Sep 1, 2010

நான் மகான் அல்ல - நமீதா திரை விமர்சனம்

இந்த வாரம் முழுதும் எதுவுமே எழுத யோசிக்க முடியல. சின்ன வயசுல கடவுள் கிட்ட நல்லா படிக்கணும்ன்னு வேண்டுகிற மாதிரி, இப்ப பதிவு எழுத ஏதாவது தீம் கிடைக்கணும்ன்னு வேண்டணும் போல.




படத்தோட தலைப்பை பார்த்து முதலில் ஒரு வித்தியாசமான கதை அம்சம் உள்ள படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனா படத்துல நினைத்த மாதிரி கதை அம்சம் இல்லைனாலும், திரைக்கதை அம்சமாக இருந்துச்சு.

தன்னோட பிரெண்டோட கல்யாணத்துல காஜல் அகர்வால பார்த்து சைட் அடிச்சு, லவ் பண்ணறாரு ஹீரோ கார்த்தி. இதற்கு இடையில கஞ்சா அடிச்சிகிட்டு காலேஜ் படிக்கிற ஒரு நாலு பசங்க, நிறைய பொண்ணுங்கள ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. அந்த மாதிரி ஆகுற ஒரு கொலைக்கு, கால் டாக்சி டிரைவர் ஆக வேலை செய்யுற கார்த்தியோட அப்பா சாட்சி ஆக மாற, அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடறாங்க. உடனே இதை எல்லாம் மன்னிக்க நான் மகான் அல்ல ( படத்தோட தலைப்புக்கு சம்பந்தம் வந்துடுச்சா? )  என சொல்லி கார்த்தி, கத்தி இல்லாம புறப்பட்டு போய் அந்த பசங்க எல்லோருக்கும் பாடை கட்டறது தான் கதை.


தெலுங்குல "மகதீரா"வும், "ஆர்யா 2"  படமும் பார்த்ததில் இருந்து, காஜல எனக்கு நிறையவே பிடிச்சிருச்சு.  மிகவும் அழகான, அவ்வளவு பெரிய கண்ணு (கீழ இருக்கிற படத்த பாத்துட்டு கண்ணு மட்டும் தானா அப்படின்னு கேட்க கூடாது). "கோலிகுண்டு கண்ணு, கோவப்பழ உதடு" பாட்டு இவங்களுக்கு மிகவும் பொருத்தமா இருக்கும். இப்பவெல்லாம் காஜல் தான் தினமும் என் கனவுல வந்து கஜல் பாடறாங்க. ஹி! ஹி!







கார்த்தி துரு துருன்னு ஜாலியான கேரக்டர். காமெடி பண்றதுல விஜய்க்கு போட்டியா ( ;-) வர நிறைய சான்ஸ். இவருக்கு நல்ல நல்ல படமா அமையுது. காதல், சண்டைன்னு கலக்குறாரு. அதுவும் அவங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் பழிவாங்க புறப்பட்டு போகும் போது, அவரோட அண்ணன் மாதிரி இவரும் சிங்கம்ன்னு நிரூபிக்கிறார்.

யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. யுவன் பாடுன "கண்ணோடு காதல் வந்தால்" பாட்டு அசத்தல். "ஒரு மாலை நேரம்" பாட்டு படத்துல வரல. நானும் எங்கடா இடைவேளைக்கு அப்புறம் ஹீரோயினோட முகத்த ஒரு தடவ காமிச்சு, இந்த பாட்ட போட்டுருவான்களோ அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன். பரவால்ல அந்த மாதிரி டைரக்டர் ஏதும் think பண்ணலை.

படத்தோட முதல் பாதி காதல் ரொமான்ஸ், காமெடின்னு சூப்பரா போகுது. இரண்டாவது பாதி முழுதும் பழி வாங்கும் படலம். அதிக வன்முறை. அந்த பசங்க வர்ற சீன் எல்லாமே படு பயங்கரமா இருக்கு. பிரெண்டோட காதல், அவனோட காதலியையே கற்பழித்து கொல்றது, இது எல்லாமே இப்போ நம்ம நாட்டுல நடக்கிறத வெளிப்படுத்துற காட்சிகள்.

