Aug 21, 2012

நான் - ஒரு "ரொட்டி" காவியம்


வெள்ளைக்காரன் நமக்கு விடுதலை தருவதற்கு முன், நம் செல்வங்களை மட்டும் கொள்ளையடித்து கொண்டு செல்லவில்லை. நம்முடைய மூளையையும் கொண்டு சென்று விட்டான். அதனால் தான் சொந்தமாய் யோசிக்க முடியாமல் நம்முடைய இயக்குனர்கள் படம் எடுக்க கஷ்டப்பட்டு அதுவும் முடியாமல், பின் அவர்களது படத்தை காப்பி அடித்து இழந்த மூளையை மீட்டு எடுக்கின்றனர். அவர்களது சேவைக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அந்த படங்களை பார்த்து நாமும் மூளையை வளர்த்து கொள்ள வேண்டும்.

இங்கிலீஸ்காரன் எடுக்கும் படமெல்லாம் நம் மூளை உபயோகித்து தான்! 

"என் தங்கம்! என் உரிமை" போல, "என் படம்! என் மூளை!"

ஈமூ பண்ணை போல இது இவர்களது மூளை பண்ணை. தற்போது மிக பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்த தொழிலில், முதலீடு செய்தால் நிறைய வருமானம் பெற முடியும்.

காப்பி அடிப்போம்! போராடுவோம்!
மூளை வளர்ப்போம்! லாபம் பெறுவோம்!



 ஞாயிற்று கிழமை மதியம் சாப்பிட்ட பிரியாணியை செரிக்க வேண்டியாவது ஏதோ ஒரு தமிழ் படத்தை பார்க்க வண்டிய கட்டாயத்திற்கு வாரா வாரம் தள்ளப் படுகிறேன். அந்த வகையில் "நான்" பிரியாணியை செரிக்க வைத்தது எனலாம்.

படத்தின் ஆரம்பத்தில் டல்லான கலர் டோனில் காட்சிகள் வருகிறது. அது ஹீரோவின் சிறுவயது கதை காட்சிகள் என்பதை புரிந்து கொள்ளாதவன் தமிழ் சினிமா அதிகம் பார்க்காதவன் எனலாம்.

தன்னுடைய அழகான அம்மா இன்னொரு அங்கிளுடன் ஆனந்தமாய் இருப்பதை பார்த்த சிறுவயது ஹீரோ, மற்ற தமிழ் படங்களில் வரும் பையன்களை போல் அதை மறைக்காமல், தன் வயதான தந்தையிடம் அன்றைக்கு இரவே போட்டு கொடுத்து விடுகிறான். அதனால் இருவருக்கும் பிரச்சினை ஆகி, அவனது தந்தை தற்கொலை செய்து இறந்து, இந்த படத்தில் இருந்து விடுதலை பெற்று கொள்கிறார்.

ஆனால் கணவன் இறந்த பின்னும், அவன் அம்மா கள்ள காதலை கண்டினியு பண்ணுகிறார். ஒரு நடு இரவில் இருவரும் சல்லாபித்து முடித்த களைப்பில் தூங்கி கொண்டிருக்க, நாயகன் அந்த இருவரையும் வீட்டுக்குள் வைத்து கொளுத்தீ விடுகிறார். பிறகு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வளர்கிறார்.

இது தான் நாயகன் கேரக்டருக்கான பின்புலம்.

படத்தை பார்த்து பையன்கள் கேட்டு போகின்ற இந்த சூழ்நிலையில், உயிருடன் இருக்கும் கள்ளகாதல் ஜோடிகள் அதிக கவனமாய் இருக்க வேண்டிய நேரமிது. இல்லையெனில் "படத்தை பார்த்து தாயையும் கள்ளகாதலனையும் கொன்ற பிள்ளை" என்று தமிழ் தினசரியில் கடைசிக்கு முன் பக்க செய்தியில் வந்து விடுவீர்கள்.

சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வரும் நம் ஹீரோ விஜய் ஆண்டனி சென்னைக்கு பஸ் ஏறுகிறார். அப்போது ஒரு முஸ்லிம் பையனை அவனது பெற்றோர்கள் கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு வழியனுப்ப வருகிறார்கள். பஸ்ஸில் அவன் நாயகனின் அருகில் உட்கார்ந்து பயணிக்கிறார். அந்த காட்சியின் போது நானும் என் ப்ரெண்டும் அதிக தமிழ் சினிமா பார்த்த அனுபவத்தில், ஆளுக்கொரு Guessing செய்தோம்.

1. ஹீரோ அந்த முஸ்லீம் பையனின் பெட்டியை திருடி கொண்டு போய் விடுவார்.
2. அவர்கள் போகும் பஸ் ஆக்சிடென்ட் ஆகி விடும்.

இந்த இரண்டுமே நடந்தது.

ஆக்சிடென்ட் ஆன பின் அந்த பையன் இறந்து விடுகிறார். நம் ஹீரோ அவனது பெட்டியை பத்திரமாக எடுத்து கொண்டு வந்து சென்னையில் உள்ள ஒரு மேன்சனில் தங்குகிறார்.

