Jan 5, 2018

அம்மாபிள்ளை அர்னால்டு




அமெரிக்க மாகாணத்தின் அம்மா பேரவையின் தலைவர் அர்னால்டு எந்திரன் 1.0 வெளியீட்டுக்கு வந்து அம்மாவுடன் அன்பு குலாவி நலம் விசாரித்து விட்டு சென்றார். இப்போது 2.0 ரிலீசுக்கு வந்தவர் அம்மாவை காண ஏர்போர்ட்டில் இருந்து நேராக போயஸ்கார்டானுக்கு வண்டியை விடுகிறார். ஆள் அரவம் அதிகம் இல்லாமல் காட்சியளிக்கும் கார்டனை பார்த்தவுடன் லேசாக அதிர்ச்சி அடைகிறார். அம்மாவின் அன்பு மகன் அர்னால்டுக்கு வந்ததை கண்டு அவருக்கு ஆறுதல் சொல்ல பிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் பம்மிக்கொண்டே ஓடி வருகின்றனர். உள்ளே நுழைந்ததும் அம்மாவின் உருவ படத்துக்கு மாலை போட்டதை பார்த்த டெர்மினேட்டரின் இரும்பு இதயம் நொறுங்குகிறது. "டேய் என்னடா போட்டோவை வச்சிருக்கீங்க? அம்மாவை என்னடா பண்ணுனீங்க?" என்று கேட்க, "சின்னம்மா, நம்ம அம்மாவை ஆக்சிஜன் கொடுக்காம கொன்னுட்டா. அம்மாவை கொண்டு போய் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சாச்சு" என்றனர் இருவரும் கோரஸாக. "யாரை கேட்டு கொண்டு போனீங்க, அம்மாவோட கால பிடிச்சு ஒரு தடவையாச்சும் அழுத்திருப்பனே" என்று கதற,

 "கால கூட விட்டு வைக்கல பாவி பசங்க" என்று துண்டை வாயில் வைத்து கொண்டு அழுதனர். "அதுவரைக்கும் நீங்க என்னடா பண்ணுனீங்க?" என்று கேட்க எல்லோரும் மௌனமாக நின்றனர். ஆத்திரம் அடைந்த அர்னால்டு டெர்மினேட்டரில் பயன்படுத்திய பெரிய கன்னை பிடலின் திருநீறுக்கு நடுவில் உள்ள சிகப்பு பொட்டில் வைத்து மிரட்டி கேட்டார். அப்போது "நான் தர்ம யுத்தம் செய்தேன்" என பிடல் உளற, "நான் காபியில் மிக்ஸர் போட்டு சாப்பிட்டேன்" என்று சொல்லி சேகுவாரா சிரிக்க, "அம்மா இட்லி சாப்பிட்டதா பொய் சொன்னோம்" என திண்டுக்கல் ரீட்டா சொல்ல, "வெளியில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம்" என சறுக்கு மரம் சொல்ல, ஒவ்வொருவராய் உண்மையை ஒப்பு கொண்டு வரிசையாய் காலில் விழுந்தனர்.

இவர்களை பிறகு பார்த்து கொள்ளலாம் என மெரினா பீச்சுக்கு புறப்பட்டு போய், சமாதியை கட்டி புரண்டு அழுகிறார் அர்னால்டு. தினகரன் பின்னே சென்று தோளை தட்டி, "தம்பி, இவரும் உங்க ரிலேஷன் தான், ஆனா உங்க மம்மி சமாதி அங்க இருக்கு பாரு" என்று கை காட்ட, எம்ஜியார் சமாதியிலேயே எல்லா எமோஷனையும் கொட்டி தீர்த்ததால், அம்மா சமாதிக்கு சென்று வாய் திறக்கும் போதும் நா வறண்டு விட்டது. என்ன இருந்தாலும் ஹாலிவுட் ஹீரோ அல்லவா? துரைசிங்கத்தை போல எதிரிகளிடம் நாக்கு வரலாமல் பேச முடியாது. அதிலும் அர்னால்டு, அவர் படத்திலியே அதிகம் பேச மாட்டார்.

அந்த நேரம் "இந்தாங்க இத குடிங்க" என்று ஒரு ஆண் குரல் கேட்க, அங்கே சுருதி ஹாசன் ஒரு பேண்டா பாட்டிலை நீட்டுகிறார். அதை வாங்கி குடித்தவர் கொண்டு வந்த கன்னை சமாதியின் மேல் வைத்து விட்டு "அதிமுக கட்சியை காப்பாற்றி, அம்மாவை கொன்ற தீய சக்திகளை பழி வாங்கி தீருவேன்" என்று ஓங்கி சபதம் போட கையை தூக்கிய போது சமாதியை கவனிக்கிறார். ஆங்காங்கே நிறைய விரிசல்களுடன் காண படுகிறது சமாதி. வெகுண்டெழுந்த அர்னால்டு "பிக்காளி பசங்களா, அம்மாவுக்கு சமாதி கட்றதுல கூட ஊழல் பண்ணீட்டீங்களேடா?" என்று சொல்லி கொண்டே கன்னை எடுத்து அனைவரையும் சுட போக, பதறியபடி அவர் காலில் விழுந்த அவர்கள் "அது சின்னம்மா போட்ட சாபத்தால் உடைஞ்சது" என்று தெரிவிக்கின்றனர். "சரி, ஏண்டா எதுக்கெடுத்தாலும் கால்ல விழறீங்க" என கேட்க, "ஓல்ட் ஹேபிட் ஆர் டை ஹார்ட்" என பிடல் பட்டர் ஆங்கிலத்தில் பேசுகிறார். "ஒரு பொம்பள சபதம் போட்டு இப்படி தரையை ஒடச்சுருக்கா. அப்போ எவ்ளோ பெரிய வில்லியா இருப்பா?" என உள்ளுக்குள் சின்னம்மாவை நினைத்து லேசாக உதறல் எடுக்கிறது அர்னால்ட்டுக்கு. டெர்மினேட்டரின் முதல் பாகத்தில் வரும் வில்லியின் மறுஉருவமாக சின்னம்மா இருக்கலாமோ என யோசித்தபடி எந்திரன் ரிலீஸ் பங்க்சனுக்கு நடையை கட்டுகிறார். ஆனாலும் அவர் மனதில் ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டே இருந்தது.

"அப்போ அந்த இட்லியை சாப்பிட்டது யாரா இருக்கும்?"


Big Boss

போன வாரம் கிங்ஸ்மேன் முதல் பார்ட் (2104) பார்த்து கொண்டிருக்கும் போது முகேஷ் தான் நியாபகத்துக்கு வந்தார். கேன்சரால் செத்து போன நோயாளி முகேஷ் இல்லை. அனைவருக்கும் இலவசமாய் நெட்பேக்குடன் சிம் கொடுத்து பேஸ்புக்கில் புரட்சியை கொண்டு வந்த முகேஷ் அம்பானி தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகேஷின் பங்கு அளப்பரியது. போராளி ஜூலி அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

கிங்ஸ்மென்னில் வரும் வில்லன் ஒரு பெரும் தொழில் அதிபர். அவர் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ப்ரீ கால், ப்ரீ நெட் வசதியுடன் சிம்மை இலவசமாக தருகிறார். கிட்டத்தட்ட இந்தியாவில் நடந்தது போல மக்கள் இரவெல்லாம் நின்று அடித்து பிடித்து வாங்குகிறார்கள். அவருடைய பிளானே, சேட்டிலைட்டை பயன் படுத்தி அந்த சிம்மின் மூலம் நியுரோலொஜிக்கல் அலையை பரப்பி மக்களை ஒரு பைத்தியக்கார மனநிலைக்கு (RSS கும்பலை போல) கொண்டு சென்று ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாக விட்டு, அதன் மூலம் சுற்று சூழலையும் இந்த பூமியையும் மக்கள் அழிப்பதில் இருந்து காப்பாற்றுவது தான் (அப்ப அவர் ஹீரோ தான?). பெரும் அரசியல் புள்ளிகள், பணக்காரர்கள் போன்ற குறிப்பிட்ட மக்களை மட்டும் தன் பக்கம் சேர்த்து கொள்கிறார். அவர்களுக்கெல்லாம் காதின் கீழே ஒரு ஆப்பரேசன் செய்து ஒரு சிப்பை பொருந்துகிறார். மோடியை குளோசப்பில் கவனித்தால் தெரியும், காதின் கீழே ஒரு தழும்பு இருக்கும்.

கார் Pooling செய்வது,
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருப்பது,
ஆபிஸில் Go Green விழா கொண்டாடுவது,
வீட்டில் கணபதி ஹோமம் செய்யாமல் இருப்பது,
அதிகம் கேஸ் விடுவதை தவிர்க்க, நான்வெஜ் சாப்பிடாமல் தவிர்ப்பது,
வெஜ் ஒன்லி போர்டை கேட்டில் மாட்டுவது,
பேலியோவை எதிர்ப்பது,

இதெல்லாம் அதிக பலன் தராது, சுத்த வேஸ்ட் என்கிறார்.

'பிக்பாஸ்' முகேஷ் எதற்கு அனைத்தையும் இலவசமாக தருகிறார் என்று நீங்களும் யோசிக்காமல் வாங்கி யூஸ் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். ஜியோ வாடிக்கையாளர்களே, கவனமாக இருங்கள். எந்நேரமும் ஜியோ சேட்டிலைட் உங்கள் சிம்மை 'ட்ரிகர்' செய்யலாம்.

ஜியோ சிம் வாங்கி மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தை கலாய்த்து மீம் போடுபவர்களுக்கு தெரியாது, மோடியின் கிளீன் இந்தியா திட்டமே இனிதான் ஆரம்பமென்று.

நான் சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கலாம். போன மாதம் வரை தமிழ்நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்த பிக்பாஸ் தயாரித்த நிறுவனம் கூட முகேஷ் உடையது தான். அவருக்கு எப்படி மக்களை ஆட்டு மந்தை கூட்டங்கள் போல மாற்றுவது என்று தெரியும்.

காசு வைத்து கொண்டு இலவசத்திற்கு அலைபவர்கள் பூமிக்கு எக்ஸ்டரா லக்கேஜ் தான்.


