Jul 16, 2010

எமியின் ஏக்கத்தில் (மதராசிபட்டினம் ஸ்பெஷல்)



தினமும் உன் நினைவுகளை ஏற்றி
திரியும் கழுதையாகவே மாறி போனேன்.

"மறந்துட்டியா" அப்படின்னு நீ சொன்னத
என்னால மறக்கவே முடியல.

நீ  கழுதைய தூக்கி கொஞ்சினதில் இருந்து
ரோட்டுல போற கழுதையெல்லாம் 
ரொம்ப அழகாவே தெரியுது.
சில சமயம் என் பழைய காதலியை விட.

இரவும் பகலும்
நீயே தான் ஆளுகிறாய் என்னை.
சுதந்திரத்தை மட்டும் கொடுத்து விடாதே!
உனக்கு அடிமையாகவே இருந்து விட்டு போகிறேன்
என் காலம் முழுதும். 






Jul 15, 2010

ஆபாயிலுக்கு ஆதரவு கொடுங்கள்.


                         ஆபாயில் உதவி: http://oldrecipebook.com/images/eggs-sunnysideup.jpg


இப்படியே இருந்தா எப்படி? நம்மளையும் நாலு பேரு பின் தொடர ஆரம்பிச்சுட்டாங்க (ஆட்டோலையா?). ஆரம்பத்துல ஏதோ சில கவிதைய மட்டும் கிறுக்கிக்கிட்டு இருந்த நாம, இப்பதான் கொஞ்சம் காமெடியையும் ஆரம்பிச்சிடுக்கோம். ஆனா கவிதையை மட்டும் வச்சே காலத்தையும், இந்த ப்ளாகையும் ஓட்ட முடியாது. அது ரொம்ப சிரமம். பள்ளிகூடத்துல பண்ணுன காதல வச்சே எவ்வளவு நாள் சமாளிக்கறது?. அதுக்கு கொஞ்ச பேரையாவது இப்ப காதலிக்கணும். இல்ல, அவங்க நம்மள காதலிக்கணும். நாமளும் எவ்வளவு நாள் தான் காதலிக்கற மாதிரியே நடிச்சு கவிதை எழுதறது

கதை எழுதினா என்ன?
கதையா? அதை எப்படி எழுதறது? சின்ன வயசுல சரோஜா தேவி கதைகள் படிச்சத தவிர வேற எந்த அனுபவமும் இல்லயே. இதுல கதை எழுதறது ரொம்ப கஷ்டம்.

அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆகுறது? இதற்கு இந்த பிரபல பதிவர்கள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு பார்த்தா புரியலாம். அப்பத்தான் தெரிஞ்சது ரெகுலரா ஏதாவது ஒன்னு எழுதி பதிவா போடணும். 

நம்ம ஜெட்லி அண்ணாத்த உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட படுகிற மாதிரியான படங்களை எல்லாம் பார்த்து ஜெட்லிய விட்டு பன்ச் விடறாரு. சில நல்ல படங்களுக்கு நடுவே அதிக மொக்கை படங்களை பார்க்கும் வலிமையை ஆண்டவன் ஒருசேர ஜெட்லியிடமே கொடுத்திருக்கிறார். ஜெட்லி அண்ணே! உங்களுக்கு மக்கள் கூட்டம்னா அலர்ஜியா? கூட்டம் இல்லாத படத்துக்கே அதிகமா போறீங்க.

ஹாலிவுட் பாலா உலக படத்தையெல்லாம் வுட்டு பிரிக்கிறாரு. பாலா அண்ணே, அதுவும் நீங்க சொல்ற 18 + படத்தையெல்லாம் ஒன்னு விடாம பார்த்துட்டு வரேங்க. ஹி! ஹி!
VISA அவர்கள் மிகவும் "உணர்ச்சி"பூர்வமா சூப்பரா கதை எழுதுவாரு. அவரோட கதைக்கு எப்பவுமே நான் ரசிகன்.

இந்த கேபிள் சங்கர் வாரா வாரம் திங்க கிழமை ஆனா கொத்து பரோட்டா போட்டுர்றாரு. நீங்க கடைசில போடுற "அந்த" ஜோக்கு நிறைய பேருக்கு அது நேயர் விருப்பம்.
பரிசல்காரன் அப்பப்ப அவியல் போடறாரு. (பிரபல பதிவர்ன்னு சொன்னதுக்கு தயவு செய்து யாரும் என்னை அடிக்க வராதிங்க அண்ணே)

அப்ப நாமளும் இது மாதிரி ஏதாவது ஒன்னு போடணும். என்ன போடலாம்?. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. (யோசிக்கிறேன்)
ஆப்.. ஆப்..ஆபாயில்...
ரைட்டு... இனிமேல் ஆபாயில் போடலாம்.
இது ஒரு நல்ல முடிவுன்னு தோணுது. ஏன்னா? ஆபாயில்ங்கறது எல்லோரும் அடிக்கடி சாப்பிடறது. நிறைய பேருக்கு புடிக்கும். ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவாங்க.

