Jul 13, 2011

தெய்வீக காதல்



அவள் எனக்கு இல்லை என்று
தெரிந்த பின்னும்
தினம் தினம் அவளை பார்க்கும்
மரண அவஸ்தை
தாங்க முடியவில்லை.

எங்கேயாவது அடிபட்டு
செத்தொழியட்டும் அவள்.





Jul 6, 2011

விழிக்கும் இரவுகள்



தினமும் இரவில் 
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்ற நினைப்பை 
சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு 
என் மூளையில் நிரம்புகிறது
உன்னை பற்றிய சிந்தனைகள்.

பூனைகள் கலவி கொள்ள
அழைப்பு விடுக்கும் சத்தங்கள் 
தொல்லை கொடுத்து
உன் நினைவை கலைக்கின்றன.
அவைகளை விரட்டி விட்டு
தலையோடு போர்த்தி 
உடல் வளைத்து நெளித்து 
மண் புழு போல
மீண்டும் உன் நினைவுகளுக்குள்
புதைந்து கொள்கிறேன்.

மெல்ல நகரும் நிலவு
சொல்லி நகரும் இரவு
நீளும் வானம்
தீரா இரவு.




Jul 5, 2011

டிவிட்டரில் திருவள்ளுவர்



  • முன்பெல்லாம் இரவில் கண்விழித்து ப்ளாக் எழுதி கொண்டிருந்த நான் இப்போதெல்லாம் கண்விழித்து ட்வீட் எழுதுகிறேன்.

  • ஆண்கள் அதிகம் இருக்கும் லிப்டில் ஏற மாட்டாள் ஒரு உண்மையான பெண்ணியவாதி.  #ஆணாதிக்க எதிர்ப்பு

  • இக்காலத்தில் பிறந்திருந்தால் வால்மீகி கூகுள் பிளாகையும், திருவள்ளுவர் ட்விட்டரையும் பயன்படுத்தியிருக்கலாம்.

  • தமிழ் ஆர்வலர்கள் யாராவது, திருவள்ளுவர் என்ற பெயரில் அக்கௌன்ட் ஆரம்பித்து 1330 குறளையும் ட்வீட்டாய் மாற்றலாமே!

  •  சிரிப்பே வராமல் சிரிப்பதை விட, அழுகையே வராமல் அழுவது தான் மிக கஷ்டம். 

  • பூ மொட்டுக்கள் விழிக்கும் நேரத்திலும், கொட்ட கொட்ட முழித்து ட்வீட்டிலக்கியம் எழுதி கொண்டிருக்கிறேன்.

  • ராஜாவுக்கும் கனிமொழிக்கும் திகார் பழகிபோனதால்,நமக்கும் அவர்களைப்பற்றிய செய்திகள் பழகிவிட்டது.இம்ம் அனுப்புங்கள் அடுத்த ஆளை தி.மு.கவிலிருந்து.

  • தன் பெயருக்கு முன்னே தன் மனைவியின் பெயரை போட்ட ஆண்கள், பேஸ்புக்கில் அதிகம் மதிக்கப் படுகிறார்கள்.
  • இனி பெண்ணின் சிறிய இடையை, ட்விட்டர் இடை என்றும் கவிஞர்கள் வர்ணிக்கலாம்.

  • தமிழக சிறைகளில் இன்னும் களி உணவாய் கொடுக்கப் படுகிறதா? சாரு சென்றால் விடை தெரியலாம்.

  • புத்தகம் எழுதினால் மட்டும் பிரபலம் ஆக முடியாது. அதை படிக்க சொல்லி அனுப்பி வைத்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும்.

  • Rahulji was an eligible bachelor. Now he is an eligible prime minister.

  • "ஸ்வீட் எடு! கொண்டாடு!" அமிதாப் பச்சன் # ஐஸ்வர்யாராய் கர்ப்பம்.

  • அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுடன் சேர்த்து, இனி சிறை கைதிகளுக்கும் நிறைய சலுகைகள் இடம் பெறலாம். #முற்போக்கு சிந்தனை.

  • Petrol and Diesel hikes saves more money for the public. Walk and Talk, Walk and Talk, Walk and Talk........ WHAT an IDEA Manmohanji!

  • "ராகுல் காந்தி பிரதமரானால்" என்ற தலைப்பில் காமெடி கலக்காமல் சீரியஸாக ஒரு சிறந்த கட்டுரை எழுதுக.

  • தங்களைப் போல தன் பிள்ளையும் கஷ்டப் படுவான் என தெரிந்தே நம் பெற்றோர்கள் செய்ய சொல்லும் தவறான காரியம் தான், கல்யாணம்.

