Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sep 1, 2010

நான் மகான் அல்ல - நமீதா திரை விமர்சனம்

இந்த வாரம் முழுதும் எதுவுமே எழுத யோசிக்க முடியல. சின்ன வயசுல கடவுள் கிட்ட நல்லா படிக்கணும்ன்னு வேண்டுகிற மாதிரி, இப்ப பதிவு எழுத ஏதாவது தீம் கிடைக்கணும்ன்னு வேண்டணும் போல.




படத்தோட தலைப்பை பார்த்து முதலில் ஒரு வித்தியாசமான கதை அம்சம் உள்ள படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனா படத்துல நினைத்த மாதிரி கதை அம்சம் இல்லைனாலும், திரைக்கதை அம்சமாக இருந்துச்சு.

தன்னோட பிரெண்டோட கல்யாணத்துல காஜல் அகர்வால பார்த்து சைட் அடிச்சு, லவ் பண்ணறாரு ஹீரோ கார்த்தி. இதற்கு இடையில கஞ்சா அடிச்சிகிட்டு காலேஜ் படிக்கிற ஒரு நாலு பசங்க, நிறைய பொண்ணுங்கள ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. அந்த மாதிரி ஆகுற ஒரு கொலைக்கு, கால் டாக்சி டிரைவர் ஆக வேலை செய்யுற கார்த்தியோட அப்பா சாட்சி ஆக மாற, அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடறாங்க. உடனே இதை எல்லாம் மன்னிக்க நான் மகான் அல்ல ( படத்தோட தலைப்புக்கு சம்பந்தம் வந்துடுச்சா? )  என சொல்லி கார்த்தி, கத்தி இல்லாம புறப்பட்டு போய் அந்த பசங்க எல்லோருக்கும் பாடை கட்டறது தான் கதை.


தெலுங்குல "மகதீரா"வும், "ஆர்யா 2"  படமும் பார்த்ததில் இருந்து, காஜல எனக்கு நிறையவே பிடிச்சிருச்சு.  மிகவும் அழகான, அவ்வளவு பெரிய கண்ணு (கீழ இருக்கிற படத்த பாத்துட்டு கண்ணு மட்டும் தானா அப்படின்னு கேட்க கூடாது). "கோலிகுண்டு கண்ணு, கோவப்பழ உதடு" பாட்டு இவங்களுக்கு மிகவும் பொருத்தமா இருக்கும். இப்பவெல்லாம் காஜல் தான் தினமும் என் கனவுல வந்து கஜல் பாடறாங்க. ஹி! ஹி!







கார்த்தி துரு துருன்னு ஜாலியான கேரக்டர். காமெடி பண்றதுல விஜய்க்கு போட்டியா ( ;-) வர நிறைய சான்ஸ். இவருக்கு நல்ல நல்ல படமா அமையுது. காதல், சண்டைன்னு கலக்குறாரு. அதுவும் அவங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் பழிவாங்க புறப்பட்டு போகும் போது, அவரோட அண்ணன் மாதிரி இவரும் சிங்கம்ன்னு நிரூபிக்கிறார்.

யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. யுவன் பாடுன "கண்ணோடு காதல் வந்தால்" பாட்டு அசத்தல். "ஒரு மாலை நேரம்" பாட்டு படத்துல வரல. நானும் எங்கடா இடைவேளைக்கு அப்புறம் ஹீரோயினோட முகத்த ஒரு தடவ காமிச்சு, இந்த பாட்ட போட்டுருவான்களோ அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன். பரவால்ல அந்த மாதிரி டைரக்டர் ஏதும் think பண்ணலை.

படத்தோட முதல் பாதி காதல் ரொமான்ஸ், காமெடின்னு சூப்பரா போகுது. இரண்டாவது பாதி முழுதும் பழி வாங்கும் படலம். அதிக வன்முறை. அந்த பசங்க வர்ற சீன் எல்லாமே படு பயங்கரமா இருக்கு. பிரெண்டோட காதல், அவனோட காதலியையே கற்பழித்து கொல்றது, இது எல்லாமே இப்போ நம்ம நாட்டுல நடக்கிறத வெளிப்படுத்துற காட்சிகள்.

அதனால் குழந்தை குட்டிகளோட படம் பார்க்க போனிங்கன்னா, இடை வேளைக்கு அப்புறம் உங்க குழந்தைகளுக்கு ரெண்டு பாப்கார்ன் பாக்கெட் வாங்கி கொடுத்து கூட்டி கிட்டு வந்துருங்க.

இந்த படம் படு மொக்கையாக போய்ட்டா, இந்த மாதிரி படத்த பார்க்க நானும் மகான் அல்ல என்று நமீதா டச் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா படம் எஸ்கேப் ஆகிடுச்சு. அதனால,

நமீதா டச் : நான் மகான் அல்ல, இனிது இனிது இடைவேளை வரை.



டிஸ்கி: நமீதா பெயரை ஹிட்ஸ்க்காக மட்டுமே உபயோக படுத்தியுள்ளேன். இதை தவிர, சத்தியமாக எனக்கும் நமீதாவுக்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை.





