எனக்கு இரவில் சீக்கிரம் உறங்க செல்வதும் காலையில் சீக்கிரம் எழுவதும் மிக இயலாத காரியம். இங்கு (இந்தியாவில்) நான் தினமும் எழுவதற்கு முன் ஐரோப்பா கண்டமே எழுந்து பரபரப்பாய் வேலை பார்த்து கொண்டு இருக்கும். இரவில் பருவப் பிரச்சனைகளால் என்னால் எளிதில் உறங்க முடிவதில்லை. தப்பாக எண்ண வேண்டாம். இது வாலிப பருவ கோளாறு இல்லை, கோடைப் பருவம். அதிலும் பகலில் சென்னை வெயில் "என் உச்சி மண்டையில சுர்ருங்குது". பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்க வேண்டியதில்லை. பஞ்சை மட்டும் வைத்தால் போதும். குபீரென்று பற்றி எரியும்.
தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு இருப்பதால் மக்களுக்கு எந்நேரமும் வியர்வை குளியல் தான். மிக்சி, கிரைண்டர், ஆடு மாடு பன்றி இவற்றிற்கு பதிலாக எந்த ஒரு கட்சியாவது கடந்த தேர்தல் அறிக்கையில் இலவசமாய் ஏசி கொடுப்பதாய் சொல்லியிருந்தால் மக்களிடம் அது வரவேற்ப்பை பெற்றிருக்கும். ஒருநாள் தற்செயலாய் என் நண்பனிடம் இன்டர்நெட் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, புல்ஷிட்(bullshit) என்று திட்டிவிட்டான். அவனிடம் சொன்னேன் "தயவு செய்து புல்ஷிட் பற்றி கேவலமாய் பேசாதே. ஒருவேளை இந்த தேர்தலில் ஜெயலலிதா வென்று முதல்வராகி, எனக்கு ஒரு பசுமாடு இலவசமாய் கிடைத்தால் அதன் சாணத்தை நான் தான் அள்ளவேண்டும்"

இப்போதெல்லாம் தினமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதால், கனவிலும் ஐ.பி.எல். வந்து தொலைக்கிறது. அப்படிதான் ஒரு நாளில் மூன்று கனவுகள் தொடர்ச்சியாக வந்தது. முதல் கனவில் நான் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது போலவும், நான் சிறப்பாய் விளையாடியதற்க்காக ப்ரீத்தி ஜிந்தா அவர்கள் என்னை கட்டி பிடித்து முத்த மழையில் நனைப்பது போலவும் ஒரு அருமையான கனவு (ப்ரீத்தி "ஜிந்தாபாத்"). அதில் சிறந்த ஆட்டகாரருக்கான பரிசாக எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கும், அதிக விலையில் விற்பதால், அதில் நிரப்பி ஓட்ட நூறு லிட்டர் பெட்ரோலும் கொடுக்கிறார்கள்.
இரண்டாவது கனவில் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறேன். எதிர்பார்த்ததை போல சிச்சரும் போருமாக விளாசுகிறேன். அரங்கம் அதிர மக்கள் என் பெயரை வாய் பிளந்து கூவி கொண்டு இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண் தன் அண்டர்வேருக்கு சற்று மேலாக என் பெயரை பச்சை குத்தி இருந்ததை டிவி கேமரா போகஸ் பண்ண, அரங்கத்தில் உள்ள பெரிய திரையில் மக்கள் அதை கண்டு மகிழ்ந்தார்கள். ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றதால் ஷில்பா ஷெட்டியும் என்னை முத்த மழையில் முக்கினார். ஆனால் மூன்றாவது கனவு ஆரம்பித்து சிறிது நேரத்திலே திடீரென்று கலைந்து வந்துவிட்டது. அந்த கனவில் மும்பை அணிக்காக அட்டகாசமாய் விளையாடி கொண்டிருந்தேன்.