  • தமிழக மீனவர்களையும் தமிழக அரசியல்வாதிகளையும் பிடித்து சிறை வைப்பதில் இலங்கையும் இந்தியாவும் தமிழர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன - கலைஞர்.

  • This weekend my newly married friend invited me for a COSTLY Lunch. I have to travel to Bangalore from Chennai.

  • It doesn't a matter, How badly India is playing. Bcoz, West Indies will always do worse than that.

http://twitter.com/kathirnk



Jun 28, 2011

கறை நல்லது - ஆபாயில்



மீப காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் முழு நிர்வாணத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். இது தமிழ் சினிமா உலகத்தரத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமே!

தன் வாழ்வில் ஒரு உலகப்படம் எடுத்து விட வேண்டும் என முக்கும் உலகநாயகன் இதை முயற்சி செய்யலாம். இது வரவேற்க கூடியது தான் என்றாலும், பெரிசுகளின் நிர்வாணங்களை பார்க்க சகிக்க வில்லை. குடும்பத்தோடு இதை பார்க்கும் ஒவ்வொருவருடைய மனநிலையும் எப்படி இருக்கும்? என எண்ணிப் பார்க்கிறேன்.

சில மாதங்கள் முன்பு விஜய் டிவியில் "கறை நல்லது" என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான குறும்பட போட்டியை நடத்தியது சர்ப் எக்சல் (Surf Excel) நிறுவனம். விஜய் டிவி (ஊழல்) கறையில் படுத்து புரளும் இந்திய அரசியல்வாதிகளுக்காக, இதே தலைப்பில் தேசிய அளவில் ஒரு போட்டியை நடத்தினால் மட்டுமே சரியானதாக இருக்கும். அதே சமயம் அவர்களது திறமைக்கும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


நீங்கள் ஆங்கில சீரியல் டிராமா "Prison Break" இன் ரசிகராய் இருந்தால், இதை படிங்க. சூப்பராய் கலாய்த்து இருக்காங்க.



நான் கொஞ்ச காலமாய் பிளாக்கில் எழுதி கொண்டிருக்கிறேன். ஷூவுக்குள் மாட்டிகொண்ட சிறு கல், நம் காலை குத்திக்கொண்டே இருப்பது போல, எதற்கும் உபயோகமாய் இதுவரை எழுதியதில்லை என்ற குற்ற உணர்வு என் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. நானும் அவ்வபோது ஆபாயில், நமீதா விமர்சனம், கவிதை என்று எழுதி ஒப்பேத்தி வருகிறேன். 

ஆனால் இப்போதெல்லாம் கவிதை எழுதவே பயமாய் இருக்கிறது. இணையத்தில் இருக்கும் சிலர் கவிதை எழுதுவதற்கு இலக்கணம், விதிமுறைகள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள். கவிதை எழுத கோனார் நோட்ஸ் எழுதி விற்றாலும் விற்பார்கள். கவிதை எழுதி அவர்களிடம் அனுப்பி, அனுமதி வாங்கித்தான் பப்ளிஷ் பண்ண வேண்டும் என்கிறார்கள். அப்படியில்லாமல் நீங்கலாக எதோ ஒன்று எழுதி வெளியிட்டால், அதற்கு சொற்குற்றம், பொருள் குற்றம், 2G குற்றம் என்று நிறைய குற்றங்கள் கண்டு பிடித்து சொல்வார்கள்.

ஆனால் ஒரு பிரபல பதிவர் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பயன்படக்கூடிய நல்ல விஷயங்கள் பற்றி எழுதுகிறார். அவர் சமுத்ரா. நான் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் பதிவர்களில் இவரும் ஒருவர். இவரை நான் இங்கு அறிமுகப் படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் அவர் என்னை அறிமுகப் படுத்தினார் அறிவியலுக்கு.

அறிவியலையும், ஆன்மிகத்தையும் கலந்து கட்டி இவர் எழுதும் "அணு, அண்டம், அறிவியல்" மூலம் நான் சின்ன வயதில் மனப்பாடம் செய்து படித்த விசயங்களை எளிதில் புரிய வைக்கிறார். கலைடாஸ்கோப் என்ற அருமையான தலைப்பில், சுவாரஸ்யமான நிறைய விசயங்களைப் பற்றி எழுதுகிறார். சங்கீதம், சங்க கால இலக்கியம் என பல விசயங்களில் இவரது புலமை என்னை புல்லரிக்க வைக்கிறது.

