத்துமாய் கம்பி கூண்டுக்குள்ளே கையை விட்டுக் கொண்டு, உயிர் போகும் அவசர கதியில் அலைமோதி கொண்டிருக்கும்.
தினமும் வங்கியை விட, அதிக பணம் இங்கே தான் கலெக்சன் ஆகிறது. கொள்ளை அடிப்பவர்கள் அடுத்த முறை டாஸ்மாக்குல கையை வைங்கப்பா! நம்ம கோவிந்து கூட, என்கவுண்டருக்கு எதிராக பொங்கி ஒரு பதிவு எழுதி நிறைய கமெண்ட்டுகளை கல்லா கட்டிவிட்டான். தமிழ்நாடு காவல் துறை அதை பார்த்து பயந்து, அதற்கு வருத்தம் தெரிவித்து, அது போல் இனி ஏதும் நடக்காது என்று கமென்ட் போட்டுள்ளதை கோவிந்துக்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். அதனால் மறுபடியும் இன்னொரு என்கவுண்டர் கண்டிப்பாக நடக்காது என்று கோவிந்து உறுதிபட கூறுகிறான்.
தமிழ்நாட்டு பட்ஜெட்டின் வற்றாத நதி மூலமே டாஸ்மாக் தான். "இப்போது உங்கள் வசதிக்காக உங்கள் தெருவில், எங்களது புதிய கிளை ஆரம்பம்" என்று அரசு விளம்பர போர்டு கூட வைக்கலாம்.
டாஸ்மாக்கில் நுழைந்து ஒரு சரக்கு வாங்குவது அவ்வளவு அருவருப்பான விஷயம். அந்த கூட்டத்திற்குள் புகுந்து சரக்கு வாங்கி விட்டு வெளியே வரும் போது, நாம் பன்றியாய் மாறி விட்ட உணர்வு வந்து விடுகிறது. பப்ளிக் டாய்லெட் போல ரொம்ப கலீஜாக இருப்பதால், சரக்கை வாங்கி ஒரு பெக் உள்ளே விட்டால்தான் கொஞ்ச நேரமாவது அங்கு நிற்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த ஒரு பெக்கை, கவர்மெண்ட் இலவசமாய் கொடுத்தால் நலம்.
எக்ஸ்ட்ரா பெக்:
கூகுளில் டாஸ்மாக் என்று கூகுளில் தேடினால், முதல் பக்கத்தில் விஜயகாந்த் போட்டோ வருகிறது. :-D
புதிய டெக்னாலஜிகள் கடவுளை போன்றது. நாம் வேண்டுவது, நமக்கு வேண்டாதது என அனைத்தையும் தரும். "God is watching you" என்று சொன்னால் கூட பயம் வருவதில்லை. "Google is watching you" என்றால் பயத்தில் டவுசர் நனைந்து விடுகிறது. ஐ.டி யில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் கூகுள் தான் காட், காட்பாதர் எல்லாமே. சிறுவயதில் தப்பு செய்யும் பொழுது கடவுள் பார்த்துக் கொண்டிருப்பாரே என்று பயந்து கொண்டே தப்பு செய்வோம். கடவுள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறாரோ இல்லையோ, கூகிள் நம்மை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னென்ன படிக்கிறீர்கள்?, யாருடன் என்னென்ன பேசினீர்கள்? என அனைத்தையும் கண்காணிக்கிறது.
இருட்டில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் செய்யும் தப்புகளை, சோசியல் நெட்வொர்க்குகள் உலகத்துக்கே வெளிச்சம் போட்டு படம் காட்டுகின்றன. Kumar watched "Poonam pandey's topless video" 12 seconds ago. என்று பேஸ்புக் உடனுக்குடன் உங்கள் நண்பர்களுக்கு மைக் வைத்து அறிவித்து விடும். அப்படி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, ஒரு செக்சி விடியோவை பார்த்து, அது உங்கள் பேஸ்புக் Wall -இல் உங்களுக்கே தெரியாமல் போஸ்ட் ஆகி விட்டால், ஒரு உண்மையான நண்பன் அதை பார்த்தால் உங்களுக்கு கால் செய்து "அலர்ட்" செய்வான்.
தன் திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கிற நபர்களுக்கு தான் "பாரத ரத்னா" விருது வழங்க படுகிறது என்றால், அதை சச்சினை விட, பூனம் பாண்டேவுக்கே கொடுப்பது பொருத்தமாய் இருக்கும். இவர் தான் முழு இந்தியாவையும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறார்.
கர்நாடக சட்ட மன்றத்தில் உட்கார்ந்து அமைச்சர்கள் பிட்டு வீடியோ பார்த்தது, எல்லோருக்கும் கோபத்தை வரவழைப்பதை விட, "அது என்ன வீடியோ?" என்ற ஆவலையே அதிக படுத்தியது. கூகிள் தேடலில் அந்நேரம் அதுவே ஹாட் டாப்பிக்காக இருந்திருக்கும்.