தியாக தலைவிகள்

அது சென்னையில் வெள்ளம் வந்த சமயம். மக்கள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகினர். மெழுகுவர்த்தி சப்ளையும் போதவில்லை. மக்கள் படும் துன்பத்தை கண்டு, வெகுண்டெழுந்த அம்மா தன் அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்து விட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தானே விருப்பத்துடன் சிறைக்கு சென்றார். இரவு பகலாக மெழுகுவர்த்தி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டார். சிறை நிர்வாகமும் அம்மா விரும்பும் போது, சிறையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம் என்று அறிக்கை விட்டது. அயராது உழைத்ததில் அவரின் உடல்நிலை மோசமாகி அப்பல்லோவில் சேர்ந்து இட்லி கிடைக்காமல் தன் இன்னுயிரை நீத்தது நம் அனைவருக்கும் தெரியும். அம்மா இறந்த பின் அவருடன் உடன்கட்டை ஏற துணிந்த, அவரது உடன்பிறவா தோழியான சின்னம்மாவும் அம்மாவின் வழியே சிறைக்கு சென்று, மெழுகுவர்த்தி உருட்டி கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி அடைந்ததில் அம்மாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனி ஒரு கேண்டில் லைட் போராட்டமோ அல்லது கேண்டில் லைட் டின்னரோ உங்களுக்கு அம்மாவின் நியாபகம் கண்டிப்பாக வர வேண்டும். ஒவ்வொரு அரிசியிலும் விவசாயின் பெயர் எப்படி எழுதப் பட்டிருக்கிறதோ அது போல நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மெழுகுவர்தியிலும் அம்மாவின் பெயர் இருக்கும். அம்மா செய்த மெழுகுவர்த்தியை கொண்டே, அம்மாவின் உண்மை தொண்டர்கள் அம்மாவுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அனுசரித்த கொடுமையை எப்படி விவரிப்பது? என் நெஞ்சம் வெடித்து விட்டது.
"மக்களால் நான். மக்களுக்காக நான்" என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது!
அம்மாவின் தியாகம், மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு ஒப்பானது. மெழுகுவர்த்திக்கு எக்ஸ்பைரி டேட் இல்லை. அம்மாவுக்கு மறைவு இல்லை. என்றும் தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
அம்மாவை யாரும் கொல்ல வில்லை. மெழுகுவர்த்தி மக்களுக்காக தன்னையே எரித்து கொண்டது.
அம்மா ஒரு மெழுகுவர்த்தி. சின்னம்மா ஒரு மெழுகுவர்த்தி.
அடுத்த தேர்தலுக்கு இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களித்து நன்றிக்கடன் செலுத்துங்கள்.


தறுதலைகளின் அம்மா



சினிமாவில் தறுதலை ஹீரோக்களுக்கு ரேங் போட்டால் சிவ கார்த்திகேயன் தான் கில்லியாய் வருவார். இரண்டாம் இடம் தனுசுக்கு கிடைக்கலாம். பின் விமல், ஆர்யா, ஜீவா, சிம்பு எல்லாம் பத்து இடங்களுக்குள் வருவார்கள்.

ஆனால் வெள்ளித்திரையில் இது போல தறுதலைகளை வதவதவென்று அதிகம் பெற்ற அம்மா யார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். அடுத்த இடம் ஊர்வசிக்கு. இவர்கள் இருவரின் கால்ஷீட்டும் இல்லையென்றால் தான் அந்த வாய்ப்பு மற்ற நடிகைகளுக்கு போகிறது. அந்த அளவிற்கு இருவரும் அந்த கேரக்டர்களுக்கு செமத்தியாய் செட்டான அம்பாசிட்டர்கள். நாசரை போல கண்டிப்பான அப்பாக்கள் இவர்கள் நடித்த படம் என்றால் அதை பார்க்காமல் தவிர்த்து விடலாம். இவர்கள் படத்தை பார்க்கும் நிஜ தறுதலைகளின் அம்மாக்கள், படத்தில் வருவது போல தன் பிள்ளையும் ஒரு நாள் முன்னேறி வெற்றி பெறுவான் என நப்பாசை கொள்கிறார்கள். அது நிஜத்தில் நடக்காது எனினும் சந்தோசமாய் படம் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். அதனாலேயே தாய்மார்களின் ஆதரவுடன் இவ்வகை படங்கள் பெரிய ஹிட் ஆகிறது. சி.கா பெரிய ஹீரோவானதே இப்படி தான். வேலை இல்லா பட்டதாரி போல நடுவே கொஞ்சம் தூக்கலாக அம்மா சென்டிமென்டை கலந்து விட்டால் அம்மாக்கள் குபு குபுவென்று கண்ணீரை கொட்டி அமோக வெற்றியை அள்ளி கொடுப்பார்கள். இப்போது அப்பா செண்டிமெண்ட் படங்களும் பெருகி வருகின்றன. இருந்தாலும் தமிழ்நாட்டில் அம்மா சென்டிமென்டுக்கு அப்புறம் தான் எல்லாம்.

VIP படத்தில் வரும் "அம்மா அம்மா" போன்ற பாடலை ரிங் டோனாக வைத்திருப்பவர்களை கவனியுங்கள் தெரியும். மொடா குடிகார்களாகவும் ஊதாரிகளாகவும் இருப்பார்கள்.

தறுதலை மகனை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும், தங்கத்தில் நகை வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ்க்கு சென்று விடுமென்று.


வேலைக்காரன்




சிவகார்த்திகேயன் நல்ல கேரக்டரில் நடித்த முதல் படம். வழக்கமாய் ஊதாரியாய், வேலைவெட்டியின்றி பெண்கள் பின்னால் அலைந்து மிரட்டி காதலிக்க வைக்கும் கேரக்டரிலேயே பார்த்து பழகிய நமக்கு இது கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாய் தான் இருக்கிறது. ஒருவேளை அவருக்கே அது போல நடித்து போரடித்திருக்கும். படம் இடைவேளை வரை நன்றாக தான் போகிறது. அதிலும் குப்பத்து ரவுடியிசத்தை கலாய்ப்பதெல்லாம் அதகளம். இது போல படத்திற்கு அளவான காதல் காட்சிகள். இடைவேளைக்கு பிறகான காட்சிகள் விமல் சொல்வது போல "இதெல்லாம் நம்பர மாதிரியாங்க இருக்கு?" என்பது போல் தான் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் சொன்ன கான்செப்ட் அருமை. பணத்துக்காக தன் கம்பெனி செய்யும் தவறு எவ்வாறு நம் சுற்றத்தை பாதிக்கும், ஒவ்வொரு வேலைக்காரனும் அதை தடுக்க முடியவில்லை என்றாலும் அதை பற்றி வெளியில் புரணியாவது பேசலாம் என சொல்வது சிறப்பு.

அதையே நம் குடும்பத்திற்குள்ளும் எடுத்து கொள்ளலாம். ஊழல் செய்தோ லஞ்சம் வாங்கியோ சம்பாரிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் கேள்வி கேட்டு திருத்தினாலே பெரிய மாற்றங்கள் நடக்கும். நம் நாட்டில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம் அதை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எதையும் கேட்காமல் அந்த பணத்தில் உண்டு கொழுத்து வாழ்ந்து வருவது தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தவறு செய்பவனுக்கும் குற்ற உணர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை. ஊரில் கெத்தாக வலம் வருகிறான். தவறு செய்பவனை கூட மன்னித்து விடலாம். இவர்கள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் முழு முதற் காரணம். "நீ தவறு செய்து சம்பாதித்த பணத்தில் வாழ்க்கையை நடத்த மாட்டோம்" என குடும்ப உறுப்பினர்கள் போராடினாலே அவன் திருந்தி விடுவான். குடும்பம் தான் வேர். அங்கே பிரச்னை சரியானால் மற்ற இடங்களில் தானாக தீரும். படத்தில் இதை பற்றி ஆழமாக பேசியிருந்தால் மிக சிறப்பாய் இருந்திருக்கும்.

கன்ஸயுமரிசத்தில் முழுகி உழலும் சிட்டி மக்கள் இந்த படத்தை பார்க்க, அவர்கள் வாங்கி வந்த ஒரு அடி பாப்கார்ன் பாக்கெட், கூல்ட்ரிங்ஸ் இதெல்லாம் தியேட்டரில் சாப்பிட்டு ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாய்தானிருக்கும்.

இடைவேளையில் ஐஸ்க்ரீம் கேட்ட குழந்தைகளுக்கு, பெற்றவர்கள் "இப்போ தான் படம் பார்த்த. அதுல பாய்சன் இருக்காம்" என்று சொல்லி பயமுறுத்தி வைத்தார்கள்.

படம் ஊரில் உள்ள லோக்கல் தியேட்டரில் தான் பார்த்தேன். கண்ட கண்ட விளம்பரங்கள் எதுவும் இல்லை. டிக்கெட் கூட ஐந்து நிமிடத்திற்கு முன் வாங்கினால் போதும். நிம்மதியாய் படம் பார்க்கலாம். மல்டிப்ளெக்ஸில் கிடைக்காத திருப்தி கிடைக்கிறது


Mar 4, 2017

சே+அட்டை



ஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே  மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.

சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை பிடிக்கும் போட்டோ தான் அதிகம் வருகிறது. அவரது 'தம்' நண்பர் பிடல் காஸ்ட்ரோவும் அப்படி தான். இவர்கள் இருவரும் அதிகம் புரட்சி செய்தார்களா? இல்லை புகைப்பிடித்தார்களா? எனும் அளவுக்கு நமக்கு சந்தேகம் வருகிறது.

ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல் இருக்கும் இவரது போட்டோ, தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால்,  இந்த டீசர்ட்டுகளை எதிர்த்து "ராமதாஸ் அன்ட் சன்ஸ்" கம்பெனி அறிக்கை விட முன் வர வேண்டும்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டை படத்தில், புகை பிடிப்பது போல இருக்கும் அவரது படத்துக்கு கீழே சிறிய எழுத்தில் "புகைப் பிடிப்பது, புற்று நோயை உண்டாக்கும் " என்று போடவும் தமிழக அரசு ஆணை இட வேண்டும். செயின் ஸ்மோக்கர்கள் புத்தகம் படிக்க மாட்டார்களா?

இங்கு, சமீபத்தில் இலக்கிய உலகில் நடந்த "அட்டைப்பட" சர்ச்சையை முன் வைக்கிறேன்.

என்னை பொறுத்த வரை புத்தகத்தின் அட்டைப்படம், அதன் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்

புகை பிடிப்பதற்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அது படிக்க போகும் வாசகனை திசை திருப்பாதா?
சே-வின் கையில் இருக்கும் சுருட்டை எடுத்து விட்டு, ஒரு உடை வாளையோ, குறுந்துப்பாக்கியையோ(Short Gun) கொடுப்பது தானே பொருத்தமாகும். இல்லையெனில் புரட்சி தலைவர் விஜயகாந்தைப் போல சே-வின் கண்ணை சிவக்கவாவது வைக்க வேண்டும். அட்டையை பார்க்கும் போதே, புரட்சி உணர்வு தூண்டப் பட வேண்டும்.

பள்ளிக்கூடம் படிக்கையில், எனக்கு அடுத்த வகுப்பில் படிக்கும் எனது சகோதரியின் பாட புத்தகத்தையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்த நேரிடும். பெரும்பாலும் அட்டையே இருக்காது. சில முறை, பொருளடக்கமும். அதனால் அறிவியல் தேர்வுக்கு, வரலாற்று புத்தகத்தை எடுத்து சென்று பெயிலான துயர வரலாற்றுச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.

அதனால் தான் சொல்கிறேன், அட்டைப்படம் முக்கியம். அட்டை அதை விட முக்கியம்.