Jul 5, 2010

கள்வாணி - நமீதா திரை விமர்சனம்




துபாய்ல இருந்து அப்பா (இளவரசு) அனுப்புகின்ற பணத்தில் ஊரில் வெட்டியாக சுற்றிக்கொண்டு செலவு செய்து கொண்டிருக்கிற நம்ம ஹீரோ 'பசங்க' பட விமல். பக்கத்து ஊர்ல இருந்து ஸ்கூல் படிக்க வர்ற வில்லனோட தங்கை புது முக ஹீரோயின் ஓவியா. இந்த ரெண்டு ஊருக்கும் எப்புவும் காய்தான் (சண்டை). இதற்கு இடையில் ஹீரோவிற்கு ஹீரோயின் மேல லவ்வு வந்து கடைசியில் 
எப்படி தாலி கட்டுகிறார் என்பது தான் கதை. உண்மையாகவே படு வித்தியாசமாக யாரும் நினைச்சி பார்க்காத வகையில் தாலி கட்டுவார் (ஹீரோயினே நினைச்சு பார்க்கலை).

படம் நெடுக காமெடியை கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுதும்
மக்கள் சிரிச்சிகிட்டே தான் இருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு கதை பயங்கர விறுவிறுப்பாக நித்தி மேட்டர் மாதிரி சர்ர்ன்னு பத்திகிட்டு போகுது. நாமளும் பக்கத்துக்கு சீட்டு பருவ சிட்டோடு சேர்ந்து கதையோடு ஒன்றி விடுவது நிஜம்.

முதல் தடவை பார்க்கும் பொழுது சில சீரியஸ் ஆன சீன்கள் வந்தால் கூட கொஞ்ச நேரத்துலையே எதாவது காமெடியை போட்டு சிரிக்க வச்சுடறாங்கப்பா. 


ஹீரோவோட அம்மா சரண்யா ('நாயகன்' நாயகி), ஓவ்வொரு தடவையும் தன் மகன் தப்பு பண்ணும்போது "அவனோட நேரம் தான் அவன் அப்படி பண்ணிக்கிட்டு இருக்கான். இந்த ஆவணி போய் ஆவடி வந்தா, டாப்ல வந்துருவான்னு பட்டிகாட்டு ஜோசியர் சொன்னார்" என்று வசனம் பேசிக்கொண்டே இருப்பார்.


ஆனால், படம் ஆரம்பித்தில் இருந்து கடைசி வரைக்கும் விமல் டாப்லேயே இருக்கிறார். தெனாவெட்டான பேச்சு, பரட்டை தலைன்னு RX100 பைக்கை எடுத்துக்கிட்டு சுத்துவதுமாக பட்டையை கிளப்பியிருக்கிறார். புது முகம் ஹீரோயின் நடிப்பு ஓகே.

"பஞ்சாயத்து"ங்கர கேரக்டர்ல வர்ற கஞ்சா கருப்பு, நீண்ட நாளுக்கு அப்புறம் அவரு அழுது நம்மை சிரிக்க வைக்கிறார். மொத்த களவாணி பசங்களும் சேர்ந்து அவரை தொல்லை பண்ணி சாக அடிக்கறாங்க. அவரு செத்துட்டார்ன்னு ஊர் முழுதும் காரில் ரேடியோ வைத்து அறிவிப்பது நல்ல காமெடி.

E=mc2 மாதிரி ஐன்ஸ்டீன்க்கு போட்டியாக ஒரு சமன்பாட்டை டைரக்டர் கண்டுபிடித்து அதை சமனும்(derive) செய்கிறார். இனி பள்ளிக்கூட பசங்க எல்லாம் இதை யூஸ் பண்ணாம இருந்தால் சரி. 


ஒயின் ஷாப்ல மெனு எடுக்கறது, 
மினி பஸ்ல சைக்கிள தூக்கி வச்சுக்கிட்டு தப்பிக்கறது,
ஹீரோயினுக்கு வீட்டு பாடம் எழுதாதிலிருந்து தப்பிக்க ஐடியா கொடுக்கறது


என சின்ன சின்ன விஷயங்கள் நிறைய நன்றாக பண்ணியிருக்கார் இயக்குனர்.

பாட்டெல்லாம் சம்மர்ல வர்ற மழை மாதிரி வர்றதும் தெரியாம போறதும் தெரியாம லேசாக நனைச்சிட்டு போகுது. டம்ம டும்மா பாட்டு கதாபாத்திரங்களோடு சேர்ந்து நம்மளையும் தட்ட வைக்கின்றது. 


கிளைமாக்ஸ் ஜாலி கொண்டாட்டம். மக்கள் end டைட்டில் முடிஞ்சு ஸ்க்ரீன் மூடுகின்ற வரைக்கும் பார்த்துவிட்டு தான் கிளம்பறாங்க. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்க சின்ன வீடு, பெரிய வீடு எல்லாத்தையும் கூட்டிட்டு போங்க.

நமீதா டச்: கள்வாணி மச்சான் மனச கள்வாண்டுட்டான்.

டிஸ்கி: கடைசி வரைக்கும் தலைப்பை தவிர எங்கடா நமீதாவொட ஒரிஜினாலிட்டி காணோம்ன்னு பார்க்கறீங்களா?. நிறைய பேர் ஹிட்ஸ் வர்றதுக்காக சாரு பேர யூஸ் பண்ணுவது போல, நான் நமீதா பெயரை யூஸ் பண்ணியுள்ளேன். இதற்கு நமீதாவிடம் இருந்து ஹிட்ஸ் வராமல் இருந்தால் சரி.