Aug 9, 2010

முட்டைகள் தட்டுப்பாடு - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ஆபாயிலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகறதால், கோழிகளே திக்கு முக்காடி போய் முட்டைகள் அதிகமாக போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன. ஆபாயிலின் அதீத வரவேற்பால் இந்த மாதம் முட்டைகளின் தட்டுப்பாடு மிகப்பெரும் அளவில் ஏற்பட்டுள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு கோழிகள் அதிக முட்டைகள் இட தவறும் பட்சத்தில், சுகுணா சிக்கன் சென்டருக்கு அனுப்பப்படும் என்றும் கோழிகளுக்கு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.



ப்பவெல்லாம் என்னதான் ஆல்-அவுட், மார்டின் யூஸ் பண்ணுனா கூட, இந்த கொசுவெல்லாம் சாகறதில்ல. அதனால மக்கள் நூறு, நூத்தம்பது ரூபான்னு போட்டு கொசு அடிக்கற பேட் தான் வாங்குறாங்க. மார்கெட்லயும் ஏகப்பட்ட பேட்கள் விதவிதமா விற்குது. டீவில கூட தற்போது மஸ்கிட்டோ காயில், லிக்விட் விளம்பரம் போடுறத அதிகமா பார்க்க முடியறதில்ல. ஒருவேளை அவங்களே பேட் தான் யூஸ் பண்றாங்களோ என்னவோ?

அதுவும் டப்பு டப்புன்னு சவுண்டோட, கொசு சாகுறதும் கண்ணுக்கு தெரியறதனால சின்ன பசங்க எல்லாம் (சில சமயம் பெரியவங்க கூட) சந்தோசமா தீபாவளிக்கு கொல்லு பட்டாசு வெடிக்கற மாதிரி அடிச்சு பட்டையக் கிளப்புறாங்க (வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சு டோய்... ). தற்போது சென்னைல இருக்கிற வீட்டுல எல்லாம் செட்டில் கார்க் பேட் இருக்கோ இல்லையோ ஆனா இத வச்சு இருக்காங்க. அதனால இந்த பேட் தயாரிக்கிற கம்பனிகள் டெண்டுல்கர வச்சு, அவரு அந்த பேட்ட யூஸ் பண்ணி கொசு அடிச்சு கொல்ற மாதிரி விளம்பரம் எடுத்தா, பேட் வியாபாரம் இன்னும் பிச்சுகிட்டு ஓடும்.




ர்செல் கஸ்டமர் கேர்ல இருந்து போன் பண்ணி,

"சார், உங்க செல் போன் சுவிட்ச் ஆப் ஆன போது ஏதாவது கால் வந்துச்சுனா அதை பத்தி உடனே உங்களுக்கு மெசேஜ் அனுப்பற மாதிரி வசதி இப்ப புதுசா கொண்டு வந்து இருக்கோம். யூஸ் பண்ணி பார்க்கறிங்களா?" என்று கேட்டார்கள்.

எனக்கெல்லாம் செல் ஆன் பண்ணி வச்சு இருக்கும் போதே எந்த காலும் வர மாட்டேங்குது (பெண்கள் கவனிக்கவும்). இதுல ஆப் பண்ணி வச்சு இருக்கும்போது பத்தி பேசறான் பிக்காலி பய!. சரி, அதுக்கு எவ்வளவுன்னு கேட்டா மெசேஜ் கட்டர் மாதிரி ஒரு நாளைக்கு ஒரு ரூபாயாம். மாசம் முப்பது ரூபா. ஏன்டா தினமும் யாருக்காவது செல் போன் ஆப் ஆகுமா? கொள்ளை அடிக்கறதில்ல ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா?

ற்போது வலை உலகத்துல காம்படீஷன் அதிகமாயிடுச்சு. தற்போது அட்டு படத்த பார்த்து விமர்சனம் எழுதி கொண்டிருந்த நம் பதிவர்கள் இப்போ பிட்டு படத்தையும் போட்டி போட்டுக்கிட்டு பார்த்து அலசி ஆராய்ந்து விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாமளும் தாக்கு பிடிக்கணும்னா சின்ன வயசுல பார்த்தத கண்டின்யூ பண்ணனும் போல. என்னை மறுபடியும் தியேட்டர் போய் பிட்டு படம் பார்க்க வச்சுடாதிங்கப்பா! (நான் திருந்தி ரொம்ப வருஷம் ஆச்சு!!!)