Feb 10, 2017

கிச்சன் கிங்

கீற்றுவில் வெளியான எனது பதிவு




ஆண்களில் பெரும்பாலானோர், கல்யாணத்துக்கு முன்னரே நன்கு சமைக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள். வரன் தேடுகையில், சமையல் கலையை 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' ஆக்டிவிட்டியில் போட்டு கொள்ளலாம். பெண் பார்க்கும் படலத்தின் போது "பையனுக்கு சமைக்கத் தெரியுமா?" என்று நேரடியாகக் கேட்க முடியாமல், "பையன் ஹோட்டல்ல 'தான்' சாப்பிடுறாரா?" என்று அழுத்திக் கேட்டு சாமார்த்தியமாய் பதில் வாங்கி விடுகிறார்கள் பெண் வீட்டார். மேலும் "எங்க பொண்ணு சமையல் கட்டுக்குள்ளே தண்ணி குடிக்க மட்டும்தான் வருவா" என்று சொல்லிவிட்டு பெருமை பொங்க சத்தமாய் சிரிக்கிறார்கள். சமையலும், 'சமையல் மந்திரமும்' ஆண்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். கொஞ்சம் தெரிந்தாலும், எதுவுமே தெரியாதது போல் தான் நடிப்பார்கள்.

வேளச்சேரி கிராண்ட் மாலுக்கு எதிரில் இருக்கும் 'அப்பா சுட்ட தோசை' என்ற ரெஸ்ட்டாரெண்டே தற்போது சூழ்நிலை மாறி விட்டது என்பதைக் கண்கூடாக உணர்த்துகிறது.

ஆனால் நான், கடலைப் பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத அப்பாவி. சமையல் ஷோ, எனக்கு பாகற்காய். கிச்சன் சூப்பர் ஸ்டார் கூட, அதில் வரும் தக்காளி பிகர்களுக்காக தான் பார்த்திருக்கிறேன். கடைசி வரை கிரிஜாஸ்ரீக்காக 'சமையல் மந்திரம்' பார்த்த அனுபவம் மட்டுமே இருந்ததால், திருமணத்திற்குப் பிறகு என் மனைவி 'விம் பார்' யை என் கையில் கொடுத்து, இந்த கருப்பு எம்ஜியார் குண்டாவெல்லாம், வெள்ளை எம்ஜியார் போல பளபளவென்று மின்னவேண்டும் என்று சொல்லி விட்டாள். தினமும் அவள் சமைத்தவுடன், ஆபிஸ் கிளம்புவதற்குள் பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டுச் செல்ல வேண்டும். எங்களுக்குள் சிறு ஊடல் வந்தால், அன்று வேண்டுமென்றே கழுவாமல் சென்று அவளுடன் 'அறப்போர்' செய்வேன். இரவு வீட்டுக்கு வந்து எண்ணையில் போட்ட கடுகாய் வெடிப்பாள். இரவு 'ஒத்துழையாமை போராட்டம்' நடத்துவாள்.

இதைத் தவிர, காய்கறி நறுக்குவது, தேங்காய் துருவித் தர சொல்வது என ஒரு மருமகளைப் போல வேலை வாங்குவாள். ஒரு பக்கம் கண்ணை கசக்கிக் கொண்டு நான் வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பக்கம் மாமியார் கணக்காய் சீரியல் பார்த்து கண்ணு வேர்த்துக் கொண்டிருப்பாள். அவ்வப்போது குக்கர் விசில் எண்ணும் வேலையும் கொடுக்கப் படும். புத்தகம் எழுதி, புக்கர் விருது வாங்கும் கனவையெல்லாம் தேங்காயைப் போல இரண்டாய் உடைத்து விட்டாள். 'வீட்டுச் சாப்பாடு' எனும் ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

திருமண பந்தத்தின் உன்னதமே, இருவரின் நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, பரஸ்பரம் உதவி செய்து கொள்வது தான். இப்படியாக எனக்கு அவள் சமையலைக் கற்றுத் தர, அவளுக்கு நான் சமையல் மந்திரத்தைக் கற்றுத் தந்தேன்.

மந்திரம் வேலை செய்து அவள் ஊருக்குச் சென்ற பின், கற்றுக் கொண்ட வித்தையெல்லாம் மொத்தமாக இறக்க முடிவு செய்து கிச்சனுள் நுழைந்தேன். சிறு வயதில் எக்ஸாமுக்கு செல்லும் முன் சரஸ்வதி சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகச் சொல்வார்கள். மனப்பாடம் செய்தது மறந்து விட்டால், 'சரசு' கூட இருந்து பிட் எடுத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கை. அது போல நான் தினமும் அடுப்பை ஆன்  செய்யும் முன் அந்த அன்னபூரணி தெய்வத்தை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். அன்னபூரணியின் அருளில் தினமும் நன்றாகவே சமைப்பதாகத் தோன்றியது. என் வீட்டு ஓனர் அவ்வப்போது எட்டிப் பார்த்து "ஏன்டி, இந்த தம்பி சமைக்கும்போது எப்புடி வாசம் வருது! நீ ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கியா?" என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்பார். இந்தப் பெரிசு நம்மைக் கலாய்க்கிறதா? என்று சந்தேகமாய் இருக்கும். அதனால், ஒருநாள் சமைத்ததில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். இப்போதெல்லாம் அந்த ஓனர் என் சமையலில் மூக்கை நுழைப்பதில்லை. சாதாரணமாய்ப் பேசும் போது கூட, ஆங்கிலப் படத்தில் வருவது போல, முகம் கொடுக்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு "என்னப்பா ஆபிசுக்குக் கிளம்பிட்டியா?" என்று கேட்கிறார்.

தற்போது, மனைவி ஊரிலிருந்து வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு, நளபாகம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. தோழர், உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


Dec 27, 2016

S3 (பாயிலர் அலர்ட்)

இந்த பதிவு, சிங்கம் 3 டீசர் பார்த்து பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்தவர்களுக்காக சமர்பிக்கப் படுகிறது.



சிங்கம் 3 வழக்கம் போல ஆக்சன் அதிரடி படம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. ஆக்சன் படமென்று மக்களை நம்ப வைப்பதற்காக, ஹரி கொஞ்சம் செலவு செய்து டீசர் வெளியிட்டிருக்கிறார். படத்தில் சூரி, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி என இத்தனை பேர் இருப்பதை வைத்தே கொஞ்சம் யூகிக்கலாம்.

ஆமாம், இது பக்கா ரொமான்டிக் காமெடி மூவி. இயக்குனர் பேரரசுவை போல, ஹரியும் படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றி, "யாரும் நெனச்சு பாக்கலைல? கர்ச்சீப்ல கண்ணை துடைச்சு கிட்டே, குலுங்கி குலுங்கி சிரிச்சு பீல் பண்ற மாதிரி, ஒரு ரொமான்டிக் காமெடி படம் கொடுப்பேன்னு யாரும் நெனச்சு பாக்கலைல?" என்று பன்ச்சை தெறிக்க விட்ட பின் தான் டைட்டில் கார்டே வருகிறது.

இம்முறை ஸ்ருதி ஹாசனை சேர்த்து கொண்டு, முதன் முதலில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் செய்திருக்கிறார். கதையில் அனுஷ்கா, சூர்யா, ஸ்ருதி ஹாசனுக்கிடையே ஒரு அருமையான முக்கோண காதல் கதை உள்ளது.
குழந்தை பிறப்பை வழக்கம் போல தள்ளிப் போட்டு விட்டு, துரை ஸ்டேஷனில் ஓவர் டைம் பார்க்க, தினமும் பேஸ்புக்கில் காலம் கழிக்கிறார் அனுஷ்கா.

அப்போது ஃபேக் அக்கௌன்ட் வைத்து பேஸ்புக்கில் பிகர்களை மடக்கும் ஸ்ருதிஹாசனிடம் சாட்டிங்கில் மாட்டுகிறார். தனிமையில் வாடும் அனுஷ்க்காவை மெல்ல மெல்ல பேசி பேசியே வழிக்கு கொண்டு வருகிறார். அதற்கு சாருவின் சாட் ஹிஸ்டரியிலிருந்து சில குறிப்புகள் எடுத்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் Auto login ஐ தெரியாமல் ஆன் செய்து வைத்திருந்த அனுஸ்காவின் பேஸ்புக்கை தற்செயலாக பார்த்து கொண்டிருந்த துரை சிங்கத்திற்கு, ஹாசனிடமிருந்து "Hi Dear, What are you wearing now?" என்று மெசேஜ் வர, உடனே தான் அணிந்திருந்த நண்டு மார்க் லுங்கியை (விளம்பரம்) குனிந்து பார்த்து விட்டு, பின் அது தனக்கு அனுப்பிய மெசேஜ் இல்லை என்று தெரிந்து அலர்ட் ஆகிறார்.

படத்தில் ஹாசனுக்கும், அனுஷ்காவுக்கும் ஒரு மஜாவான டூயட் இருக்கிறது, ஒரு நீளமான லிப் கிஸ் உட்பட. கடைசியில் அனுஷ்கா யாருக்கு என்பதில் துரை சிங்கத்துக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் இடையில் பெரிய பைட்டே உண்டு. மொத்தத்தில் கொரியன் பட தரத்தில் நிறைவான சந்தோசத்தை கொடுக்கும் பீல் குட் குடும்ப மூவி.

சிங்கம் 2 - விமர்சனம்


Nov 25, 2016

செவ்வாய்க்கு ஒரு பயணம் - ஆபாயில்

ந்தியர்கள் ஏன் அமெரிக்கர்களை விட திருமணத்திற்கு அதிகம் செலவு செய்கிறார்கள்?

சிம்பிளான காரணம், நாம் வாழ் நாளில் ஒரு முறை தான் திருமணம் செய்கிறோம் அவன் அடுத்த சில கல்யாணத்துக்கும், சில ஜீவனாம்சத்திற்கும் போக, மிச்சத்தை தான் செலவு செய்கிறான். நமக்கு கல்யாணம் என்பது ஒரு வழி பாதை.

இருக்கின்ற எல்லா நகையையும், பணத்தையும் சுங்க வரியாய் கட்டி விட்டு, இல்லறத்தின் உள்ளே நுழைந்து விடுகிறோம். பின்னால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று அங்கேயே கடந்து சாக வேண்டியது தான். திரும்பி வர முடியாது. புல் அடித்து விட்டு வந்து ரவுசு பண்ணும் புருஷனை, கல்லை போட்டு கொன்று விடும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி இருந்தாலும் சாவு கன்பார்ம். இந்தியர்களுக்காக தான், ஆங்கிலத்தில் வெட்லாக் (Wedlock) என்று பொருள் படும் படி ஒரு வார்த்தையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையில், 2024 இல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா பிளான் செய்துள்ள ஒரு வழி ராக்கெட் பயணம் போல தான். அந்த ராக்கெட்டில் அனுப்ப மொத்தமாக 100 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. அதில் மூன்று பேர் இந்தியர்கள். நாம் நினைத்தது போல அந்த மூன்று பேரும் பேச்சுலர் பார்ட்டிகள். இதில் செல்ல திருமணம் ஆனவர்கள் பெரிதாய் நாட்டம் கொள்ளாத காரணம், அவர்கள் அல்ரெடி அது போல ஒரு கிரகத்தில் மாட்டிக் கொண்டிருப்பது தான்.

