August 25, 2010

கூவம் நடுவர் நீதி மன்றம் ( நாட்டுக்கு தேவையான செய்திகள் )

இது நகைச்சுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை.

                                            Pic Courtesy : http://maheshworks.blogspot.com/

தினமலர் செய்தி - இந்தியர் தானா என்று கேள்வி : ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம்

கபில்சிபல் : கவலை படாதிங்க! ஆனந்த். இந்த வருடம் NDTV - யோட இந்தியன் ஆப் தி இயர் அவார்ட் உங்களுக்கு தான்.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி -  வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள். "செக்' வைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

ஆமா, இனிமே நீங்க தான் 'செக்' வைக்கணும். இவ்வளவு நாளா இந்தியாவுக்காக 'செக்' வச்சுக்கிட்டு இருந்த விஸ்வநாத் ஆனந்தையும் இந்தியானான்னு கேட்டு காண்டு ஆக்கிட்டிங்க. 

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - புதிய இன்ஜி., கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது : பொன்முடி

மிகவும் பொன்னான முடிவு.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - மெகா சீரியலில் நடிக்கிறார் மதுபாலா

சின்ன சின்ன ஆசை. சின்னத் திரையில் சிறகடிக்க ஆசை.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - மகளிருக்கு 50 சத இட ஒதுக்கீடு: பெண்ணியம் மாநாட்டில் தீர்மானம்

என்னோட பைக்ல கூட 50 சதவிகிதம் உட்கார இடம் இருக்கு. யாராவது வர்றிங்களா?

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------
தினமலர் செய்தி - இலங்கை தமிழர்கள் நிலையை நேரில் ஆராய, கிருஷ்ணா பயணம்

கர்நாடகால இருந்து கிருஷ்ணா நீரை கொஞ்சம் நல்லா திறந்து விட்டிங்கனா, இங்கு இருக்கிற தமிழர்களாவது நல்லா இருப்பாங்க. 

கிருஷ்ணா நடுவர் நீதி மன்றம், காவிரி நடுவர் நீதி மன்றம் இப்படின்னு ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு மன்றம் இருக்கும் போது, கூவம் நடுவர் நீதி மன்றம் ஏன் இல்ல?

கூவம் என்ன பாவம் செஞ்சது?

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்

போனிவர்மா வந்த ராசி, இனியாவது தயாரிக்கிற எல்லா படமும் சூப்பரா போனி ஆகுமா?

இனிது இனிது - படத்துக்கு போனிவர்மா தான் டான்ஸ் மாஸ்டராம். பிரகாஷுக்கு இந்த திருமணமாவது (மறுமணம்) ஆட்டம் காணாமல் இருந்தால் சரி.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

3 Comments:

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// சின்ன சின்ன ஆசை. சின்னத் திரையில் சிறகடிக்க ஆசை. ///

அம்மா அல்லது சித்தி கேரக்டர்கள் தான் கிடைக்கும் :)

/// போனிவர்மா வந்த ராசி, இனியாவது தயாரிக்கிற எல்லா படமும் சூப்பரா போனி ஆகுமா? ///

பிரகாஷ்ராஜ்க்கு இது இரண்டாவது திருமணம் என்றால் போனிக்கு இவர் எத்தனாவது போனி ???

சி. கருணாகரசு said...

உங்க ஆதங்கத்த துடுக்குதனமா.... ரசிக்கும்படி தந்திருக்கிங்க நன்றி.
தொடர்ந்து கலக்குங்க.

பதிவுலகில் பாபு said...

ரசிக்கும்படியா எழுதியிருக்கீங்க.. நல்லாயிருக்கு..

Post a Comment