அதனால் குழந்தை குட்டிகளோட படம் பார்க்க போனிங்கன்னா, இடை வேளைக்கு அப்புறம் உங்க குழந்தைகளுக்கு ரெண்டு பாப்கார்ன் பாக்கெட் வாங்கி கொடுத்து கூட்டி கிட்டு வந்துருங்க.

இந்த படம் படு மொக்கையாக போய்ட்டா, இந்த மாதிரி படத்த பார்க்க நானும் மகான் அல்ல என்று நமீதா டச் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா படம் எஸ்கேப் ஆகிடுச்சு. அதனால,

நமீதா டச் : நான் மகான் அல்ல, இனிது இனிது இடைவேளை வரை.



டிஸ்கி: நமீதா பெயரை ஹிட்ஸ்க்காக மட்டுமே உபயோக படுத்தியுள்ளேன். இதை தவிர, சத்தியமாக எனக்கும் நமீதாவுக்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை.





7 comments:

Madurai pandi said...

Naan innaiku idhe padatha parthen... Climax fight la background music romba superu... fight ku oru energy kuduthuchu,.. I like this film...

பழமைபேசி said...

ஓட்டுப் போடும் வசதி அலுவலகத்தில் லேது!!

ஜில்தண்ணி said...

/// இப்பவெல்லாம் காஜல் தான் தினமும் என் கனவுல வந்து கஜல் பாடறாங்க. ஹி! ஹி! ///

நிலா போயி கஜல் வந்தாச்சா :) நல்லா இருந்தா சரி

// விஜய்க்கு போட்டியா வர நிறைய சான்ஸ் //

கார்த்தி இத படிச்சாருன்னா :) இனிமேல் படமே நடிக்கலடா சாமீன்னு ஓடிடுவாரு :)

ஜில்தண்ணி said...

மச்சி விமர்சனம் எழுதுறதுல ரொம்ப முன்னேரிட்ட:) எல்லாம் சரளமா போட்டு தாக்குற, நல்லாருக்கு

தொடர்ந்து நடத்து :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

படம் நல்ல இருக்கோ இல்லையோ... உங்க விமர்சனம் சூப்பர்...

Anonymous said...

காஜல் = கஜல்!
என்ன நண்பா இவ்ளோ லேட்டா விமர்சனம்?
டிக்கெட் கிடைக்கலையா?
"விஜய்க்கு போட்டியா?"
ஏன் இப்பிடி? கார்த்தியாவது நல்லா இருக்கட்டுமே!

Katz said...

நன்றி! மதுரை பாண்டி

@ பழமைபேசி - பரவால்ல, ரேப்புக்கு வீட்டுல வந்து ஒட்டு போடுங்க.

//ஜில்தண்ணி - யோகேஷ் said...

நிலா போயி கஜல் வந்தாச்சா :) நல்லா இருந்தா சரி //

நன்றி jillu.

யாதும் என் பிகரே.

//அப்பாவி தங்கமணி said...

படம் நல்ல இருக்கோ இல்லையோ... உங்க விமர்சனம் சூப்பர்...//

உங்க கமெண்ட்ஸ்ம் சூப்பர்... ஹி! ஹி!


Balaji saravana said...

// காஜல் = கஜல்!
என்ன நண்பா இவ்ளோ லேட்டா விமர்சனம்?
டிக்கெட் கிடைக்கலையா? //

போன வியாழக்கிழமையே படம் பார்த்தாச்சு. சோம்பேறி தனம் தான்.


// "விஜய்க்கு போட்டியா?"
ஏன் இப்பிடி? கார்த்தியாவது நல்லா இருக்கட்டுமே!//

காஜல் கூட டூயட் பாடுன பொறாமை தான். அதனால் தான் விஜய வச்சு பலி வாங்கிட்டேன்.