நமக்கும் செவ்வாய்க்கும் அதிக ரத்த சம்பந்தம் இருக்கிறது. செவ்வாய் தான் நமது திருமணத்தையே முடிவு செய்கிறது.

"பையனுக்கு செவ்வாய் இருக்கா?"
"இல்லீங்க சிகரெட் குடிச்சு குடிச்சு கருப்பாக்கி வச்சிருக்கான்"
"பெண்ணுக்கு செவ்வாய் இருக்கா?"
"ஆமாங்க தினமும் லிப்ஸ்டிக் போடுறா" என்று ஜோக்கெல்லாம் அடிக்க முடியாது.

எவ்வளவு பெரிய இடம் என்றாலும் செவ்வாய் தோஷம் ஒத்து வர வில்லை என்றால், we move forward. செவ்வாய் தோஷம் தான் நமக்கு aptitude டெஸ்ட்.  அதில் பாஸ் ஆனால் தான் குரூப் டிஸ்கஷன், HR இண்டெர்வியூ எல்லாமே.

செவ்வாய்க்கு போக போட்டி போட்டு கொண்டு 39 அமெரிக்கர்கள் செலக்ட் ஆனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்றால் அவர்களுக்கு இந்தியர்களை போல ஒரு கல்யாணம் மட்டும் செய்து வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை. அனால் இங்கிருக்கும் இந்தியன் அமெரிக்கர்களை போல பல திருமணம் செய்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறான்.

Poor Americans. :-P


டிட் பிட்ஸ்:
----------------

மெடிக்கல் அஸ்ட்ராலாஜியின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் மனிதனுடைய உடல் பாகங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதன் படி நம்முடைய ரத்தத்திற்கும் செவ்வாய்க்கும் பெரிய சம்பந்தம் இருக்கிறதாம். நாம் அதனால் தான் திருமணத்திற்கு செவ்வாய் பொருத்தம் பார்க்கிறோம். செவ்வாய் இருந்தால் மைனஸ் ரத்தம் வகை, செவ்வாய் இல்லாதவர்களுக்கு பிளஸ் ரத்தம் வகை என்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. ஆனால் பண்டைய காலத்திலிருந்தே நாம் பிளட் டெஸ்ட் செய்து வந்திருக்கிறோம். வேறு வேறு ரத்த வகை இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உடல் ரீதியான பிரச்சனைகள் கர்ப்ப காலத்தின் போதும், டெலிவரியின் போதும் வரும் என்று சொல்வார்கள்.

நம்முடைய முன்னோர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என சொல்லும்  டாகுமெண்டரி படங்கள் நிறைய யு-டியூபில் இருக்கிறது. நாமெல்லாம் பூமிக்கு வந்த ஏலியன்கள் தான். மனிதர்கள் ஏலியன்களை வெளியே தேடுகிறார்கள். ஆனால் கடவுளும் ஏலியனும் நமக்குள்ளே தான் இருக்கிறார்கள்.

http://astrobix.com/learn/411-body-parts-and-disease-related-to-different-planets.html

http://sexjothidam.blogspot.in/2016/03/manglik-astrology-what-is-mangal-dosha.html

https://www.youtube.com/watch?v=xSY6on-M9Vw



ம்சை அரசனின் அடுத்த அட்டாக்
------------------------------------------------------

அரசர் மோடி அடுத்ததாய் மிக பெரிய அதிரடி பிளானை வைத்திருக்கிறாராம். தேச பக்தர்கள் எல்லோரும் பரபரப்பாக பேசி திகில் கிளப்புகிறார்கள். அது என்னவென்று வட்ட செயலாளர் வண்டு முருகன் தமக்கு ஒற்றன் மூலம் கிடைத்த தகவலை நமக்கு முன்பே சொல்லி விட்டார். அதற்கு தான் முன்னேற்பாடாக "ஜன் தன் யோஜனா" திட்டத்தின் மூலம் எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவாக்கி கொடுக்கப் பட்டு, ஜியோ சிம்மும் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன.

டிசம்பருக்கு பிறகு, இவர்கள் அனைவரும் "ரம்மிசர்க்கிள்.காம்" இணைந்து ஆன்லைனில் ரம்மி விளையாடலாம். இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களுக்கும், வீட்டில் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கும், இதன் மூலம் சம்பாத்தியம் உண்டாகும். வருமான வரி TDS யில் பிடித்தம் செய்யப் பட்ட பின்தான், வங்கி கணக்குகளுக்குள் வரவு வைக்க படும்.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு மானிய விலையில் ரிலையன்ஸ் கம்பனி மூலம் விற்கப் படும். ரம்மி விளையாட தெரியாதவர்களுக்கு திருபாய் அம்பானி இன்ஸ்டியூட் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படும். ஊருக்கு ஒதுக்கு புறம், மரத்தடியில் சாராயம் குடித்து விட்டு கவர்மெண்டை ஏமாற்றி ரம்மி விளையாடி கவர்மென்டுக்கு கப்பம் கட்டாமல் தப்பிப்பவர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைக்கும். இவர்களை பிடிப்பதற்கென்றே போலீசார் ரோந்து வாகனங்களில் சந்து பொந்துகளில் சுற்ற போகிறார்கள்.

தமிழ்நாட்டின் விளையாட்டு என்பதால்,  "மங்காத்தா" தடை செய்ய படும். அதை மீறி விளையாடுபவர்களும், "மங்காத்தாடா" என்று தேவையே இல்லாமல் அடிக்கடி சொல்பவர்களும், தேச விரோத சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

ஏக் பாரத், ஏக் கேம்.

இந்தியா வல்லரசு ஆகணும்னா, உங்க மம்மி கூட, ரம்மி ஆடி தான் ஆகணும்.

மோடிடா! ரம்மிடா! ரம்பாடா! ரம்மியா கிருஷ்ணண்டா!


RJ பாலாஜாம்பி
-----------------------

ஹாலிவுட்டில் வெளி வரும் ஜாம்பி, வேம்பயர் வகை படங்களில் வருவது போல, ஜாம்பிகளை எதிர்த்து போராடி அதனை கொல்லும் கதாபாத்திரம் ஒன்று, திடீரென்று அவைகளிடம் கடிபட்டு இன்னுமொரு ஜாம்பியாக மாறி, மற்ற மனிதர்களை துரத்தி பிடித்து கடிக்க விரட்டும்.

ஆர்ஜே பாலாஜி, அப்படி கடி பட்ட ஒரு ஜாம்பி தான். இப்போது அவர் நடிக்கும் மொக்கை படங்களை எல்லாம் நம்மை பார்க்க சொல்லி தொலைக்காட்சிகளில் வந்து தொல்லை படுத்துகிறார். இப்போது அரசியல்வாதிகளுக்கு ஆதரவாய் சாமானிய மக்களுக்கு கிராஸ் டாக்கில் வந்து தேசபக்தியை வேறு தூண்டி விடுகிறார். நாட்டுக்காக கொஞ்சம் ரத்தம் கொடுப்பதில் தப்பு இல்லை என்கிறார்.

ஆனால் சினிமாக்காரர்கள், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள். வழக்கமாய் சினிமாக்காரர்கள் தான் மற்றவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்கள். இம்முறை நாம் தான் அவர்களை பாராட்ட வேண்டும். பென்டாஸ்டிக் ஜாப்!

"கடவுள் இருக்கான் குமாரும், நூத்தி இருபது ரூபாயும்" என்று நாம் எழுத வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது.

Once a Joker. Always a Joker


Journey to the Mars (English version )
-------------------------

The simple reason why Indians spend more money than Americans for marriage is, we do it only one time in our life time whereas they have to keep something for the next one and for the alimony.

For most Indians, the marriage is one way road. Pay everything at the toll and go inside. If something happens wrong, just die there. That is why they invented the word 'Wedlock' for Indians.

Its like the one way trip to MARS that NASA has planned for 2024. Out of 100 people, only 3 in India got selected for the trip and as expected all 3 are single. we married people won't be interested in that as we already on one.

And importantly, the MARS (sevvai) is deciding factor in our marriages. Its an aptitude test for the selection. If you pass that only, you will go to group discussion, HR interview and all. Yes, we have blood relation to the Mars.

No wonder there are 39 Americans in that list. They just want to see how it feel to be an Indian. But every Indian want to see how it feel to be an American.

Poor Americans. :-P

Titbits:
--------

In medical astrology, all the planets represent some or the other part of your body. Mars represent human blood. That's the reason we are checking "sevvai dosha" or "manglik dosha" before doing marriage. Its blood test invented for us by our ancestors. "sevvai dosha" means a negative blood group, otherwise its a positive blood group. If different blood group couple get married, then the mom and baby will have severe health issue during pregnancy and delivery.

There are many documentary movies in You Tube which says our ancestors could have come to earth from Mars. We are all aliens from Mars as per that theory. Humans search aliens outside. But both God and Aliens are inside of us)



Aug 7, 2016

~ இது தங்கமான உறவு ~ (18+) - ஆபாயில்

பேஸ்புக்கில் எழுதுவது என்பது செக்ஸை போல தான்.

எழுதியது கொஞ்சம் சுமாராக இருப்பது போல் தோன்றியவுடனே, இன்ஸ்டன்ட் லைக்கிற்கு ஆசைப்பட்டு, அவசரத்துடன் பதிவிட்டு விடுவது ஒருவகை. நிறைய பேருக்கு இந்த ப்ரீ எஜாகுலேஷன் (pre-ejaculation) பிரச்சனை இருக்கிறது. தினமும் ஐந்து முதல் பத்து பதிவுகள் எழுதினாலும் நமக்கும், படிப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. நம் மேல் இருக்கும் அபிப்பிராயம் போய் விடும். கஸ்டமர்களையும் இழக்க வேண்டி வரும். இவர்கள் ஒரு நல்ல பேஸ்புக் எழுத்தாளரை பார்த்து சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை பற்றி எழுத போகிறோம் என்பதை, சிறிது நேரம் செலவழித்து 'போர் பிளே' (fore play) செய்ய வேண்டும். போர் பிளேயுடன் தான் எழுதவே செல்ல வேண்டும். முக்கியமாய் விரலை கீ போர்டில் நிலை நிறுத்தவும். கீபோர்டில் வேலை செய்யும் பொழுது மவுஸின் அருகில் கை செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரல் 'Post' யை அமுக்கி விடும்.

எழுதிய பின் எடுத்தோம் அவிழ்த்தோம் என்று செயல் படாமல், மலையாள படங்களில் வருவது போல 'கீழிருந்து மேலும்', 'மேலிருந்து கீழும்' சிலமுறை படித்து எழுத்து பிழை, இலக்கண பிழைகளை சரி பார்த்துக் கொள்ளவும். வெளியிடும் ஆசையை அடக்கி, தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு  Stop and Start விதிகளை பயன்படுத்தி இன்னும் மெருகேற்றினால் 'கை' Image result for like icon smallமேல் அமோக பலன் கிடைக்கும்.