விழிப்பு வந்து அதற்கு பிறகு தூங்க முடியவில்லை. காலை ஆறு மணி இருக்கும். பல் துலக்கி விட்டு வெளியே வந்து கடையில் தேநீர் அருந்திவிட்டு அப்படியே நடந்தேன் கொஞ்ச தூரம். மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். கடைக் காரர்கள் மார்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி மூட்டையை சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். பேப்பர் போடும் பையன் ஒருவன் மிதிவண்டியை வேகமாய் மிதித்து சென்று கொண்டிருந்தான். ஒரு ஏழை தாத்தா சாலை ஓரம் உள்ள குப்பையை கலைத்து வேண்டியதை மட்டும் பொறுக்கி கொண்டிருந்தார். குப்பைதானே அது அங்கே தானே கிடக்க போகிறது யார் எடுக்கப் போகிறார்கள்? என்று நினைத்தால், நாம் செல்வதற்குள் வேறு யாரோ பொறுக்கி சென்றிப்பார்கள். காலை நேரம் எவ்வளவு முக்கியமானது என்று இவர்களுக்கு மட்டுமே தெரியும். நடந்து சென்று கொண்டிருக்கும் போது கீழே அடிபட்டு இறந்து கிடந்த ஒரு பெருச்சாளியை பார்த்தேன். அதை பார்த்த போது நாட்டில் நிறைய ஊழல் பெருச்சாளிகள் உயிருடன் உண்டு கொழுத்து சுற்றி வருவது என் நினைவுக்கு வந்தது.
மனிதர்களாய் பிறப்பது அரிது என்று ஔவையார் பாடியிருக்கிறார். ஆனால் மனிதனாய் வாழ்வது மிக அரிதாய் படுகிறது. ஆளும் வர்க்கமும், பணக்காரர்களும் மட்டுமே தங்களின் அரிதான மானிட பிறப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. நம்மூர் அரசியல்வாதிகள், எப்போதும் பரபரப்பாய் ஊழல் செய்வார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அமைச்சரோ முதல் அமைச்சரோ அவசர அவசரமாய் ஊழல் செய்ய சாலையில் செல்லும் போது நாம் கடுமையான ட்ராபிக்கில் நாம் அவதி பட்டு அவர்கள் செல்ல வழிகொடுக்க வேண்டும். டாக்டர் அன்புமணி அவர்கள் கேப்டன் தோனி இனி மதுபான விளம்பரத்தில் நடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகம் காசு கொடுத்தால் தோனி அவர்கள் வைக்கிங் பனியன் ஜட்டி விளம்பரத்திலும் நடிப்பார். மேலும் கலைஞர் விட்டு கொடுத்தால் கலைஞரின் காப்பி கொட்டை (காப்பீட்டு திட்டம்) விளம்பரத்தில் கூட நடிப்பார்.
எனக்கு பொதுவாகவே அறிவுரை சொல்லும் "உன்னால் முடியும் தம்பி" (You Can Win, Who Moved My Cheese?) போன்ற மோட்டிவேசன் புத்தகங்களை படிக்கவே பிடிப்பதில்லை. அப்படியே நீங்கள் படித்தாலும் கற்பூரம் மாதிரி கொஞ்ச நேரத்துக்கு தலை முதல் பாதம் வரை உற்சாகம் கொழுந்து விட்டு எரியும். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அணைந்து விடும். ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ண எனக்கு நிறைய பிடிக்கும். ;-)
ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்தும் போராட்டத்தை வினவு போன்ற சில கம்யூனிச(?) வலைப்பூக்களும் கம்யூனிச வாதிகளும், இதை நடுத்தர வர்க்கத்தின் நோகாமல் நொங்கு தின்னும் போராட்டம் என்றும், மொன்னையான மெழுகுவர்த்தி போராட்டம் என்றும் தாழ்வாக பேசுகிறார்கள். ஐ.டி கம்பனியில் வேலை செய்யும் மகான்கள் பொழுது போக்காய் இதில் பங்கு கொண்டார்கள் என்று எள்ளல் பேசினார்கள். எதுவுமே ஆரம்பித்தவுடன் மிகச் சரியாய் வந்துவிடாது. தனக்கென்று விளைவுகள் அதிகமானால் மட்டுமே தேச பக்தியும் சரி, விளையாட்டும் சரி தீவிரம் அடையும். கடந்த வாரம் கூட IAC (India Against Corruption) -யின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் மெரீனா கடற்கரையில் நடந்தது. நிறைய சிறுவ சிறுமியர்கள் முதல் அனைத்து வயதினரும் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு போராட்டத்துக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே போகிறது. சில பேர் அவர்களுக்கு வேலை ஏதும் இல்லாத போதும், தூக்கம் கெடாமல் உள்ள போதும் மட்டுமே இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற நினைக்கிறார்கள். அது போன்ற சில பேர் என் ரூமிலும் காணப்பட்டார்கள்.
கடற்கரை சாலையில் இன்னும் நிறைய மக்கள் நடந்து கொண்டும் ஓடி கொண்டும் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஊழலில் பங்கு இருக்கும் அரசியல்வாதியின் குடும்பமாய் இருக்கலாம். நிறைய அங்கிள்களும் ஆண்டிகளும் நாட்டின் பிரச்சினையை விட தங்கள் தொப்பையின் பிரச்சினையையே பெரிதாக எண்ணி அதை தீர்க்க ஓடி கொண்டிருந்தார்கள்.