துப்பாக்கியை காட்டி மிரட்டினால் கூட பயப்படாதவர்கள், Hidden கேமராவை காட்டி Hands Up என்று சொன்னால், அச்சத்தில் உடனே கைகளை தூக்கி விடுவார்கள். இரண்டுமே shoot செய்யும் என்றாலும், தமிழன் உயிரை விட மானமே பெரிது என்று நினைப்பவன்.
நெட் கபே, எ.டி.எம் ரூம், துணிக்கடை ட்ரையல் ரூம் என இந்த ஹிட்டன் கேமிராக்களின் பிரச்சினை அதிகம். அப்படிதான் ஒரு நாள் நம்ம கொக்கி குமாரு, ஒரு பெரிய ஷோ ரூமுக்கு பேன்ட் எடுக்க போனான். அன்னிக்கு பார்த்து அவன் ஜட்டி போடவில்லை. ஆனால் குமாரு அதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல், ட்ரையல் ரூமில் பொறுமையாக போட்டு பார்த்து தான் வாங்கி வந்தான். அன்று மட்டும் யாராவது அங்கு ஹிட்டன் கேமிரா செட் பண்ணி வைத்திருந்தால், பார்த்தவனுக்கு அதை விட வேறு பெரிய தண்டனை கிடைத்திருக்க முடியும்?
"ஒரு கல், ஒரு கண்ணாடி" ஊத்தாமல் ஊத்திக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து தியேட்டரில் போட்டு சாகடிக்கும் பழைய ட்ரைலரை விட, தற்போது பேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கும் புது ட்ரைலர், சன்டீவி சூப்பர் டென் காமெடியை விட மட்டமாய் இருக்கிறது. நமீதா நம்பர் 2 போல இருக்கும் ஹன்சிகாவிற்கு ஏன் இத்தனை ரசிகர்கள் என்று தெரியவில்லை.
ஆதித்யா டீவி, சிரிப்பொலி டீவியில் திரும்ப திரும்ப வரும் வடிவேலு கவுண்டமணி காமெடியை பார்த்தால் எனக்கு பீபி எகிறி விடும். ஜெயா டிவியில் இரவு பத்து மணிக்கு பிறகு போடும் அந்த கால பாடல்களில் இருக்கும் காமெடி கூட அதில் இருக்காது. சுமார் ஒரு நிமிடம் ஹீரோயினின் முகத்தையே குளோசப்பில் காட்டுவார்கள். அவளும் புருவத்தை வளைத்து நெளித்து, உதட்டை பிதுக்கி சுழித்து, லேடி சிவாஜி கணேசன் போல நவரசத்தையும் தன் முகத்தில் ஒருங்கே கொண்டு வருவாள். அவர்களது முகபாவனை, நடனம் இவற்றை ஜாலியாய் பார்த்து படுத்து உருண்டு கொண்டே சிரிக்கலாம்.
தற்போதெல்லாம் சில நொடிகள் மட்டும் ஹீரோயின் முகத்தை காண்பித்து விட்டு, கீழே இறக்கி மார்பையும், தொப்புளையும், ஷங்கர் பட பாட்டு போல நான்கைந்து கேமிராவால் சுற்றி சுற்றி காண்பிக்கிறார்கள். "யாரடி நீ மோகினி" யில் வரும் "ஓ பேபி, ஓ பேபி" பாடலின் கடைசி ஒரு நிமிடத்திற்கு, தன் இடுப்பில் நவரசத்தையும் காட்டி தன் நடிப்பால் கவர்ந்த ரகஸியா இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பது காலத்தின் கோலமின்றி வேறென்ன?
ஒரு பழைய சரக்கு ஜோக்:
ஒரு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு, சரக்கடிப்பதால் என்ன தீமை என்று ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து விளக்குவதற்காக, ஒரு கிளாஸ் தண்ணீர், ஒரு கிளாஸ் சரக்கு, ஒரு புழுவையும் எடுத்துக் கொண்டு,
"ஸ்டூடண்ட்ஸ், கவனமா பாருங்க" என்று சொல்லி அந்த புழுவை எடுத்து தண்ணீர் கிளாசில் போடுகிறார். அந்த புழு தண்ணியில் ஜாலியாக நெண்டியபடி இருக்க அதற்கு எதுவும் ஆகவில்லை.
அடுத்து அந்த புழுவை மீண்டும் எடுத்து, இப்போது சரக்கு கிளாசில் போடுகிறார். இப்போது அது எரிச்சலில் துடி துடித்து இறந்து இறைவனடி சேர்ந்து விடுகிறது.
உடனே ஆசிரியர் "இதிலிருந்து நாம் என்ன கத்துகிட்டோம்?" என்று கேட்கிறார்.
எப்பவுமே கடைசி பெஞ்சுலையே உட்கார்ந்து கவனமாய் கிளாசை (வகுப்பை) கவனிக்கும் நம்ம கொக்கி குமாரு, கையை தூக்கி புத்திசாலிதனமாக பதில் சொன்னான்.
"சரக்கு அடிச்சா, நம்ம வயித்துல இருக்கிற புழு எல்லாம் செத்து போயிடும் சார்"
அதை கேட்டு படு டென்சனான ஆசிரியர், புழுவை தூக்கி எறிந்து விட்டு அந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து விட்டு மட்டை ஆகிறார்.