இதற்கு எனக்கு நம்முடைய தமிழ் குடிமகன்களின் ஆதரவு 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் முழுமையாக கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய ஆபாயில் படித்து அளவுக்கு அதிகமாக குடித்து ஆபாயில் போடுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசின் டாஸ்மாக் வருவாயும் கணிசமாக உயரும் என்ற காரணத்தால் தற்போதைய அரசின் ஆதரவும் இதன் மூலமாக எனக்கு கிடைக்க பெறுமென உறுதியாக நம்புகிறேன்.

இதற்கும் மேலாக பல அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், காமெடி நடிகர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கீழே உள்ள படங்களில் யார் அரசியல்வாதி, யார் நடிகர், யார் காமெடி நடிகர் என்று குழம்பினால் அதற்கு ஆபாயில் கட்சி நிர்வாகம் பொறுப்பல்ல.











(இப்படிதான் நமீதாவுக்கு வணக்கம் வைக்க தெரியும். கண்டுக்காதீர்கள். நமக்கு ஆதரவு மட்டும் தான் முக்கியம். இப்பதான் மக்கள் ஆதரவு கொஞ்சம் கிடைச்சிருக்கு. அதனால் கவர்ச்சி படம் போட கூடாதுங்கறதுக்காக நானே MS Paint யூஸ் பண்ணி கவர்ச்சிய மறைச்சிட்டேன். ஹி! ஹி!. அப்படி செய்யா விட்டாலும் சில பெண்ணியவாதிகள் வந்து கரிய பூசிடுவாங்க. )


ஒரு வேளை ஒரு சில காரணங்களால் என்னுடைய ஆபாயில் யாருக்கும் பிடிக்காமல் போய், மோசமான விமர்சனங்கள் உண்டாகி என் மேல் முட்டை தாக்குதல் ஏற்பட்டால், அதை கொண்டு நிஜ ஆபாயில் சாப்பிட கூடிய சாத்திய கூறுகளும் உண்டாகலாம்.

ஆகவே என்னுடைய ஆபாயிலுக்கு நாலாபுறமும் உங்களுடைய பேராதரவை தந்து ஆபாயிலை வெற்றி பெற செய்யும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.



                  டேய்! ஒழுங்கா படிங்க ஆபாயில்               
                      இல்ல குறைச்சிடுவேன் உனக்கு Half ஆயுள்.  




                       ஆபாயில் சாப்பிடு கண்ணு! 


அசின் : இதற்கு மேலும் யாராவது ஆதரவு கொடுக்கல, அப்புறம் மிராண்டா குடிச்சிட்டு வந்து மெர்சலாக்கிடுவேன். ஜாக்கிரதை!





Jul 13, 2010

கண்டுபிடித்து தாருங்கள் என் காதலியை

 

இன்னும் எத்தனை நாள் தான்
உன் பேச்சில்
நான் உறைந்து போவதாயும் 
உன் முத்தங்களில்
உயிர் கரைந்து போவதாயும்
உன் வெட்கங்கள்
என்னை கொள்ளை கொண்டதாகவும் 
கற்பனையாய் எண்ணிக் கொண்டு
கவிதைகளை வெளி வரச் சொல்லி
கட்டாயப் படுத்துவது?

எங்கே இருக்கிறாய்?
உனக்காய் எழுதிய கவிதைகளை
காண்பிக்கப்பதற்க்காக என்னுடைய
கவிதை நோட்டின் தாள்கள்
காற்றில்
பட படத்து கொண்டிருக்கின்றன. 

வார இறுதி நாட்களில்
கடற்கரைக்கு சென்று
உனக்கும் சேர்த்து
மணல் வீடு கட்டி வைத்து
காத்து கொண்டிருக்கிறேன்.

பேருந்து நிறுத்தங்களில்
திருவிழா கூட்டங்களில்
காபி விடுதிகளில்
இன்னும் இதர இடங்களில்
உன்னை தேடி கொண்டு இருக்கிறேன்
திசை காட்டி கருவி இல்லாது
சுற்றி கொண்டிருக்கும்
ஒரு மாலுமியாக.





கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்





உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத பட்ட பதிவு இது.
நாங்கள் ஐந்து பேர் ஒரு அப்பார்ட்மென்ல தங்கி இருக்கிறோம். 


