இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் நம் தமிழ் படங்களின் தரம் மற்றும் தமிழ் உலக நடிகர்களின் நடிப்பை பற்றிய கேவலமான உணர்வு உண்டானால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. நான் இந்த படத்தை பார்த்தது ஒரு வகையில் சந்தோசமான் விபத்து.
நாயகி ரூபி-க்கு ஆண்களுனுடன் ஆனா உறவு தொடர்ந்து தோல்வியையே தர, தற்செயலாய் பார்க்கில், சாம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பிறக்கிறது. ஆனால் சில நாட்களில் அவளுக்கு சாமின் செயல்கள் சந்தேகத்தை உண்டாக்க, அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என சந்தகப் பட்டு கேட்கும் பொழுது, தான் 2470 ஆம் ஆண்டிலிருந்து டைம் ட்ராவல் செய்து நிகழ்காலத்திற்கு வந்ததாக கூறுகிறான். "ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்?" என அவள் விடாமல் கேட்கும் கேள்விக்கெல்லாம், அவன் எதோ ஒரு பதிலை பாக்கெட்டில் வைத்திருக்க, அவனை நம்பாமலும் நம்பியும் அவள் பாடாய் படுகிறாள். அவன் மன நலம் பாதிக்க பட்டு இருப்பானோ என்று அவள் சந்தேகப் படுகிறாள். வரும் வெள்ளிகிழமை அவள் இறக்க போவதாயும் சொல்லுகிறான். அவன் சொல்வது உண்மையா? இல்லையா? என நீங்களே டவுன்லோடி பாருங்கள்.
ரோட்டின் ஓரமாய் ஒதுங்கி நின்று லேசாய் தூக்கி பிடித்து அடர் மஞ்சள் நிறத்தில் சிறு-நீர் துளிகளை சட சடவென்று தரையில் பரவலாய் சிதறடித்துக் கொண்டிருந்தன சோடியம் விளக்கு கம்பங்கள், நள்ளிரவு கன மழையில். ****************************** சட்டென்று பிடித்த கன மழையில் ஒதுங்க இடமில்லாமல் நனைந்து விட்டிருந்த அவள் சுடிதாருக்குள் அப்பட்டமாய் தெரிந்தன, முழுக்க நனைந்து விட்ட அவள் முலைகள் பிராவினால் போட்டிருந்த முக்காடு. ****************************** ஜோடியாய் தொடர் மழையில் தொப்பலாய் நனைந்து, யாரும் பார்க்காத போது கை தொட்டு உரசி சல்லாபித்து கொண்டிருந்தன, கொடியில் கிடந்த அவள் ரவிக்கையும் என் சட்டையும். ******************************* நடு சாமம் காட்டு வழி பாதையை தனியே கடக்கையில், திடீரென வந்து என்னை பிடித்த பேய் மழையில் நடுங்கி போனேன். அடுத்த நாள் காலை எனக்கு 'பயங்கர' குளிர் ஜுரம். பின் குறிப்பு: இந்த கவிதைகளை நான் எழுதியதிற்கு, நேற்றிரவு பெய்த மழையை தான் நீங்கள் திட்ட வேண்டும். Don't Blame me!!
இது ஒரு சர்வாதிகாரியின் உண்மை வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லும் படம் இல்லை. மாறாக ஒரு சர்வாதிகாரியின் செயல்களை காமெடியாக்கி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Satire வகை படம். You'll die laughing!! இவரின் உண்மை பெயர் Sacha Baren Cohen. இதற்கு முன் இவர் நடித்த Ali G Indahouse, Borat, Brüno என அனைத்தும் இதே வகை படங்களே! இவரது படங்களில் அமெரிககா, ஐரோப்பியா, அரபு நாடுகள், ஹாலிவுட் நடிகர், நடிகைகள், gays என அனைத்தையும் கலாய்த்திருப்பார். Vulgar காமெடி அதிகமாய் இருக்கும். இவரது படங்களை பெண்கள் பார்க்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன். இந்த படத்தை, ஹிட்லரை போன்ற எந்த சர்வதிகாரி தன்னை கட்டுபடுத்திக் கொண்டு பார்த்தாலும் அசால்ட்டாய் சிரிக்க வைத்து விடும். ஆனால் இது லிபியா அதிபர் கடாபியை மையப் படுத்தி எடுத்ததாக சொல்லப் படுகிறது. அலாதீன் என்ற சர்வதிகாரி "Wadia" என்ற நாட்டை சர்வதிகார ஆட்சி செய்து
வருகிறார். அவருடைய பாதுகாப்புக்கு 30 பேர் கொண்ட பெண்கள் படை இருக்கிறது. அவர்கள் எல்லோரும் Virgins. அவர் என்னவெல்லாம் செய்கிறார்?