பொறுமையாக குளித்து முடித்து வந்த பின், அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று சாவகாசமாக உட்கார்ந்து தேடுகிறார். சில ஆயிரங்கள் பணம் இருக்கிறது. அதிக மார்க்குடன் அவனது சர்டிபிகேட்டுகள் இருக்கிறது.

நம் புத்திசாலி ஹீரோ, சலீம் என்ற அந்த முஸ்லிம் பையன் பெயரில் மெடிக்கல் காலேஜில் சேர, மெரீனா பீச்சில் இருக்கும் ஒரு ஆளை தன் அப்பாவாக செட்டப் செய்து கவுன்சிலிங் போகிறார். இருக்கும் மேன்சனையும் காலி செய்து விட்டு, தனி வீடு எடுத்து தங்கி காலேஜ் படிக்கிறார். பகுதி நேரத்தில் காபி ஷாப்பில் வேலை செய்கிறார்.

காலேஜில் அசோக் என்ற ஒரு பணக்கார வீட்டு ப்ளேபாய் ஒருவன் இவருக்கு நண்பனாக, கொஞ்ச நாளில் அவனுடனேயே வேலைக்காரனாக தங்குகிறார்.

பப், பார்டி, பெண்கள் என ஜாலியாய் சுற்றி கொண்டிருக்கும் அந்த நண்பனுக்கும் அவனது கேர்ள் பிரெண்டுக்கும் ஒரு பிரச்சினை வர............
அதில் நாயகனை போட்டு அசோக் அடிக்க............
நாயகன் போலியான பெயரில் உலாவுகிறான் என்ற சந்தேகம் அசோக்கிற்கு வர............
இருவருக்குமான சண்டையில் நாயகன் அசோக்கை தவறுதலாய் கொல்ல............
அந்த பாடியை ஈசியாய் கொண்டு போய் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு காட்டில் புதைத்து விட்டு வர.........
அசோக்கின் பெயரிலேயே அவனது வீடு, கார், டிரஸ் எல்லாம் நாயகன் பயன்படுத்த.....
அசோக்கை தேடிவரும் நண்பனையும் நாயகன் கொல்ல..........
அவனையும் அங்கேயே சென்று புதைத்து விட்டு வர..........

இப்படி கடைசி வரை அவர் ஏதாவது செய்து நமக்கு த்ரில்லிங் கொடுத்து கொண்டே இருக்கிறார். அசோக்கை கேட்டு கொரியர் பாய் வந்தால் கூட கொன்று விடுவாரோ என்று நாம் அஞ்ச ஆரம்பிக்கிறோம்.

சாரி! இதுக்கு மேல கதையை பற்றி என்னால் டைப் பண்ண முடியல.......



நடிப்பு, இசை, ஒளிபதிவு என இதர கருமங்களையும் பற்றி சொல்ல அவசியமே இல்லை. ஆனால் இந்த படத்தையே சராசரி ரசிகன் கொண்டாடுவான்.

நாயகன் இந்துவா, முஸ்லீமா என கண்டுபிடிக்க அவரது துண்டை அவிழ்த்து பார்க்கும் சீனை பார்த்தாலே, இது சுட்ட பழம் என்று நமக்கு பல்பு எரிய வேண்டும். ஆனால் நான் இன்னும் அந்த ஒரிஜினலை பார்க்க வில்லை. டவுன்லோட் பண்ணி பார்க்க வேண்டும்.

நமீதா டச்: நான், ஈயில்லை.....***.


இன்னும் கொஞ்ச நாளில் "காப்பி"ய  கலைஞன் தெய்வ திருமகன் புகழ் இயக்குனர் விஜய் அவர்களின், அதே நடிகர் நடிகையின் உப்புமா கூட்டணியில் இயக்கிய "தாண்டவம்" என்ற உப்புமா காவியம் வருகிறது.

தியேட்டரில் ட்ரைலர் கூட போட்டான் சாமியோவ். எனக்கு கதி கலங்கி விட்டது.

Get Ready to Dance

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்

தெய்வ திருமகள் - கர்ச்சீப் கொண்டு போங்க.



Aug 7, 2012

அனுகிரகம்

மித வெப்பம்
இதமான காற்று
ஈரப் பதம்
சுரக்கும் நீரூற்று
பழாச்சுளைகள்

நான் உயிர் வாழ
தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது
உன் செவ்வாயில்.

என் உ'தட்டை' தரையிறக்க 
உன் அனுமதிக்காக
மட்டுமே
காத்துக் கொண்டிருக்கிறேன்.


--dedicated to curiosity rover


Jul 25, 2012

குப்பை Planet - Nonsense Talking 3


முன் எச்சரிக்கை: Blog வட்டத்திற்குள் உள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம். மீறி படித்தால் அதற்கு உங்கள் இன்டர்நெட் கனெக்சன் மற்றும் நீங்களுமே பொறுப்பு.



"நான் தொடர்ந்து எழுதுவது ஏன்?" என்று நிறைய பேர் நினைக்கலாம். கோபமும் படலாம். அதற்கு எனக்கே விடை தெரியவில்லை.