போன வாரம் வெள்ளி கிழமை என் பிரெண்ட் குடிபிரகாஷ் என்னோட வண்டி வேணும்னு கேட்டு எடுத்துட்டு போயிட்டதால், என் இன்னொரு ப்ரெண்டு "மொட்டை"கிட்ட அவனோட வண்டிய கேட்டேன். 

அவனும் எடுத்துக்கோன்னு சொன்னான். பையன் கணக்கில் பெரிய ஆள். அதுக்காக அவன் maths நல்லா பண்ணுவான்னு அர்த்தம் இல்லை. எல்லாத்துக்கும் அவன் கணக்கு பார்ப்பான்.

இது வரைக்கும் அவனோட வண்டிய ஒட்டுனதில்லை.
போய் வண்டியை பார்த்தால் Egmore Exhibition -இல் வைக்கற ரேஞ்சில் தான் இருந்தது. சரின்னு வண்டிய எடுத்து ஸ்டார்ட் பண்ணினேன். கர கரன்னு ஹெலிகாப்டோர் மாதிரி பயங்கர சவுண்டு. இறக்கை மட்டும் தான் இல்ல. சத்தம் கேட்டு அப்பார்ட்மென்டே வெளிய வந்து எட்டி பார்த்தது. நல்லவேளை வண்டியில் இருந்து வந்த புகை மண்டலத்தால் என்னை யாரும் பார்க்க வில்லை.

ஓகே. பரவாயில்லைன்னு வண்டிய கெளப்பிக்கிட்டு போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது Hand brake-க்கு ஒன்னு, "நானும் இருக்கேன்னு" வெறும் பெயருக்கு மட்டும் தான் இருக்கிறதென்று. 


நானும் என்னோட புது வண்டியை ஓட்டுகிற நினைப்பில் எடுத்தவுடனே முறுக்கிட்டேன். சுத்தமா கண்ட்ரோலே இல்லை. கால் ப்ரேக் மட்டும் என்மேல் பரிதாப்பட்டு கொஞ்சமாக பிடித்தது. நானும் சீட்டை விட்டு எந்திரிச்சு கால் ப்ரேக் மேல ஏறி நின்னு கிட்டே போறேன். ஓரமாக போகிற புல்டவுசர் வண்டிகாரனெல்லாம் என்னை திரும்பி பார்த்துட்டு போனான். அவனோட வண்டியை விட அதிகம் வந்ததால் ஆச்சர்யம் அவனுக்கு.

எந்த கார் மேலேயோ, பஸ் மேலேயோ அடிச்சு ஹெலிகாப்டர்ல பறக்கற மாதிரி பறந்துடுவோமான்னு ஒரே பயம் எனக்கு. ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர் ரெட்டிக்கு அடுத்து ஹெலிகாப்டர் விபத்துல சாக போறது நான்தானோ என்று நிறைய Daymare ல்லாம் வந்து விட்டு போனது. 

எதிர்ல வர்ற பல்சர் பைக்கை பார்க்கும் போதெல்லாம் எமதர்ம ராசா எருமைல வர்ற மாதிரியே ஒரு பிரம்மை. "பயணங்களில் எச்சரிக்கை அவசியம். எமன் எந்த வாகனத்திலும் வரலாம்"  என்று போன வாரம் ராசி பலன்லயே போட்டு இருந்தது.


கடைசியாக எப்படியோ எந்த அடியும் படாமல் எங்க அபார்ட்மென்ட்ல வந்து ஹெலிகாப்ட்டரை நிறுத்திட்டு சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டேன். "இனிமேல் நம் வாழ்நாளில் இந்த வண்டியை எடுக்க கூடாது"

டேய் மொட்டை! உன் வண்டிய கூட மன்னிச்சுடலாம். ஆனா வண்டிய குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வாக்கியம் சொன்னியேடா. அது இன்னிக்கு வீட்டுல இருந்த Sprite பாட்டில் பெப்சி பாட்டில் ரெண்டையும் மாத்தி மாத்தி குடிச்சும் இன்னும் ஜீரணம் ஆகலைடா. அந்த வார்த்தை என்னன்னா?


"வண்டிய நீ மட்டும் ஓட்டு. வேற யாருக்கும் கொடுத்துடாத."

 
அவனை கெட்ட வார்த்தையில் திட்டுறேன் என்றோ, கொடுமையாக அவனை ஓட்டுகிறேன் என்றோ என்மேல் அவன் கோபத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரம், இதை அவன் "செத்தா ஒருத்தன் மட்டும் தான் சாகனும் வேற யாரும் சாக கூடாது" என்ற ஒரு நல்லெண்ணத்தில் கூட சொல்லியிருக்கலாம்.