எழுதியது உங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் வரும் "ஆஹா அருமை", "சூப்பர் தல" போன்ற பொய் (Fake) பாராட்டுகளில் ஆறுதல் அடையாமல் அதை தவிர்க்க தீயாய் வேலை செய்யவும். சைஸ் முக்கியமில்லை என்று பொதுவாக சொல்லப் பட்டாலும், ஆவரேஜ் இந்தியன் சைஸாக (ஆறு  வரிகளுக்கு குறையாமல்) இருப்பது இருவருக்குமே நல்ல சுகானுபவமாக இருக்கும். இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது குயிக் செக்ஸ் போல. திருப்தி இருக்காது.

பதிவு எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், கன்டென்ட் சிறப்பாய் இருந்தால் வரவேற்பு இருக்கும். தமிழ் பிரபாவுக்கும், முரளி கண்ணனுக்கும் இருக்கும் ரசிக பட்டாளங்களை பார்த்தால் புரியும். 'நுனி' புல் மேய்ந்துவிட்டு எஸ்கேப் ஆகிறவர்களை புறந்தள்ளி விடலாம். எவ்வளவு 'பெரிதாய்' இருந்தாலும், பயப்படாமல் படிப்பவர்கள் தான் நமது இலக்கு.

அதிகபட்சமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் வெளியிடுவது ஆரோக்கியமான உறவுக்கு வழி வகுக்கும். கவனித்து பாருங்கள் நல்ல திறமையான எழுத்தாளர்கள் அவ்வளவு தான் எழுதுவார்கள். வாசகர்களுக்கும் அந்த இடைவெளி தேவை. அடிக்கடி செய்தால் சர்பிரைஸ் இருக்காது.

யாருமே படிக்காமல் லைக்கே வராமல் சுயஇன்பம் செய்வது போல, நீங்கள் எழுதி நீங்கள் மட்டுமே படித்து கொண்டிருந்தாலும், அதை விடாமல் தொடருங்கள். தற்போது பலன் இல்லையென்றாலும், பின்னாளில் கண்டிப்பாக பெரிய பலன் இருக்கும். கொஞ்சம் பிடித்து விட்டால், புதையல் தோண்டி படிப்பார்கள்.

எழுது கோலை எடுங்கள், உறவை பலப் படுத்துங்கள்



பாலி படத்தின் கதை  (பாயிலர் அலர்ட்)

தங்கள் ஆதர்ச கதாநாயகன் நடித்த படத்தின் டிக்கெட் கொள்ளை விலையில் விற்க படுவதால், தலித்துகள் அப்படத்தை பார்க்க முடியாமல் கஷ்டப் படுகின்றனர். ஐ.டி துறை அரை டவுசர் பையன்களும், லெக்கின்ஸ் லேடிகளுமே முக்கால் வாசி டிக்கெட்டுக்களை புக் செய்து விடுகிறார்கள். வேறு வழியின்றி படம் பார்க்க சில நிஜ கபாலிகள், ஏடிஎம் மெஷினை உடைத்து திருடுகிறார்கள். அதை செய்ய முடியாத மற்ற கபாலிகள், ஏடிஎம் கார்டு வைத்திருப்புவர்களை மிரட்டி கொள்ளை அடிக்கின்றனர். அப்பாவிகள் சிலர், அம்மாவின் தாலியையும் பொண்டாட்டியின் தாலியையும் திருடி சென்று விற்கின்றனர்.

இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து போராட வருகிறான், தலித் நாயகன் கபாலி. டிக்கெட் விலையை குறைக்க சொல்லி தியேட்டர் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துகிறார். பெட்ரோலை தன் மேல் ஊற்றி விட்டு தீப்பெட்டியை கையில் வைத்து கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார். அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் இருந்து ஒரு தீக்குச்சி பறந்து வருகிறது. அப்போது கபாலி கப கபவென பற்றி எரிய, "நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்" பாடல் துவங்குகிறது.

பாடல் முடிந்த பின், பாதி கருகிய பாடியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்கின்றனர். அந்த நிலைமையிலும் "வருவேன்னு சொல்லு, திரும்பி வருவேன்னு சொல்லு" என்று பன்ச் டயலாக் பேசுகிறார். கடைசியில் உயிர் பிழைத்த கபாலி, திரும்பி வந்து மீண்டும் தீக்குளிக்க பெட்ரோல் வாங்க செல்கிறார். அதற்குள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாய் ஏற்றியிருக்கிறது கண்டு, வந்த வழியே திரும்பி விடுகிறார். எதுவும் செய்ய முடியாமல் கடைசியில் "அம்மா தியேட்டருக்கு" அனைவரையும் கூட்டி சென்று படம் பார்க்க வைக்கிறான். அதன் பின் மக்களை அடுத்த தேர்தலில், அம்மாவுக்கே ஓட்டும் போட சொல்லி விட்டு இமயமலைக்கு பயணம் செய்கிறான்.



Mar 2, 2016

இளைய தளபதி டிகாஃப்ரியோ



டிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா? என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.

இன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.

அதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் அடைந்திருக்கிறான். அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து வால் பேப்பராக வைத்து தினமும் பயபக்தியுடன் வழிப்பட்டு வந்தான்.

கனவில் கேட் வின்ஸ்லெட் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தினமும் மானிட்டரை பார்த்து கொண்டே படுத்தாலும், டைனோசர்களும் அனகோண்டாக்களுமே வந்து அவனை விடாது பயமுறுத்தின.

தன் காதலி ஆசைப்பட்ட காரணத்தால், தன் காதலை தியாகம் செய்து, வேறு ஒருவருடன் அவளை சேர்த்து வைத்த "பூவே உனக்காக" படம் பார்த்து  விஜய்க்கு Die Hard பேனாக மாறியிருந்த சமயம், அடுத்த வருடத்தில் வெளியான டைட்டானிக்கிலும் காதலியை காப்பாற்ற  குளிர் நீரில் விதைப்பை விறைத்து செத்து போன டிகாஃப்ரியோவும் அவன் நெஞ்சில் இடம் பிடித்து அவனுக்கு இன்னொரு தளபதியாய் மாறினார்.

இவனிடம் லவ் பெயிலியர் கேஸ்கள் மாட்டினால்,

"மச்சி, காதல்ன்றது பனிக்கட்டி பாற மாதிரி, எவ்ளோ பெரிய கப்பலா இருந்தாலும் தொப்பலா நனைய வச்சு முழுக்கிடும்."

என்று பன்ச்சு சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவான்.

அதிலிருந்து ஒரு தளபதிக்காவது ஆஸ்கார் கிடைத்துவிடாதா? என்று வருடா வருடம் எதிர்ப்பார்த்து கிடந்தான். பிரண்ட்ஸ் பட கிளைமேக்சில் தலைவனின் நடிப்பை பார்த்து மிரண்டு, கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த போது அதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்காமல் வஞ்சம் செய்த இந்திய அரசை எதிர்த்து அப்போதே தேசிய கொடியை எரித்தவன்.

லோக்கல் தளபதி கரும்புலியிடம் கடி வாங்கி கஷ்டப்பட்டு சண்டை போட்ட புலி படம் வழக்கம் போல ஆஸ்காருக்கு போகா விட்டாலும், பாரின் தளபதி கரடியுடன் சண்டை போட்டு ஆஸ்கர் வாங்கியதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.

"ஆமா மச்சி, தல க்கு எப்ப ஆஸ்கார் கெடைக்கும்?" என்று கொஞ்சம் சொரிந்து விட்டால், நக்கலாய் சொல்வான்,

"அவரு ரேஸ்கார் வேணா வாங்கலாம், ஆஸ்கார்லாம் வாங்க முடியாது"


Feb 24, 2016

கேப்டனும், கஜேந்திராவும்

(picture courtesy: tamil hindu)

ஒரு டிவி சேனலில் ரமணா படத்தின் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு விடாமல் லஞ்சம் வாங்கியவர்களின் புள்ளி விவரங்களை துல்லியமாக நிமிட கணக்கில் வசனங்களாய் பேசி தள்ளுகிறார்.

அந்த ரமணாவையும், கோர்வையாக இரண்டு வார்த்தையை சேர்த்து பேசவே தடுமாறும் தற்போதைய ரமணாவையும் நினைத்து பார்க்கும் போது, அவருடைய பிந்தைய படங்களுக்கெல்லாம் விஜயகாந்தை போலவே பேசும் மிமிக்ரி கலைஞர்களை வைத்து டப்பிங் கொடுத்திருப்பார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது. என்னதான் பீல்ட் அவுட் ஆனாலும், எல்லா பந்துகளுக்குமா டக் அவுட் ஆவது?

கேப்டனை சந்தேகிப்பதாக சக ரசிக வெறியர்கள் கண்ணை சிவக்க வேண்டாம்.

கொச்சடையான் படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளை எடுப்பதற்கு தலைவரை போலவே இமிடேட் செய்யும் கலைஞர்களை வைத்து நடிக்க வைத்தார்கள் என்ற வதந்தி பரவியதும், என் எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியை தூர எறிந்து விட்டு, பாகிஸ்தான் தீவிரவாதிக்கே தமிழில் ஆக்ரோஷ்யமாய் அறிவுரை கூறி திருத்திய கேப்டனின் படங்களை எல்லாம் விடாமல் பார்த்த, Hard Core விசிறி என்ற முறையில், தற்போதை கேப்டனின் நிலைமையையும், அதை அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி மீம் (meme) செய்து கேலி செய்யப் படுவதையும் பார்க்கையில், என் கண்கள் வேர்க்கிறது.

நீ திரும்ப சினிமாவுக்கே, வந்திடு கஜேந்திரா!

கபாலியே கத்தி பிடிக்கும் போது, உனக்கென்ன? உன் கஜாயுதத்தை எடுத்து கொண்டு புறப்படு! பிறகு நீ தான் கிங்!

அது நடந்தால் தமிழ் நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை ரசிக்கும்.

தூக்கியடி தலைவா! ஜெய்கிந்த்!


Feb 12, 2016

இறுதிச் சுற்று (இது விமர்சனம் அல்ல சொந்த கதை)

"காக்கா முட்டை"க்கு பிறகு, குடும்ப உறவுகளுக்காக "உப்பு கருவாடு" பார்த்து ராதா மோகனிடம் உப்பு கண்டமாகி போனாலும், இந்த படத்திற்கு போக முக்கிய காரணம், 
"பொண்டாட்டிய படத்துக்கே கூட்டி போகாம கொடும படுத்தறான், பாவி பய!. பாவம் அந்த பொண்ணு" என்று பேசி என்னை வில்லனாய் உருவக படுத்தி கொண்டிருந்த ஊர் வாயை, கொஞ்ச நாளைக்காவது அடைச்சி வைக்க தான். இன்னும் எத்தன காலத்துக்கு தான் பொண்டாட்டிய படத்துக்கு கூட்டிட்டு போகாததையே புருசனோட ஆக பெரிய குற்றம்ன்னு சொல்லிகிட்டு இருப்பீங்க கைய்ஸ்! காம்ப்ளான் குடிச்சு வளருங்கப்பா. 



இறுதிச் சுற்று - தமிழில் இப்படியெல்லாம் ஒரு ஸ்போர்ட்ஸ் (குத்து சண்டை) படம் எடுக்கிறார்கள் என்பதே ஆச்சர்யம் தான். ஆஹா ஓஹோன்னு இல்லைனாலும் "பரவாலப்பா" என்று முதுகில் தட்டி கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது.