நான் கடைசியா பார்த்த அட்டு படம் பானா காத்தாடி. சத்யம் தியேட்டர்ல மதராச பட்டணம் படத்தோட இண்டர்வெல்ல போட்ட டிரைலர பார்த்து ஓரளவுக்காவது இருக்கும்ன்னு நம்பி போன படம்.  படம் ஓரளவுக்கு சுமாரா இருந்திருந்தால் நமீதா விமர்சனமா போட்டிருக்கலாம். பானா காத்தாடினா என்னன்னு பட்டம் விடற பசங்களுக்கு மட்டுமே தெரியலாம். படத்துல அந்த பானா காத்தாடிய பார்த்து ஏதோ அலாவுதினோட அற்புத விளக்கு ரேஞ்சுக்கு சீன் விடறானுங்க. படத்தில இருந்த ஒரு நல்ல விஷயம் கதாநாயகி நல்லா கும்முன்னு இருந்தாங்க. சாதரணமாக பாட்டுக்கு மட்டும் வெளிய எந்திருச்சு போய் தம் அடிக்கிற மக்கள், படம் ஓடி கொண்டிருக்கும் போதே கிளம்பிடறாங்க (நானும் இது மாதிரி வெளிய எந்திரிச்சு போகுறதுக்காகவே தம் அடிக்க கத்துக்கணும் போல). இன்டர்வெல்லுக்கு முன்னாடி வந்த டிவிஸ்டு பார்த்து அதிர்ச்சியாகி பாதியிலே வெளிய வந்துட்டேன். படு சினிமாத்தனம்.

ந்திரன் படத்த பத்தியோ இல்ல பாட்ட பத்தியோ ஏதாவது ஒரு போஸ்ட் போட்டா தான் மத்தவங்களும் நம்மள பதிவர்ன்னு மதிப்பாங்க போல. படம் சிவாஜி அளவுக்கு கொடுமையா இருக்காதுங்கறது மட்டும் என் நம்பிக்கை. முதலும் கடைசியுமா ரஜினி கூட (61) இவ்வளவு வயசு அதிகமா ஒரு கதாநாயகியா நடிக்கறது ஐஸ்வர்யா ராயாத்தான்(37) இருக்கும். எந்திரன் வெளியாகும் போதும் பிட்டு படத்துக்கு கூட தியேட்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.




7 comments:

Riyas said...

சூப்பருங்கோ.. தொடருங்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆபாயில் மேலும் சுவை அதிகரித்துள்ளது....

சிநேகிதன் அக்பர் said...

நல்ல சுடச்சுட இருந்தது.

ஏர்செல் : சவுதியில் இது போன்ற சேவைகள் அனைத்தும் ஃப்ரி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா.. எல்லாமே நல்லா இருக்குங்க.. :-)))

Anonymous said...

நைஸ் ஆபாயில் நண்பா!

ம.தி.சுதா said...

அடடா நாக்கை சுட்டிடுச்சு அருமை சகோதரா

ஜில்தண்ணி said...

/////நாமளும் தாக்கு பிடிக்கணும்னா சின்ன வயசுல பார்த்தத கண்டின்யூ பண்ணனும் போல. என்னை மறுபடியும் தியேட்டர் போய் பிட்டு படம் பார்க்க வச்சுடாதிங்கப்பா! (நான் திருந்தி ரொம்ப வருஷம் ஆச்சு!!!) ////

உண்மைதான் மாப்ள
நான் வேலைய ஆரம்பிச்சிட்டேன் :)

//// படத்தில இருந்த ஒரு நல்ல விஷயம் கதாநாயகி நல்லா கும்முன்னு இருந்தாங்க ///

போட்டோ போட்டிருந்தா கொஞ்சம் ஜொள்ளு விட்டுட்டு போயிருப்போம் சரி விடு :)

அப்பரம் அந்த கொசு பேட் இப்ப எங்க வீட்ல வீணா போச்சு,அதுல ஷட்டிலும் விளையாட முடியாதே :)