ஆனால், "ஏன் நான் தொடர்ந்து எழுத வேண்டும்?" என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நான் எப்படி எழுதினாலும் "the good stranger blogspot" என்று கூகுளில் தேடி, எதிர்பார்த்து எனது பிளாகிற்கு வருகை தந்து ஏமாறும் உள்ளங்களுக்குக்காகவே, எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்.

இரண்டு மூன்று மாதங்கள் எழுதாமல் இடைவெளி விட்டாலே, என் சுவாசம் நின்று ரத்தம் உறைந்து இறக்கும் நிலைக்கு சென்று விடுகிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தவுடன், நான் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையும் தேவையில்லாத ஆணியாகவே தோன்றுகிறது. நான் இந்த உலகத்தில் பிறந்ததே, ப்ளாகர் அவதாரம் எடுத்து படிக்கும் அனைவரையும் துன்ப கடலில் மூழ்கடித்து நரகத்திற்கு அனுப்புவதற்க்காவோ என்னவோ!

Blog என்பது பொது ஜனத்துக்கு பரிட்சயம் ஆகாத ஒரு தனி உலகம். அவனுக்கு .com, .in என முடியும் எல்லாமே வெப் சைட் தான். பிளாகிற்கும் வெப் சைட்டிற்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவியாகவே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பதிவு, வலைப்பூ, பின்னூட்டம் என்ற சொற்கள், ஜப்பான் கொரிய மொழிகளில் எதோ ஒன்றாக இருக்கும் என இவர்களால் நம்ப படுகிறது. 0.000000000001 % மக்களுக்கே பிரபல பதிவர்கள் என இங்கு சொல்லி கொள்ளப் படும் நபர்களை தெரியலாம்.

அப்போ, என்னை!!...அதற்கு % கணக்கிட, ஜீரோக்களை உலக வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். 

பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டிருக்கும் போது, "சார்!, நீங்கள் தான் அந்த பிளாகரா?" என்று முகம் தெரியாத யாராவது  நம்மிடம் கேட்டு மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்து, ஒரு டீயையும் வாங்கி கொடுப்பார்கள் என நினைத்தால், அது கழகங்கள் எல்லாமே மக்களின் முன்னேற்றதிற்க்காகவே இருக்கின்றன என்று திடமாக நம்புவதற்கு நிகரானது.

98% மக்கள் பிளாக் பற்றி தெரியாமல் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் பிளாக் தொடங்கி புது மாப்பிளையாய் வலம் வந்து கொண்டிருந்த போது பார்க்கும் நண்பர்கள், பிகர்களிடம் எல்லாம் "நான் ஒரு பிளாக் எழுதிகிட்டு இருக்கேன். டைம் இருந்தா படிச்சு பாருங்க" என்று சொல்லி URL கொடுத்து மார்க்கெட்டிங் பண்ணும் போதெல்லாம் "பிளாகா? அப்படின்னா?" என்று இரண்டே கேள்விகளில் உலக பிரபலமாக முயற்சிக்கும் நம் நம்பிக்கையை பஞ்சராக்கி விடுவார்கள். நாமலே வேண்டுமானால் கமலை போன்று "உலக" என்ற அடைமொழியை நமக்கென்று ஒரு பட்டம் வைத்து அதற்கு முன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் அதிக கமெண்ட்டும் வராமல், விசிட்டும் வராமல் நாமே எழுதி நாமே ரசித்து பரவசம் அடையும் நிலையே பிளாக் உலகின் "ஞான நிலை". லட்ச கணக்கில் பிளாக் எழுதுபவர்களின் எண்ணிக்கை இருந்தாலும், இந்த நிலையை நிறைய பேர் அடைவதில்லை. அதை அடைந்த "ஆயிரத்தில் நான் ஒருவன்".

ப்ளாக்லோகம் என்பது பிளாக்கில் நுழைந்து அதிலேயே லயித்து கிடப்போர்கள் இருக்குமிடம். கமென்ட்டிற்கும், ஹிட்டிற்க்கும் குழாயடி சண்டையை விட மோசமான சண்டைகள் நடை பெறும். இங்கு குப்பைகளை உற்பத்தி செய்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது தான் பிரதான தொழில். அன்றைய காலை தினசரி காலண்டரில் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் என போட்டிருந்தால், அந்த குப்பைகளை கிளரும் போது நல்லது ஏதாவது கிடைக்கலாம். 

இந்த குப்பைகளை காண்ட்ராக்ட் போடாமல் அள்ளும் வேலையைத்தான் திரட்டிகள் எனப்படும் Aggregator சைட்டுகள் செய்கின்றன. ஆனால் இவை ஏதும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுப்பதில்லை. இந்த குப்பைகள் ஏற்படுத்தும் pollution -கள், பிளாஸ்டிக் ஏற்படுத்துவதை விட பல மடங்கு மோசமானது. பிளாஸ்டிக் அந்த வகையில் சாது.