குத்துசண்டை மேடையை சுத்தி ஒப்பாரி வைத்து ஓவென்று அழுது, பின் ஹீரோ தங்கச்சிக்காக விட்டு கொடுத்து, நெஞ்சை லிக் செய்து நெகிழ வைத்த "எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி" கிளைமாக்ஸ் காட்சியை எல்லாம் நினைத்து பார்த்தால், இந்த பட இயக்குனருக்கு கோவில் கூட கட்டலாம்.

ஹீரோயின் ரித்திகா சிங்கை பார்த்து இன்ஸ்பைர் ஆகி, வீட்டிற்க்கு வந்ததும் நான் ஒற்றை கையில் புஸ்-அப் (push-up) எடுக்க முயற்சித்ததே இந்த படத்திற்கு பெரும் வெற்றி எனலாம். பாடல்கள் நன்றாக இருந்தாலும், எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்.



படம் பார்த்த அன்னைய நைட்ல இருந்து, தூங்கும் போது அடுத்த ரூம்ல இருந்து "டொம் டொம்" ன்னு சத்தம் வந்து கொண்டிருந்தது. பக்கத்துல இருந்த என் பொண்டாட்டியும் காணாம போயிடறா. அடுத்த நாள் காலைல எழுந்து பார்த்தா, அழுக்கு மூட்டையில் இருந்த துணி எல்லாம் வெளியே பிதுங்கிட்டு இருக்கு, என்னோட தம்புள்ஸ் ரெண்டும் எடம் மாறி கெடக்கு.
படம் பார்த்த இன்னொருத்தரும், ஹீரோயினை பார்த்து இன்ஸ்பைர் ஆகி இருக்காங்கறது தான் இந்த கதையில பெரிய ட்விஸ்ட்டு. ஆனால் படம் பார்த்த நாலு நாள்லயே முழு ரித்திகா சிங்கா மாறியிருக்கிற என் பொண்டாட்டிய பார்த்தா தான் அல்லு கிளம்புகிறது. "படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டியா? படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டியா?" என்று சொல்லி இந்த வேட்டையனை தெனமும் நாக்-அவுட் செய்றா. இனி எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதணும் போலயே!

எப்படி இந்த சந்திரமுகியை வெளிய ஓட்றது? :-( frown emoticon


Jul 16, 2013

Nonsense Talking - இந்தியா ரேப்புகிறது


"எழுதி தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத வரை, என் எழுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்" - Katz


 
சை அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது. அது சாதாரண போஸ்டரிலும் கூட இருக்கிறது. 

தட்டி எழுப்ப வேண்டியது நாம் தான்.


அப்போது இரவு 11 மணி ஆக, 11 நிமிடம் இருந்திருக்கலாம். சென்னைக்கு சென்று கொண்டிருந்த SRM ஸ்லீப்பர் பேருந்தில் சுக உறக்கத்தில் இருந்த எனக்கு நம்பர் ஒன் பிரச்சினை தலை தூக்க, சட்டென விழிப்பு வந்தது.

பஸ் எங்கேயாவது நிற்குமா? என ஜன்னல் திரையை விலக்கி பார்த்துக் கொண்டே வந்தேன். டிரைவரிடம் நிறுத்த சொன்னால், அதிகம் ரூல்ஸ் பேசுவான் என பயம். அதை விட்டால், வழக்கமான ஓட்டலில் தான் நிறுத்துவார்கள். அங்கே கட்டண கழிப்பறையில் இரண்டு ரூபாய் கொடுத்து, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில்..........பிடித்து  மற்றவர்கள் பக்கத்தில் நின்று அடிக்க சங்கோஜமாய் இருக்கும். திறந்த வெளியில் விடவும் முடியாது. அவ்வாறு விட முயற்சிப்பவர்களை, பெரிய கம்பை வைத்து மிரட்டுவதற்கென்றே, சால்வை போர்த்திக் கொண்டு 'செந்தூர பூவே' விஜயகாந்த் கெட்டபில், ஒரு ஆள் இருப்பான். அது பலனளிக்காத பட்சத்தில் வரிசையாய் கெட்ட வார்த்தை கவிதைகள் வாசிப்பான். அதற்கும் சிலர் அசைந்து கொடுக்காமல், கருமமே கண்ணாய் அடிப்பார்கள்.

ஆனால் ஹோட்டல் வரை என்னால் அடக்க முடியாது என்று என்  அடி மனது சொன்னது. தொலைதூர மற்றும் மலை பகுதிகளில் பயணிக்கும் பேருந்துகளில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பேக் கொடுப்பார்கள். வாந்தி வந்தால் அதில் எடுத்து விட்டு, ஜன்னல் வழியே டூ வீலர்களில் வருபவர்களின் மீது தூக்கி எறிந்து விடலாம். இங்கு அதற்கும் வழி இல்லை. என்ன செய்வது? என்று அவஸ்தையில் யோசித்து கொண்டிருக்கும் போதே, ஒரு பிரதான சாலையில் பஸ் நின்றது. அவசரமாய் எழுந்து சென்று பேருந்தின் உள் கதவை திறந்தேன். அப்போது கண்டக்டர்,

"என்னப்பா?"...

"அண்ணா, ஒன் பாத்ரூம் போகணும்"...

"இங்கே விடமுடியாதுப்பா"...(இங்க இல்லண்ணா , கீழே இறங்கி போய் விடறேன்)

அப்போது டிரைவர் கண்டக்டரிடம் குறுக்கிட்டு, "லேடிஸா?, ஜென்ஸா?"...

"ஜென்ஸ்"...(இது கண்டக்டர்)


"எறக்கி விடு, போயிட்டு வரட்டும்"... 

"கடவுள் சார்... நீங்க!" என டிரைவரை மனசுக்குள் வாழ்த்தி விட்டு, சந்தோசமாய் இறங்கி சென்றேன்.  


ஜன நடமாட்டம் அதிகம் இல்லை. நாளெல்லாம் பிச்சை எடுத்த அசதியில், பிச்சைக்காரர்கள் கடைகளுக்கு முன் போர்வை விரித்து படுக்க தயாராகி கொண்டிருந்தனர்.

பத்தடி தூரம் நடந்து சென்றேன். மறைவான இடம் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி ஓரமாய் என் மானசீக கட்சி தலைவரின் போஸ்டர் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. அருகில் சக தொண்டர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்று மனதில் வேண்டிய பின், "மடை திறந்து தாவும் நதியலை நான்" என்று சந்தோசமாய் ஹம்மிங் செய்த படியே மெதுவாய் ஆரம்பித்து,  உச்சஸ்தாயி வரை ராகம் இழுத்து இசையுடன் கைகோர்த்து சென்று முடித்தேன். முடித்தவுடன் சிறுத்த நிம்மதி ஏற்பட்டது.

உன்னை வாழ்த்த வயதில்லை தலைவா! வணங்குகிறேன்.

கடவுள் கொடுத்த வசதி என, இப்படி  எங்கு வேண்டுமானாலும் கூச்சமின்றி ஜிப்பை சர்ரென்று இழுத்து, சகஜமாய் போகும் அளவுக்கு சுதந்திரத்தை வகுத்து கொண்ட ஆண்கள், பெண்களுக்கு வழங்கியிருக்கும்  சுதந்திரம், இடை, தொடை, மற்றும் இன்னும் பிற தெரியாமல் கவர் செய்து நடை செய்ய வேண்டும். இன்னும் சில பெண்களுக்கு, வெளியே எட்டி பார்க்க அவர்கள் கண்கள் மட்டுமே விசா வாங்கியுள்ளது.


'முகமூடி' என்ற தமிழ் சினிமாவில், அவ்வாறு பொது வெளியில் உச்சா போகும் ஹீரோவின் லுல்லாவை பார்த்த ஹீரோயினுக்கு உடனே காதல் பற்றி கொள்கிறதாம்.

What a Love!!!... ஆச்சர்யத்தில் ஆழ்த்த வைக்கும் முன்னோக்கிய--> சிந்தனை!!

இங்கு எனக்கு காரணமே இல்லாமல், சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. 

"ஏன்டா லூஸ்மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு நினைகிறீங்க?. யூரின் மாதிரி  முன்னாடி போகணும்ன்னு நினைங்கடா!"


தொண்ணூறுகளின் சினிமாக்களில் நிறைய ரேப் சீன்கள் இருந்தது. கல்லூரிக்கோ, கடைக்கோ சென்று திரும்பி கொண்டிருக்கும் ஹீரோவின் தங்கச்சியை, வில்லன் ஒரு ஆம்னி வேனுக்குள் தூக்கி சென்று கதற கதற கற்பழிப்பான். சிறு வயதில் அதை கொஞ்சம் பரிதாபத்தோடும், அதிக பரிதவிப்புடனும் பார்த்த நியாபகம். அதற்கு அந்த நடிகைகளின் தத்ரூபமான நடிப்பும் ஒரு காரணம். இப்போது நம் இயல்பு வாழ்க்கையில் ரேப் அதிகமாய் நடந்து கொண்டிருக்கிறது. வானிலை அறிக்கை போல, தினமும் தவறாமல் ரேப் நியுஸ் இடம் பெறுகிறது.

Women raped in moving bus இல் ஆரம்பித்து moving car, moving auto என இந்திய வரலாற்றில், மூவ் ஆகி கொண்டிருக்கும் சகல வாகனங்களிலும் ரேப் அரங்கேறியிருக்கிறது. வழக்கமாய் பரபரப்பான நிகழ்வை மையமாய் வைத்து படமெடுத்து காசு பார்க்கும்,  ராம் கோபால் வர்மா இன்னும் ஏன் டெல்லி ரேப்பை படம் எடுக்கவில்லை? ஒருவேளை அவர் அதற்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கலாம்.

நம் சமூகத்தில் ஆண்களுக்கான உணர்சிகள் மட்டுமே வெளிப்படையாக அங்கீகரிக்கப் படுகிறது. பதின்ம வயது எட்டியவர்கள், செக்ஸை பற்றி அறிந்து கொள்ளவும் தங்கள் உணர்ச்சியை தனித்துக் கொள்ள கொஞ்சமாயேனும் உதவியாய் இருந்த, செக்ஸ் புத்தகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த பிட்டு படங்களும், தியேட்டர்களும் கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கும் ஒன்றிரண்டு மோசமான டென்ட்டு கொட்டகைகளில் வரும் படங்களும், கதையம்சம் மட்டுமே உள்ள படங்களாக இருக்கின்றன. மருந்துக்கு கூட பிட்டு இருப்பதில்லை என்பது பெரும் சோகம்.

செக்ஸ் புத்தகங்களும், பலான படங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து, செல்போன்களிலும், கம்ப்யூட்டர்களிலும் தங்களை புதுப்பித்து கொண்டு விட்டன. கம்ப்யூட்டரை கொஞ்சம் நோண்ட தெரிந்த பையனுக்கு, பத்து ரூபாயுடன் பிரவ்சிங் செண்டர் சென்றால் போதும். எல்லாமே கிடைக்கிறது. ரியல் லைப் வீடியோவிலிருந்து வகை வகையாக பார்க்கலாம். ஒண்ணுமே தெரியாத படிப்ஸ் பையனையும், வெப்சைட்டின் சைடில் வரும் விளம்பரமே கையை பிடித்து கூட்டி சென்று விடும்.