அதில் சில பணக்கார அங்கிள்கள் விதவிதமான வெளிநாட்டு நாய்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நாய் புசுபுசுவென மயிர்களோடு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு நிறைய சலவாய் ஊற்றி கொண்டே சென்று கொண்டிருந்தது. அதன் தலையில் மட்டும் ஒரு பக்கெட்டை மாட்டி விட்டிருந்தால், அது சிறிது தூரம் செல்வதற்க்குள்ளே பக்கெட் நிரம்பி வழிந்திருக்கும். ஏன் இவர்கள் நாய்களோடு ஓடுகிறார்கள்? என்று சிந்தித்தேன். ஒருவேளை தனியாக ஓடினால் சோம்பேறித்தனப்பட்டு நின்று விடுவார்கள். அதனால் கட்ட வண்டியை போல அவர்களை நிற்காமல் இழுத்துக் கொண்டு ஓடவே நாய்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அதில் ஒரு நாய்க்கு கூட தொப்பை இல்லை.
கடற்கரை சாலையில் இன்னும் நிறைய மக்கள் நடந்து கொண்டும் ஓடி கொண்டும் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஊழலில் பங்கு இருக்கும் அரசியல்வாதியின் குடும்பமாய் இருக்கலாம். நிறைய அங்கிள்களும் ஆண்டிகளும் நாட்டின் பிரச்சினையை விட தங்கள் தொப்பையின் பிரச்சினையையே பெரிதாக எண்ணி அதை தீர்க்க ஓடி கொண்டிருந்தார்கள்.
அதில் சில பணக்கார அங்கிள்கள் விதவிதமான வெளிநாட்டு நாய்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நாய் புசுபுசுவென மயிர்களோடு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு நிறைய சலவாய் ஊற்றி கொண்டே சென்று கொண்டிருந்தது. அதன் தலையில் மட்டும் ஒரு பக்கெட்டை மாட்டி விட்டிருந்தால், அது சிறிது தூரம் செல்வதற்க்குள்ளே பக்கெட் நிரம்பி வழிந்திருக்கும். ஏன் இவர்கள் நாய்களோடு ஓடுகிறார்கள்? என்று சிந்தித்தேன். ஒருவேளை தனியாக ஓடினால் சோம்பேறித்தனப்பட்டு நின்று விடுவார்கள். அதனால் கட்ட வண்டியை போல அவர்களை நிற்காமல் இழுத்துக் கொண்டு ஓடவே நாய்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அதில் ஒரு நாய்க்கு கூட தொப்பை இல்லை.
எனக்கு பொதுவாகவே அறிவுரை சொல்லும் "உன்னால் முடியும் தம்பி" (You Can Win, Who Moved My Cheese?) போன்ற மோட்டிவேசன் புத்தகங்களை படிக்கவே பிடிப்பதில்லை. அப்படியே நீங்கள் படித்தாலும் கற்பூரம் மாதிரி கொஞ்ச நேரத்துக்கு தலை முதல் பாதம் வரை உற்சாகம் கொழுந்து விட்டு எரியும். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அணைந்து விடும். ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ண எனக்கு நிறைய பிடிக்கும். ;-)
ஜப்பானில் நிலநடுக்கம் வந்ததிற்கு நம்மில் நிறைய பேர் அனுதாபம் சொல்லியிருப்போம். அவர்கள் அத்துணை கஷ்டத்திலும் யாரிடமும் உதவி கோரவில்லை. அதிகபடியான உழைப்பே, அவர்களுக்கு அதிகமான பணத்தையும் கொடுக்கும். இந்தியா தன்னிடம் எது அதிகம் உள்ளதோ அதை அந்த நாட்டிற்கு தரலாம். அப்படி பார்த்தால் பணம், பொருளை தவிர நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடிவது எதுவென்றால் மக்கள் தொகை மட்டுமே. அதுபோல நிலநடுக்கம் ஜப்பானிற்கு பதிலாக இந்தியாவில் வந்திருக்கலாம். நிலநடுக்கத்தில் இறந்தாலும் ஜப்பானியனாக இறக்க வேண்டும். ஆனால் டால்பின்கள் கொல்லப்படும் போது மனிதர்கள் இயற்கையால் சாவது தப்பில்லை. உயிர் என்பது பொதுவானது.