உங்கள் பிளாக் குப்பை என்று உங்களுக்கே தோன்றும் பட்சத்தில் நீங்கள் என்னிடம் சண்டைக்கு வரலாம். என்னுடையதும் குப்பை தான். யாருடைய குப்பை உசத்தி என்று போட்டி வைத்துக் கொள்ளலாம். ஜெயிப்பவருக்கு மகுடம் உண்டு. kuppai-planet என்று உண்மையிலேயே limited access உள்ள ஒரு ப்ளாக் இருக்கிறது. அதில் என்னுடைய பிளாகிற்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். என்னுடையது குப்பை என்பதை இதிலிருந்தே உறுதி செய்து கொள்ளலாம். குப்பை ப்ளாக்கின் ஓனர் அவர்களே, எனக்கும் அந்த பிளாக் படிப்பதற்கு access கொடுங்கப்பா! நானும் அதை படித்து குப்பை சங்கத்தின் உறுப்பினராகிறேன்.

நான் என்னுடைய குப்பைகளை, வலிந்து தூக்கி சென்று எங்கும் கொட்ட விரும்பவில்லை. இது தான் நான் திரட்டிகளில் இணைக்காத காரணம். ஆனால் விரும்பி நீங்கள் share பண்ணி மற்றவர்களை இம்சித்தால், நான் பொறுப்பாக மாட்டேன். நான் மெயில் அனுப்பி நீக்க சொல்லியும், அதை கண்டு கொள்ளாத திரட்டிகளை பற்றி என்னால் கவலை பட முடியாது.

"சிறப்பாக குப்பை கொட்டுவது இப்படி" என்று வார இறுதிகளில் வகுப்பு எடுக்கலாம் என இருக்கிறேன். கற்று கொள்ள விரும்பும் கத்துக்குட்டிகள் பெருங்குடி குப்பை மேட்டில் சனிக்கிழமை சாயுங்காலம் 6 மணி அளவில் கூடுங்கள். இதை நான் ஒரு சமூக சேவையாக மட்டுமே செய்கிறேன். கட்டணம் இல்லை. இடையில் சமோசாவும் டீயும் வழங்கப் படும். இரவு கேம்ப் பயர் நிகழ்ச்சியும் உண்டு. தமிழ் செய்தி சேனல்கள் இதை கவர் செய்ய போவதாய் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு முக்கிய வேண்டுகோள். கிளாஸ் முடித்து போகும் போது யாரும், அங்கிருக்கும் குப்பையை அள்ளி செல்ல கூடாது. முடிந்தால் வீட்டிற்கு சென்று உங்களின் தனி திறமையில் கிரியேடிவாக, வித்தியாச வித்தியாசமான Versatile குப்பைகளை படைக்கலாம். குப்பைகளின் தரம் மெருகேற, நெடுநாட்கள் Draft -இல் வைத்திருந்து ஒயின் போல பதப்படுத்தி பின் வெளியிட்டால் அதை நுகர்வோருக்கு இன்ப மயக்கம் தான். இதில் நன்கு கற்று தேர்ந்த பின், மெரீனா பீச்சில் போய் நீங்கள் அந்த குப்பையை கொட்டலாம். அது நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும். அவர்கள் தான் நாம் போடும் குப்பைகளை அவ்வப்போது பொறுக்குகிறார்கள்.

நீங்கள் சிறப்பாக குப்பை போடும் பட்சத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகளும் உங்கள் கதவை தட்டும். மற்ற ஊடக துறையிலும் நுழையலாம். உங்கள் பிளாகின் URL-யை டைப் செய்து Enter பட்டனை தட்டியவுடனே, சிட்டி குப்பை லாரி அருகில் வந்தது போல் நறுமணம் வரவேண்டும். அப்போது தான் உங்களுக்கு Versatile blogger அவார்ட் கொடுப்போம். அதை உங்கள் பிளாக்கின் சைடில் எச்சையை தொட்டு ஒட்டி கொள்ளலாம்.

Blogger தான், மிக மோசமாக உபயோகிக்க படும் கூகுளின் ஒரு சிறந்த இலவச Product.


Jul 6, 2012

Banana Phone - ஆபாயில்



தற்காலத்து மாடர்ன் டெக்னாலஜி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பணம் மற்றும் அறிவு திறனோடு, நம்முடைய சொம்பேறிதனத்தையே அதிக மூலதனமாக கொண்டு, நமக்கான advanced பொருட்களை தயாரிப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. இப்போது மார்க்கெட்டில் புதிது புதிதாய் வெளிவரும் இந்த Smart Phone-கள் உங்களை ஸ்மார்ட் ஆக மாற்றுகிறது என நம்பினால்...கஷ்டம்.

பஸ் ஸ்டாண்ட், ட்ரெயின் ஸ்டேசன் என பார்க்கும் இடங்களில் எல்லாம் பொடி பையன்கள் பெரிது பெரிதாய் ஆளுக்கொரு ஸ்மார்ட் Phone வாங்கி கொண்டு Facebook-ல் Stalking செய்வது, YouTube-ல் வீடியோ பார்ப்பது என 70mm படம் காட்டுகிறார்கள். அந்த போனை காதில் வைத்துக் கொண்டு அவர்கள் பேசினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பேசுபவரின் முகமே தெரியாது. போனை விலக்கி தான் பார்க்க வேண்டும். வீட்டிற்கு தெரியாமல் காதலனுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கும் பெண்கள், தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் இருக்க, இந்த போனை பயன்படுத்தி முகத்தை மறைத்து கொண்டு தப்பித்து கொள்கிறார்கள்.