அவரே சொந்தமாய் ஒரு ஒலிம்பிக்ஸ் விளையாட்டை நடத்துகிறார்.
வாடியா-வின் மொழியில் உள்ள சுமார் 300 வார்த்தைகளை, "அலாதீன்" என்று மாற்றுகிறார். அவற்றுள் Positive மற்றும் Negative வார்த்தைகளும் அடக்கம்.
மற்ற நாடுகள் தன் நாட்டின் மீது போர் செய்து ஆயில் வளங்களை கொள்ளையடிக்காமல் இருக்க Nuclear Weapon-களை உருவாக்குகிறார்.
சயின்டிஸ்ட் முதல் சாதாரண ஆள் வரை எதற்கெடுத்தாலும் execute செய்கிறார்.
ஒரு அமெரிக்க பெண்ணை லவ் செய்கிறார்.
ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார்.
உலக நாடுகளுக்கு சர்வதிகாரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
இருந்தாலும், கடைசியில் Democracy-யை கொண்டு வருகிறார்.
ஏன் இதெல்லாம் செய்கிறார்? என்ன நடந்தது?
டவுன்லோட் லிங்க்: http://www.ahashare.com/torrents-details.php?id=263579 இந்த படத்திற்கு கலக்கலாய் ஒரு விமர்சனம் எழுதலாம் என நினைத்தேன் ஆனால் ரிசல்ட்= மொக்கை whatever, நேற்று நான் Shirin Farhad என்ற ஹிந்தி ரொமாண்டிக் காமெடி படத்தை பார்க்க நேர்ந்தது. பாதியிலேயே நான்... உர்ர்ர்... உர்ர்ர்.... உர்ர்ர்... வெகு சுமாரான ஸ்கிரிப்ட்.... வெகு சுமாரான நடிப்பு... நான் பார்த்ததும் சுமாரான பிரிண்ட். Totally Unrelated to comedy: BTW, What is Democracy? Democracy is a hairy armpit.
99.99 மில்லியன் ஹிட்சுகளை என் மேல் வாரி இறைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அடாசு பதிவுலக பெருமக்களுக்கும், மண்வெட்டி வாசகர்களுக்கும் கோடானு கோடி தாங்க்ஸ்! This Post is strictly for Matured. தயவு செய்து படித்து விட்டு என்னுடன் யாரும் சண்டைக்கு வராதீர்கள். நேற்று இரவு, ஷாங்காய் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், தற்செயலாய் கே.டிவி. யின் இரவு கொண்டாட்டத்தில் ஒரு தமிழ் சினிமா காட்சியை பார்க்க நேர்ந்தது. அது "கோ"மகன் ஜீவா அவர்கள் "ஆசை ஆசையாய்" நடித்த முதல் படம் (தேங்க்ஸ் டு விக்கிபீடியா). நாயகி, ஒரு லேடிஸ் துணிக்கடையில் வேலை செய்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு ஆள், ஒரு பெண் பொம்மைக்கு அணிவித்திருக்கும் ஆடையை பார்த்து, அது பிடித்து போய் அதை எடுத்து கொடுக்க வேண்டி, நாயகியிடம் கேட்கிறார். அதற்கு, இந்திய கலாச்சாரத்தை கட்டி காக்கும் நம் நாயகி, பொம்மையின் ஆடையை அங்கேயே வைத்து கழட்டினால் பொம்மையின் கற்பும், அந்த ஆணின் மனமும் கெட்டு போய் விடும் என்ற காரணத்தால், "ஓகே. சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பொம்மையை மேல் மாடிக்கு எடுத்து கொண்டு போய், அதன் ஆடையை கழட்டி உங்களுக்கு பேக் செய்து தருகிறேன்" என சொல்ல, வில்லனாக காட்டப்படும் அந்த ஆள், "இல்லை இங்கேயே வைத்து கழட்டி