அடுத்த நாள் சனி கிழமை "கொஞ்சம் தேனீர், நிறைய வானம்" ன்னு ஒரு கருத்தரங்கு அண்ணா யுனிவர்சிட்டி Alumni கிளப்பில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நானும் அதுக்காக ரெடி ஆகி கொண்டிருந்தேன். வெள்ளி கிழமைதான் அந்த கதைன்னா, சனி கிழமை நம்ம பொய் புலவர் குடிபிரகாஷ் வந்து அவனோட கேர்ள் பிரெண்டுடன் ஊர் சுற்ற என்னோடைய வண்டியை வாங்கி கொண்டு, அவனோட பிரெண்டு வண்டின்னு சொல்லிட்டு ஒரு பழைய பைக்கை கொடுத்தான். என்ன இதுல வித்தியாசம்னா, கை பிரேக் கொஞ்சமா இருந்துச்சு. கால் ப்ரேக் கொஞ்சம் கூட இல்ல. 

ஆனால் இந்த முறை நான் கொஞ்சம் முன்னாடியே பிரேக் இல்லன்னு தெரிஞ்சு சுதாரிசுக்கிட்டு ரொம்ப மெதுவாவே ஓட்டிட்டு போனேன். ஆனா என்ன, சைக்கிள்ல போறவன்னேல்லாம் சைடு வாங்கிட்டு போய்கிட்டு இருந்தான். நானும் ஏதோ வண்டிய ஓரம்கட்டி நிறுத்தற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு நாப்பது கிலோமீட்டர் போய்ட்டு வந்துட்டேன். 


"கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்" 

இதுல ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லிவைக்காம என்ன பண்ணுனாங்கன்னா? என்னோட பிறந்த நாளுக்கு ஏதோ சர்பிரைஸா கிப்ட் கொடுக்கற மாதிரி, பைக்க பத்தி எதுவுமே சொல்லாம என்கிட்ட பைக்க கொடுத்துட்டானுன்ங்க. பாவி பசங்க.

What a Scary weak end!




 


Jul 8, 2010

கிரெடிட் கார்டு Vs டெபிட் கார்டு (Real life Comparison)



இந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் நிறையவே சம்பந்தங்கள் இருக்கிறது.


கிரெடிட் கார்டு வச்சிருகிறதுங்கறது, ஒரு பொண்டாட்டியை கட்டி குடும்பம் நடத்துவது மாதிரி. ஒன்றே ஒன்று இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையை கஷ்டப்படாமல் ஓட்ட முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்துக் கொள்வது கல்யாணமாகாத பேச்சுலர் வாழ்க்கை மாதிரி. வாழ்க்கைய மிக சந்தோசமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நம்முடைய தேவைக்கேத்த மாதிரி வாழலாம்.

கிரெடிட் கார்டாக இருந்தாலும், பொண்டாட்டியாக இருந்தாலும் ஒன்றுக்கு மேல் போனால், நீங்கள் கோடிஸ்வரனாக இருந்தாலும் அது உங்களை தெருக்கோடி பிச்சைக்காரன் ஆக்கி விடும். எங்கே?, எப்போது?, எதற்க்காக?, யாருக்காக? கடன் வாங்கினோம் என்றே தெரியாமல் போய்விடும். அதே போல் ஒரு பொண்டாட்டிய திருப்தி படுத்தறதே பெரிய விஷயம் (கேட்கறத வாங்கி கொடுத்து. ஹி! ஹி! ). ஆனா டெபிட் கார்ட்டில் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அதை பார்த்து, யாருக்கும் பயப்படாமல், செலவு செய்யலாம். "பெண் சிங்கம்", "வெளுத்து கட்டு" போன்றஅரிய படங்களை கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி சிரிச்சுகிட்டே பாக்கலாம்.

வெளியே கடைகளில் ஷாப்பிங் போகும் போதோ, சாப்பிட ரெஸ்டாரென்ட்க்கு போகையிலோ, கிரெடிட் கார்டு உள்ள மதிப்பே தனி தான். அதேதான், சொந்தகாரங்க வீட்டிற்கு போகும் போதோ, அப்பார்ட்மென்ட்ல வாடகைக்கு வீடு கேட்கும் போதோ, கல்யாணம் ஆகி பேமலியோட போனால் தான் மரியாதை கிடைக்கும். "சார் கார்டுல பேலன்ஸ் இல்ல", "இங்க டெபிட் கார்டெல்லாம் Accept பண்ன மாட்டோம்"ன்னு அசால்ட்டா சொல்லி அசிங்க படுத்திடுவாங்க. பேச்சுலர் ஒருத்தன் வாடைகைக்கு வீடு கேட்க போகும் போது, பிச்சைக்காரனும் அங்கே வந்தான் என்றால், முதலில் நம்மளை துரத்திவிட்டு அப்புறம் தான் பிச்சைகாரனை துரத்துவார்கள். (எங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கிற புறா கூட என்னோட பைக்க தேடி புடிச்சு அசிங்கம் பண்ணிட்டு போய்டுதுங்க).