இந்த போனில், கேர்ள் பிரெண்டுக்கு மெசேஜ் அனுப்புவது, வெள்ளிகிழமை மட்டும் ஆபிசுக்கு நேரமாய் செல்ல அலாரம் செட் பண்ணுவது, அம்மாவிடம் பேச கால் போட்டு தருவது, அருகில் இருக்கும் பியூட்டி பார்லரின் அட்ரஸ்ஸை தேடி தருவது என அனைத்திற்கும் Voice command தான். மொத்தத்தில் நீங்கள் வாயை திறந்தால் போதும், வாழை பழத்தை உரித்து உள்ளே சொருகி விடும். இதற்கு Banana Phone என்றே பெயரிட்டிருக்கிலாம்.

ஒருமுறை என் நண்பனின் ஸ்மார்ட் போனை வாங்கி பார்த்து கொண்டிருந்தேன். போனை டச் செய்தவுடன், அதன் "முன் கேமரா" ஆன் ஆகி, என் முகத்தை படம் பிடித்து ஸ்கேன் செய்து, நான் அதனின் owner இல்லை என்று "கரெக்ட்டாய்" கண்டுபிடித்தவுடன், passcode-யை டைப் பண்ண சொல்லி கேட்டது. வாவ்! என்ன ஒரு வசதி!

இந்த face unlock வசதியுள்ள ஸ்மார்ட் போன், வழக்கு எண் படத்தில் வரும் அந்த பணக்கார டீன் ஏஜ் பையனிடம் இருந்திருந்தால் அவன் அந்த ஸ்கூல் பெண்ணிடம் மாட்டியிருக்க மாட்டான். ஸ்மார்ட்டாக "வேலை" செய்திருப்பான்.

இதில் பெண்களுக்கு 'தான்' இந்த banana -வின் மீது, அதிக இஷ்டம்.

இதில் எதற்க்கெடுத்தாலும் App தான். App இல்லாமல் நீங்கள் உயிர் வாழவே முடியாது. இனி A for App தான். Apple இல்லை. டெக்னாலஜி வாழ்க்கையை மட்டுமல்ல வார்த்தையையும் சுருக்குகிறது.

இன்னும் சில வருடங்களில் ஐபோனின் Siri-யும், சாம்சங்கின் s2 voice-யும், உங்களுக்கு கடினமாக தோன்றும் வேலைகளை சுலபமாக செய்து கொடுத்து விடும்.





ஜப்பானில் வசிக்கும் பனானா சோம்பேறியை பற்றிய ஒரு பழைய 'எ' ஜோக் உள்ளது. (ஜப்பான் மக்கள் எல்லோரும் சுறுசுறுப்புடன் தானே இருப்பார்கள்? என்று கேள்வி கேட்டால் "சகுனி" படத்தை பார்த்து ரசிக்க அதன் DVD Rip-யை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்)

அவனும் அவன் காதலியும் செக்ஸ் செய்வதற்காக உடைகளை கழட்டி விட்டு கட்டிலில் படுத்து விடுவார்கள். அவன் தன் உறுப்பை, அவள் உறுப்புக்குள் உள்ளே நுழைத்து விட்டு காத்திருப்பான். சிறிது நேரத்தில் கடுப்பான காதலி "ஏன் காத்திருக்கிறீர்கள் அன்பே?" என்று கேட்பாள்.

அதற்கு அவன் "வெயிட் டார்லிங், இன்னும் கொஞ்ச நேரத்தில் பூகம்பம் வந்து விடும்" என்பான்.

அது போல இந்த டெக்னாலஜிகள், செயற்கை புவி அதிர்ச்சியை உண்டாக்கும் அளவிற்கு செல்லாமல் இருந்தால் சரி.

Wise people creates smart phone for stupid people.




ட்ராபிக் ரூல்ஸை சட்டை செய்யாமல் மீறுபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனென்றால் அது நம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் DNA-விலும் ஊறிய பழக்கம்.

ஆனால் சில பேர் ரோட்டில் சட்டையே போடாமல் காற்றில் அக்குள் முடி பறக்க, பல்சர் மற்றும் அப்பாச்சி வண்டிகளில் பறக்கின்றனர். சட்டத்தை மதிக்கவில்லை என்ற போதிலும், "சட்டையை"யாவது மதிக்கலாம் இல்லையா?

இன்னும் சிலர் ஏழாம் அறிவு "போதிதர்மாவை" போல ஒரு சிறிய துண்டை மட்டும் மேலே அணிந்து கொண்டு செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டம் போட்டவுடன், ஊர்ப்புறங்களில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுபவர்களை பிடித்த ட்ராபிக் போலீசுகள், பைனை காட்டுகிறாயா? இல்லை இப்பவே காசு கொடுத்து புதிய ஹெல்மெட் வாங்கி கொள்கிறாயா? என கேட்டு மக்களிடம் ஹெல்மெட்டை விற்று போட வைத்தார்கள்.