கொடுங்கள்" என வம்பிழுத்து அந்த பொம்மையின் ஆடையை பற்றி கிழிக்க முயற்சிக்க, இதையெல்லாம் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த நம் ஆதர்ச நாயகன் ஜீவா, பொம்மைக்கு ஏற்படபோகும் அவமானத்தை தடுக்க பொங்கி எழ, அங்கே ஒரு பைட் சீன் ஆரம்பமாகிறது. அதற்கு பிறகு கதையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் ஷாக் ஆகி, அடுத்த சேனலுக்கு பயந்து ஓடி விட்டேன். அந்த சீனை தவிர, நான் படத்தை பார்த்தது இல்லை. நான் சொல்வது கொஞ்சம் மாறி இருக்கலாம். அதற்கு வருந்துகிறேன். அந்த பைட் சீனுக்கு பிறகு, நாயகனுக்கு நாயகியுடன் ஒரு டூயட் பாட்டு வந்திருந்திருக்கலாம். அதில் நாயகன் நாயகியின் இடுப்பில் ஊர்ந்து வாசம் பிடித்து, மேலேறி மார்பின் மேல் மையம் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் பொது ஜனத்துக்கு, ஒரு பொம்மையின் நிர்வாணத்தை பார்க்க கூட கட்டுப்பாடு உள்ளது. இயல்பை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல், அத்துமீறி காட்டப் படும் சினிமாக்கள் எல்லாமே நம்மை ஏமாற்றவே எடுக்கப் படுகின்றன. சினிமா எடுப்பவர்களுக்கு, "கவர்ச்சி", "மார்பு", "தொப்புள்" என்பவைகள் தான் பிரதானமாய் சோறு போட உதவும் விஷயங்கள். சுதந்திரமாய் செக்ஸ் செய்ய வழி இல்லாமல், எல்லைமீறி போய் கன்று குட்டியையும் கழுதையையும் புணர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், திரையில் நடிகையின் ஒரு சாதாரண கிளிவேஜ் சீனை பார்த்தாலே, பக்கெட் பக்கெட்டாய் சலவாய் விட்டு ஏங்கி கொண்டிருக்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப் படுகிறான் காமன்மேன். நம்மால் பண்ண முடியாததை நாயகன் பண்ணுகிறானே என்று அதை பார்த்து நாம் வியந்து கைதட்டி சந்தோசப்பட்டு கொள்கிறோம். மட்டன், சிக்கன் என வகை வகையாய் தின்றுவிட்டு, மிச்சமிருக்கும் எலும்பை நாய்களுக்கு போட்டு அவைகளை குதூகலப் படுத்துகிறவர்கள் தான் நம் சினிமாக்காரர்கள். மற்ற மீடியாக்களும் இவைகளை செய்தே, காசு பார்க்கின்றன. தியானம் பற்றிய ஒரு செய்திக்கு, உள்ளாடையுடன் படு கவர்ச்சியாய் ஒரு பெண் உட்கார்ந்து தியானம் செய்வது போல படம் போட்டு வியாபாரம் செய்யும் "கவர்ச்சி ஆப் இந்தியா" நாளிதழ். காசுக்காக ஒரு பெண் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்ததை, "செக்ஸ் வெறியில் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண்" என்று மாற்றி தலைப்பு போட்டு ஆர்வத்தை தூண்டும் டினமலர். நமக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி. என்னவென்றால், இன்னும் கொஞ்ச நாளில் ஸ்ரேயாவின் தொப்புளை, 3D-யில் பார்க்க போகிறோம். நடிகனுக்கு நிற்கவே முடியவில்லை என்றாலும்...... முப்பது வயது வரை ஒரு ஆண், பெண்ணை பற்றியும் செக்ஸ்சை பற்றியுமே கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு அவனுக்கு திருமணம் ஆனவுடன், தூக்கமே வருவதில்லை. அதனால் அப்துல்கலாம் சொன்ன கனவு அவனுக்கு வர சாத்தியமே இல்லை. நாம் இன்னும் மது அருந்தலாமா? வேண்டாமா? என்றே அடித்துக் கொண்டிருக்கிறோம். உங்களையெல்லாம் நூறு பூனம் பாண்டே வந்தாலும் திருத்த முடியாது. இந்த பழமையான கலாச்சார இந்தியாவில், பூனம் ஒரு அதிரடியான மாடர்ன் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. நமது கலாச்சாரம் மாறி, செக்ஸ் என்பது சாதாரணமானவனுக்கு சாதாரணம் ஆகும் போது, அரசியல்வாதிகளோ சினிமாகாரர்களோ நம்மை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. அப்போது, தொப்புள் காட்சியையும் கிளிவேஜ் சீனையும் தமிழன் துச்சமென மதித்து, தூக்கி எறிந்து விடுவான். அஞ்சலியையும், ஒவியாவையும் அரைகுறை ஆடையில் நிற்க வைத்து போட்டோ ஷூட் செய்து ஏமாற்றிய, கலகலப்பு போன்ற Third ரேட் காமெடி படங்களும் செல்லுபடியாகாது. "உயிரின் உயிரே" பாட்டில் சில மைக்ரோ நொடிகள் மட்டும் மங்கலாய் தெரியும் ஜோதிகாவின் நிப்பிள் சிலிப்பை கூர்ந்து பார்த்து கண்டுபிடிக்காமல், புதிதாய் அறிவியலில் ஏதாவது கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடிப்பான் இந்தியன்.
இதை படிப்பதற்கு முன், இதை படித்து விட்டு வாருங்கள். Nonsense Talking 3 - குப்பை Planet நீங்கள் புதிதாய் பிளாக் எழுத வந்துள்ள அப்பிராணியா? நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? அப்படியெனில், நீங்கள் என்னென்ன செய்தால் இங்கு குப்பை கொட்ட முடியும்? அதை எப்படி செய்வது? வாருங்கள் கற்று கொள்வோம்!! குப்பை தான் நம்முடைய வாழ்வாதாரம். குப்பையை நீங்கள் அருவருப்பாக பார்த்தால் இங்கு பிழைத்திருப்பது கடினம். சாலையில் நடந்து செல்லும் போது குப்பை அள்ளும் வண்டியை கடந்து செல்ல நேரிட்டாலோ, ட்ராபிக்கில் குப்பை வண்டிக்கு அருகில் நிற்க நேரிட்டாலோ, மூக்கை பொத்திக் கொண்டு அல்லது மூச்சை கட்டுபடுத்தி கொண்டு அவஸ்தை படுகிறீர்களா? உங்களுக்கெல்லாம் ஒரு உன்னத அட்வைஸ். 7 ஜி ரவி கிருஷ்ணா நடித்த "பொன்னியின் செல்வன்" என்ற படத்தில் ஒரு காட்சி வரும். குப்பை அள்ளும் வேலைக்கு புதிதாய் சேர்ந்த ரவி கிருஷ்ணாவிற்கு, குப்பையின் நாற்றத்தில் குமட்டி கொண்டு வரும். அப்போது கூட வேலை செய்யும் ஒரு சீனியர் சொல்வார் "அந்த குப்பையை ஒரு முறை நன்கு மூச்சு இழுத்து முகர்ந்து விடு. அப்புறம் அதன் நாற்றம் உனக்கு தெரியாது. ப்ரீயா வேலை செய்யலாம்" அதனால் ஏற்கனவே இணையத்தில் ஏராளமாய் கொட்டி கிடக்கும் குப்பைகளை வாசித்து, நுகர்ந்து குப்பையோடு குப்பையாய் கலந்து மக்கி விடுங்கள். உங்களுக்கு அதன் நாற்றம் பழகி விட்டால் அதன் பின் எந்த அருவருப்பும் உண்டாகாது.
