இந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் நிறையவே சம்பந்தங்கள் இருக்கிறது.
கிரெடிட் கார்டு வச்சிருகிறதுங்கறது, ஒரு பொண்டாட்டியை கட்டி குடும்பம் நடத்துவது மாதிரி. ஒன்றே ஒன்று இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையை கஷ்டப்படாமல் ஓட்ட முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்துக் கொள்வது கல்யாணமாகாத பேச்சுலர் வாழ்க்கை மாதிரி. வாழ்க்கைய மிக சந்தோசமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நம்முடைய தேவைக்கேத்த மாதிரி வாழலாம்.
கிரெடிட் கார்டாக இருந்தாலும், பொண்டாட்டியாக இருந்தாலும் ஒன்றுக்கு மேல் போனால், நீங்கள் கோடிஸ்வரனாக இருந்தாலும் அது உங்களை தெருக்கோடி பிச்சைக்காரன் ஆக்கி விடும். எங்கே?, எப்போது?, எதற்க்காக?, யாருக்காக? கடன் வாங்கினோம் என்றே தெரியாமல் போய்விடும். அதே போல் ஒரு பொண்டாட்டிய திருப்தி படுத்தறதே பெரிய விஷயம் (கேட்கறத வாங்கி கொடுத்து. ஹி! ஹி! ). ஆனா டெபிட் கார்ட்டில் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அதை பார்த்து, யாருக்கும் பயப்படாமல், செலவு செய்யலாம். "பெண் சிங்கம்", "வெளுத்து கட்டு" போன்றஅரிய படங்களை கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி சிரிச்சுகிட்டே பாக்கலாம்.
வெளியே கடைகளில் ஷாப்பிங் போகும் போதோ, சாப்பிட ரெஸ்டாரென்ட்க்கு போகையிலோ, கிரெடிட் கார்டு உள்ள மதிப்பே தனி தான். அதேதான், சொந்தகாரங்க வீட்டிற்கு போகும் போதோ, அப்பார்ட்மென்ட்ல வாடகைக்கு வீடு கேட்கும் போதோ, கல்யாணம் ஆகி பேமலியோட போனால் தான் மரியாதை கிடைக்கும். "சார் கார்டுல பேலன்ஸ் இல்ல", "இங்க டெபிட் கார்டெல்லாம் Accept பண்ன மாட்டோம்"ன்னு அசால்ட்டா சொல்லி அசிங்க படுத்திடுவாங்க. பேச்சுலர் ஒருத்தன் வாடைகைக்கு வீடு கேட்க போகும் போது, பிச்சைக்காரனும் அங்கே வந்தான் என்றால், முதலில் நம்மளை துரத்திவிட்டு அப்புறம் தான் பிச்சைகாரனை துரத்துவார்கள். (எங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கிற புறா கூட என்னோட பைக்க தேடி புடிச்சு அசிங்கம் பண்ணிட்டு போய்டுதுங்க).
கையில் சுத்தமாக காசு இல்லை என்றால் கூட, கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி, அப்போதைக்கு ATM -ல் பணம் எடுத்து கொள்ளலாம். பொண்டாட்டிக்கிட்டேயோ அல்லது அவள் அப்பன்கிட்டேயோ பணத்தை வாங்கி விட்டு "அப்புறம் குடுக்கிறேன்னு" அல்வா குடுக்கற மாதிரி. ஆனால் காசே இல்லாமல் டெபிட் கார்டு மூலம் ATM -ல் பணம் எடுக்க போனீங்க என்றால், ATM மெசினே மூஞ்சில எச்சில் துப்பிடும். வேலை இல்லாமல் பேச்சுலராக சுற்றி கொண்டு இருந்தீங்க என்றால் பிரெண்ட்ஸ், சொந்தகாரங்க ஒருத்தனும் பைசா குடுக்க மாட்டாங்க.
சாப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணி மாதா மாதம் அக்கௌன்ட் நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருந்தீங்கன்னா Golden, Platinum ன்னு சும்மாவே கூப்பிட்டு கிரெடிட் கார்டு கொடுப்பது போல, கிலோ கணக்குல தங்கத்தொடும் அவங்க பொண்ணையும் போட்டி போட்டுக்கிட்டு கொடுப்பாங்க. ஆனா வேலை இல்லாம வெட்டிபயலாக சுற்றிக்கொண்டு இருந்தீங்கனா, டெபிட் கார்டுக்கு அக்கௌன்ட் ஓபன் பண்ணறதுக்கே 500, 1000 ரூபாய் இருந்தால் தான் பண்ன முடியும். பொண்ணு கூட நாமளாக தான் கேராளாவில் இருந்து காசு போட்டு கட்டிகிட்டு வரணும்.
நீங்க குடும்பஸ்தரா?
கிரெடிட் கார்டு வைத்திருந்தீங்கன்னா தூக்கி எறிஞ்சுடுங்க. அப்படி நீங்களும், ரெண்டுமே வச்சு இருக்கணும்ன்னு ஆசை பட்டால், கிரெடிட் கார்டு தூக்கி எறிந்த இடத்தை உங்கள் மனைவிக்கு காண்பித்து விடுங்க. அப்புறம் அவங்களுக்கு தெரியும் என்னென்ன வாங்கனும்னு (அவங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும்).
சமையல் பாத்திரத்தியே அப்படி கை வலிக்க தேய்த்து கழுவறவங்களுக்கு, கிரெடிட் கார்டு தேய்க்கறது எல்லாம் சப்ப மேட்டரு. அதன் பின் தினமும் உங்க வீட்டில் பாச கணவனுக்கு பாராட்டு விழா நடக்கும். கலைஞர் தாத்தா மாதிரி உட்கார்ந்து கொண்டு சிரிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.
இதை படித்து விட்டீர்களா?
இப்போ உங்க கிரெடிட் கார்டு எங்கே இருக்குன்னு பாருங்க. அப்புறம் உங்க மனைவி வீட்டில் இருக்காங்களான்னு செக் பண்ணுங்க. இரண்டுமே இல்லையா? கவலை படாதிங்க. அப்படியே உங்க ப்ரவுசர்ல இன்னொரு Tab ஓபன் பண்ணி கிரெடிட் கார்டு வெப் சைட்ல Login ஆகி எவ்வளவு பில் வந்திருக்குன்னு மட்டும் பாருங்க. வேற எதுவும் உங்களால பண்ண முடியாது.
நீங்க பேச்சுலரா?
உங்களுக்கு
கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிரெடிட் கார்டு வச்சுகாதிங்க.
கிரெடிட் கார்டு வச்சுக்கனும்ன்னா கல்யாணம் பண்ணிக்காதிங்க. இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி கல்யாணம் பண்ணுணீங்கனா, அந்த கிரெடிட் கார்டை தூக்கி உங்க பொண்டாட்டி கையில் கொடுத்து விடாதிர்கள்.