கம்ப்யூட்டர், செல்போன் போன்ற இத்யாதிகள் இல்லாத காலத்தில் பலான புத்தகம் படிக்காமல், அட்லீஸ்ட் பொம்மையாவது பார்க்காமல் நம் அடல்ட் ஏஜ்ஜை கடந்து வந்திருக்க மாட்டோம். ஆனால் இப்போது இருக்கும் பையன்களிடம் எதையும் பார்க்காதே என்று சொன்னால், நியாயமாரே! 

செல்போன்களில் நியுட் வீடியோக்கள் வைத்திருக்கும் பையன்களை, இன்ஸ்பெக்டர் ரோட்டில் தோப்பு கரணம் போட வைக்கும் சினிமா (வழக்கு எண்) காட்சியை பார்த்து கை கொட்டி சிரிக்கிறோம். இது, ஒரு சின்ன பையனின் டிரவுசரை கழட்டி விட்டு அதை பார்த்து 'ஹேய், அம்மணம்' என்று சொல்லி சிரிப்பதற்கு நிகரான காமெடி. 

எத்தனை firewall வைத்தாலும் இப்போது இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் கடிவாளம் போட முடியாது. எட்டாவது படிக்கும் பையனுக்கு கையில் ஸ்மார்ட் போனையும் கொடுத்து, டூ வீலரையும் கொடுத்து 'சும்மா இருடா தங்கம்' என்றால் சும்மா இருப்பானா? இது எதுவுமே பயன்படுத்த முடியாத / தெரியாதவர்களின் பிரச்சினை பற்றி மட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஒரு சாராருக்கு எல்லாம் கிடைக்கும் போது, எதுவுமே கிடைக்காதவன், மூவ் ஆகி கொண்டிருக்கும் வண்டி நிற்கும் வரை எதையும் செய்யலாம் என்று துணிகிறான்.

என்னதான் நமக்குள் Upper, Middle, Low கிளாஸ் என வித்தியாசம் இருந்தாலும், ஆட்டோ டிரைவர், கால் சென்டர் Cab ஓட்டும் ட்ரைவர் என இயல்பு வாழ்க்கையில் லோ கிளாசை சந்திக்காமல், மிடில், அப்பர் கிளாசால் தப்பிக்கவே முடியாது. ஒரு அப்பர் கிளாசுக்கு, இன்னொரு அப்பர் கிளாஸ் கார் ஒட்டவும் முடியாது.

இயல்பாய் நடக்க வேண்டிய விஷயங்கள் மறுக்கப்படும் போது தான், தவறான விஷயங்கள் நடக்கின்றன. வாட்டர் பைப் உடைந்து விட்டால், வால்வை நிறுத்தாமல் துணியை வைத்து அடைக்கும் வேலையை தான் எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். எது தடுத்தாலும் அதன் விளைவுகளோடு சமூகம் தன்னை தானே தகவமைத்துக் கொண்டே இருக்கும்.

Trivia: இப்போது இலவசமாய் வழங்கப் பட்டிருக்கும் அம்மா மடிக்கணினி, படிப்பில் திக்கு தெரியாமல் திண்டாடும் மாணவர்களுக்கு கல்வியில் கலங்கரை விளக்காய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


                                                                                                          நான்சென்ஸ் தொடரும்...


Mar 12, 2013

"Life of Pigs" - ஆபாயில்

1.) எது நடந்தாலும் எதுவுமே பேசாமல் (மன்மோகன் சிங் போல) அமைதியாக இருக்கலாம்.    (அல்லது)

2.) எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம்.

இதில் முதல் நிலையை கடைபிடிப்பவர் ஞானி ஆகிறார். (சதா பேசி கொண்டே இருக்கும் அந்த பைஜாமா எழுத்தாளர் இல்லை.)

இரண்டாவது, சந்தேகமே இல்லாமல் "நாம்" தான்.

நம்மால் ஞானியாக ஆகவே முடியாது. நமக்கு எதை பற்றியாவது, யாரை பற்றியாவது பேசி கொண்டே இருக்க வேண்டும்.  Breaking News இல்லாத நாட்கள் சிறப்பாய் கழிவதில்லை.
 


                 நம்மள கடுப்பேத்தனும்னே இத்தனை மைக் வச்சிருக்கானுங்க.

ன்னை தொடர்ந்து எழுத சொல்லி, நிறைய கொலை மிரட்டல்களும், தற்கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன. கொலை மிரட்டல்களை மட்டும் கருத்தில் கொண்டு, இதோ 2013 ஆம் ஆண்டின் முதல் ஆபாயில்.

கமெண்டுகளும் வருவதில்லை. Like-களும், Share-களும் படிப்படியாய் குறைந்து அலெக்ஸா ரேங் ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது தமிழின் வளர்ச்சியை பிடிக்காத கர்நாடக அரசியல்வாதிகளின் கைங்கார்யமாக இருக்கலாம். சுப்ரீம் கோர்டில் 'பொது நல' வழக்கு போட உத்தேசம்.

இந்த வருத்தத்தில் இருந்த சமயம் என் நண்பன் சதிஷின் நண்பர் (என் பிளாக்கின் நெடுநாள் வாசகர்... ஹி ஹி...) என்னை முதன் முறை சந்தித்த போது, கட்டி பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். அது எனக்கு ஆயிரம் கமெண்டுகளை அள்ளி தந்ததை போல இருந்தது. இந்த பிளாகை எழுதுவது நீங்கள் தானா!!??? என்று நம்பவே முடியாமல் கடைசிவரை கேட்டு கொண்டிருந்தார். அது ஆச்சர்ய குறியா? இல்லை கேள்வி குறியா? என்று தெரியவில்லை.

எனக்கும் அதே சந்தேகம் தான். எழுத ஆரம்பிக்கும் போது, திடீரென்று எனக்குள் ஒரு ஆவி புகுந்தது போல் ஆகி, ஒரு ஆத்ம மன நிலைக்கு சென்று விடுவேன். பிறகு என்னை அறியாமல் எனது விரல்கள் கீ-போர்டில் நடனமாட ஆரம்பித்து விடும்.

அவரல்லாமல், கட்டிபிடித்தது ஒரு பெண்ணாய் இருந்திருந்தால், அவளையே கல்யாணம் செய்து குட்டி குட்டியாய் நிறைய பப்ளிஷ் செய்ய வைத்திருப்பேன்.

இனி வண்டி வண்டியாய் எழுத போகிறேன். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அலெக்ஸாவில் ஆயிரம் ரேங்கிற்குள் எடுப்பதாய் என் என் மேனேஜரிடம் பிராமிஸ் செய்துள்ளேன். ஆதலால், என் மயிருனும் மேலான தமிழக மக்களே தயவு செய்து தங்களது பொன்னான லைக்குகளையும், டைமண்ட் கமெண்டுகளையும், பிளாட்டின ஷேர்களையும் அள்ளி தந்து இந்த தமிழனையும், தமிழையும் வாழ வையுங்கள்.



சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், இப்போது பேஸ்புக், ட்விட்டர்கள் மூலம் தமிழ் வளர்க்க அரும்பாடு படுகின்றனர். அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் நாட்டு அரசியலை அலசுவது, இடையிடையே  தமிழ் பற்றிய செய்திகளை ஷேர் செய்வது என பல வகையில் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்.  இதனால் பலர் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.

"இந்த தம்பதியினர் காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் இது நீடிக்குமா?" என்று டிஸ்கவரி சேனலை போல, எந்த ஒரு தமிழ் சேனலும் அழகாய் தமிழ் பேசுவதில்லை. அவர்களின் வசன உச்சரிப்பும், குரல் வளமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றும்.

டிஸ்கவரி தமிழ், கூகிள் பிளாக்கர், கூகிள் தமிழ் Transliteration, தமிழ் Translation, தமிழ் விக்கிபீடியா என வியாபார நோக்கதிற்க்காவது வெள்ளைக்காரன் தான் தமிழை வளர்க்கிறான். நமக்கு, புள்ள குட்டிகளை பெறுவதற்கும் வளர்ப்பதற்க்குமே நேரம் பற்றவில்லை. தமிழை வளர்ப்பது அடுத்த கட்ட பிரச்சனை.



வடக்கிலிருந்து தெற்கு வரை வாய் விரிய பேசும் "நீயா நானா" கப்பிநாத் கூட, "வெல்கம் பேக் டு ஆச்சி மசாலா நீயா நானா தீபாவளி ஸ்பெஷல், பிராட் யு பை எஸ்விஎஸ் சன் பிளவர் ஆயில், பவர்டு பை பட்டர்பிளை நான்-ஸ்டிக் குக்வேர்" என்று பந்தாவாய் கோட் போட்டு கொண்டு தமிழ் வளர்க்கிறார்.

ஒருமுறை "தமிழ் பேசுவது" பற்றிய தலைப்பில் ஒரு பையன் "டமில்" என்று உச்சரிததற்க்காக அவமானப் படுத்தி தன்னை தமிழ் ஆர்வலராய் உலகிற்கு அடையாளப் படுத்திக் கொண்டவர். அந்த நிகழ்ச்சிக்கு போகின்ற கெஸ்ட்களுக்கே சொம்பை கிப்ட் பேப்பரில் சுற்றி பரிசாய் கொடுப்பார்கள். சாரு தன் வீட்டில் நிறைய சொம்புகள் அடுக்கி வைத்து உள்ளதாக அவரது சொம்பு வட்டம் தெரிவிக்கிறது. அப்படியிருக்க நடு இரவுக்கு மேல் காத்திருந்து அபத்தமாய் பேசி அவமானப் படுத்தப் படும் அதீத புத்திசாலி பொது மக்களே! உங்களுக்கு ஒரு கேள்வி,

"டேய், எங்கிருந்துடா வறீங்க நீங்கெல்லாம்?"

(கடைசியில் சிறப்பாய் பேசிய அதீத முட்டாளுக்கு எல்.சி.டி. டிவியை கொடுக்கிறார்கள் என்றாலும், அது மற்ற எல்லா முட்டாள்களுக்கும் கிடைப்பதில்லை என்பது கவனிக்கப் பட வேண்டியது. அதை பார்க்கின்ற நீங்களும் முட்டாள்கள் என்பதை சொன்னால் கோபப் படுவீர்கள்!)

கப்பிநாத் அவர்களால் அவமானப் படுத்தப் பட்டு நிறைய பேர் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய், சூர்யா போன்ற சினி செலிபரெட்டிகளிடம் கப்பிநாத் குழைவதை பார்த்திருக்கிறீர்களா?

உங்கூட்டு நாய் பொறாமைப் படும்.

தமிழில் உள்ள மிக பெரிய குறையே "ர்", "ற்", "ன்" தான். நமக்கு பிடிக்காதவனை(ரை) பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நாகரிகமாக எழுத வேண்டிய கட்டாயமாகிறது.