அதுபோல, ரோட்டில் சட்டையே போடாமல் செல்லும் "அவாளை" பிடித்து Public Distraction செய்ததற்காக பைன் போட வேண்டும் அல்லது அப்போதே அவர்களிடம் காசை பிடுங்கி கொண்டு புதுசாய் ஒரு சொக்காய் மாட்டி விட வேண்டும் என்பதுதான் என் "அவா".



யாரும் பின் வரும் லிங்கை கிளிக் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். இந்த Topic -க்கு சம்பந்தமாய் ஒரு இமேஜ் போட்டு இந்த பதிவை நிரப்பலாம் என "half naked bike riding" என்று கூகுளில் தேடினால் கலை நயத்துடன் கூடிய படங்கள் தான் வருகிறது. அதை போட்டால் தமிழ் நாட்டு பசுக்கள் மற்றும் காளையர்களின் "கற்ற்ற்ப்பு" கெட்டு விடும் என்ற காரணத்தினால் அதை போடவில்லை.

வெளிநாட்டுக்காரர்கள் போராட்டம் செய்யத்தான் half naked ஆகவும் full naked ஆகவும் bike riding செய்கிறார்கள். 

ஆனால் நம்மாள் எதற்கு போராடுகிறான்?



மொக்கை கார்னர்:

I had my hands on my pockets. She asked,

"What do you have in your pockets?"

"God Particle" I answered and smiled at her.

"Oh! then, what did physicists find last week?" she asked with a surprised look.

quickly I said,

"They found a wrong one."





Jun 25, 2012

என்னுயிர் Torrent டே!


இன்டர்நெட்டில் வழக்கமாய் Torrent டவுன்லோட் செய்து படம் பார்க்கும் வாலிப வயோதிக உள்ளங்களுக்கு ThePirateBay போன்ற Torrent தளங்களையும், Megaupload போன்ற file sharing தளங்களையும், இந்திய அரசு அவ்வப்போது முடக்குவது வருத்தத்தையும் கோபத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது. 

கவர்மெண்டின் இந்த செயலால் எரிச்சல் அடையும் சில குழுக்கள் hackers-களாக மாறி, தங்கள் எதிர்ப்பை காண்பிக்க இந்திய கவர்மெண்டின் வெப்சைட்டுகளை தாக்கி செயலிழக்க வைப்பதும் அவ்வப்போது நடக்கிறது.

இதற்கு பின்னால் அமெரிக்காவின் அரசியல் இருக்கிறது என மொக்கை படங்களாய் டவுன்லோட் செய்து பார்க்கும் சங்கம் சந்தேகிக்கிறது. 

"டோர்ரன்ட் யுகம் அழியுமா? அழியாதா?" என்ற கேள்வி "2012 இல் உலகம் அழியுமா? அழியாதா?" என்பது போன்ற சம அளவு விவாதத்தை கிளப்பி விட்டு உள்ளன. 

டோர்ரன்ட் வருவதுக்கு முன்பு direct download மூலமாக படங்களை டவுன்லோட் செய்வது சிரமமான விசயமாக இருந்தது. ஒரு டவுன்லோட் வெப் சைட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அண்டார்டிகா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல இடங்களில் மொத்தமாய் (1-50) server-கள் இருக்கலாம். அவைகளை mirrors என்றும் சொல்(லு)வார்கள். 

நாம் இதில் ஏதாவது ஒரு Mirror உடன் கனெக்ட் செய்து படங்களையோ, பைல்களையோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். நடுவில் கரண்ட் கட்டாகி விட்டாலோ, தவறுதலாக டவுன்லோட் விண்டோவை மூடி விட்டாலோ திரும்பவும் முதல் byte-இல் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். ஆயிர கணக்கான மக்கள் ஒரு படத்தை டவுன்லோட் செய்யும் போது, அந்த mirror-க்கான இன்டர்நெட் டிராபிக் அதிகரித்து டவுன்லோட் வேகம் குறையும். 

ஆனால் டோர்ரண்டின் விஜயம் இன்டர்நெட் உலகில் பயங்கரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. டோர்ரன்ட் வந்த புதிதில் அதை பற்றி தெரியாததால், அதை பெரிய அப்பாடக்கர் என்று நினைத்து அதை நிறைய பேர் வெகு நாள் பயன்படுத்தாமலே இருந்தனர். ஒரு பெரிய Size பைலை டவுன்லோட் செய்ய டோர்ரன்ட் முறையே சிறந்தது. இதற்கென ஒரு server (mirror) தேவை இல்லை.
 
ரெகுலராய் படம் டவுன்லோட் செய்யும் 99% மக்களுக்கு, டோர்ரன்ட் எப்படி இயங்குகிறது என்று தெரியலாம் (??). தெரியாத அந்த 1% பேருக்காக, இது.