OK. Lesson Starts...
சினிமா செய்திகள், விமர்சனங்கள் தான் மிக சரியான மனித கழிவு. வருபவர்கள் ஈ மாதிரி மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள். உங்களுக்கு கதைக்கும் திரைகதைக்கும் வித்தியாசம் தெரியாது இருக்கலாம். ஆனாலும் கேமரா வொர்க், CG, லைட்டிங், மேக்கிங் போன்ற டெக்னிகல் விசயங்களை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். செய்த தவறை அடுத்த படத்தில் திருத்தி கொள்ள இயக்குனருக்கு அட்வைஸ் மற்றும் பாராட்டுகள், முக்கியமாய் நீங்கள் எந்த தியேட்டரில் படம் பார்த்தீர்கள் என்று குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த செய்தி நாளைய வரலாற்றில் இடம் பெறும். IMDb-யில் கூட இல்லாத அளவுக்கு, படத்தின் Casting, Writers போன்ற இதர விசயங்களை குறிப்பிட வேண்டும். தமிழை தவிர இந்தி, தெலுகு, மலையாளம், ஒரிசா, மராட்டி என பிராந்திய மொழிகளில் வரும் அனைத்து படங்களையும் பார்த்து, டயலாக் புரியவில்லை என்றால் கூட பக்கத்தில் இருப்பவரையாவது கெஞ்சி கேட்டு நோட் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் அதிகம் வரலாம். ஆனாலும் எழுதும்போது Lifco டிக்சனரியை பயன்படுத்தி நடுநடுவே "அமேசிங்", "மாடுலேஷன்", "இன்ஸ்பயர்", "டெம்ப்ளட்" "ட்விஸ்ட் அண்ட் ட்ர்ன்" போன்ற ஆங்கில வார்த்தைகளை அப்படியே டமிலில் மாற்றி அங்கங்கே நுழைத்து படிப்போருக்கு வயிற்றுபோக்கை வர வழைக்க வேண்டும். அது பிற்காலத்தில் தனி ஸ்டைலாக உருவெடுக்கும். அதை உருவாக்கிய உங்களுக்கு உத்திர பிரதேசத்தின் சாலையோரத்தில் நூற்றுகணக்கில் சிலை வைக்கப் படும். நீங்கள் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கி இருக்கலாம். ஆனாலும் அந்த படத்தை மறுபடியும் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதியே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. "மொக்கை படம் தானே! இதற்கு ஏன் விமர்சனம் எழுத வேண்டும்?" என்று உங்கள் மனசாட்சியிடம் கூட கேள்வி கேட்க கூடாது. விமர்சனம் தவிர நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் காலையில் எழுந்து பல் துலக்கியது முதல் பிரியாணி செய்து போட்டது வரை அவர்களது அன்றாட செயல்களை பதிக்க வேண்டும். அன்னா ஹசாரே பற்றிய பதிவிலும், நடிகைகளின் கவர்ச்சி வால்பேப்பர் படங்களை ஒவ்வொரு பத்திக்கும் இடையில் சொருகி, படிக்கும் வாசகனின் மூடை கன்னாபின்னா வென்று ஏற்றி விட வேண்டும். படத்தின் இயக்குனர் யோசித்திருக்காத கோணத்தில், நாம் யோசித்து அதை கூறு போட்டு விமர்சனம் செய்வது தனி கலை. அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். உங்கள் விமர்சனத்திற்கு உலகமே காத்துக் கொண்டிருப்பதாக பல பில்டப்களை உருவாக்க வேண்டும். இந்த பகுதியையும், இனி வரும் தொடர் பகுதிகளையையும் தொகுத்து "குப்பை கொட்டுவது இப்படி" என்ற தலைப்பில் இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். இதற்கு, குப்பை கொட்டும் கலைக்கு ஆசானாக விளங்கும் குட் பீல்ட் அவர்கள் ஆங்கிலத்தில் முன்னுரை எழுத சம்மதத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.