புத்தகம் படிப்பது என்பதே என்னவென்று மறந்து போனதால், இப்போது வெயிலுக்கு கூட புத்தக கண்காட்சி பக்கம் ஒதுங்குவதில்லை.

கடந்த வாரம் என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்த போது "புதிரா, புனிதமா?" கண்ணில் பட்டது. பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதனால நிறைய சந்தேகங்கள் அவனுக்கு. (காலேஜ் படிக்கும் போது, டீச்சரிடம் அவன் ஒரு டவுட்டு கூட கேட்டதில்லை). பிராக்டிகல் எக்ஸாம் முடித்து VIVA-க்காக காத்திருக்கும் மாணவன் போல படபடப்புடன் இருந்த இவனிற்கு பேருதவியாய் இருக்கிறது இந்த புத்தகம்.

ஊருக்கு செல்லும் போது, நாமும் ட்ரெயினில் படிக்கலாமே என்ற எண்ணத்தில்,

"மச்சி நான் படிச்சிட்டு தரட்டுமா?" என்று கேட்டதற்கு, முடியாது என்று கண்டிப்பாய் மறுத்து விட்டான். ஏற்கனவே முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டாலும், பைபிளை போல தினமும் இரண்டு பக்கமாவது திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறான்.

அப்படி இருந்தும் அவனுக்கு சில சந்தேகங்கள் தீரவில்லை. என்ன செய்வது என்று தீவிரமாய் யோசித்து விட்டு, கடைசியாய் இந்த புத்தகத்தை எழுதிய மாத்ரு பூதம் அவர்களின் ஆவியை, ஆவியிடம் பேசும் நபரை (மீடியத்தை) வைத்து கூப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

மிகவும் கஷ்டப்பட்டு ஆவியிடம் பேசும் நபரை கண்டு பிடித்து அவரிடம் சென்றோம். உள்ளே சென்றவுடன் கொஞ்சம் படபடப்பாகவும், பயமாகவும் இருந்தது. விளக்கை உரசிய கொஞ்ச நேரத்தில் பூதம் வந்தார். அந்த மீடியத்தின் மூலமாக பேச ஆரம்பித்தார்.

"என்னப்பா, இந்த நடு சாமத்துல என்னை கூப்பிட்டு இருக்கீங்களே! உங்களுக்கு என்ன சந்தேகம்?"

 "சார்,......."


 "சார்,.......ஒரு டவுட்டு"


 "என்னப்பா? தயங்காம கேளுங்க"


"........."

"........."

"சார், நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்கு தாஸா?"
 

மீடியத்தின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தது. நாங்கள் ஓட தயாரானோம்.

(இவரது போட்டோவை கூகுளில் தேடினால் ஒரே ஒரு போட்டோ தான் வருகிறது. அவர் புத்தகத்தையாவது "பாதுகாப்பாய்" வைத்திருங்கள். இந்த புத்தகம் வரும் தலைமுறைக்காக காக்கப் பட வேண்டும். பின்னர் 'American Pie'-யில் வருவது போல தேடிக் கொண்டிருக்கும் படி ஆகி விடக் கூடாது)



ன் சிறுவயதில் எனக்கும் டிவிக்கும் பயங்கர கள்ள காதல். வீட்டிற்கு தெரியாமல் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பேன். அப்பாவிற்கு தெரிந்தால் பிரம்படி விழும் என்று தெரிந்தும், சில சமயம் பொறுமையாய் படம் பார்த்து விட்டு சென்று அடி வாங்கி கொள்வேன்.

ஆனால் இப்போது அதே டிவி தான் என்னை தினமும் எல்லா பொசிஷனிலும் வைத்து ரேப் செய்கிறது.




மக்கள் 72-inch டிவி வாங்கினாலும், பெரிய ஸ்க்ரீனில் குடும்ப தொடர்கள் மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறார்கள். டெக்னாலஜி மட்டுமே முன்னேறிக் கொண்டுள்ளது. அதை பயன்படுத்துபவர்களின் மூளை, யாருக்கும் பயன்படாமல் அப்படியே பிரெஷாக உள்ளது. எங்கள் ஆபிசில் ஜீன்ஸ் டி-சர்ட்டில் தினம் வரும் ஒரு மாடர்ன் மங்கை, You-tube-இல் அந்த நெடுந் தொடர்களை buffer செய்து பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு இடுப்பில் மூன்று மடிப்பிருக்கும். அவளை மடிசார் மாமி என்று குறிப்பிடுவோம்.

டிவியில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள, எங்கே சென்றாலும் முடிந்த வரை டிவி இல்லாத பஸ் பார்த்தே ஏறுவேன். சீரியல் டைம் முடிந்த பின்பு தான் இரவு வீட்டிக்கு வருகிறேன். சனி, ஞாயிறு எங்கேயாவது வெளியே சென்று விடுகிறேன். சீக்கிரம் தனியாய் ரூம் எடுத்து போக வேண்டும்.



'நடுவுல கொஞ்சம் எதையோ காணோம்' படத்திற்கு பிறகு இனி தமிழ் படம் பார்க்க மாட்டேன் என்று எங்கள் வீட்டு பப்பி மேல் செய்த ஆணையை (நாய் மேல் ஆணை) மீறாமல் இருக்கிறேன்.

இனி "நோ" நமீதா விமர்சனம் (இப்ப சந்தோசமா?)

இதனால் என்ன பிரச்சினை என்றால் சினிமாவுக்கு கூப்பிடும் நண்பர்களிடம் 'நான் தமிழ் படம் பாக்கறதில்ல மச்சி' என்று உண்மையை சொன்னால், காண்டாமிருகம் ஆகி விடுகிறார்கள்.

தமிழ் ரசிகர்களின் ரசனை கொண்டாட பட வேண்டியது.. இங்கு துப்பாக்கி தான், ஆக்சன் கம் திரில்லர் படம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, முழு நீள நகைச்சுவை படம். விஸ்வரூபம், சிறந்த ஹாலிவுட் படம். தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் முட்டாளுக்காக முட்டாள் எடுக்கும் படமாகவே ஆகி விடுகிறது.

தமிழ் சினிமா பார்க்காமல் இருந்ததால், என் மனம் கொஞ்ச நாள் சாந்தியோடு இருந்தது. அப்புறம் நித்யாவுடன் இருந்தது.

ஆனாலும் விதி வலியது தானே!

போன வருட இறுதியில் நண்பர்களுடன் கோவா சென்றிருந்தோம். அங்கே உண்மையாக சைட் சீயிங் மட்டும் தான் போனோம். பாரின் சரக்கின் பக்கம் கூட நெருங்க வில்லை. பீச்சில் பிகினியுடன் காற்று வாங்கி கொண்டிருந்த ஒரு ரஷ்ய நாட்டு வெள்ளைக்காரியின் இடுப்பில் கை வைத்தேன். அதற்கு மேலோ கீழோ எந்த தப்பும் செய்யவில்லை.

எல்லாம் முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தோம். பஸ் பெங்களூரை தாண்டி வந்து கொண்டிருந்த போது டிவிடியில், திடீரென துப்பாக்கியை காட்டி மிரள வைத்து விட்டார்கள். தவிர்க்க முடியாத அந்த தருணங்கள், எனக்குள் கடவுள் மற்றும் சாத்தான்கள் நம்பிக்கையை உண்டாக்கின. பஸ் சென்னையை வந்தடைந்த போது, ஏறக்குறைய அனைவரும் இறந்திருந்தார்கள். சப்-டைட்டிலை படித்து படம் பார்த்த இரு ஜப்பானியர்களும் அதில் அடக்கம். அவர்கள் வாயில் இரண்டு புல்லட்கள் இருந்தது. நான் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்தேன்.


சாக்கடை நிலையம் 
ரில் இருக்கும் சொந்தக்கார பெருசுகள், "தம்பி எங்கப்பா வேலை செய்ற?" என்று கேட்கும் போது, "சென்னையிலங்க" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு ஓடி விடுவேன். சில பேருக்கு "மெட்ராஸ்" என்று சொல்ல வேண்டும்.

சென்னையை கண்டிறாத அந்த பெரிசுக்கோ, நான் ஒரு பெரிய சிட்டியில் கன்னியர்கள் மடியில் தவழ சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைப்பு.

சென்னையின் நறுமணம் பற்றி, ஒவ்வொரு வருடமும் மூக்கை பிடித்துக் கொண்டே "ஹேப்பி மெட்ராஸ் டே!" சொல்லி கொண்டாடும் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் தெரியும். போன வருடம் இஞ்சினியரிங் கவுன்சலிங்கிற்காக வந்த என் சித்தி பெண், இங்கெல்லாம் எப்படியா இருக்கீங்க? என்பது போல பார்த்த பார்வையில், எனக்கு பன்றியாய் மாறி போன உணர்வு.

ஒவ்வொரு வருடமும் ப(ன்)னிரெண்டாவது வகுப்பு முடித்து, கூட்டமாய் சென்று என்ஜினீயரிங் சேரும் பன்றி குட்டிகள், நாலு வருடம் கழித்து தவறாமல் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னையை வந்தடைகின்றன.




வெள்ளிக்கிழமை இரவு ஊருக்கு செல்ல, கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் செல்லும் அனைவருக்கும் தெரியும், அந்த நிலையம் உலக தரம் வாய்ந்தது என்று. மழை பெய்து விட்டால் சாக்கடையும் நாமும் இரண்டற கலந்து விடுவோம். ஐ.டி யில் வேலை செய்யும் நம்மை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய சொன்னால் கூட, நமக்கெல்லாம் அது CakeWalk.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில இருக்கும் (சாக்)கடைகளில் வாங்கும் பொருளுக்கு நான்கைந்து ரூபாய் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். நம் ரயில்வே ஸ்டேசனிலும், பஸ் நிலையங்களிலும் கர்ச்சீப் வைத்து பொத்தாமல் நிற்பது அசாதாரண காரியம். 


சம்பிராதய ஜோக்:

அவருடைய நண்பனின் தந்தை தமிழக அரசை வாழ வைக்கும் பெரிய கருணை உள்ளம் கொண்ட குடிமகன். வாடகை கொடுக்காமல் டாஸ்மாக்கில் குடியிருப்பவர். நினைவு திரும்பினால் தன் சொந்த வீட்டிற்கு விசிட் செய்வார்.

ஒரு நாள் அப்படி விசிட் செய்ய வரும் போது, பாதி வழியிலேயே ரோட்டின் ஓரம் தள்ளாடி கவிழ்ந்து விட்டார். அவரது மகனுக்கு செவி வழி இந்த செய்தி வர, வண்டியை எடுத்துக் கொண்டு போய் போதையில் இருந்த தன் அப்பாவை தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டுள்ளார்.

தான் இருக்கும் இடம் மாறிவிட்டதை உணர்ந்த தந்தை, லேசாய் கண்ணை திறந்து, தன் மகனை பார்த்து,

"தம்பி, யாரு பெத்த பிள்ளையோ நீ. என்னை கொண்டு வந்து என் வீட்டுல சேர்த்துருக்க! நீ நல்லாருக்கோணும்"