Aug 3, 2010

அன்பான பேய் வீடு - ஆபாயில்

ஆபாயிலுக்கு ஆதரவு தொடர்ந்து அளித்து, எனது முதல் ஆபாயிலையும் இன்ட்லியில் வெற்றி பெறச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.


பூம் பூம் ஷகலக்க:

கடந்த மாதம் ஊர்ல இருந்து வரும் போது டிரைன்ல டிக்கெட் கிடைக்காததால், சேலத்துல இருந்து சென்னைக்கு அரசு SETC பஸ்ல வரவேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு. சரி ஏழு மணி நேரம் கொஞ்சம் கஷ்டப்பட்டு உட்காந்துகிட்டு வந்திடலாம்ன்னு நினைச்சேன். ஆனா போன வுடனே BOOM TV போட்டு அந்த ஏழு மணி நேரத்தையும் எனக்கு ஏழரையா மாத்திட்டாங்க. தீவிரவாதிக்கு கொஞ்சம் கொஞ்சமா ஷாக் கொடுத்து சித்ரவதை பண்ற மாதிரி, நம்ம மாஞ்ச வேலு வந்து காமெடி, டான்சு பைட்டுன்னு தனி தனியா பண்ணி காமித்து என்னை டர்ராகிட்டார். நிஜமேலும் நான் ஷாக் ஆயிட்டேன். உங்களுக்கு சத்தியமா நெஞ்சுல மாஞ்சா இருந்தா முழு படத்தையும் பாருங்க. இதுக்கு நடுவுல நம்ம நாசர் சார் அடிக்கடி ஒரு கம்பிய தூக்கிட்டு வந்து, இது தான் அசத்தலான முறுக்கு கம்பின்னு சொல்லி என்னோட கழுத்துல மாட்டி முறுக்கி என்னையும் அது உறுதியான கம்பின்னு ஒத்துக்க வச்சுட்டார் (உறுதியான கம்பிய எப்படி கையில முறுக்கிநார்ன்னு கேட்க கூடாது). இதுல போட்ட விளம்பரத்தையே திருப்பி திருப்பி போட்டு சாக அடிக்கறாங்க. இனி டிரையின் கிடைக்கலைனா பிளைட்டு தான்னு பஸ்ஸ விட்டு இறங்குனதுமே முடிவு பண்ணிட்டேன்.





போன வாரம் சனி கிழமை நேரம் போகலைன்னுட்டு, ராயபேட்டைல புதுசா ஓபன் பண்ணி இருக்க "எக்ஸ்பிரஸ் அவென்யு" மாலுக்கு என் நண்பனோடு போயிருந்தேன். ஸ்பென்சர்க்கு எதிர்ல சிட்டி பேங்க்க்கு பின்புறமா அமைந்திருக்கு. சவுத் இந்தியாவிலே மிக பெரிய மால் இதுதான்னு சொல்றாங்க. இந்த "அவென்யு" மால் கண்டிப்பா ஸ்பென்சரோட  கூட்டத்தையெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி அசால்ட்டா அடிச்சு சுருட்ட போகுது. உள்ள போனா அதி பிரமாண்டமாகவே இருக்கு. இப்பதான் 60 சதவிகிதம் கடைகள் வந்திருக்கு. இன்னும் நிறைய வர போகுது. சத்யம் தியேட்டர் இங்கே தன்னோட கிளைய, 8 ஸ்க்ரீன் உடன் ஓபன் பண்ண போகுதாம். Life Style மூணு floor -லயும் இருக்கு. Life Style -ல  கலேக்சனும்  அதிகம் கூடவே காசும். நானும் ஏதாவது டீ ஷர்ட் எடுக்கலாம்னு பார்த்தா பொம்மைக்கு போட்டு இருக்கிற ஷர்ட், பேன்ட் எல்லாம் படு சூப்பரா இருக்கு.  இதை வைத்து ஒரு கவிதை "என் பொம்முக்குட்டி காதலிக்கு".


மூணாவது floor -ல Food Court. பூந்தமல்லி Sky Walk மால் மாதிரியே, இங்கேயும் எங்க போய் சாப்பிடறதா இருந்தாலும், ஒரு கார்டு கொடுப்பாங்க. அதுல சாப்பிட எவ்வளவு செலவு ஆகுமோ அந்த அளவுக்கு பணத்த கொடுத்து (No Credit/Debit Card) அந்த கார்ட்ல top -up பண்ணிக்கணும். அப்புறம் இந்த கார்ட காமிச்சு எதெது வேணுமோ அந்தந்த கடைல போய் வாங்கி சாப்பிடலாம். போகும் போது கார்ட திருப்பி கொடுத்து கார்ட்ல மிச்சம் இருக்கிற பணத்த வாங்கிக்கலாம். Window Shopping  போறதுன்னு முடிவு எடுத்துட்டிங்கன்னா பஸ்ல போயிடுங்க. பைக்ல போயிட்டு நாலு மணி நேரம் சுத்திட்டு வந்திங்கன்னா பார்கிங் சார்ஜ் ரெண்டு வீலுக்கும் சேர்த்து பஞ்சர் போடுறத விட அதிகமாயிடும். முதல் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபா. அப்புறம் ஆகுற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 ரூபா. அந்த பார்கிங் டிக்கெட்ட தொலைச்சுட்டிங்கன்னா, 250 ரூபா பைன். Four வீலர்ன்னா Just 500.




மிழ்ல பேய் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு அப்படின்னு ஆனந்தபுரத்து வீடு படம் பார்க்க போனேன். ஆஹா! இந்த மாதிரி ஜாலியா, சந்தோசமா ஒரு பேய் படத்த ரசித்து ரசித்து இதுவரை பார்த்ததே இல்ல. ஏன்னா, இது ரொம்ப நல்ல பேய். அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு சமைக்கறது, துணி துவைக்கிறதுன்னு எல்லா வேலையும் பேயே செய்யுதுங்க. இந்த மாதிரி ஒரு பேய் எங்க ரூம்ல இருந்தா பரவால்லைன்னு தோணுது. ஏன்னா, ரூம்ல பசங்க எந்திரிச்சவுடனே ஒழுங்கா பெட் சீட் மடிச்சு வைக்கறதில்ல. சமைச்சா அந்த பாத்திரத்த கழுவறதில்லை. படம் முடிஞ்சு "Film by நாகா" ன்னு இயக்குனர் பெயரை போடும் போது தான் எனக்கு கொஞ்சம் பயமாவே இருந்துச்சு.

நமீதா டச்: ஆனந்தபுரத்து வீடு, அன்பான பேய் வீடு.




5 comments:

Anonymous said...

very nice pa

Anonymous said...

ஆபாயில் நல்லா இருக்கு பட் சூடு தான் பத்தல தல!
இன்னும் என் கோரிக்கைய பரிசீலனை பண்ணலையா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆபாயில் சூப்பர்.. பேப்பரும், உப்பும் சரியா இருக்கு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

nice crisps

என்னைக் கவர்ந்தவை said...

Ennavo po nalla irukku
Dubai irukura Engalukku Chennai news koduthinka