டோர்ரன்ட்டின் டெக்னாலஜி அதி அற்புதமானது. விஸ்வரூபம் படம் ஜக்குபாயை போல தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே அதன் திருட்டு DVD வந்து விட்டது என வைத்துக் கொள்வோம். X என்ற ஒருவன் அந்த வீடியோவை வைத்து ஒரு torrent File ஒன்றை Create செய்து, அதை thepiratbay, extratorrent போன்ற டோர்ரன்ட் தளங்களில் upload செய்கிறான். அந்த டோர்ரன்ட் file-ன் size, 100kb-க்குள் தான் இருக்கும். நீங்கள் அந்த டோர்ரன்ட் File-யை டவுன்லோட் செய்து, டோர்ரன்ட் சாப்ட்வேரின் மூலமாக அந்த X-யின் கம்ப்யூட்டரில் இருந்து அந்த படங்களை டவுன்லோட் செய்யலாம்.

அந்த குறிப்பிட்ட வீடியோ 700MB size எனவும், ஒரு பத்து பேர் (A-J) அந்த டோர்ரன்ட் பைலை டவுன்லோட் செய்து X-இன் கம்ப்யூட்டரில் இருந்து படத்தை டவுன்லோட் செய்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்வோம். டோர்ரன்ட் சாப்ட்வேர் அந்த 700MB data-வை 2MB, 2MB-களாக மொத்தமாய் 350 piece-களாக பிரித்து கொடுக்கும். டோர்ரன்ட் சாப்ட்வேரை பொறுத்து ஒரு piece-ன் அளவு 512kb, 1MB என மாறுபடும்.

டோர்ரன்ட் சாப்ட்வேர், இதில் 350 piece-யையும் வரிசையாக டவுன்லோட் செய்யும் என்ற அவசியம் இல்லை. Random-மாக எந்த வரிசையில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யும். 249-வது piece-யை முதன் முதலில் டவுன்லோட் செய்து விட்டு, அடுத்து 11-வது piece-யை இரண்டாவதாக கூட டவுன்லோட் செய்யும். அதே சமயம் அந்த பத்து பேரும் அனைத்து 350 piece-யையும் அந்த X-யிடமிருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

A என்ற ஆள் 11-லிருந்து 50 வரையிலான piece களை ஏற்கனவே X-யிடமிருந்து டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார் என்றால், B என்ற ஆள் 11-லிருந்து 50 வரையிலான piece-களை A-யிடமிருந்தே டவுன்லோட் செய்யலாம். C என்ற ஆள், B-யிடமிருந்து piece-களை டவுன்லோட் செய்யலாம். B-யிடமிருந்து சில piece-களை A டவுன்லோட் செய்யலாம். கிட்ட தட்ட ஒரு orgy பார்ட்டியை போல, சீடரையும் (seeders), லீச்சரையும்(leecher) ரேண்டமாக பிக் செய்து கொள்ளும். இப்படியே அந்த பத்து பேரும் தங்களுக்குள் மாற்றி மாற்றி டவுன்லோட் செய்து கொள்வார்கள். இதனால் ஒரே மெசினுக்கு வரும் இன்டர்நெட் டிராபிக் ஏற்படாமல் தடுக்கப்படும். 

350 piece-களையும் டவுன்லோட் செய்த பின் உங்களது டவுன்லோட் முழுமையடையும். இதை அடிக்கடி pause செய்தும் டவுன்லோட் செய்யலாம் என்பதும் இதன் சிறப்பு.



ஒவ்வொரு டோர்ரன்ட்டுக்கும் Seeds, Peers என்று உண்டு. 350 piece-களையும் டவுன்லோட் செய்து முடித்து விட்டால் நீங்கள் seeder எனப் படுவீர்கள். 348 piece-களை டவுன்லோட் செய்து விட்டு, இன்னும் இரண்டை டவுன்லோட் செய்யாமல் இருந்தாலும், You are still a Peer (or Leecher)

உங்களின் டோர்ரன்ட் சாப்ட்வேர் ஐ.ஐ.டி மாணவனின் seeds தான் வேண்டுமென அடம் பிடிக்காமல், குப்பன் சுப்பன் என யாரிடம் இருந்து வேண்டுமானாலும் seeds-களை பாரபட்சம் இல்லாமல் பெற்று கொள்ளும். ஒரு டோர்ரன்ட்டை டவுன்லோட் செய்யும் போது கண்டிப்பாய் seeds-களின் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். அது குறைந்தபட்சம் ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்டதாய் இருந்தால் அதை நீங்கள் தாராளமாய் டவுன்லோட் செய்யலாம். 

ஒன்று அல்லது இரண்டு seeds-கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அந்த இருவருமே எப்போது வேண்டுமானாலும் seeding option-யை நிறுத்தி விடவோ, தங்கள் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு மாமியார் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்று விடவோ நேரிடலாம். அதனால் உங்கள் டவுன்லோடும் அரைகுறையாய் பாதியிலேயே, கட்டி முடிக்கப் படாமல் விடப்பட்ட பில்டிங்கை போல நின்று விடும். 