நகர் புறத்தில் காணப்படும் அப்பார்ட்மென்ட் புறாக்கள் எங்கு போய் முட்டையிடும் என்று வெகு நாளாய் யோசித்திருக்கிறேன். போன மாதம் ஒருநாள் காலையில் எழுந்து பால்கனிக்கு சென்று பார்த்த போது அங்கு பயன்படுத்தப் படாத துடைப்பம் ஒன்றில் ஒரு புறா இரண்டு முட்டையை விட்டு என் சந்தேகத்தை தீர்த்தது. அதுவும் சென்னை போன்ற மரங்கள் இல்லாத ஊரில் மனிதர்கள் இல்லாத வீடும், அதிகம் புழங்காத பால்கனியும் மட்டுமே அதற்கு குஞ்சு பொரிக்கும் இடங்கள்.
நானும் என் கேமராவில் அந்த புறா முட்டை விட்டதில் இருந்து, குஞ்சு பொரித்து, குஞ்சு பெரிதாகி பறந்து சென்றது வரை சுட்டு தள்ளினேன். ஆனால் அது போன பிறகும் அந்த புறா குஞ்சுகள் என் மனதை விட்டு அகலவே இல்லை. ஏனென்றால் அவைகள் பால்கனி முழுதும் அவ்வளவு அசிங்கம் செய்து விட்டு போயிருந்தது. சரி முடிந்தது இனி ஏதும் பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்தேன். சரியாக ஒரு வாரம் கழித்து அதே இடத்தில இன்னும் இரண்டு முட்டைகள் உதித்திருந்தது. என்ன கொடுமைடா என்று திரும்பி மறுபுறம் பார்த்தேன். அங்கு ஒரு முட்டை சற்று பெரிய அளவில் புறா முட்டை போல் அல்லாமல் தனியாக அனாதையாக கிடந்தது. அது காக்கா முட்டையோ இல்லை குயில் முட்டையாகவோ இருக்கலாம் என்பது என் சந்தேகம். உடனே நான் தனியே கிடந்த பெரிய முட்டையை எடுத்து அந்த இரண்டு சின்ன முட்டையோடு சேர்த்து வைத்தேன்.
இதற்கு முன்னால் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பெண் புறா, மற்ற கர்ப்பிணி புறாக்களிடம் சொல்லி இருக்கலாம், அந்த வீட்டுகாரர் ரொம்பபபப நல்லவர் என்று. அதற்கு பிறகு அந்த புறா மூன்று முட்டையையும் சேர்த்து அடைகாத்து வந்தது. இப்போது அந்த இரண்டு சின்ன முட்டைகள் உடைந்து குஞ்சு வெளிவந்து விட்டது, அந்த பெரிய முட்டையை தவிர. என் நண்பன் வினோத்துக்கு முட்டை வறுவல் என்றால் மிகவும் இஷ்டம். குளித்து முடித்தவுடன் பால்கனிக்கு சென்று உள்ளாடையை காயப் போடும்போதெல்லாம் அந்த பெரிய முட்டையை ஒற்றை கண்ணாலே பார்ப்பான். நானும் அந்த பெரிய முட்டை எப்போது உடைந்து எந்த குஞ்சு வெளிவரும் என்று மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த பெண் புறாவின் துணையும் கூட அவ்வாறு எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆண்டவா! தேவையில்லாமல் சந்தேகத்தால் ஒரு குடும்பம் பிரிய நான் காரணமாகி விடக் கூடாது.
ஒபாமாவுக்கும் ஒசாமாவுக்கும் நல்ல பெயர் பொருத்தம் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஒபமா ஆட்சியில் ஒசாமா சாவாரா? ஆனால் ஒசாமாவுக்கு கடந்த சனி பெயர்ச்சி பலன்கள் சரியாக இல்லை என்று கணித்து சொல்லியிருக்க, தமிழ் நாளிதளின் ஆஸ்தான ஜோதிடர் யாரையாவது ஒசாமா அருகில் வைத்திருந்திருக்கலாம். இந்திய பிரதமர் மண் மோகன் சிங் ஒசாமாவை கொன்ற அமெரிக்காவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இவருக்கு தெரிந்தது பாராட்டு, கண்டனம் மற்றும் கவலை தெரிவிப்பது மட்டுமே. மும்பை தாக்குதலில் சிறையில் உள்ள கசாப்புக்கு இந்திய அரசாங்கம் சிக்கன் பிரியாணி கொடுத்து செல்லம் கொஞ்சி கொண்டிருக்கிறது. சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் குறைவாய் இருக்கிறதென்று கசாப் புகார் சொல்லி இருப்பதாய் நம்பத் தாகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.