கையில் சுத்தமாக காசு இல்லை என்றால் கூட, கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி, அப்போதைக்கு ATM -ல் பணம் எடுத்து கொள்ளலாம். பொண்டாட்டிக்கிட்டேயோ அல்லது அவள் அப்பன்கிட்டேயோ பணத்தை வாங்கி விட்டு "அப்புறம் குடுக்கிறேன்னு" அல்வா குடுக்கற மாதிரி. ஆனால் காசே இல்லாமல் டெபிட் கார்டு மூலம் ATM -ல் பணம் எடுக்க போனீங்க என்றால், ATM மெசினே மூஞ்சில எச்சில் துப்பிடும். வேலை இல்லாமல் பேச்சுலராக சுற்றி கொண்டு இருந்தீங்க என்றால் பிரெண்ட்ஸ், சொந்தகாரங்க ஒருத்தனும் பைசா குடுக்க மாட்டாங்க.

சாப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணி மாதா மாதம் அக்கௌன்ட் நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருந்தீங்கன்னா Golden, Platinum ன்னு சும்மாவே கூப்பிட்டு கிரெடிட் கார்டு கொடுப்பது போல, கிலோ கணக்குல தங்கத்தொடும் அவங்க பொண்ணையும் போட்டி போட்டுக்கிட்டு கொடுப்பாங்க. ஆனா வேலை இல்லாம வெட்டிபயலாக சுற்றிக்கொண்டு இருந்தீங்கனா, டெபிட் கார்டுக்கு அக்கௌன்ட் ஓபன் பண்ணறதுக்கே 500, 1000 ரூபாய் இருந்தால் தான் பண்ன முடியும். பொண்ணு கூட நாமளாக தான் கேராளாவில் இருந்து காசு போட்டு கட்டிகிட்டு வரணும். 

நீங்க குடும்பஸ்தரா?

கிரெடிட் கார்டு வைத்திருந்தீங்கன்னா தூக்கி எறிஞ்சுடுங்க. அப்படி நீங்களும், ரெண்டுமே வச்சு இருக்கணும்ன்னு ஆசை பட்டால், கிரெடிட் கார்டு தூக்கி எறிந்த இடத்தை உங்கள் மனைவிக்கு காண்பித்து விடுங்க. அப்புறம் அவங்களுக்கு தெரியும் என்னென்ன வாங்கனும்னு (அவங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும்).

சமையல் பாத்திரத்தியே அப்படி கை வலிக்க தேய்த்து கழுவறவங்களுக்கு, கிரெடிட் கார்டு தேய்க்கறது எல்லாம் சப்ப மேட்டரு. அதன் பின் தினமும் உங்க வீட்டில் பாச கணவனுக்கு பாராட்டு விழா நடக்கும்.  கலைஞர் தாத்தா மாதிரி உட்கார்ந்து கொண்டு சிரிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.

இதை படித்து விட்டீர்களா?

இப்போ உங்க கிரெடிட் கார்டு எங்கே இருக்குன்னு பாருங்க. அப்புறம் உங்க மனைவி வீட்டில் இருக்காங்களான்னு செக் பண்ணுங்க. இரண்டுமே இல்லையா? கவலை படாதிங்க. அப்படியே உங்க ப்ரவுசர்ல இன்னொரு Tab ஓபன் பண்ணி கிரெடிட் கார்டு வெப் சைட்ல Login ஆகி எவ்வளவு பில் வந்திருக்குன்னு மட்டும் பாருங்க. வேற எதுவும் உங்களால பண்ண முடியாது.


நீங்க பேச்சுலரா? 

உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிரெடிட் கார்டு வச்சுகாதிங்க.  கிரெடிட் கார்டு வச்சுக்கனும்ன்னா கல்யாணம் பண்ணிக்காதிங்க. இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி கல்யாணம் பண்ணுணீங்கனா, அந்த கிரெடிட் கார்டை தூக்கி உங்க பொண்டாட்டி கையில் கொடுத்து விடாதிர்கள்.