சில பழைய படங்களின் டோர்ரண்டுகள் 5 peers-களுடன் இருந்தாலும் 0 seeds-களுடன் இருக்கும். அதை முழுதாய் டவுன்லோட் செய்ய முடியாது. இது தான் இதன் மிக பெரிய மைனஸ். இல்லையெனில், அந்த டோர்ரண்டை அப்லோட் செய்தவருக்கு Request செய்து அவரை மீண்டும் seed செய்ய சொல்ல வேண்டும். அவருக்கு மனம் இருந்தால் உங்களுக்கு மார்க்கம் உண்டு.

மிக குறைந்த seeds-கள் இருந்து, அதிக எண்ணிக்கையிலான peers-கள் (50-100) இருந்தால் கூட, நீங்கள் முழு படத்தையும் டவுன்லோட் செய்ய வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அந்த 350 piece-களும் அந்த (50-100) பேர்களிடம் தனி தனியாய் இருந்தால், மற்ற peers-கள் தங்களுக்குள் மாறி மாறி டவுன்லோட் செய்து முழு படத்தையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

எனவே நீங்கள் எந்த ஒரு படத்தை டவுன்லோட் செய்தாலும், அந்த டோர்ரன்ட்டை உடனடியாக Delete செய்யாமல், கொஞ்ச நாளாவது seed செய்ய வேண்டும். அது தான் டோர்ரன்ட் "தர்மம்". ஆனால் நீங்கள் இந்தியாவில் இருக்கும் பட்சத்தில், இந்த "கூட்டணி தர்மத்தை" எல்லாம் கடை பிடிப்பது சாத்தியம் ஆகாமல் போகலாம். ஏனென்றால் இந்தியாவில் Unlimited இன்டர்நெட் கனெக்சன் வைத்திருந்தாலும், ஒரு மாதத்திற்கு அப்லோட் மற்றும் டவுன்லோட் இரண்டும் சேர்த்து maximum (40-60) GB மட்டுமே பயன் படுத்த முடியும். அதனால் பல சமயங்களில் சுயநலத்துடனே நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே உங்களது upload மற்றும் download வேகத்தை நீங்கள் மாற்றி கொள்ளலாம். சில சமயம் download-யை விட upload அதி வேகத்தில் நடக்கும். அதனால் உங்களது monthly quota சீக்கிரம் தீர்ந்து விடும். அது உங்களுக்கு பிரச்சினை தான். அதனால் நீங்கள் உங்களது upload வேகத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் 5kbps/s அளவுக்கு upload வேகத்தை மிகவும் குறைத்து விட்டால், உங்களது download rate குறைய வாய்ப்புண்டு. average upload/download ratio என்று ஒன்று உள்ளது. அதை maintain செய்தால் நலம். 

Asia Torrents (AvistaZ ) என்ற சைட்டில் கொரியன், ஜப்பானீஸ் உட்பட அனைத்து ஆசியன் படங்கள் மற்றும் டிராமாக்களை டவுன்லோட் செய்யலாம். ஆனால் இரண்டு பிரச்சினைகள் இருக்கிறது. நீங்கள் இந்த தளத்தில் register செய்ய வேண்டும். அடுத்து 1:1 என்ற டவுன்லோட் மற்றும் அப்லோட் Ratio-வை maintain செய்ய வேண்டும். அதாவது 100 MB-யை டவுன்லோட் செய்தால், 100 MB-யை அப்லோட் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் அக்கௌன்ட்டை block செய்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரிடம் (seeders) கொடுப்பதற்கு நிறைய seed-கள் இருக்கும். ஆனால் அதை வாங்க தான் ஆட்கள் (Peers) இருக்க மாட்டார்கள். கிட்டதட்ட இந்திய இளைஞர்களை போல.

பொதுவாக டோர்ரன்ட் தளங்கள் pirated சாப்ட்வேர்கள் மற்றும் pirated படங்களின் சொர்க்கபுரியாக விளங்குகின்றன. ThePirateBay என்ற தளத்தின் முகவரி இதன் நேரடி அர்த்தம் படும் படியாகவே வைக்கப் பட்டுள்ளது. இதனால் மொக்கையாய் படமெடுத்து வெளியிடும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் வசூல் பாதிப்பதாய் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த மொக்கை படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நான் கடைசியாய் பார்த்த பத்து படங்களில் பெருமளவு மொக்கையே!

அதனால் டாலர் கணக்கில் செலவழித்து மொக்கை படங்களை பார்ப்பதற்கு மக்கள் எப்போதும் விரும்ப மாட்டார்கள். டோர்ரன்ட்டை அழிப்பது கொஞ்சம் கடினம்.

ஒரு வேளை டோர்ரன்ட் யுகம் இறந்து விட்டால், இந்த பதிவு டோர்ரன்ட்டின் சிறப்பை பற்றி பேசும் எனது அஞ்சலியாக இருக்கும். டோர்ரன்ட்டை அழித்தாலும், வேறு ஒரு மாற்று வழி உருவாக்கப்படும் என்பதில் மாற்றமில்லை.


பின் குறிப்பு: Megaupload, Rapidshare போன்ற file sharing தளங்களை பற்றி இங்கு குறிப்பிட வில்லை.