இவரது ஒரு பதிவில் சம்பந்தம் இல்லாத சில வார்த்தைகளை கொடுத்து, அதை ஒரு வாக்கியமாக மாற்றும் போட்டியை வைத்தார். அவர் கொடுத்த வார்த்தைகள்

யானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல்.

இவைகளை நான் உபயோகித்து, நான் எழுதிய வாக்கியம்.

கப்பல் கண்ணழகி, 
யானை தொடையழகி, 
ஜோதிகாவை 
இன்ஸ்பெக்டர் அணைத்த அணைப்பில் 
கொசுவர்த்தி புகைந்தது
பொறாமை தீயில்.



ணையத்தில் அவ்வப்போது பதிவர்கள் அடித்து கொள்வதற்காகவே எதோ ஒரு விஷயம் கிடைத்து விடுகிறது. முன்பு லிவிங் டுகெதர். இப்போது சாரு சாட்டிங். இது 2G சர்ச்சையை விட பெரிதாய் உருவெடுக்கும் என வலையுலக வல்லுனர்கள் கணிப்பு தெரிவிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை என்று புத்தகம் வெளியிட்டதை போல சாரு சாட்டிங் சர்ச்சை என்று இதை ஒரு புத்தகமாக கூட முன்னணி பதிப்பகம் வெளியிடலாம். வெளியில் மாட்டாதவரை நீங்களும் உத்தம புத்திரர்களே!. "த்தா! மாட்டிட்டானா?" என்று நம்முள் நிறைய பேர் கைத்தட்டி சந்தோசப் பட்டிருப்போம். இந்த பதிவிற்கு "சாரு சாட்டிங்" என்று தலைப்பிட்டு நானும் பப்ளிஷ் செய்து இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு நல்லவன் என்றே காட்டிக்கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அடித்து கொள்வதை படிக்க கண்கோடி வேண்டும். சாவுங்கடா!


என் ட்வீட்ஸ் (kathirnk):


1. துணிக்கடையில் எனக்கு பிடித்தமான ஒரு துணியை செலக்ட் செய்து கொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல். "சார், இது கிட்ஸ் செக்சன்"

2. நீங்கள் ஒரு பிரபல டிவிட்டராக இருக்கும் போது, உங்கள் தேசிய மற்றும் உலக பாலோயர்சை திருப்திபடுத்த தமிழ், ஆங்கிலத்தில் டிவிட்டுவது அவசியமாகிறது

3. Twitter says "Your tweet was over 140 characters. You'll have to be more clever". What is the connection? Can anybody tell? 

ஒரு ஜோக்

ஒரு இன்டர்வியுவில் ஒரே காரணத்திற்க்காக, ஒரு பையன் ரிஜெக்ட்டும், ஒரு பொண்ணு செலக்ட்டும் ஆனார்கள்.

அந்த காரணம்: ரெண்டு பெரும் இன்டர்வியு எடுப்பவர் முன்னால், சட்டையின் முதல் பட்டனை திறந்து வச்சிருந்தாங்க.




Jun 24, 2011

உயிர் தின்னும் தேவதை




உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு.
கிளைகளை விரிக்கும்  
ஒற்றையடி பாதைகள் 

எனக்கு பின்னே அவள் வந்து கொண்டிருக்கிறாள்.

உருண்டு திரண்ட அனகோண்டா விழிகள்.
உயிருடன் விழுங்கப்பட்டு
விடும் அச்சத்தில்
மூச்சிரைக்க வேகமாய் நடக்கிறேன்.

இருளின் பயத்தை கொடுக்கிறது
அவள் கண் மையின் கருமை.

காற்றை கிழிக்கும் அவள் பேய் சிரிப்பில்
கரைபுரண்டோடும் நீரோடையின் 
சப்த நாடியும் அடங்கி போகிறது.

நடுநிசி இரவை விட, நடுபகலே 
அடுத்த அடி நகர விடாமல் 
பயமுறுத்துகிறது.

எந்தவொரு இடத்தை பார்த்தாலும் 
அவள் அங்கு நின்று கொண்டிருப்பதாய் 
ஒரு மாயை.

நீரில் விரல் எரியும் குளிரில்  
இழுத்து போர்த்திய போர்வைக்குள்
அனல் அலையாய் பரவுகிறது.

ஒரு நேரத்தில் 
மரணமும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு
என நம்ப தொடங்குகிறேன்.
ஆபத்தை நோக்கி என் கால்கள்
மெதுவாய் முன்னேறுகின்றன

என்னுடன் வந்த நிறைய பேர் இறந்திருக்க கூடும்.
நான் இறந்துவிட்டேனா?
இன்னும் தெரியவில்லை.